மறுக்கமுடியாது
முள்ளைமுள்ளால்தான்
எடுக்கமுடியும் என்பதை.
நியாயம் பேசும்
துலாபாரத்தில்
நிமிடம் காட்டு.ம்
கடிகாரத்தில்.
பூக்களின் சாம்ராஜ்யத்தில்
முள்கூட
முடிவெடுக்கிறது!
பாதுகாப்பிற்கு
முள்வேலி
பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!
கண்மீன்களில்
தெரியும் பார்வைமுள்
முட்கள் பூக்களைப்போல்
வாடுவதில்லை
முள்ளும் மலரும்
மலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில்மட்டும்!
--
Tweet | ||||
//பூக்களைப்போல
ReplyDeleteமுட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!//
முள்ளையும் நேசிக்க ஆரம்பித்தால் வலி தெரியாது - வழி தெரியும் ! :))
கவிதை அருமை அக்கா!
சூப்பர் கவிதை.
ReplyDelete- சந்துரு
//நியாயம் பேசும்
ReplyDeleteதுலாபாரத்தில்//
சூப்பருங்கோ......
//பூக்களின் சாம்ராஜ்யத்தில்
முள்கூட
முடிவெடுக்கிறது!//
ஆம்....ரோஜா....
//பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!//
பிரமாதம் ஷைலஜா அவர்களே.....
அந்த பாதத்தைப்பதம் என்ற ஒற்றை சொல் - பாதத்தை பதம் என்ற இரு சொல்லாக மாற்றுங்கள்.... அது ஒரு சொல் அல்ல என்று நினைக்கிறேன், சரியா?
//முள்ளும் மலரும்
மலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில்மட்டும்//
ஒப்பனிங் இல்ல.... இங்க பினிஷிங் கூட நல்லா இருக்கு.... கடைசி வரியில் ஸ்பேஸிங் பிரச்சனையோ? (மனிதமனச்செடியில்மட்டும் ????)
கவிதை அருமை.... சில குறைகளை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும் ஷைலஜா....
பூக்களைப்போல
ReplyDeleteமுட்களை நாம் நேசிப்பதில்லை]]
ஆஹா அழகு.
//
ReplyDeleteஆயில்யன் said...
//பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!//
முள்ளையும் நேசிக்க ஆரம்பித்தால் வலி தெரியாது - வழி தெரியும் ! :))
கவிதை அருமை அக்கா!
8:22 AM
//
>>>>>>>>>>>>>>>>வலி- வழி! ஆகா ஆயில்யன் அருமையான சிந்தனை! நன்றி கருத்துக்கு.
//C said...
ReplyDeleteசூப்பர் கவிதை.
- சந்துரு
9:06 AM
//
நன்றிங்க சந்துரு!
R.Gopi said...
ReplyDelete//நியாயம் பேசும்
துலாபாரத்தில்//
சூப்பருங்கோ......>>>>>
:0 நன்றி
//பூக்களின் சாம்ராஜ்யத்தில்
முள்கூட
முடிவெடுக்கிறது!//
ஆம்....ரோஜா....>>>>>>>
கரெக்ட்!
//////பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ என்னவோ
பாதைமுள்ளாய் வந்து
பாதத்தைப்பதம்
பார்க்கிறது!//
பிரமாதம் ஷைலஜா அவர்களே.....
அந்த பாதத்தைப்பதம் என்ற ஒற்றை சொல் - பாதத்தை பதம் என்ற இரு சொல்லாக மாற்றுங்கள்.... அது ஒரு சொல் அல்ல என்று நினைக்கிறேன், சரியா?????>>>>>>>
ஆமாம் பதம் என்ற சொல்லே போதும்! எழுதும்போது இப்படித்தோன்றவில்லை எனக்கு.
////////
ஒப்பனிங் இல்ல.... இங்க பினிஷிங் கூட நல்லா இருக்கு.... கடைசி வரியில் ஸ்பேஸிங் பிரச்சனையோ? (மனிதமனச்செடியில்மட்டும் ????)
கவிதை அருமை.... சில குறைகளை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும் ஷைலஜா/////
மன்னிப்பெல்லாம் எதுக்கு? கருத்துப்பரிமாற்றங்கள் விவாதங்கள் அறிவை வளர்க்கும்.நன்றிகோபிமிகவும் வருகைக்கும் விமர்சனம் செய்தமைக்கும்!
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை]]
ஆஹா அழகு.
9:38 AM
?/
வாங்க அருமைத்தம்பி ஜமால்
அழகைப்புரிஞ்சிட்டீங்களா ? முள்ளும் உங்களால் மலரும் ஜமால்.
நன்றிமிக.
This comment has been removed by the author.
ReplyDeleteமாலையில் யாரோ மனதோடு பேச
ReplyDeleteமார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
எனக்கும் பிடித்த பாடல் என்பதால் ஒரு சிறு உதவி. நன்றி.
ReplyDelete///உடலின் மீது ஆடுமோ
ReplyDeleteநெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
kavi said...
எனக்கும் பிடித்த பாடல் என்பதால் ஒரு சிறு உதவி. நன்றி.
10:11 PM/ மதன்பதிவிலும் இங்கும் நான் கேட்டதற்காக பாடலை இட்ட கவிக்கு நன்றி ரொம்ப.
இந்தப்பாடலை அன்புத்தம்பி ரிஷான் பாடித்தரசொல்லி கேட்டுருக்கார் அதான்:)
கவிதை அருமை
ReplyDeleteT.V.Radhakrishnan said...
ReplyDeleteகவிதை அருமை
2:06 AM
>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி ராதாக்ருஷ்ணன்.
//முள்ளும் மலரும்
ReplyDeleteமலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில்மட்டும்!//
அழகான அர்த்தமுள்ள வரிகள்
I hope you can recall my name Narasimhan
ReplyDeleteanbudan
RN
Anonymous said...
ReplyDeleteI hope you can recall my name Narasimhan
anbudan
RN
<<<<<>..
nachu Narasimhan, right?? plz tell me the details
ஷைல்ஸ்,
ReplyDeleteமுள்ளில் ரோஜா
உங்கள் கவிதை.அன்பை நேசிப்பதுபோல துன்பையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை வளமாகும் என்று சொல்லிவிட்டீர்கள்!!
அழகான கவிதை.
//
ReplyDeleteவல்லிசிம்ஹன் said...
ஷைல்ஸ்,
முள்ளில் ரோஜா
உங்கள் கவிதை.அன்பை நேசிப்பதுபோல துன்பையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை வளமாகும் என்று சொல்லிவிட்டீர்கள்!!
அழகான கவிதை.
6:16 AM//
அன்பே உருவான வல்லிமாவின் கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சிகலந்த நன்றி
//கண்மீன்களில்
ReplyDeleteதெரியும் பார்வைமுள்//
நல்லா இருக்குங்க ஷைலஜா
//சின்ன அம்மிணி said...
ReplyDelete//கண்மீன்களில்
தெரியும் பார்வைமுள்//
நல்லா இருக்குங்க ஷைலஜா
6:54 AM
நன்றி சின்னம்மிணி