ஆருயிரே நினைக் காண வருவேன் ஓர் நாள்
நீள் தொலைவிலிருந்து நீ எதிர்பார்த்திராத
நபர்போல நான் வருவேன் நின்னைக் காண
தாழிட்டுக் கதவுதன்னைச் சாத்திடாதே
தாமதிக்க வைக்காதே வாசல்தன்னில்
மெதுவாக அடி எடுத்து நடந்து வந்து
வீற்றிருப்பேன் நின்னருகே எந்தன் அன்பே
மதி காணா இருளினிலே நெருங்கி நின்று
மன்னவனே நின்னை உற்று நோக்கி நிற்பேன்
பதித்த என் முத்தத்தை நீ உணரும்போது
பரவசத்தில் பாய்ந்தோடி ஒளிந்தே கொள்வேன்
Tweet | ||||
முத்தம் கொடுத்தவள் வெட்கப்பட்டாளோ இல்லையோ... வாசிப்பவர்கள் கண்டிப்பாக கூச்சப்படும் நல்ல கவிதைக்கு நன்றி.
ReplyDeleteமகிழ்ச்சியான காதலர்தின வாழ்த்துகள்.
ReplyDeleteஆருயிருக்கான கவிதை அருமை.
படிக்கும் போது மென்மையாக, அமைதியாக இருக்கு ;))
ReplyDelete