Social Icons

Pages

Monday, September 05, 2016

கண நாதனைப்பணி மனமே!








பல்லவி..

கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)

அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)

சரணம்

ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம்  தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)

_______________________________________________________

வினாயகர் சதுர்த்திக்கு  இன்று எழுதிய பாடல்  சுப்புத்தாத்தாவின்  இசையமைப்பில்  கேட்கவேண்டுமே!

12 comments:

  1. நீங்களும் பாடிப்பார்க்கலாமே நன்றாகத்தானே பாடுகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. பாடிப்பார்க்கிறேன் ஜிஎம்பி சார்.. கொஞ்சம் பிசியான நேரமாகிவிட்டது வேறு ஒன்றுமில்லை நன்றி மிக

      Delete
  2. தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய, விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வைகோ சார்

      Delete
  3. உங்கள் வேண்டுகோள் எனக்கு அந்த விநாயகனின்
    அருளாக, ஆணையாக புரிந்து

    பூர்வி கல்யாணி,மற்றும் மத்யமாவதி
    ராகங்களில் பாட முயற்சி செய்து இருக்கிறேன்.

    நான் பாடகன் அல்ல.நான் அமைத்து இருக்கும் மெட்டுகளில் பாடுங்கள்.
    கணபதியின் கரை காணா அருளை பெறுங்கள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தோருக்கும்
    எல்லா நலன்களையும் அந்த விநாயகன் வழங்க வருகை தருவான்
    தாங்கள் வீட்டு வாசலில்.
    விரைவில்.

    வாழ்த்துக்கள்.

    பாட்டு ஒலிக்கும் இடம்
    சுப்பு தாத்தா.
    http://subbuthathacomments.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சிகலண்டஹ் நன்றி திரு சுப்புத்தாத்தா இதோ பாட்டு கேட்டுவரேன்

      Delete
  4. சிறப்புக் கவிதை
    வெகு வெகுச் சிறப்பு
    நல் வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திருரமணி பாடலை சிறப்பு என்றமைக்கு ,

      Delete
  5. Replies
    1. கருத்துக்கு நன்றி திரு வெங்கட்நாகராஜ்

      Delete
  6. வழக்கம்போல அருமையாகப்பாடி இருக்கிறீர்கள் சுப்புத்தாத்தா அங்கே கருத்து சொல்ல இயலவில்லையே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. you may listen to the song sung by Smt.Parimala Sarnathan
      https://www.youtube.com/watch?v=P5TRQZa5f0s&feature=youtu.be

      subbu thatha.

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.