
பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும். தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள் நீர்நிலையில்மட்டுமே...