Social Icons

Pages

Sunday, July 13, 2008

காவேரி ரகஸ்யம்!

ஆடி மாதம் பிறக்கபோகிறது! பண்டிகைகளை
தேடிக்கொண்டு சேர்க்கும் இந்த மாதத்தின் சிறப்பிற்காக இல்லை இந்தப்பதிவு


காவிரிக்காக என்று சொல்லலாம்!(அதன் அரசியல்சிக்கல்களைத் தவிர்த்து!)


"நடந்தாய் வாழி காவேரி''என்று இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்
புகழ்ந்திருக்கிறார்.


இந்க்காவேரிக்குத்தான் ஆடிவந்தால் எத்தனை ஆட்டம் பாருங்கள்!
திருவரங்கநகருக்கு ஓடிவரும்போது காவிரியின்
விஸ்வரூபம் சொல்லி மாளாது ! அகண்ட காவிரி என்பார்கள்
அம்மாமண்படப்படித்துறையில் பெருகி ஓடும் காவேரிக்கு!ஆடிப்பதினெட்டுக்கு
காவேரிக்கு விசேஷ பூஜைகள் !மரியாதைகள்..!ஆடிப் பதினெட்டு நோன்பு'' என்பார்கள்.
இத்தினதன்றுகாவிரிக்கரைக்கு. சித்திரான்னங்களை எடுத்துச் சென்று உறவு
முறைகளுடன் சேர்ந்து உண்ணும் கொண்டாட்டம் காணக் கிடைக்காத ஒன்று.


இந்தக்காவிரிக்கு பெரிய வரலாறு இருக்கிறது.


திருமூலர் நாள் தொட்டு கணக்கிலடங்காத சிவயோகிகள், திருப்பாணாழ்வார் நாள்தொட்டு


கணக்கிலடங்கா இசையோகிகள்!


இவர்களுக்கும் முன்னாலிருந்து காவேரி ஓடுகிறது.


அகத்தியரின் கதை இங்கு உள்ளது.


எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாதுதான்.உள்ளங்கை ரேகையையே வாழ்நாள் முழுவதும்
பார்க்கலாம் என்பார்கள்(சோதிடம் சொல்லத்தான்)


குடகிலிருந்து பிடித்து காவேரியின்கரையின் 400 ஊர்களையும் தென் கரையில்377
ஊர்களையும் குறிப்பிடுகிறது* காவேரி ரகஸ்யம்* எனும் ஒரு நூல்..கோபாலய்யர் என்ற
மாஜி கல்வித்துறை அதிகாரி இந்த நூலை இயற்றி இருக்கிறார்.


இதை நல்ல புத்தகங்கள்சேகரிக்கும்குடும்ப உறவினர்(இப்போது அவர் இல்லை)
வீட்டில் அண்மையில் பார்க்க நேரிட்டது ,அதுவும் எங்கே என்கிறீர்கள் பழைய
இரும்பு சாமான்கள் வேண்டாத பொருட்கள் அடைத்து வைக்கப்படிருந்த கார் ஷெட்டை
ஒட்டிய குறுகிய அறையில்.!


.அதிகம் படிக்கமுடியாமல் பக்கங்கள் பழுதடைந்துகிடந்தன. புத்தகங்களின் அருமை
தெரியாதவர்கள்அதனை சரியாகப்பேணவில்லை என்பதை நலிந்து போன அதன் பக்கங்கள்
தெரிவித்தன.


ஏதோ புது மாட ர்ன் ஆர்ட் படத்தை வீட்டின் சுவரில்மாட்டுவதற்கு அந்தவீட்டுப்பெண்
சுத்தியலைத்தேடி அங்கு செல்லவும் நானும் உடன் போனேன்...மரப்பெட்டி ஒன்றில்
உடம்புகளை நசுக்கிக்கொண்டு கோமா நிலையில்நிறைய்
புத்தகங்கள் காணப்பட்டன. அருகில் கோணிப்பையில் சில
புத்தகங்களைக்கட்டிப்போட்டும் வைத்திருந்தார்கள்.
மூச்சடைத்துகிடந்த கோணிப்பை புத்தகங்களை முதலில் வெளியே
எடுத்தேன்..காற்றில் அதன் பக்கங்கள் படபடத்தன.


"இதெல்லாம் வீட்ல குப்பையா இருக்குதுன்னு இங்க கொண்டு
வந்துவச்சிட்டோம்...எல்லாம் சமீபத்துல இறந்துபோன என் மாமனாரின் சொத்துக்கள்!"
சிரித்தாள் அந்தப்பெண்.


என்னால் சிரிக்க முடியவில்லை.


"நான் இதைப்பார்த்துவரேன் நீங்க போங்க' என்று சொல்லிவிட்டு வேதனையுடன்
அந்தபுத்தகங்களை மெல்ல ஒவ்வொன்றாய் பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல இரு
கைகளிலும் ஆதரவு கொடுத்து எடுத்தேன்.


அடைத்துவைக்கப்படிருந்த. அந்த புதையலில் கிடைத்த ஒருபொக்கிஷம்தான்
இந்தபுத்தகம்.


பெயர் காவேரி ரகஸ்யம். 'ஸ் 'தான் .'சி' அல்ல:)
எடுக்கும்போதே பக்கங்கள் உதிர்ந்தன.கற்றதோ இல்லையொ கசடற
புத்தகத்தை,அரித்திருந்தது கரையான்கள்!


எவ்வளவு முயன்றும் அதனை முழுமையாகப் படிக்கமுடியவில்லை.


திருப்பும்போதே ஓரிரு பக்கங்கள் தவிர மற்றவைஉயிரைவிட்டன. ரகசியமென்பதாலோ
என்னவோ எனக்குக்கடைசிவரை புத்தகத்தில் என்னஎழுதி இருந்தது என்று தெரியாமலே
போய்விட்டது..மிகவும் அருமையான புத்தகம் என்றும் காவேரியைப்பற்றி பலதகவல்கள்
அதில் உள்ளன என்று எப்போதோ யாரோ சொல்லி கேட்டிருந்ததால் பார்த்ததும் ஆவலானது.ஆனால் ஓரிரு பக்கங்கள் தவிர எதுவுமே
படிக்க முடியாமல் சருகு போல கையில் எடுக்கும் போதே உதிர்ந்துவிட்டன.


.


காவேரியின் விஸ்வரூபத்தை அது செல்லும் இடங்களை ஒரு பயணத்தில் நம்மால்
கண்டுவிடமுடியாது என்பது உண்மை .


நடந்தாய் வாழி காவேரி என்று புத்தகம் எழுத பிரபல எழுத்தாளர் திரு.திஜானகிராமன்
,தனது எழுத்துலக நண்பர்களுடன் சிலவருடங்கள்முன்பு பயணம் செய்ததாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.


காவிரியைத் தழுவிவந்த திருவிழாக்கள், கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று
எத்தனையோ விஷய்ங்கள் உள்ளன.


தண்ணீர், குழாயிலும்தான் வருகிறது ஆனால் ஆற்றில் ஓடும்போது பாட்டாகக்
கேட்கும் ! கவிதையாகச் சிரிக்கும்!


காவிரியின் ரகசியம் என்ன? அந்தப்புத்தகம் யாராவது படித்திருக்கிறீர்களா?


நதிமூலமே ரகசியம்தானே?

14 comments:

  1. சுவையாக இருந்தது இதைப்படிக்க!, புத்தகமும் சுவையாக இருக்கும் போல!
    //படிக்க முடியாமல் சருகு போல கையில் எடுக்கும் போதே உதிர்ந்துவிட்டன. //
    ஆவலைத் தூண்டி, இறுதியில் இப்படிச் சொல்லி விட்டீர்களே!
    படித்திருக்கேறேன் என்று சொல்ல இயலவில்லை.
    குறைந்தது இதையாவது சொல்கிறேன்:
    காவிரியை குறிப்பிடும் பாடல்களை தொகுத்து வழங்கி இருந்தார் விஜய் சிவா, சென்ற ஜெயா டி.வி. மார்கழி உற்சவத்தில். தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், தெரியாதவர்களுக்கு:
    http://www.youtube.com/watch?v=vx0TRzelaLM&feature=related

    ReplyDelete
  2. ஜீவா (Jeeva Venkataraman) said...
    சுவையாக இருந்தது இதைப்படிக்க!, புத்தகமும் சுவையாக இருக்கும் போல!
    ஆவலைத் தூண்டி, இறுதியில் இப்படிச் சொல்லி விட்டீர்களே!
    படித்திருக்கேறேன் என்று சொல்ல இயலவில்லை.
    குறைந்தது இதையாவது சொல்கிறேன்:
    காவிரியை குறிப்பிடும் பாடல்களை தொகுத்து வழங்கி இருந்தார் விஜய் சிவா, சென்ற ஜெயா டி.வி. மார்கழி உற்சவத்தில். தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், தெரியாதவர்களுக்கு..

    //

    வாங்க ஜீவா.
    ஆமாம் அந்த புத்தகத்தை படிக்கவே முடியவில்லைஅந்த வருத்தம் இருக்கிறது..பார்க்கலாம் யாராவது படித்து பதிவு எழுதுகிறார்களா என்று.
    விஜய் சிவா பாடும் இந்த நிகழ்ச்சியைஅன்று டிவில பார்த்தேன்....மறுபடி இங்கு அளித்தமைக்கு மிக்க நன்றி. இன்னமும் காவிரிப்பாடல்கள் கதைகள்நிறைய வரவேண்டும்

    ReplyDelete
  3. உங்க பதிவின் மூலம் தான் இப்படி ஒரு புத்தகம் இருக்குன்னு தெரியுது!

    ReplyDelete
  4. காவேரி ரகஸ்யம் இருக்கட்டும்! காணாமல் போன ரகஸ்யம் என்னவோ?

    ReplyDelete
  5. Anonymous8:37 AM

    puthagangala ipdi mootta katti vachirukkangannu nenakkirappa romba kashtama irukku... aana ipdi oru puthgam irukku-nu therinjikkitten..engayavathu kedacha kandippa vangi padikkaren..

    ReplyDelete
  6. நல்ல பதிவு.. படிச்சிட்டு கமெண்ட் போடறேன்.. :)

    ReplyDelete
  7. சுவைபட எழுதிய நல்ல பதிவு.

    'நடந்தாய் வாழி காவேரி' அகத்தியர் திரைப்படத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் ஒலிக்கும் பாடல் என் நினைவுக்கு வருகிற்து.

    "நடந்தாய் வாழி காவேரி.
    நாடெங்குமே செழிக்க,
    நன்மையெல்லாம் பிறக்க,
    நடந்தாய் வாழி காவேரி"

    ***

    இளங்கோவடிகள் பாடிய சங்க காலத்து காவிரி ஆறு எங்கே, இப்போது வற்றிக்கிடக்கும் காவிரி எங்கே...? பல இடங்களில் இன்று வெறும் மணற்பரப்பைத்தான் காணமுடிகிறது :(

    சிதம்பர ரகசியம் போல அதென்ன காவேரி ரகசியம்... அடியேனும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் :)

    ReplyDelete
  8. கோபிநாத் said...
    உங்க பதிவின் மூலம் தான் இப்படி ஒரு புத்தகம் இருக்குன்னு தெரியுது!
    //

    >>>>வாங்ககோபிநாத் நானும் அந்த புத்தகம் பார்த்துதான் தெரிஞ்சிட்டேன்(முழுமையா ஒண்ணும் இல்ல ஆனா:)
    &&&&&&&&&&&&&&&&&&&&


    //லதானந்த் said...
    காவேரி ரகஸ்யம் இருக்கட்டும்! காணாமல் போன ரகஸ்யம் என்னவோ?/.//

    கொஞ்சம் ஊர் சுற்றல்கொஞ்சம் வீட்ல கணவருக்கு உடல்நலமில்லை எனக்கவலை(இப்போ ஒகே) இதனால் காணாமபோன நான் திரும்ப வந்தாச்சு:)

    ReplyDelete
  9. Ezhilanbu said...
    puthagangala ipdi mootta katti vachirukkangannu nenakkirappa romba kashtama irukku... aana ipdi oru puthgam irukku-nu therinjikkitten..engayavathu kedacha kandippa vangi padikkaren..//

    வா ப்ரியா..புக் கிடைச்சா கண்டிப்பா வாங்கிடு... நன்றி.

    ReplyDelete
  10. SanJai said...
    நல்ல பதிவு.. படிச்சிட்டு கமெண்ட் போடறேன்.. :)//

    வாங்க சஞ்சய்!! படிச்சிட்டு போடுங்க..வலைச்சரவேலை முடிஞ்சுதா?

    ReplyDelete
  11. பாரதிய நவீன இளவரசன் said...
    சுவைபட எழுதிய நல்ல பதிவு.//

    வாங்க பார்தீய நவீன இளவரசன்!!! வருகைக்கு நன்றி.

    '//நடந்தாய் வாழி காவேரி' அகத்தியர் திரைப்படத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் ஒலிக்கும் பாடல் என் நினைவுக்கு வருகிற்து.

    "நடந்தாய் வாழி காவேரி.
    நாடெங்குமே செழிக்க,
    நன்மையெல்லாம் பிறக்க,
    நடந்தாய் வாழி காவேரி"//

    ஆமாநானும் கேட்ருகேன்.

    ***

    //இளங்கோவடிகள் பாடிய சங்க காலத்து காவிரி ஆறு எங்கே, இப்போது வற்றிக்கிடக்கும் காவிரி எங்கே...? பல இடங்களில் இன்று வெறும் மணற்பரப்பைத்தான் காணமுடிகிறது :(//

    ஆடிலகொஞ்சம் வெள்ளம் வரும் எங்க திருவரங்கத்துல ...அப்றோம் மணல்வெளிதான் எங்கும் வருத்த்மாத்தான் இருக்கு.

    //சிதம்பர ரகசியம் போல அதென்ன காவேரி ரகசியம்... அடியேனும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்//

    எனக்கும் தெரியலையே..அதான் பதிவிட்டு கேட்ருக்கேன் பாக்லாம் என்னிக்காவது தெரிஞ்சிடும்! நன்றிங்க கருத்துக்கு.

    ReplyDelete
  12. நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. அடடா! அடுத்த தடவை அவங்க வீட்டுக்கு போகும் போது எங்களையும் கூப்டுங்க. மூட்டைய அப்படியே தூக்கிட்டு வந்துடலாம். எவ்ளோ பதிவு போடலாம். ஒரு பிளாக்கருக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். என்ன நான் சொல்றது..? :p

    புது பதிவு, புது டெம்ப்ளேட், கலக்கறீங்க ஷைலு அக்கா! :)

    ReplyDelete
  14. ஆமாம், நானும் இந்தமாதிரி புத்தகங்களை கவனமா பாதுகாக்காத பலரை பார்த்து வருந்திருக்கிறேன்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.