************************************************
சுதந்திரக்காற்றையெல்லாம்,நீர்
சூழ்ந்த அந்தத்தீவில்
எந்தச்சுனாமி
அள்ளிக் கொண்டுபோனதோ?
நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்
உருகாத பனிக்கட்டியாய்
பாலைவனவெப்பத்திலும்
தோகை விரித்தாடும் மயில்களாய்
உப்புக்கடலில் உதித்த
செப்புத்தாமரைகளாய்
அதர்மக்கூடாரத்தில்
தர்மவான்களாய் வாழும்
தமிழினத்தின் உயிரினம்
அழிந்துகாண்பதுசுடுவனம்
விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!
சமமாக எங்குமேபரவி
அமைதியை இலங்கைக்குத்தந்து
எல்லோரும் நன்றாக
எல்லாரும்ஒன்றாகவாழ
எங்கெங்கும் ஒளிதந்து
எல்லையில்லா ஆனந்தம்
எம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே! தீபாவளியே!
************************************************
மத்தாப்பூவாய்.....
மத்தாப்பூவாய் மலர்ந்த காதல் உன்
அப்பாவின் அணுகுண்டு கோபத்தில்
புஸ்வாணமாகிப்போனது
தரைச்சக்கரமாய் சுழல்கிறது என்மனது
சாட்டையடியாய் திரும்பிப் பேசி
தவுசண்ட் வாலாவாய் வெடிக்கத்
தெரியும் எனக்கும் .
ஓலைக்குள் சுருண்டிருக்கும்
பட்டாசாய்மௌனம்காக்கிறேன்
நேரம் வரும் எனக்கும்
வேலைஒன்றுகிடைக்கும் பின்பு
வானம்அதிரவெடிவைப்பேன்
மாலையும் சூட்டுவேன் உன்கழுத்தில்!
(இரண்டு கவிதைகளும் விகடன் மின்னிதழ் தீபாவளி மலரில் வந்துள்ளன)
Tweet | ||||
/
ReplyDeleteஇரண்டு கவிதைகளும் விகடன் மின்னிதழ் தீபாவளி மலரில் வந்துள்ளன/
வாழ்த்துகள்
/நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்
உருகாத பனிக்கட்டியாய்
பாலைவனவெப்பத்திலும்
தோகை விரித்தாடும் மயில்களாய்
உப்புக்கடலில் உதித்த
செப்புத்தாமரைகளாய்
அதர்மக்கூடாரத்தில்
தர்மவான்களாய் வாழும்
தமிழினத்தின் உயிரினம்
அழிந்துகாண்பதுசுடுவனம்
விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!
சமமாக எங்குமேபரவி
அமைதியை இலங்கைக்குத்தந்து
எல்லோரும் நன்றாக
எல்லாரும்ஒன்றாகவாழ
எங்கெங்கும் ஒளிதந்து
எல்லையில்லா ஆனந்தம்
எம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே! தீபாவளியே!/
நிச்சியமாக
//எல்லையில்லா ஆனந்தம்
ReplyDeleteஎம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே!//
புதுஒளி பிறக்கட்டும்.
மத்தாப்பூவாய்.....மலர்ந்த கவிதையை மிகவும் ரசித்தேன்:) ஷைலஜா!
தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteபட்டாசுக்களை வரிசைப்படுத்தியே கவிதை புனைந்ததை மிகவும் ரசித்த்து சிரித்து படித்தேன்.
வாழ்த்துகள் ஷையக்கா.
ReplyDelete//விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!//
நல்லாருக்கு.
நன்றி திகழ்மிளிர் ஜிஜி ராமலஷ்மி கவிநயா! உங்களின் மேலான வருகைக்கும் க்ருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஅன்புள்ள தோழியே,
ReplyDeleteஉங்கள் கவிதை கண்டேன், மிகவும் அருமை.
நீங்கள் சுஜாதாவின் பதிப்புகளை விரும்புபவர? நானும்தான். முடிந்தால் என்னோட இலக்கணம் இல்லா கவிதை நடை கிறுக்கல்களை கொஞ்சம் படித்து பார்த்து கருத்துஇடுங்களேன்..
நன்றி
தமிழ் உதயன்.
கவிதைகள் மூன்றும் மிக அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா!
தமிழ் உதயன் said...
ReplyDeleteஅன்புள்ள தோழியே,
உங்கள் கவிதை கண்டேன், மிகவும் அருமை.>>
நன்றி தமிழ் உதயன்.
நீங்கள் சுஜாதாவின் பதிப்புகளை விரும்புபவர? நானும்தான். >>>
அவர் எழுதியவைகளை விரும்பாதவர் யார்?
முடிந்தால் என்னோட இலக்கணம் இல்லா கவிதை நடை கிறுக்கல்களை கொஞ்சம் படித்து பார்த்து கருத்துஇடுங்களேன்..>>
கண்டிப்பா விரைவில் பார்க்கிறேன்
நன்றி வருகை+கருத்துக்கு
ஷைலஜா
நாமக்கல் சிபி said...
ReplyDeleteகவிதைகள் மூன்றும் மிக அருமை!
வாழ்த்துக்கள் அக்கா!
>>>>>நன்றி சிபிஎன்ன இந்தப்பகக்ம் அதிசியமா? நாமக்கல்ல மழை?:)