பல்லவி..
கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)
அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)
சரணம்
ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம் தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)
_______________________________________________________
வினாயகர் சதுர்த்திக்கு இன்று எழுதிய பாடல் சுப்புத்தாத்தாவின் இசையமைப்பில் கேட்கவேண்டுமே!
Tweet | ||||
நீங்களும் பாடிப்பார்க்கலாமே நன்றாகத்தானே பாடுகிறீர்கள்
ReplyDeleteபாடிப்பார்க்கிறேன் ஜிஎம்பி சார்.. கொஞ்சம் பிசியான நேரமாகிவிட்டது வேறு ஒன்றுமில்லை நன்றி மிக
Deleteதங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய, விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். :)
ReplyDeleteமிக்க நன்றி வைகோ சார்
Deleteஉங்கள் வேண்டுகோள் எனக்கு அந்த விநாயகனின்
ReplyDeleteஅருளாக, ஆணையாக புரிந்து
பூர்வி கல்யாணி,மற்றும் மத்யமாவதி
ராகங்களில் பாட முயற்சி செய்து இருக்கிறேன்.
நான் பாடகன் அல்ல.நான் அமைத்து இருக்கும் மெட்டுகளில் பாடுங்கள்.
கணபதியின் கரை காணா அருளை பெறுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தோருக்கும்
எல்லா நலன்களையும் அந்த விநாயகன் வழங்க வருகை தருவான்
தாங்கள் வீட்டு வாசலில்.
விரைவில்.
வாழ்த்துக்கள்.
பாட்டு ஒலிக்கும் இடம்
சுப்பு தாத்தா.
http://subbuthathacomments.blogspot.in/
வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சிகலண்டஹ் நன்றி திரு சுப்புத்தாத்தா இதோ பாட்டு கேட்டுவரேன்
Deleteசிறப்புக் கவிதை
ReplyDeleteவெகு வெகுச் சிறப்பு
நல் வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி திருரமணி பாடலை சிறப்பு என்றமைக்கு ,
Deleteநல்ல கவிதை.
ReplyDeleteகருத்துக்கு நன்றி திரு வெங்கட்நாகராஜ்
Deleteவழக்கம்போல அருமையாகப்பாடி இருக்கிறீர்கள் சுப்புத்தாத்தா அங்கே கருத்து சொல்ல இயலவில்லையே ஏன்?
ReplyDeleteyou may listen to the song sung by Smt.Parimala Sarnathan
Deletehttps://www.youtube.com/watch?v=P5TRQZa5f0s&feature=youtu.be
subbu thatha.