Social Icons

Pages

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட மனி்தர்களாக ஆக்க பெரிதும் உதவி செய்யும் என்பது உறுதி.”


 
                                                                                                

இப்படி ஒரு அணிந்துரையுடன் அப்பாவின் நாவல் ’ மனிதன்’ அண்மையில்
திருமகள்பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.. பல வருடங்கள் முன்பு விகடன் போட்டியில் பரிசு பெற்ற நாவல் .பலரின் இதயங்களை கொள்ளை கொண்ட புதினம்.!. விகடனுக்கு தந்தை சார்பில் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 அப்பாஉயிரோடு இருக்கும்போதே இந்த ஆண்டு அவரது (ஜூன்19) பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ்கிஃப்டாக கொடுக்கவேண்டும் என என் சகோதரர்களும் கசின் பிரபல எழுத்தாளர்இந்திரா சௌந்தர்ராஜனும் ரகசியமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதை அப்பா ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்! அவருக்கும் இனிய அதிர்ச்சி. மனிதன் நாவல்தான் அந்தநாளில் அவரை வெளி உலகிற்கு அதிகம் அடையாளம் காட்டிய நாவல். அது மறுபடியும்
புத்தகமாக வருவதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கோவை மெர்க்குரி பதிப்பகத்தார் முதலில் இதை அழகாக வெளியிட்டிருந்தனர்
பேராசிரியர் அ சீனிவாசராகவன் அவர்களின் ஆத்மார்த்தமான முன்னுரையுடன் நூல்வெளிவந்திருந்தது.

 1977ல் ஸ்ரீரங்கத்தில் காவிரியில் வந்தது பெருவெள்ளம்.
பொன்னிக்கு அன்று என்ன தோன்றியதோ ஊருக்குள் உற்சாகமாய் வளைய வந்தாள்.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது

என்பது ஔவை வாக்கு. ஆனால் அப்பாவின் மனிதன் நாவல் மற்றும் பல எழுத்துக்கள் கவிதைகள் அனைத்தையும் காவிரி அடித்துக்கொண்டுபோய்விட்டது. வீட்டிற்குள்புகுந்து அப்பாவின் அலமாரியைக்குடைந்து திரைக்கையால் அள்ளிக்கொண்டு அன்று அவள்
போனதில் அந்த மனிதன் நாவலும் அடக்கம். அதனாலே இந்த நூலை மறு பதிப்பாகவெளிக்கொணர என் சகோதரர்கள் முன்வந்தார்கள்.

புத்தகத்தின் முகப்பு அட்டைக்காகந்தமிழ்ப்பத்திரிகை உலகின்பிரபல ஓவியரைஅணுகிக்கேட்டபோது அவர் ஒப்புதல் தந்தார் ஆனால் சொன்ன நாளில் தரவில்லை.

அதற்குள் அப்பா ஒரு நாள் கீழே விழுந்து இடுப்பில் எலும்பு
முறிந்து ஆஸ்பித்திரியில் சேர்ந்தார்.ஆபரேஷன் நன்கு முடிந்ததும் அங்கே
படுத்தபடியே மனிதன் நாவலின் மறுபதிப்பைப்பற்றி மகிழ்வுடன்
பேசிக்கொண்டிருந்தார்.

அப்பா உடல்நலன் சரியாகி அவர்மீண்டும் நடப்பதற்குள் புத்தகம் வந்தால்
நல்லதென ஓவியரை மறுபடி அணுகி நிலைமையைக்கூறினோம். அவர் முடியாதென்றுசொல்லாமலேயே நாட்களைக்கடத்தினார். வேறுவழியின்றி அந்த யோசனையைக்கைவிட்டோம்.

எழுத்தாளரும் எனது ஒன்றுவிட்ட சகோதரருமான இந்திரா சௌந்தர்ர்ராஜன் அவர்களின்பெருமுயற்சியால் திருமகள் பதிப்பகம் மனிதன் எனும் புதினத்தை அண்மையில்வெளியிட்டுவிட்டது..


மனிதனைக் கையில்பெற மாமனிதரான என் தந்தைதான் இன்று உயிரோடு
இல்லை. ஜூலை8ம்தேதி அமரராகிப்போன அவரது ஆசையை அவரது புத்திரசெல்வங்களான நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்.. ஆம் அவரது உன்னதக்காவியமான மனிதனைஉலகிற்கு கொண்டு செல்லப்போகிறோம்.

தமிழ்ஆர்வலர்களே! வாசிப்பில் நேசம் கொண்ட வாசகர்களே! நீங்கள் யாவரும் எனதுதந்தை திரு ஏஎஸ்ராகவன் அவர்களின் இந்த மனிதன் நாவலை வாசிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்

நூல் பற்றிய விவரங்கள்...

*மனிதன்.*
**
**
நாவலை எழுதியவர்... ஏஎஸ் ராகவன்
விலை 190ரூ(360 பக்கங்கள்)
திருமகள் நிலையம்..
,
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

13 சிவப்ரகாசம் சாலை
தி நகர்
சென்னை 17

தொலைபேசி 24342899

பிகு..நாவலை  சற்று  சலுகை விலையில் பெற
எழுத்தாளரும் என் உடன்பிறப்புமான  வெங்கடேஷ்(ராஜரிஷி  எழுத்தாளர்)
என்பவரை  இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  நன்றி
அலைபேசி எண்... 9176846599


--
 

14 comments:

  1. அருமையான கருத்துக்கள்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆஹா.... அப்பாவோட புத்தகம் வெளியாகிடுச்சா? படிக்கணும்னு எத்தனை நாளா உங்கள்ட்ட கேட்டுட்டிருக்கேன். இப்பவே உங்க பிரதரை தொடர்பு கொள்றேன்க்கா.. மிக்க நன்றி. (தி.இ,)

    ReplyDelete
  3. நன்றி கணேஷ் பதிவை திரட்டிகளில் இணைக்க இயலுமா எனக்கு வழக்கம் போல மக்கர். ஓ தி இ என்றால் திரட்டில இணைச்சிட்டேன்னு அர்த்தமா நன்றி நன்றி:0

    ReplyDelete
    Replies
    1. கரீக்டா புரிஞ்சுக்கினீங்கோ...

      Delete
  4. மகிழ்ச்சி ஷைலஜா. வாங்கிக் கொள்கிறேன் விரைவில்.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி. இந்த முறை சென்னை வரும் போது வாங்கி விடுகிறேன். [கணேஷ் உங்கள் கவனிப்பிற்கு! :)]

    ReplyDelete
    Replies
    1. குறித்துக் கொண்டேன் வெங்கட்!

      Delete
  6. பகிர்வுக்கு நன்றி...
    எனது இந்த பதிவை வாசித்தீர்களா...
    http://tvrk.blogspot.com/2012/07/blog-post_08.html

    ReplyDelete
  7. அருமையானதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி ஷைலஜாக்கா.

    ReplyDelete
  8. மிக்க நன்றி வருகைபுரிந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும்....

    ReplyDelete
  9. ராதா க்ருஷ்ணன் வருகிறேன் உங்கள் வலைப்பூவுக்கு இங்கே இந்த சுட்டி க்ளீக்கினால் போகவில்லையே.

    ReplyDelete
  10. நல்ல கருத்துக்கள்...

    நல்லதொரு புத்தக அறிமுகம்...

    நன்றி...

    ReplyDelete
  11. மனிதன் நாவலை பைண்ட் செய்து வைத்திருந்தேன். எத்தனை முறை படித்து ரசித்திருப்பேன்.. எப்படியோ காணாமல் போய் விட்டது. இப்போது மீண்டும் கிடைக்கிறது என்பதில் மகிழ்கிறேன்..

    ReplyDelete
  12. //ரிஷபன்6:27 PMமனிதன் நாவலை பைண்ட் செய்து வைத்திருந்தேன். எத்தனை முறை படித்து ரசித்திருப்பேன்.. எப்படியோ காணாமல் போய் விட்டது. இப்போது மீண்டும் கிடைக்கிறது என்பதில் மகிழ்கிறேன்
    ////

    ஆமாம் ரிஷபன் அப்பாவுக்கு மறுபதிப்பு வருவதில் மகிழ்ச்சியாய் காத்திருந்தார் ஆனால் அதைக்காண அவர் இல்லை...உங்களைப்போன்றவர்களுக்குத்தான் அந்த நாவலின் அருமை தெரியும் நன்றி ரி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.