ஒருநாள் கிடப்பேன்
கொளுத்தும் வெய்யிலில்
மறுநாள் கிடப்பேன்.
கூண்டுக் கிளிக்காவது
சீட்டு எடுக்கும்போது
சில நிமிட விடுதலை.
தொட்டிச் செடிக்கு
அப்படி எதுவுமில்லை.
வேர்க் கால்களை
வீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை.
வேடிக்கை காண வரும்
விந்தை மனிதர்களைப்
பார்த்தபடியும்
மேய்ந்துவரும் மாடுகளிடம்
என்னில் பாதியை
இழப்பதுவுமே
வாடிக்கையாகிவிட்டது.
அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.
தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
என் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்
Tweet | ||||
:))))))
ReplyDeleteஅருமையா இருக்கு கவிதை.
வேர்க் கால்களை
ReplyDeleteவீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை
போன்சாய் ஆல, அரச மரங்களை பார்க்க அழகாக இருந்தாலும் அவைகளுக்குண்டான சுதந்திரத்தை மனிதன் பறித்து விடுகிறான் என்றே உணர்கிறேன். கூண்டிலைக்கப்பட்ட பறவை பிராணிகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாதுதான் :(
நல்ல கவிதை
தொட்டிச் செடியாகத்தான் இருக்கு பலரது வாழ்வும். நல்ல கவிதை அக்கா.
ReplyDeleteநன்றி சிவா கபீரன்பன் கவிநயா! வருககக்கும் கருத்துக்கும் மிக நன்றி
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை ஷைலஜா. கூட்டில் பறவைகளை அடைப்பது பாவம் என நினைப்பவரும் கூட செடியைத் தொட்டியில் அடக்கி வளர்ப்பது பற்றி சிந்திப்பதில்லை. தொட்டிச் செடியின் கண்ணீர்.. ஒவ்வொரு வரியிலும் வடிகிறது.
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை ஷைலஜா. கூட்டில் பறவைகளை அடைப்பது பாவம் என நினைப்பவரும் கூட செடியைத் தொட்டியில் அடக்கி வளர்ப்பது பற்றி சிந்திப்பதில்லை. தொட்டிச் செடியின் கண்ணீர்.. ஒவ்வொரு வரியிலும் வடிகிறது.
>>>
நன்றி ராமலஷ்மி வருகைக்கும் உணர்ந்துபடித்து கருத்து தெரிவித்ததற்கும்.
ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட்லயெல்லாம் அப்பீச் செஞ்சி பார்த்தீங்காளா அக்கா?
ReplyDelete