Social Icons

Pages

Thursday, February 09, 2012

விருதுகளும் விஸ்வரூபங்களும்!

ரோம் நகரத்தின் போப்பாண்டவர் லிஸ்டியஸ் தனது ஸிஸ்டேன் பிரார்த்தனைக்கூடத்தின் கூரையில்(விதானத்தில்) ஆண்டவனின் படைப்பினை சித்திரமாக பார்க்க விரும்பினாராம். உலகப்புகழ்பெற்ற கலைஞராயிருந்த மைக்கேல் ஆஞ்செலோ அவரது விருப்பத்தைப்பூர்த்தி செய்தாராம்.

கூரைச்சித்திரங்களைப்பார்த்த போப்பாண்டவர்,” ஆஹா! நான் கூரையைப்பார்க்க வந்தேன் எனக்கு தெய்வ தரிசனமே கிடைத்தது!” என்றாராம்!

 நம் தமிழ் நாட்டிலும்12ம் நூற்றாண்டு தென் தமிழ் நாட்டு மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன் 63 நாயன்மார்களின் சரித்திரத்தை சிற்ப வடிவத்தில் காண ஆசைப்பட்டான். தாராசுரம் கோவிலில்அந்த சிற்பங்கள் இருக்கின்றன. அவன் ஆசைப்பட்டதற்கு மேலாகவே சிற்பிகள்  அதனை பூர்த்தி செய்து வைத்தனர்.  மெய் சிலிர்த்த  மன்னன், “கண்டறியாதன கண்டேன்!” என்றான்.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலில் இப்படி அற்புதச்சிற்பங்களை வடித்தவர்களின் பெயர்கள் எங்கும் பொறிக்கப்படவைல்லை. இந்தக்கோயிலின் பிராகாரத்தைச்சுற்றி வரும்போது ஒன்பது நூற்றாண்டுகள் கடந்தும்  சிற்பிகளின் நேர்முக தரிசனம் கிடைக்கும். பன்முகம் கண்ட சிற்பிகளின்  கைவண்னத்தில் மிளிரும் அற்புத சிற்பங்கள் நம் கண்ணையும் மனசையும் கட்டிப்போட்டிவிடும். பெரிய புராணத்தைக்கரைத்துக்குடித்தவர்களாக சங்கீத நாட்டிய வல்லுனர்களாக கழைக்கூத்தாடிகளாக வாழ்வின் கணங்களை ரசித்தவர்களாக நாகரீகத்தின் உன்னதத்தை எட்டியவர்களாக இருப்பவர்களால் தான் இவையெல்லாமாகவே  இருக்க இயலும். வெறும் வழிப்பாட்டுக்கட்டிடமாக தோன்றவில்லை கல்லெல்லாம்  கதை சொல்கிறது,மானுடத்தின் மகத்துவத்தைக்கொண்டாடக் கட்டப்பட்டதாக தோன்றுகிறது.
சிற்பிகள் யாரும் எங்குமே  தங்கள் பெயர்களை பொறிப்பதில்லை!தஞ்சை  பெரிய கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா? அங்கேகலைக்கூடத்தின் நான்குபிரிவில் ஒரு பகுதியில் நாயக்கர் கொலு மண்டபத்தில் புராதன தெய்வச்செப்புத்திருமேனிகளைக் கண்டிருக்கிறிர்களா? பல்லவர் ஆரம்பகால பிற்கால சோழ மற்றும் விஜயநகரபாணி சிற்பங்களின் அழகை வெறும் வார்த்தைகளில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லைதான். செப்புச்சிலைகளிலேயே ஒப்பில்லாத கலை நுணுக்கங்கள்!

  நுழைவாயிலில்                    கஜசம்ஹாரமூர்த்தியின்  சிற்பம் அப்படியே நாவுக்கரசரின்,

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓடவிரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்


தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும்


சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே.


என்கிற பாடலை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது !தாருகாவனத்து முனிவர்கள் சிவனை ஒழிக்க யானையை அனுப்ப சிவன் அதனைக்கிழித்து தோலைப்போர்த்தி தாண்டவம் ஆடியபோது அதனைக்கண்டு பயந்த பார்வதி குழந்தை முருகனை அதனின்று மறைக்க அதுகண்டு சிவன் சிரிக்க...... எல்லா பாவங்களும் சிலையில் வடித்த சிற்பிக்கு தெய்வ அருள் இருந்திருக்கவேண்டும் இல்லாவிடில் வெறும் கல்லில் உணர்ச்சிகளைக்கொண்டுவருதல் சாத்தியமில்லை! கல்லிலே கலைவண்ணம் கொண்டுவந்த உன்னதமனிதர்கள்!  செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்த விளம்பரம் விரும்பாத மாபெரும் கலைஞர்கள் இந்த மாமேதைகள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச்சென்றுவிட்ட தியாகிகள்! இவர்களின் பெயர்களை நாம் அறிந்திருக்கவில்லை இந்த விஸ்வரூபங்களுக்கு எந்த விருதும் வழங்கவில்லை.

 அதிகம் தகுதிகள் ஏதுமில்லாத எனக்கு விருதென்றால்வாங்கிக்கொள்ள சற்று கூச்சமாக இருக்கிறது. அதனாலே பெற்ற விருதுகளை சற்று நேரத்திற்கு வலைப்பூவில் இட்டுவிட்டு பிறகு எடுத்துவிடுவது வழக்கம். மனம் மகிழ்ந்து ஒருவர் எதைக்கொடுதாலும் நாம் அதை மதிக்க வேண்டும்.

அந்த வகையில்.....


'லீப்ச்டர்' என்கிற,  வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5  இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த விருதினைமறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி விடவேண்டுமாம்.  கணேஷும் ஷக்தி ப்ரபாவும் எனக்கு இந்தவிருதினைத் தந்திருக்கிறார்கள்  இருமுறை  கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி இருவருக்கும் மிக்க நன்றி.


நான்  அஞ்சுபேருக்கு அதுவும் 200க்குகுறைந்த உறுப்பினர்கள் கொண்ட பதிவர்களுக்கு  எங்கே போவது?:) எல்லோரும் முந்திக்கொண்டு அழைத்து முடித்துவிட்டார்கள் ஆகவே இரட்டை விருது பெற்ற மகிழ்ச்சியில் கொடுத்த இருவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்!

12 comments:

 1. அட்டாச்ட் பை மீ இன் ஆல் திரட்டீஸ்க்கா!

  நானும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில மகா சிற்பங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். நம் சரித்திர நாவல்களில் கூட மன்னர்களின் பக்கம்தான் வருமே தவிர, சிற்பிகள், ஆடல் கலைஞர்கள் என சாதாரணர்களின் கதைகள் அதிகம் வந்ததில்லை. வியக்க வைக்கும் திறன் நம் முன்னோருடையது.

  விருதுகள் நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என்பதை உணர்த்துவதோடு, கொடுப்பவரின் அன்பையும் உள்ளடக்கியிருக்கிறது. (‘அதிகம் தகுதி இல்லாத எனக்கு’ன்னு நீங்களே குறிப்பிட்டா நான்லாம் என்னாகறது?) ஆகவே, அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ள உங்களை நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்!

  ReplyDelete
 2. Anonymous9:05 AM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 4. அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 5. //இந்த மாமேதைகள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச்சென்றுவிட்ட தியாகிகள்! இவர்களின் பெயர்களை நாம் அறிந்திருக்கவில்லை இந்த விஸ்வரூபங்களுக்கு எந்த விருதும் வழங்கவில்லை.
  //

  Very true...Their dedication itself was considered as their reward. Our little gratitude can only be conveyed by thanking them for giving these breathtaking feast.


  // அதிகம் தகுதிகள் ஏதுமில்லாத எனக்கு விருதென்றால்வாங்கிக்கொள்ள சற்று கூச்சமாக இருக்கிறது. அதனாலே பெற்ற விருதுகளை சற்று நேரத்திற்கு வலைப்பூவில் இட்டுவிட்டு பிறகு எடுத்துவிடுவது வழக்கம். மனம் மகிழ்ந்து ஒருவர் எதைக்கொடுதாலும் நாம் அதை மதிக்க வேண்டும். //

  உங்களுக்கு தகுதியில்லையா? அப்புறம் நாங்கள்ளாம் என்னவாம்!! அடி வாங்காதீங்க! :P

  ReplyDelete
 6. விருதும் விஸ்வரூபமும்!
  ஆமாம், விஸ்வரூபம் மேடுத்தப் பதிவாகவே என்னை உங்கள் பதிவும் வாசித்தது...
  அற்புதமான விசயங்களை எல்லாம் கொண்டு வந்து மிகவும் அழகாக கோர்த்து
  சொல்ல வந்த விஷயத்தை ரத்தினச் சுருக்கமாக கூறி இருக்கும் அழகிலே மயங்கினேன்...
  எத்தனை அழகாக கூறியிருக்கிறீர்கள்...

  சகோதிரி ஷக்திபிரபா அவர்கள் உங்களுக்கு தந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை... ஆனந்தமே!
  அதில் என்னையும் கொண்டு வந்து இருக்கச் செய்தது!.... இருந்தும் சகோதிரியின் அன்பை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்...
  உங்களைப் போன்ற விஷய ஞானமும் நற்பண்பும் உடைய நல்மக்களோடு....

  இதிலே முக்கியமாக ஒரே வித சிந்தனையும் ரசனையும் என்பது கொண்டவர்களை சந்திப்பது அரிது! அப்படி சந்தித்தது பெரு மகிழ்ச்சி!....

  அப்படிப் பட்டவர்கள் இங்கே வலைப் பதிவில் பழகக் கிடைத்த இந்த வாய்ப்பே அலாதியானது...

  அதில் என்போன்றோருக்கு அங்கீகாரம் கிடைத்தது / பெறுவது தகுதிக்கானதாக.... அப்படி நான் எண்ணவில்லை நட்பிற்கானதாகவே எண்ணுகிறேன்... மனதை நெகிழச் செய்கிறது... இந்த தருணத்தை பயன் படுத்தி இறைவனுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

  தாங்கள் கூறியது போல எனது நிலையும்... நான் யாரைத் தேடி... எங்கே போவது என்றுத் தெரியவில்லை.

  தங்களின் பதிவு நன்று... அதைப் பகிர்ந்ததிற்கும் நன்றி...
  அரங்கனைப் பணிந்து முடிக்கிறேன்.

  ReplyDelete
 7. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வணக்கம்!
  “லீப்ச்டர்” விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்! உங்கள் கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டேன் ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று. நல்ல விமர்சனம்! நல்ல முடிவு!

  ReplyDelete
 11. வாழ்த்திய அனைவர்க்கும் திரட்டிகளில் சேர்த்த கணேஷுக்கும்
  மிக்க நன்றி.

  ReplyDelete
 12. நானறிந்த வரை ஆக சிறந்த சிற்பங்கள் இருக்கும் இடம், நான் மிக ரசிக்கும், என் மனமிழக்கும் தாராசுரம் தான். தொட்டு மட்டும் சென்றிருக்கிறீர்கள். விளக்கமாக ஒரு இடுகையை உங்கள் எழுத்தில் எதிர்பார்க்கிறேன். நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன்.

  வாழ்த்துக்கள் அக்கா. இந்த விருது உங்களை இன்னும் விஸ்வரூபம் கொள்ள செய்யட்டும்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.