பாலைக் கறந்து அடுப்பேற வைத்து
பல்வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!
பல்வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!
யசோதையிடம்
பொல்லாதக்கண்ண்ணனைபற்றி புகார் சொல்லவருகிறாள் ஒருத்தி. எடுத்த எடுப்பிலேயே பாலைக்கறந்து அடுப்புல வச்சேனா என ஆரம்பிக்க யசோதை எங்கோ பார்த்தபடி அதைக்கேட்கிறாள்.அவளுக்குத்தெரியும் வந்தவள்
தன் மகனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று. துறுதுறுவென ஒரு குழந்தையைக்கண்டால் பொறுக்காதே சிலருக்கு. அதிலும் கண்ணன், கண்டகி நதியில்
கிடக்கும் சாளகிராம்கற்களைப்போல கருப்பாய் அழகாய் இருக்கிறானா அவனை ஏதாவது சொல்லாவிட்டால் இந்த ஆயர்பாடிப்பெண்களுக்குத்தூக்கம்வராதே..
யசோதையின்முகமாற்றம் வந்தவளுக்குத்தயக்கத்தை ஏற்படுத்த விஷயத்தை சுற்றிவளைத்து சொல்லத்தொடங்குகிறாள்
நிறையவளையல்போட்டிருக்கிற என் மகளை அடுப்புகிட்ட
காவலுக்கு நிக்கவச்சேன்...
அதுக்கென்ன இப்போ என்பதுபோல யசோதை கண்கேட்கிறது.
மேற்குபக்கம் இருக்கிற பக்கத்துவீட்டுக்குபோய்
அடுப்பு பற்றவைக்க நெருப்பு (குச்சி?)வாங்கப்போனேன்
இரவல்வாங்குவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை…யசோதயின் வாய் முணுமுணுப்பதுபோல பட்டது.
அப்புறம்..கணப்பொழுது பேசிநின்றேன்
கைல நெருப்பாம் வாயில் பேச்சாம் வேறென்ன
பத்தவைக்கும் வேலைதான் இவளுக்கு!
யசோதை
உதட்டை சுழிக்கிறாள்.
அதற்குள் உன் மகன் கிருஷ்ணன்(சாளக்கிராமமுடைய நம்பி—)பாலை சாய்த்து குடிச்சிட்டுபோய்ட்டான். என்று சொல்லி யசோதையைப்பார்க்கிறாள்.
தன்குழந்தையை குற்றம் சொன்னால் எந்தத்தாய் தாங்கிக்கொள்வாள் கண்ணில் நெருப்பு உமிழப்பார்க்கிறாள் வந்தவள் வெலவெலத்துப்போய்விடுகிறாள்
ஆகவே அடுத்தவரியில் ஆலைக்கரும்பு போல இனியமொழிஉடையவளே யசோதை நங்கையே உன் மகனைஅழைத்து சொல்லிவையேன் என்றுகெஞ்சுகிறாளாம்.
யசோதைக்கு ஐஸ் ஆலைக்கரும்பு மொழி அனையவளாம்.
பெரியாழ்வாரும்
ஆண்டாளும் உரிமையாய் கடிந்துகொள்வதிலும் பின்னாடி குழைவதிலும் வல்லவர்கள்..
பேய்ப்பெண்ணே என்று திட்டிவிட்டு தேசமுடையாள் அதாவது
தேஜஸ் ஒளி கொண்டவளே கோதுகலமுடையபாவாய் என்றெல்லாம் ஆண்டாள் புகழ்வதுபோல பெரியாழ்வார் இந்தப்பாடலில் யசோதையை
வெறும் கரும்பின் மொழியாள் என்சொல்லவில்லைபாருங்கள்
ஆலைக்கரும்பாம் அதாவது நன்கு பக்குவமான ரசம் அதிகம் கொண்ட கரும்பினைத்தான் ஆலைக்கு அனுப்புவார்கள்.
காய்ந்து நலிந்துபோனதெல்லாம் தள்ளிவிடுவார்கள்
ஆலைக்கரும்பு சுவையானது
அப்படி இனிய வார்த்தைகொண்ட
யசோதை நங்காய் என்கிறாள் நங்கை எனில்பெண்ணில் சிறந்தவள் என்னும் பொருளும் உண்டுஇப்படிப் பாடி உன்
பையனைக்கூப்பிடம்மா என்கிறாளாம்.
பெரியாழ்வார் பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஆலைக்கரும்புதான்!!
பிகு..
(சாளக்கிராமமுடைய நம்பி...முக்திநாத் பெருமானைக்குறிக்கிறது)
Tweet | ||||
பல வளைகளை அணிந்து இருக்கும் பெண்ணை காவலுக்கு வைத்தும் கூட அந்த கள்ள கண்ணன் இவள் சற்று நேரம் இல்லாத தருணத்தை பார்த்து அந்த பேதைப்பெண்ணை ஏமாற்றி பாலை குடித்துவிட்டு சாதுவாக நிற்கிறானே என்ன வேஷக்காரன்..யசோதையின் குழந்தை பாசமோ என்னமோ இவளின் நைச்சியமான பேச்சிற்கு எல்லாம் லேசில் மசிய வைத்து விடாது.
ReplyDeleteநேரில் பார்த்த மாதிரி ஆழ்வார் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்பதை நீங்கள் இன்னும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.
ஆழ்வார் வரிகள் நம்மை பரவசப்படுத்துகிறது நம்மையும் எழுத வைக்கிறது.. அதைப்பாராட்டும் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிக்கு என்றும் நன்றி கேபி சார்
Deleteதாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த என்னும்பாடல் நினைவுக்கு வருகிறது
ReplyDeleteஜி எம்பி சார். தாயே யசோதா பாடல் எல்லாம் ஆழ்வார் பாட்டின் பாதிப்புதான்...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஅந்த கள்ளக் கண்ணணை ஒரு கணம் நேரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் !
ReplyDeleteநன்றி வாஸ் அவர்களே...ஆழ்வார் பாசுரப்பெருமை அது.நம் கையில் ஏதுமில்லை..
Deleteஅருமையான விளக்கம் அக்கா. பால் போச்சேன்னு வருத்தமா இல்ல காவலுக்கு இருந்த என் பெண்ணையும் ஏமாத்திட்டானே உம் பையன் !னு அங்கலாய்ப்பா? :))
ReplyDeleteஅட அட அம்பியா? எங்க இந்தப்பக்கம்?:) ஆச்சர்யமா இருக்கு..கேசரிவாசனை அடிச்சுதா என்ன?:) அழகா கருத்து சொல்லி இருக்கிற அன்புத்தம்பிக்கு நன்றி பல எந்த க்ரஹம் இப்போ வாசம் அம்பி?:)
Deleteஇன்னமும் அட்லாண்டா தான் வாசம். இந்தியா வந்திருந்தேன். வழக்கம் போல உங்க போன் நம்பர் கைவசம் இல்லை. :D
Deleteஅடுத்த முறை பெண்களூருக்கு அவசியம் வரேன் :))
அவசியம் வாங்க அம்பி..
Deleteஅம்பியும் வெள்ளைக் கண்ணன் தான். ஷைல்ஸ்.
ReplyDeleteஇருப்பான். பேசுவான். கண்ணில் படமாட்டான்.
அருமையான் தாய். அவளுக்கேற்ற கண்ணன்.
பெரியாழ்வார் திருவடி சரணம்.
வல்லிமா வாங்க..அம்பி பற்றி சரியா சொன்னீங்க:) பெரியாழ்வார் பாசுரம் ஒன்றை நீங்களும் விவரிக்கவேண்டும் வாசிகக்க்காத்திருக்கேன் வருகைக்கும் கௌத்துக்கும் ரொம்ப நன்றி
Deleteஅடடா!:))
Deleteவல்லிமா, சிகாகோ எப்ப வருவீங்க? போன் பண்றேன்.
பாடலின் சுவை ஆலைக் கரும்பின் சுவையினும் மேலாயிருந்தது. இத்தகு தமிழ்ச் சுவையைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவாங்க அருள்மொழிவர்மன். தமிழ்ச்சுவையை உங்கள் வலைப்பூவில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆழ்வார் பாடல்களின் அழகு தமிழ் நம்மை வியப்பில்தான் ஆழ்த்துகிறது. தமிழ்ச்சுவையை ரசித்துவாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
Deleteஅருமை.
ReplyDeleteஅருமை.. அருமை...
ReplyDeleteExcellent explanation.
ReplyDeleteநன்றி திருவெங்கட் நாகராஜ் பரிவை குமார் மற்றும் மாதவன்.
ReplyDelete