பாடல் குரல்பதிவிலும் வருகிறது!
காதலர்தின சிறப்புக்கவிதை!
***************************
அழகாய் அவனே இருக்கின்றான்
ஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே!
அருவிவீழ்ச்சியில் தலைகொடுத்தே
அந்த அழகன் நிற்கும் கோலம்தான்
மருவித் துளைத்தென் மனத்துள்ளே
மயக்க அருவிதான் பொழிகின்றதே!
அங்காடித்தெரு வாசலிலே
அடிகள்மிதித்து அவன் நடக்கையிலே
இணைந்த என் இரு பாதஅடி
இழைந்தே போகவும் விழைகின்றதே!
தென்றல் சுகமாய் வீசுகையில்
தெள்ளிய நிலவு வானில்தெரிகையில்
நெஞ்சம் மட்டும் அலைபாயும்
நினைத்துநினைத்துத் தடுமாறும்!
என்னே இந்த ஏக்கமோ
என்னபெயர்தான் இதற்கோ?
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமும் பெருக இதற்கேது எல்லை?
காதலென்றுதான் சொல்வீரோ
காமன் கணைதான் இதுவோ?
ஏதும அறிய இயலாமல்
மாது நான் மயங்கிக்கிடக்கின்றேன்!
(இந்தப்பாடலைப்பாடியவர் யார் எனக்கண்டுபிடிக்கறவங்களுக்கு அரைகிலோ மைசூர்பாக் இலவசம்:)
Tweet | ||||
ஊற்றுப்புனலாய் ]]
ReplyDeleteஅழகு வார்த்தை.
பாடல் குரல் ரொம்ப இளமையா இருக்கே ...
காதலுக்கென்று ஒரு தினமா
தினம் தினம் செய்யுங்கள் காதல்
என்னே இந்த ஏக்கமோ
ReplyDeleteஎன்னபெயர்தான் இதற்கோ?]]
இதுதான் இதன் சிறப்பு
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமுமா கண்டதில்லை
---------------
இன்னமும் பெருக இதற்கேது எல்லை? - உண்மை தான்
காதல் என்பது எண்பதிலும் இருப்பது தானே ...
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஊற்றுப்புனலாய் ]]
அழகு வார்த்தை.
பாடல் குரல் ரொம்ப இளமையா இருக்கே ...
காதலுக்கென்று ஒரு தினமா
தினம் தினம் செய்யுங்கள் காதல்
10:51 AM
//
கவிதை இட்டவுடன் கருத்து சொல்லிவிட்ட சிங்கைக்கவிஞருக்கு நன்றி!
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
என்னே இந்த ஏக்கமோ
என்னபெயர்தான் இதற்கோ?]]
இதுதான் இதன் சிறப்பு
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமுமா கண்டதில்லை<<<>>>>>
கவிதைப்பெண் கண்டிருக்கவில்லைபோலிருக்கிறது!
---------------
இன்னமும் பெருக இதற்கேது எல்லை? - உண்மை தான்
காதல் என்பது எண்பதிலும் இருப்பது தானே
///<<<<<>>>>>><<>>>>>>>>
கடல் நுரைபோல முடிவெளுத்துப்போனாலும் நெஞ்சில்
இடமுண்டு உண்மைஉறவொன்று
காதல் கொண்டவர்க்கு!
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ReplyDeleteபாடியவரை கண்டு கொண்டேன்
:)
நல்லாருக்கு கவிதை & பாட்டு
//Jeeves said...
ReplyDeleteகண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
பாடியவரை கண்டு கொண்டேன்
:)
நல்லாருக்கு கவிதை & பாட்டு
11:12 AM
///<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கண்டுகொண்ட ஐயப்பனே மிக
உண்டு உமக்குத்திறமையே -அதனால்
வண்டு ஆடும் சோலைமலர்ச்
செண்டு ஒன்றே இதற்குப்பரிசே!
//கண்டுகொண்ட ஐயப்பனே மிக
ReplyDeleteஉண்டு உமக்குத்திறமையே -அதனால்
வண்டு ஆடும் சோலைமலர்ச்
செண்டு ஒன்றே இதற்குப்பரிசே!
//
இது கள்ளாட்டம். 1/2 கிலோ மைபா தான் வேணும். மலர்ச்செண்டு எல்லாம் வாணாம்
பாடல் அருமை
ReplyDeleteபாடியவர் குரல் தேனினும் இனிமை!
கண்டு கொண்டேன்
நானும்தான் கண்டு கொண்டேன்1
செண்டு கொடுத்து
ஏமாற்றப் பார்க்கும்
வேலையெல்லாம் இங்கு வேண்டாம்!
விடைபகர்ந்த இருவரும்
இருப்பது உம் இடமே!
தடையென்ன வந்து தருவதற்கு
இரண்டு கிலோ மைசூருபாகு?
Jeeves said...
ReplyDelete//
இது கள்ளாட்டம். 1/2 கிலோ மைபா தான் வேணும். மலர்ச்செண்டு எல்லாம் வாணாம்
11:19 AM///
மை(MY) 'பா' வை கண்டுகொண்டபின்
கைமேல்பலன் கிடைக்கும் அறி!
கண்டு கொண்டேன்
ReplyDeleteநானும்தான் கண்டு கொண்டேன் :)
எனக்கும் வேணும் மைசூர் பாகு/பாக்கு :)
This comment has been removed by the author.
ReplyDelete//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபாடல் அருமை
பாடியவர் குரல் தேனினும் இனிமை!
கண்டு கொண்டேன்
நானும்தான் கண்டு கொண்டேன்1
செண்டு கொடுத்து
ஏமாற்றப் பார்க்கும்
வேலையெல்லாம் இங்கு வேண்டாம்!
விடைபகர்ந்த இருவரும்
இருப்பது உம் இடமே!
தடையென்ன வந்து தருவதற்கு
இரண்டு கிலோ மைசூருபாகு?
11:40 AM
//
வாருங்கள் ராமலஷ்மி!
தாருங்கள் எனும் முன்பே
கார்மேகப்பொழிவினைப்போல்
வார்த்திட்டீர் இன் கவிதை காமிராவின் காதலி இவ்வனிதை!
தோட்டநகரத்து சோலை அழகினை
வாட்டமின்றி வனப்புடனே தன்
வலைப்பூவில் வடித்திட்ட இவருக்கு
நாட்டமுடன் நான் தருவேன்
நாலுகிலோ மைசூர்பாகு!
//ஆயில்யன் said...
ReplyDeleteகண்டு கொண்டேன்
நானும்தான் கண்டு கொண்டேன் :)
எனக்கும் வேணும் மைசூர் பாகு/பாக்கு :)
11:51 AM
///
>>>>>ஆயில்யனுக்கு, யார் அங்கே
நெய் சொட்டும் மைசூர்ப்பாக்கினை
வாயினிலே போடுங்க உத்தரவு!
//அழகாய் அவனே இருக்கின்றான்
ReplyDeleteஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே! //
******
மலர்கள் மலர்ந்தது.... பாடலை, அதன் சுவையை ஒட்டிய ட்யூன்...
இதை பாடியவர் எழுதியவரன்றி வேறு யாராக இருக்க முடியும்!!??
எல்லாருக்கும் மொதல்ல குடுங்க... நான் அந்த க்யூவில் கடைசியாக நின்று மைசூர்பாக் வாங்கும் ஒரு சாமானியன்...
உங்கள் குரல் மிகவும் அருமை...
R.Gopi said... /////
ReplyDeleteமலர்கள் மலர்ந்தது.... பாடலை, அதன் சுவையை ஒட்டிய ட்யூன்...
இதை பாடியவர் எழுதியவரன்றி வேறு யாராக இருக்க முடியும்!!??<<>>>>>
இப்படிக்கேள்வியிலேயே பதிலைச்சொல்ல கோபியைவிட்டால் யாரால முடியும்?:)
///எல்லாருக்கும் மொதல்ல குடுங்க... நான் அந்த க்யூவில் கடைசியாக நின்று மைசூர்பாக் வாங்கும் ஒரு சாமானியன்...///
கடைசிலன்னா மிச்சமெல்ல்லாம் கிடச்சிடும்னுதானே?:0
உங்கள் குரல் மிகவும் அருமை...<<>
நன்றி கோபி!
நல்லகவிதையாய் பின்னூட்டமிட நினைத்து வந்தேன் ,.நன்றி என்ற சொல்லைவிட அழகிய கவிதை ஒன்று இப்போது தெரியவில்லை!
12:34 PM
>>>>////
நல்லாருக்கு கவிதை & பாட்டு....
ReplyDelete//Sangkavi said...
ReplyDeleteநல்லாருக்கு கவிதை & பாட்டு....
1:53 PM
///
Thsnkyou Sangkavi!
நல்லாருக்கு கவிதை
ReplyDeleteநல்ல இருக்கிறது
ReplyDelete/மை(MY) 'பா' வை கண்டுகொண்டபின்
கைமேல்பலன் கிடைக்கும் அறி!/
:)))
"கண்டு பிடி" என்றவுடன் பிடித்துவிட்டேன்.(மைசூர்பாகை)
ReplyDeleteகவிதை- அழகு
பாடல்- இனிமை.
நேசமித்ரன் said...
ReplyDeleteநல்லாருக்கு கவிதை
7:27 PM
திகழ் said...
நல்ல இருக்கிறது
/மை(MY) 'பா' வை கண்டுகொண்டபின்
கைமேல்பலன் கிடைக்கும் அறி!/
:)))
8:03 AM
மாதேவி said...
"கண்டு பிடி" என்றவுடன் பிடித்துவிட்டேன்.(மைசூர்பாகை)
கவிதை- அழகு
பாடல்
<<<>>>>>>>>>
மிக்க நன்றி மாதேவி நேசமித்ரன் மற்றும் திகழ்!
hi nalla irungunga onga blog kavithai paatu ellame
ReplyDelete