பட்டு மெத்தை வேண்டாம்
அம்மாவின்
இடுப்பே போதும்
மயிலிறகுவேண்டாம்
மடியிலிட்டு
விரலில் வருடினாலேபோதும்
அம்மாவின்உள்ளங்கை
தொட்ட சுகம்
வேறெதிலும் கிட்டாது
கண்ணுக்குத்தெரியாத
கருணை உணர்வை
கன்றான தன் மகவிற்கு
கனிவுடன் தருவாள்
வாய் நனைத்து மட்டுமல்ல
வயிற்றையும் நிறைத்துவிடுவாள்
எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்
இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்?
இயற்கையின் நூதனமா இங்கு
தாய் தரும் சீதனம்?
பனிக்குடம் உடைந்தவுடன்
பால்குடங்கள் திறந்துவிடும்
தாய்தரும் பாலில்
அன்பின் அடர்த்தி அதிகம்
உதிரம் பெயர்மாறும்
உடம்பின் இரண்டாவது திரவம்
எட்டடுக்கு மாளிகையின்
கட்டான அஸ்திவாரம்.
*************************************************************************************
(வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது)
Tweet | ||||
எனை ஈன்ற தாய்க்கும்
ReplyDeleteமற்றும்
அனைத்து தாய்க்களக்கும்
வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
//பட்டு மெத்தை வேண்டாம்
ReplyDeleteஅம்மாவின்
இடுப்பே போதும்//
இதை படிக்கும்போது, நான் மறுபடி குழந்தை ஆனேன்....
//மயிலிறகுவேண்டாம்
மடியிலிட்டு
விரலில் வருடினாலேபோதும்//
ஆம்... தாயின் மெல்லிய வருடலில், செய், சுகமாக கிறங்கி, உறங்திதான் போகும்.
//அம்மாவின் உள்ளங்கை
தொட்ட சுகம்
வேறெதிலும் கிட்டாது//
சால உண்மை.... அம்மாவின் கைபட்ட சாதாரண சமையல் கூட அமுதமாக மாறுமே...
//வாய் நனைத்து மட்டுமல்ல
வயிற்றையும் நிறைத்துவிடுவாள்//
நம் பசியினை தாயன்றி வேறு யாரறிவார்?
//எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்
இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்?//
உலகின் எந்த மூலைக்கு போனாலும் கிடைக்காது இரண்டு விஷயங்கள்.
1. தாயின் அன்பு (விலை மீது விலை வைத்து கேட்டாலும், கொடுத்தாலும், கடைதனில்
2. அவளின் கனிவான, உள்ளன்புடன் பரிமாறும் அந்த உணவு..
//இயற்கையின் நூதனமா இங்கு
தாய் தரும் சீதனம்?//
வாவ்.... வெகு நேர்த்தியாக எழுதப்பட்ட அட்டகாசமான வரிகள்...
//பனிக்குடம் உடைந்தவுடன்
பால்குடங்கள் திறந்துவிடும்//
நிதர்சனமான உண்மை....அறிவியல் அதிசயம்...
//தாய்தரும் பாலில்
அன்பின் அடர்த்தி அதிகம்//
உண்மை...... இயற்கையின் அதிசயம்.....
//உதிரம் பெயர் மாறும்
உடம்பின் இரண்டாவது திரவம்
எட்டடுக்கு மாளிகையின்
கட்டான அஸ்திவாரம்.//
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஷைலஜா.... அவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள்....
//(வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது) //
அழகை போஷிக்கிறேன் என்று சில நவீன நங்கைகள் தன மகவுக்கு தாய்ப்பால் தருவதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகளை படிக்கும்போது, என் மனம் துன்புறுகிறது..... இயற்கை அளித்த அந்த உணவு, அந்த சிறிய மகவிர்கல்லவா? அதை அந்த மகவிற்கு தராமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம்?
"மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டும்"
தாய்மையை போற்றுவோம்.
வாழ்த்துக்கள் ஷைலஜா..... மிக மிக அருமை......
தாய்மையின் பெருமைகளில் பெருமிதம் இந்த தாய்ப்பால் வகிக்கும்...அதை தாயின் ஊடே பதிவிட்டு மேலும் அதற்கு பொலிவேற்றி விட்டாய் ஷைலு...
ReplyDelete//பனிக்குடம் உடைந்தவுடன் பால் குடங்கள் திறந்துவிடும்//
ஹைலைட் இந்த வரிகள் உங்கள் கவிதைக்கு....தாய்மை போற்றியே தாயே தழைக்கட்டும் உன் எழுத்துக்கள் வாழ்த்துகள்டா...
மிக அழகாக வந்திருக்கிறது. உலக தாய்ப்பால் வாரம் என்று இருப்பதை இவ்விடுகையின் மூலமே அறிந்தேன். நன்றி.
ReplyDeleteமிக அருமையாக இருக்கு கவிதை..;)
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது இவுங்களை பாருங்கள்
http://ojasviviji.blogspot.com/2009/08/blog-post.html
;)
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஎனை ஈன்ற தாய்க்கும்
மற்றும்
அனைத்து தாய்க்களக்கும்
வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
7:23 AM
//வாங்க ஜமால்! தாய்க்குலத்துக்கு நன்றி சொல்லிட்டீங்க சமத்துப்பையன்!
R.Gopi said...
ReplyDelete///என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஷைலஜா.... அவ்வளவு நன்றாக எழுதி இருக்கிறீர்கள்....
//(வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது) //
அழகை போஷிக்கிறேன் என்று சில நவீன நங்கைகள் தன மகவுக்கு தாய்ப்பால் தருவதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகளை படிக்கும்போது, என் மனம் துன்புறுகிறது..... இயற்கை அளித்த அந்த உணவு, அந்த சிறிய மகவிர்கல்லவா? அதை அந்த மகவிற்கு தராமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம்?
"மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டும்"
தாய்மையை போற்றுவோம்.
வாழ்த்துக்கள் ஷைலஜா..... /////
ரொம்ப் நன்றி கோபி
மிக அழகாய் பொறுமையாய் பின்னூட்டமிடும் உங்க பண்பும் அன்பும் பாராட்டவேண்டிய ஒன்று !
///தமிழரசி said...
ReplyDeleteதாய்மையின் பெருமைகளில் பெருமிதம் இந்த தாய்ப்பால் வகிக்கும்...அதை தாயின் ஊடே பதிவிட்டு மேலும் அதற்கு பொலிவேற்றி விட்டாய் ஷைலு...
//பனிக்குடம் உடைந்தவுடன் பால் குடங்கள் திறந்துவிடும்//
ஹைலைட் இந்த வரிகள் உங்கள் கவிதைக்கு....தாய்மை போற்றியே தாயே தழைக்கட்டும் உன் எழுத்துக்கள் வாழ்த்துகள்டா...
9:49 AM
/////
வாங்க தமிழரசி
நன்றி வருகைக்கும் மேலான அன்பான மனமார்ந்த கருத்துக்கும் தமிழ்!
//
ReplyDeleteமதுரையம்பதி said...
மிக அழகாக வந்திருக்கிறது. உலக தாய்ப்பால் வாரம் என்று இருப்பதை இவ்விடுகையின் மூலமே அறிந்தேன். நன்றி.
10:18 AM
//////
நன்றி மௌலி.
// கோபிநாத் said...
ReplyDeleteமிக அருமையாக இருக்கு கவிதை..;)
நேரம் கிடைக்கும் போது இவுங்களை பாருங்கள்
http://ojasviviji.blogspot.com/2009/08/blog-post.html
//
பாக்றேன் கோபிநாத் நன்றி மிக
மிக அருமை......
ReplyDeleteதாயன்புக்கு ஈடேது இணையேது?
ReplyDeleteஅற்புதமான கவிதை ஷைலஜா!
என்னது??? தாய்பால் குடுக்க வாரமாஆஆஆஆ?? கொடுமை :(
ReplyDelete//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஎன்னது??? தாய்பால் குடுக்க வாரமாஆஆஆஆ?? கொடுமை :(
4:56 PM
//
அப்படி இல்ல பிரபல பின்னணிப்பாடகரே. இப்ப நண்பர்கள் தினம் அன்னையர்தினம்னு கொண்டாடறதில்லையா அதுபோலத்தான்....இதனை சற்று ஹைலைட் செய்து சொல்வது அதுக்கு ஒருவாரம்...!! மனசிலாயி?:)
T.V.Radhakrishnan said...
ReplyDeleteமிக அருமை......
5:17 AM
ராமலக்ஷ்மி said...
தாயன்புக்கு ஈடேது இணையேது?
அற்புதமான கவிதை ஷைலஜா!
4:49 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>
மிக்க நன்றி ராதா க்ருஷ்ணன்.
நன்றி ராமலஷ்மி....நடுல உங்களைப்பாக்கவே இல்லைன்னு நினச்சேன் மடல் கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Good! shy
ReplyDeleteஇப்போதுதான் பார்த்தேன் ஷைல்ஸ்.
ReplyDeleteமீண்டும் அன்னையின் மடியில் இருந்த நெகிழ்வைக் கொடுத்துவிட்டீர்கள். வெகு உருக்கம்.
நல்ல சொல் சொல்லுவதற்கும் கொடுப்பினை வேண்டும். அது உங்களிடம் நிறைந்து இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
sylaja,
ReplyDeletelatest neyar viruppam - http://neyarviruppam.blogspot.com/2009/08/blog-post.html
kettuttu, paadi anuppunga :)
//Shakthiprabha said...
ReplyDeleteGood! shy//
Thanks shakthi..BTW where are you lady?:)
12:33 PM
///வல்லிசிம்ஹன் said...
இப்போதுதான் பார்த்தேன் ஷைல்ஸ்.
மீண்டும் அன்னையின் மடியில் இருந்த நெகிழ்வைக் கொடுத்துவிட்டீர்கள். வெகு உருக்கம்.
நல்ல சொல் சொல்லுவதற்கும் கொடுப்பினை வேண்டும். அது உங்களிடம் நிறைந்து இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
6:07 AM//
வாங்க வல்லிமா
இந்த வாழ்த்தைப்பெற நான் கொடுத்துவச்சிருக்கேனே மகிழ்ச்சியாய் இருக்கு.
//SurveySan said...
sylaja,
latest neyar viruppam - http://neyarviruppam.blogspot.com/2009/08/blog-post.html
kettuttu, paadi anuppunga :)
12:30 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>
அனுப்பறேன்சர்வேசன்
ஆண்குரலில் வந்தால்பாட்டு பரிணமிக்கும் எதுக்கும் முயலுகிறேன் உங்க வலைலயும் பதில் இட்டுவிட்டேன் நன்றி