துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?
ஆச்சர்யமா இருக்குங்க!
தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.
இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)
மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?
அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!
வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.
சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.
நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.
உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!
இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு
நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?
மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.
இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!
அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!
நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.
நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க
கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.
ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.
மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....
இன்னும் இருக்கலாம்....
இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு):)
சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.
காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.
'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.
பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!
பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
Tweet | ||||
வாழ்த்துக்கள் :)
ReplyDeleteமின்ன வாழ்த்துகள்
ReplyDeleteஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா :))
ReplyDeleteவாங்க அக்கா வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநட்சத்திர வாரத்தில் உங்கள் பதிவு முத்துக்கள் ஜொலிக்க வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஒரு குடும்ப பெண்னால் இத்தனயும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகிறீர்.... பெருமைப்படவேண்டிய விஷயம்!!!!
ReplyDeleteகலக்குங்க!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்...
சபாஷ்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்-க்கா! :)
ReplyDeleteதமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்
ReplyDeleteஇது நட்சத்திர வாரமா? இல்லை மைசூர்பா வாரமா? அதச் சொல்லுங்க மொதல்ல! :)
ReplyDeleteநட்சத்திர அறிமுகம் சூப்பர்!
ReplyDelete//உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்)//
ReplyDeleteஇது நட்சத்திர உள்குத்தா? :))
நட்சத்திரம் அதுவுமா இப்பிடிப் போட்டு அடிக்கறீங்களே! இதைக் கேட்பார் இல்லையா? :)
//இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய//
ReplyDeleteநீங்க கேப்டன் கட்சியில சேந்தாச்சாக்கா? சொல்லவேயில்ல? :)
//'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து//
ReplyDeleteசூப்பர் அம்மா! வாழ்க! வாழ்க!
-இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//ஆண்மூலம் அரசாளுமாம்
ReplyDeleteபெண்மூலம் நிர்மூலமாம்//
ஆண்மூலம் ஆஞ்சநேயர் அரசே ஆளலை! சேவகம் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!
அதே போல பெண்மூலம் நிர்மூலம் இல்லை!
இப்படி ரைமிங்கா பேசிப் பீதியைக் கெளப்பறதே புலவர்களுக்கு பொழைப்பாப் போச்சு! :(
//நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து//
ReplyDeleteகண்டிப்பா பார்ப்போம்!
//படிச்சி//
இது கொஞ்சம் கஷ்டம்!
//கருத்து//
இது ரொம்ப ஈசி! :)
//சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
//
சொல்லிட்றோம்! சொல்லிடறோம்! :)
எப்படி 2நட்சத்திரப்பதிவு வந்ததுன்னே தெரில்ல!! இதானோ இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது?:)
ReplyDeleteவாழ்த்தும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி.
கண்ணபிரான் ரவி இது மைபா வாரமும்கூட!!ரொம்ப நன்றி ரவி அதிகப்பின்னூட்டமிட்டதுக்கு!!!!
அன்புள்ள ஷைலஜா,
ReplyDeleteநினைவிருக்கிறதா?
உங்களைக் காண கால்கடுக்க இந்தபக்கமெல்லாம் வந்து ஓடி வந்தேன்.
உங்களின் நட்சத்திர அந்தஸ்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
warm hugs,
ஷக்தி
Anonymous said...
ReplyDeleteஅன்புள்ள ஷைலஜா,
நினைவிருக்கிறதா?
உங்களைக் காண கால்கடுக்க இந்தபக்கமெல்லாம் வந்து ஓடி வந்தேன்.
உங்களின் நட்சத்திர அந்தஸ்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
warm hugs,
ஷக்தி
>>>ஷக்திப்ரபாவா என்ன? மிக்கமகிழ்ச்சி நினைவில்லாமல் என்ன மறந்தா தானே நினைக்க?:)
நன்றி வருகைக்கு
வலைச்சரத்துல வித்தியாசமான பதிவுகளை காமிச்சு அசத்தினீங்க. நட்சத்திர வாரத்தலயும் அசத்துங்க. வாழ்த்துக்கள்ள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா... கலக்குங்க.. :))
ReplyDelete36 PM
ReplyDeleteசின்ன அம்மிணி said...
வலைச்சரத்துல வித்தியாசமான பதிவுகளை காமிச்சு அசத்தினீங்க. நட்சத்திர வாரத்தலயும் அசத்துங்க. வாழ்த்துக்கள்ள்
>>>>>வாங்க சின்னம்மிணி
முடிகிறவரைக்கும் அசத்தற பதிவுகளை
அளிக்கறேன்மிக்க நன்றி
மதுரையம்பதி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைல்ஸக்கா... கலக்குங்க.. :))
3:47 PM
>>>>நன்றி மதிரையம்பதி,,,காஃபிதான் ஒழுங்கா கலப்பேன்...பாக்க்லாம் இங்கயும்:)
நட்சத்திர வாழ்த்துக்கள் ;-)
ReplyDeleteகானா பிரபா said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் ;-)
>>>>நன்றி கானாப்ரபா!
ஆகா. வாழ்த்துகள் அக்கா. நாலு நாளைக்கு முன்னாடி நீங்க நட்சத்திரம் ஆகுறீங்கன்னு கேள்விபட்டதுல இருந்து காத்திருக்கிறேன். அடிச்சு ஆடுங்க.
ReplyDeleteயாரை அடிக்கிறதா? அது தான் பாசமிகு தம்பி கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே! ரொம்ப நல்லவர் அவர்! :-)
குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆகா. வாழ்த்துகள் அக்கா. நாலு நாளைக்கு முன்னாடி நீங்க நட்சத்திரம் ஆகுறீங்கன்னு கேள்விபட்டதுல இருந்து காத்திருக்கிறேன். அடிச்சு ஆடுங்க. >>>
வாங்க குமரன்!!!! வாழ்த்துக்கு நன்றி
அடிச்சி ஆடறதா அதெல்லாம் குமரன் மதுரையம்பதி ஜிரா கே ஆர் எஸ் மாதிரி சிலருக்கே கைவந்த கலை:)
யாரை அடிக்கிறதா? அது தான் பாசமிகு தம்பி கண்ணபிரான் இரவிசங்கர் இருக்காரே! ரொம்ப நல்லவர் அவர்! :-)>>>>
ஏற்கனவே அவருக்கு கண்ணடின்னு கேள்விப்பட்டேன்!!!!
6:02 PM
வாழ்த்துகள் ஷைலஜாக்கா!! :)
ReplyDeleteஇலவசக்கொத்தனார் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷைலஜாக்கா!!
7:06 PM >>>>நன்றி இலவசம்!
அடடே, சகோதரி, இந்தவார நட்சத்திரம் நீங்களா?
ReplyDeleteமகிழ்ச்சி நிறைந்த வாரம்!
ஜாமாயுங்கள்!
கைதட்டி ஆரவாரம் செய்ய நாங்கள் இருக்கிறோம்!
உங்களுக்குக் கைவந்த (நகைச்சுவை) இசைப்பதிவு ஒன்றைப் பதிவிடுங்கள்!
/////Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்//
ஆண்மூலம் ஆஞ்சநேயர் அரசே ஆளலை! சேவகம் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!
அதே போல பெண்மூலம் நிர்மூலம் இல்லை!
இப்படி ரைமிங்கா பேசிப் பீதியைக் கெளப்பறதே புலவர்களுக்கு பொழைப்பாப் போச்சு! :(////
ஆண்மூலம், பெண்மூலம் என்பது ஆடவரையும், பெண்களையும் குறிப்பதல்ல!
தவறான புரிதல்!
பகலில் (சூரியன் ஆதிக்கத்தில் இருக்கும் நேரத்தில்) மூல நட்சத்திரத்தில் பிறக்கும் அனைவரும் ஆண் மூலம்
இரவில் (சந்திரன் ஆதிக்கத்தில் இருக்கும் நேரத்தில்) மூல நட்சத்திரத்தில் பிறக்கும் அனைவரும் பெண் மூலம்
எனப்படுவார்கள்.
வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteஅட! நம்ம ஷைலூ.....
ReplyDeleteநீங்களா தாரகை???ஆஹா.....
அடிச்சு ஆடப்போறிங்கன்னு மின்மினி வந்து சொல்லிட்டுப்போச்சே:-))))
இனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துகள்!
ReplyDelete