எழுபது வயது அன்னை இன்று
ஏக்கமாய் நிற்கும் பலியாடு.
அரசியல் சூதாட்ட அரங்கினிலே
அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.
ஒருமைப்பாடு என்பது எல்லாம்
ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.
ஓசைபடாமல் சத்திய தர்மம்
ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!
கொள்ளை கொலை ஜாதிச்சண்டைகள்
குடியைக்கெடுக்கும் மதுக்கடைகள்
அடிக்கடி நடக்கும் அராஜகங்கள்
அடியோடு புதையும் முழு நிஜங்கள்.
தர்மம் என்பதை கைகேயியைபோல்
துரத்தி் அனுப்புவர் வனவாசம்.
இந்தியத்தாயே பார்த்தாயா!
இதுவா அம்மா உன் தேசம்?
ஊழல்செய்யும் பேர்களுக்கு
உற்சாகமாய் தருவர் பரிவட்டம்!
உண்மைபேசும் அப்பாவிகளோ
அழிந்தே போவார் தரைமட்டம்.
ஒடுங்கி அடங்கிக்கைகுவித்தே
ஒருநாள் கேட்பான் தன் ஓட்டு
பதவி கிடைத்த உடனேயே
பறப்பதில் அவனும் தான் சிட்டு!
நாக்கே வாயை விழுங்கிவிடும்
நகமே விரலைச்சுரண்டிவிடும்
போக்கே சரியா தலைமையினால்
புரண்டு அழுகிறாள் பாரத அன்னை!
ஏய்ப்பவர் அமரும் கோபுரத்தை
இடித்துதள்ள வேண்டும் ஓர் புறத்தில்.
மேய்ப்பவன் புலியாய் இருந்துவிட்டால்
மேயும் ஆடுகள் பலியாகும்
சிறுமைகளுக்கும் சில்லறைகளுக்கும்
சிறப்பு சேர்க்க விடுவோமா
பெருமைக்குணங்கள்: கொண்ட பழம்
பெரும்தலைவர்வழியில் வாழ்வோமா!
தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
அரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!
ஏத்திப்பிழைக்கும் ஈனர்களை
சாத்தித்துரத்த இளைஞர் அணி
சடுதியில்வந்தால் நாட்டிற்கு
சட்டெனக்கிடைக்கும் பெருமை இனி!
Tweet | ||||
//தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
ReplyDeleteஅரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!//
காலம் காலமாக இப்படியே நடந்து கொண்டிருப்பது வேதனை....
நல்ல கவிதை. பாராட்டுகள்.
பாரதியின் பாரதத்தாயின் பெருமைகளைப் பட்டியலிடாமல் நடப்பு நிலையை விளக்கும் பாடல் உங்கள் கால்கள் தரையில் பாவித்தான் இருக்கின்றன வாழ்த்துகள்
ReplyDeleteஆதங்கமாய ஒரு
ReplyDeleteசிறப்புக் கவிதை..
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
சிந்தனையைத் தூண்டும் வரிகள். உண்மையைச் சொல்லியுள்ளீர்கள்!
ReplyDeleteகருத்திட்ட அனைவர்க்கும் (தாமதமான ) நன்றி.
ReplyDelete