காதல்நதிகள் பெண்கள்!
இடியொடு மின்னல்
பின்னர்வரும் மழையின்
சின்னத்தூறலிலும்
சிலிர்த்துப்போகிறோம்.
விழிமணிகள் விரித்து
விந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றோம்
ஐந்துவிரல்களை
அழுத்திப்பிடித்த கரங்கள்
கண்டங்கள் அனைத்தையும்
கொண்டுசேர்த்தகடல்கள்
அந்ததொடுதலில் அன்று
மெல்லச்சரிந்ததில்
குன்றுமணலாய்
எங்கள் தாபஏரிகள்
பல்கிபெருகி
வளைந்து நெளிந்து
பாய்ந்து ஓடி
இன்று
அடங்கிக்கிடக்கும்
காதல்நதிகள்!
இடியொடு மின்னல்
பின்னர்வரும் மழையின்
சின்னத்தூறலிலும்
சிலிர்த்துப்போகிறோம்.
விழிமணிகள் விரித்து
விந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றோம்
ஐந்துவிரல்களை
அழுத்திப்பிடித்த கரங்கள்
கண்டங்கள் அனைத்தையும்
கொண்டுசேர்த்தகடல்கள்
அந்ததொடுதலில் அன்று
மெல்லச்சரிந்ததில்
குன்றுமணலாய்
எங்கள் தாபஏரிகள்
பல்கிபெருகி
வளைந்து நெளிந்து
பாய்ந்து ஓடி
இன்று
அடங்கிக்கிடக்கும்
காதல்நதிகள்!
Tweet | ||||
ஆஹா! நல்லதொருக் கவிதை...
ReplyDeleteஅருமையானக் கற்பனை...
பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!
பெண்ணின் நளினம் நதியாய் ஓடுகிறது. நன்று. நன்றி.
ReplyDeleteவிந்தை மனவெளியில் பார்த்திட்ட கோலங்களை பத்திரமாய் காக்கிறோம் - அருமையான வரிகள்! பெண்மையை உயர்த்திப் பிடிக்கும் கவிதை! (திரட்டிகளில் இணைத்து விட்டேன்) நன்றி!
ReplyDeleteஅருமையான கவிதை ஷைலஜா.
ReplyDelete//விழிமணிகள் விரித்து
ReplyDeleteவிந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றோம் //
ரசித்த வரிகள்!
எதை விடுவது எதை சொல்வது! அழகான வரிகள்!!
ReplyDeleteபிடித்ததில் ரசித்தது!
//விழிமணிகள் விரித்து
விந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றோம்///