Social Icons

Pages

Sunday, August 11, 2013

பட்சி ராஜன்!

 
 
ஆடிமாதம்   வளர்பிறையில் சுவாதி நட்சத்திரம் பட்சிராஜனின் அவதாரதினம்!
 

 கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்
 
ஆண்டாள் அவதரித்த  பெருமை கொண்ட ஆடிமாதம் கருடனை அவதரித்த  பெருமையும் கொண்டது.
 
 
வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையில் புள்ளரையன் கோயில்  என்று அருள்கிறாள் கோதை..
 
வைனதேயன் என்றும் வி்னதைச்சிறுவன் என்றும்
  போற்றப்படுகிறார் கருடன்.
 
கருடாழ்வார் என்றழைப்பதும் இவருக்கான சிறப்புப்பெயர்.
 
அன்று இவ்வுலகம் அளந்தாய்  அடி போற்றி என்று நாம்  வணங்கும் அண்ணலின் திருவடிகளை தம் கையில் ஏந்தும்  பேறு பெற்றவர் கருடன்.
 
 
கருடாழ்வார் எம்பெருமானுக்கு  தாசனாகவும்  வீற்றிருக்க ஆசனமாகவும் கொடியாகவும் விதானமாக- மேல்கட்டாகவும்  திருவாலவட்டமாகவும் இருப்பதோடு  வேத ஸ்வரூபியாக இருந்து கொண்டு வேதப்பரம்பொருளான  பெருமானைக்காட்டிக்கொடுக்கிறான் என்பதாக அருள்கிறார்.
 
 
எம்பெருமானுக்கு விதானமாக  மேல்கட்டாக  திருவடி இருந்து வருவதை ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில்,” மேலால் பரந்த வெயில் காப்பான் வினதைச்சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே’ என்கிறாள்.
 
திருமாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்,”கெருடவாகனனும் நிற்க, சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே ‘ என்று அருளிச்செய்துள்ளார்.
கருடவாகனத்தில் வந்துதான்  கஜேந்திர மோட்சம் செய்தான் காக்கும் கடவுளாம்  ஆதிமூலப்பெருமான்!
 
சக்கரவர்த்தித்திருமகனும்  இளைய பெருமானும்  இந்தஜித்  பிரயோகம் செய்த  நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது அந்த ரணபூமியில் கருட பகவான் வந்து அவர்கள் முகங்களைத்தடவினார்,அவர்கள்  தெளிவுபெற்ரார்கள்.
அப்போது திருவடியைப்பார்த்து இராமன்,”தேவரீர் யார்?’ என்று கேட்க”நான் உமக்கு பிரிய தோழன் உமது பிராணனே  வடிவம் எடுத்து வெளியில் சஞ்சரிப்பதுபோல இருப்பவன் உமக்கு உதவி செய்யவே வந்தேன்’ என்று (ராமாயணம் யுத்தகாண்டம் 5ம் சர்க்கம்)  சொல்வதிலிருந்து கருடன்  பெருமானின் உற்ற தோழன் என்பதும் தெரிகிறது.
 
 
எம்பெருமான் கருடத்வஜன் கருடனைக்கொடியாகக்கொண்டவன். அவன் கொடியில்  கருடன் இடம்பெற்றிருக்கிறான்.இன்றும் வைணவத்திருக்கோயில்களில் பிரம்மோற்சவ ஆரம்பத்தில்  கருடன் உருவத்தைசிலையில் எழுதி அதைக்கொடியாக ஏற்றுகிறார்கள்.
 
திருவடி என்னும் கருடனை எம்பெருமானின் நிலைக்கண்ணாடி என்பார்கள் பெரியோர்கள். என்பெருமான்  திருமுன்பே எப்போதும் தான் இருந்துகொண்டே இருப்பார்  கூப்பிய கையுடன்  கருடனை நாம் இன்றும்  கோவில் சந்நிதிகளில்  எம்பெருமான் சந்நிதிக்கு முன்பாகக்காணலாம்.
 
;புள்ளையும்  புள் அரையனான எம் ்பெருமானையும்  தொடர்புபடுத்தி திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாசுரத்தில் அழகாக அருளிச்செய்துள்ளார் பாருங்கள்.
 
புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய்பிளந்து  புள்கொடிப் பிடித்த  பின்னரும்

புள்ளை ஊர்தி  ஆதலால்  அதென்கொல் ? மின்கொள் நேமியாய் !
புள்ளின் மெய்ப்பகைக்கடல்  கிடத்தல் காதலித்ததே .






(மின்னும்  சுதர்சனத்தை கையில் பிடித்திருப்பவனே !
அன்னப் பறவையாய் உருமாறி  சதுர் வேதங்களை உபதேசித்தவனே!

 கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தாய்.
கருடனை வாகனமாக கொண்டதல்லாமல்  கொடியிலும் பாராட்டி வைத்திருக்கிறாய் ,அத்தகைய விநதை புத்திரனுக்குப்  பகையானஆதிசேஷன் பாம்பின் மீது
மட்டும் விருப்பமாய் பள்ளி கொண்டிருப்பதின் காரணம் என்ன ?)




கருட சேவை  மிகவிசேஷமானது... வியாழக்கிழமை பட்சிராஜனுக்கு உகந்த நாள்.
 
கருடபஞ்சமி  ஆந்திராவிலும்கர்னாடகத்தி்லும்விமர்சையாகக்
கொண்டாடுவார்கள்..பெண்ணுக்கு  உடன்பிறந்த சகோதரர்கள்  அன்பளிப்பு தர இல்லம் வருவார்கள்...சகோதரிகளும் விருந்து வைத்து  உடன்பிறந்தானின்  வரவுக்குக்காத்திருப்பார்கள்.
 
(பஞ்சமி ஹப்பா அண்ணா பரலில்லா  யாக்கோ கொத்தா(பஞ்சமி பண்டிகை  அண்ணன் இன்னும்  ஏனோ வரவிலை தெரியுமா?)
 என்கிற  கன்னடப்பாட்டு  ஒரு சகோதரியின் ஏக்கத்தை அப்படியே பிரதிபலிக்கும் எப்போதோ  லைட்ம்யூசிக் நிகழ்ச்சியில் கேட்டு உருகிப்போனேன்..  )
 
(கட்டுரை இவ்வார ராணியில் வெளிவந்துள்ளது)
 
 
 
 

17 comments:

  1. கருட பஞ்சமி எங்களுக்கு ரொம்ப சிறப்பு. உடன்பிறந்தவனுக்காக பூஜை செய்து விரதம் இருப்போம். 7 முடி போட்ட நோன்பு சரடு கட்டி உடன் பிறந்தவர்களின் வலது புஜத்திலும், வலது காதிலும் புற்றுமண் வைத்து அவர்கள் நல்வாழ்வு வேண்டி பூஜை செய்து அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கபுதுகத்தென்றல்...உங்களின் பஞ்சமிவிரத விவரம் நன்றாக இருக்கே வருகைக்கும்கருத்துக்கும் நன்றி

      Delete
  2. கருட பஞ்சமி பற்றிய தகவல்களுக்கு நன்றி.....

    ReplyDelete
  3. //(கட்டுரை இவ்வார ராணியில் வெளிவந்துள்ளது)//

    ராணியைப் பற்றி
    ராணியில் தானே வர வேண்டும்?:)

    சங்கத் தமிழ், கலுழ்நன் (கருடன்) பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. யாரங்கே இந்த ரவியை நிறுத்தாமல் அவர் பந்தலில் தமிழ்மாரி பொழியச்சொல்லுங்கள்:)(ராணி என்றதும் எப்படிக்கூவறேன் பார்த்தீங்களா ப்ரதர்?:)

      Delete
  4. கருட பஞ்சமி பற்றிய தகவலுக்கு நன்றி... ராணியில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. கருட பஞ்சமி குறித்த சிறப்பான தகவல்களைத் தாங்கி வந்த அருமையான பகிர்வு!!!. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள் கருடபஞ்சமி கொண்டாடும் வழக்கம் எங்களுக்கும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளீதரன்

      Delete
  7. அருமையான தகவல்கள்....நன்றி :-)

    ReplyDelete
    Replies
    1. மதுரையம்பதியே அருமைத்தம்பி மௌலியே ஒரே பேட்டைல இருந்துகொண்டு இப்படி வலைபூவில் நாம் சந்திச்சிக்கிறோம்:) நன்றி கருத்துக்கு

      Delete
  8. கருடாழ்வாரின் பெருமையை சிறப்பாக கூறி என் மனதை அவரிடம் கொண்டு சென்றமைக்கு உங்களுக்கு என் நன்றி.பெரிய திருவடி உங்களுக்கு எல்லா நலன்களையும் அருள பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கேபி சாரின் ஆசி கேசவப்பெருமானின் ஆசிகள்போல! நன்றி மிக...

      Delete
  9. பட்சிராஜனைப் பற்றிய பதிவு படிக்கையில் ஸ்ரீரங்கம் கருடாழ்வார் நினைவுக்கு வந்தார். 'விருந்தாவனத்தில் கண்டோமே' பாசுரங்கள் மனதை அள்ளும்!
    பாராட்டுகள்!

    ReplyDelete
  10. அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்

    -=-=-=-=-=-

    அன்புடையீர்,

    வணக்கம்.

    இன்று என் வலைத்தளத்தில், ஓர் புதிய, முற்றிலும் மாறுபட்ட, சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    அவசியம் வருகை தந்து கருத்தளிக்க வேண்டுகிறேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    தலைப்பு:

    “ஆயிரம் நிலவே வா !... ஓர் ...
    ஆயிரம் நிலவே வா !!”

    அவசரம் ! அவசியம்!!

    ஓடியாங்கோ .... ஓடியாங்கோ .....
    உடனடியா ஓடியாங்கோ,
    ப்ளீஸ்ஸ்ஸ்.

    பிரியமுள்ள

    வை. கோபாலகிருஷ்ணன்
    [VGK ..... கோபு]

    ReplyDelete
  11. சே குமார் பார்வதி ரஞ்சனி வெங்கட்நாகராஜ் அனைவர்க்கும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி மிக
    ஆம் ரஞ்சனி ஸ்ரீரங்கம் கருட சந்நிதி எவ்ளோ பெரிசு! விஸ்வரூபத்ரிசனம்!

    வைகோ சார் நன்றி கருத்துக்கு உங்க ப்ளாக் வந்து பின்னூட்டமிட்டுவிட்டேன் இராஜராஜேஸ்வரி அவர்களைப்பாராட்டியவிதம் எக்சலண்ட்!

    ReplyDelete
  12. அன்புடையீர்,

    வணக்கம்.

    என் வலைத்தளத்தில் “ஆடி வெள்ளிக்கிழமை” யாகிய இன்று

    ”அறுபதிலும் ஆசை வரும்”

    என்ற தலைப்பினில் ஓர் சிறப்புப்பதிவு
    வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

    இந்த என் பதிவு டேஷ் போர்டில் ஏனோ தெரியாமல் இருப்பதால் தங்களுக்கு இந்த மெயில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    செளகர்யப்பட்டால் வ்ருகை தந்து கருத்துக்கள் கூறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.