Social Icons

Pages

Tuesday, November 14, 2006

மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)

வட்டக் கருவிழிச் சுட்டும் சுடரொளியென்
வாழ்க்கை ஸ்வரத்தினிலே-பல
மெட்டுக்கள் பாடவே இசைந்திங்கு வந்திட்ட
மேன்மைத்திரு உருவே!

கூண்டுக்கிளியென குமைந்து கிடக்கையில்
கூவியே வந்தவளே-நாங்கள்
வேண்டித் தவம் செய்து விரும்பியதும்
வரமான பெரும் பலனே!

பெண்மைக் கிங்கு தாய்மை நிறைவென்ற
பேச்சினை நிஜமாக்கியவளே-இன்று
உண்மையில் என் மனம்மகிழக் காரணமாய்
ஊர் வாயை அடைத்தவளே!

சந்ததிச் சங்கிலி தொடர்ந்திட வந்திட்ட
சந்திரப் பேரொளியே-இங்கே
வந்திடு என் கையில் இனியெந்தன்
வாழ்வும் உன் வசத்திலே!

13 comments:

  1. குழந்தைகள் தினத்தில் அருமையான பதிவு...

    ReplyDelete
  2. ஷைலாஜா அவர்களே!

    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
    பிள்ளைத் தமிழ் பாடி இருக்கீங்களோ? :-) கவிதை அருமை! மெட்டோடு உள்ளது!!

    பாட்டுடை நாயகியின் பெயர் என்னவோ?

    இப்பத் தான் நவ 14 என்று, பிள்ளைத்தமிழுக்கு தனி வலைப்பூ போட்டு விட்டு வருகிறேன்; வந்து பாத்தா, உங்க பிள்ளைத்தமிழ்!!!

    ReplyDelete
  3. Anonymous5:14 PM

    nalla kavithai :)

    ReplyDelete
  4. உண்மையில் என் மனம்மகிழக் காரணமாய்
    ஊர் வாயை அடைத்தவளே!

    நூற்றுக்கு நூறு உண்மை. தாயின் மொத்த் மகிழ்ச்சியும் அப்போதுதான்
    ஆண்டாளும் அதனால்தான் "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை" என்கிறார்

    ReplyDelete
  5. யாருக்கோ பெண் மகவொன்று பிறந்திருக்கிறது!

    ReplyDelete
  6. சாத்வீகன்,ஹனீஃப் நன்றி
    கண்ணபிரானே... பாட்டுடை நாயகி எனக்குத் தெரிந்த ஒரு பெண். நீண்ட நாள் கழித்து அவளுக்கு போனமாதம் குழந்தை பிறந்து அதற்கு நல்ல தமிழ்ப் பெயராய் திருமாமகள் என்று வைத்திருக்கிறாள்.
    பிள்ளைத்தமிழ் எங்கே? நிகமாந்த மகாதேசிகனின் மகன் பாடிய அந்தாதியை அளிக்கவும்.
    திராச! தாயை குடல் விளக்கம் செய்தவனின் கருணையை இங்கு நினைவுபடுத்துகிறீர்கள்! சட்டென உங்கள் மனதில் இந்த வரிகள் வந்து இங்கு அளித்ததில் மிக்க மகிழ்ச்சி
    ஷைலஜா

    ReplyDelete
  7. ஓகை! கவிதையில் குற்றம் குறை கண்டுபிடித்துக்கூறவும்.

    ReplyDelete
  8. Anonymous11:48 PM

    shylaja, sorry to type in english, i hav no tamil typing fonts with me, I am happy to see you writing more, regarding your childrens day poem, it was perfect with course of poetic words and composition, but childrens world is so different, your poem expresses only parental possesion, its not a parent day indeed.if a child is not possessed and not felt as just a gift God given to human beings to filter their loneliness, and lead the cavity of the family! Inspite of that, if you enter into the childrens world pointing your mind only at their wisdom and age-wise presence, i feel you can make more new words, which can raise the senses to the readers like us to different opinion on How elders handles the childrens, and collapse the younger, tender mind to the so called social living and structures....If childrens are given freedom to celelberate their own Childrens day.. will they not create a new vision? Raja..

    ReplyDelete
  9. உங்களுக்கு புதுக்கவிதையைவிட மரபுக் கவிதை இயல்பாகவும் நன்றாகவும் வருகிறது. - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  10. If childrens are given freedom to celelberate their own Childrens day.. will they not create a new vision? Raja..//
    உண்மைதான்..விரைவில் குழந்தைகளைப் பற்றி மட்டுமே கூறும் கவிதையினை அளிப்பேன் நன்றி ராஜா.
    ஷைலஜா

    ReplyDelete
  11. ஆஹா! வாராது வந்த மாமணியே! வசிஷ்டரே! வருக வருக! விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
    ஷைலஜா

    ReplyDelete
  12. //ஆஹா! வாராது வந்த மாமணியே! வசிஷ்டரே! வருக வருக! விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
    ஷைலஜா//

    இதைத்தான் வடிவேலு பாணியில் - உசுப்பேற்றிவிட்டு உசுப்பேற்றிவிட்டு உடம்பை ரணகளமாக்குவது என்பார்கள். :-) எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் இப்படி என்னை உசுப்பேற்றிவிட. இதுக்கெல்லாம் அசந்துட மாட்டோ ம் ஆமாம்.

    - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  13. //எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள் இப்படி என்னை உசுப்பேற்றிவிட. இதுக்கெல்லாம் அசந்துட மாட்டோ ம் ஆமாம்.

    - பி.கே. சிவகுமார் //

    இதுக்கெல்லாம் நாங்களும் ஒண்ணும் பயந்து ந்நடுங்ங்கிட்ட மாட்டோம் ஆமா?:)
    ஷைலஜா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.