Social Icons

Pages

Monday, February 20, 2012

பித்தா !பிறைசூடி!

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்குநன்மையொடு தீமையிலை நாடுவது ஒன்று இல்லை


சீலம் இலை தவம் இல்லை விரதமொடு ஆச் சிரமச்


செயல் இல்லை தியானம் இல்லை சித்தமலம் இல்லை


கோலம் இலை புலன் இல்லை கரணம் இல்லை;

குணம் இல்லை குறி இல்லை குலமும் இல்லை


பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்

பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்

என்கிறார் சிவஞான சித்தியார். ஞான நிஷ்டை  உடையவர்கள் மானிட உடல் பெற்றிருந்தும் அந்த சரீரத்துடன் தொடர்பின்றி அருள்வசப்பட்டிருப்பார். அவர் செய்யும் செய்கைகள் உலகினர்க்கு பாலகர் பித்தர் முதலானவர் செய்யும் செய்கைகள் போலத்தோன்றும்..அபிராமிபட்டரின் நிலைமை இப்படித்தான் ஆகி இருந்தது.

ஆனால் இறைவனே பித்தனாமே  எப்படி அது?
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி.அன்னை தன் குழந்தைமீது அன்பு மிகுதியால் பித்தாகிறாள் அண்ணலும் நம் மீது கொண்ட அன்பினால் பித்தன் ஆகிறான். உயிர்கள் மீது கொண்ட கருணை மிகுதி அவனை பித்தன் என்ற பேரைக்கொடுக்கிறது. தாய் தன் குழந்தை செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்துவிடுகிறாள். தாயினும் சாலப்பரியும் இறைவன் பெரும் பித்தன் தான்.

அவருக்குத்தான் எத்தனை துன்பங்கள்!

  செருப்படிக்கடிகள் செம்மாந்திருந்தும்
தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்,
எளியரின் எளியர் ஆயினர்
அளியர் போலும் அன்பர் தமக்கே!

என்கிறது திருவாரூர் நான்மணிமாலைப்பாடல்.
இப்படி எளிமையாய் அன்பர்களை ஆட்கொள்ளும் இவரை பித்தன் என்பதில் என்ன தவறு?

"முன்னமவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னையவனுடைய வாரூர் கோட்டாள்; பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள்" என்றபடி பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!


திருவாசகத்துப்பாடலில்  பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறை பெரும்பித்தனே   என்கிறார் மாணிக்க வாசகர்!

சிவபெருமான முதலில் முதியவர் வடிவத்தில் தம்மை ஆட்கொள்ள வந்தது தெரியாமல் சுந்தரமூர்த்தி நாயனார் அண்ணலை பித்தன் என்கிறார்கோபமாக  பிரான் அதனை பொருட்படுத்தாமல் வலிந்து ஆட்கொண்டதும் அவருடைய அருட்பெரும் பித்தை அறிந்துகொண்டவர் அவரைப்போற்றிப்புகழ்ந்து

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா


எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே ’

என்று கண்பனிக்கிறார்!


11 comments:

 1. பித்தனை ஞானமுக்தனை அகிலமெல்லாம் ஒளிரும்
  சித்தனை சிந்தனைசெய்ய வைத்தனைய...

  நல்லப் பதிவு...
  பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

  ReplyDelete
 2. பிறை சூடிய பித்தனை நினைக்க வைத்த முத்தான படைப்பு. அருமை. நன்றி. (எ.தி.இ.)

  ReplyDelete
 3. மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஷைலஜா.

  நன்றி.

  ReplyDelete
 4. Anonymous10:30 AM

  ''...பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!....
  நல்ல ஒரு அளவான பதிவு. ஒரு தரத்திற்கு இருமுறை கூட வாசித்து மனதில் பதிக்க முடியும் . அதுவும் இதைச் சிவராத்திரிப் பதிவு என்றும் கூறலாமே.
  வாழ்த்துகள் சகோதரி.

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 5. Anonymous10:30 AM

  ''...பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!....
  நல்ல ஒரு அளவான பதிவு. ஒரு தரத்திற்கு இருமுறை கூட வாசித்து மனதில் பதிக்க முடியும் . அதுவும் இதைச் சிவராத்திரிப் பதிவு என்றும் கூறலாமே.
  வாழ்த்துகள் சகோதரி.

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. கடவுளின் அன்பு மகத்தானது ....அருமை!

  ReplyDelete
 7. வணக்கம்! சுந்தரரின் பண் அமைந்த பாடல்களால் பாடப் பெற்ற மண் சுமந்த இறைவனைப் பற்றிய நல்ல பதிவு.

  ReplyDelete
 8. தீந்தமிழ் பாடல்களுடன் வழிபட்டோம். நிறைவானதொரு பகிர்வு ஷைலஜா மேடம்.

  ReplyDelete
 9. Anonymous8:39 PM

  அருமையாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி...வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. ரொம்ப நெகிழ்ச்சி தந்தது ஷைலஜா...

  பித்தன் தான்... நம்மையும் அவன் மேல் பித்து ஆக்குபவனும் அல்லவா!

  ReplyDelete
 11. இடுகையில் பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு தாமதமானாலும் மனம் நிறைந்து நன்றி சொல்லிக்கறேன் நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.