Social Icons

Pages

Tuesday, February 19, 2008

உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)

ஆதித்யா டிடக்டிவ் ஏஜென்சீஸ் என்றபோர்டை, அண்ணாசாலையில் நட்டநடுசென் டரில் ,ஒரு
பெரியகட்டிடமாடியில், மாதம் நாற்பதாயிரம் வாடகைக்கு எடுத்த அறைவாசலில் மாட்டி, ஆறுமாசமாய் அறுபதாயிரம் ஈக்களை ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யாவிற்கு,(ஸ்ஸ்ஸ் நீஈஈள வசனம்மூச்சுவாங்குதே:)) அன்றுதான் மொபைலில்' சிங்கநடைபோடு சிகரத்தில் ஏறு என்றபாடலோடு நாள்
தொடங்கியது.

நிச்சயமாய் ராங்நம்பராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து சுரத்தில்லாமல் ஹலோவினவனுக்கு
எதிர்முனை உற்சாகமாய் ,"ஆதித்யா துப்பறியும் நிறுவனம் தானே?" என்று ஆவலாய் கேட்கவும் "யெஸ் ஆமாம் அவுனு ஜிஹாங் ஹவுது "என்று பலமொழிகளில் உணர்ச்சிவசப்பட்டான்..

"நாந்தான் காமேஷ் பேசறேன் ஆதித்"

'ஆ காமேஷா!'அலறினான் ஆதித் ஏனெனில் இவன் தனது தொழில்பலகையை அறைவாசலில் அன்று
ஒருநாள்மாட்டியதும் அதில் விஷமம் செய்தவன் இதேகாமேஷ்தான்.

ஆதித்யாடிடக்டிவ் ஏஜென்சீஸ் என்ற எழுத்துகளில் டிடக்டிவ் என்பதை டிஃபெக்டிவ் என சாக்பீசால் எழுதி சிரித்தவன்.

"யேய் ..பழையகோபத்தை இப்போ நினைவு வச்சிக்காதடா மச்சி...இப்போ நான் உஜாலாக்கு மாறிட்டேன் ஸாரி..உறையூருக்கு மாறிவந்துட்டேன்"

'எதுக்கு சர்ச்சில்குடும்பத்துக்கு சுருட்டு தயாரிக்கவா?'

'ஏண்டா இவ்ளோ எரிச்சல் உன் கேள்வில? அப்பாவோட ஆயுர்வேதப்பொருள்பிசினசை கவனிக்கத்தான் அதிருக்கட்டும்.. ஆதி, இப்போ உன்னை முக்கியமா நான்கூப்பிடகாரணம்,உபயோகமே இல்லாதிருந்த உன்மூளைக்கு வேலைதரத்தான்.."

ரஜனிபடத்துக்கு முதல்நாள்முதல்ஷோ செல்லும் ரசிகனாய் முகம்மலர்ந்தான் ஆதித்.

"என்ன என்ன சொல்லு சொல்லு?"

"வீட்லவேலைக்கு புது வேலைக்காரன் வச்சிருக்கேன்..பேரு-அப்பு .. வேலைல குத்தம் சொல்லமுடியல ஆனா
கை சுத்தமில்லனு இப்பொதான் தெரிஞ்சிது.. நேத்து என் பாண்ட் பாக்கெட்ல ஆயிரம் ருபா நோட்டை வச்சிட்டு குளிக்கபோயிட்டு வந்துபார்க்கறேன், காணலடா ....வீட்ல அப்புவைவிட்டா அப்போ வேற
யாருமில்ல....விசாரிச்சி கேட்டா அப்பு இல்லைங்கறான்...எனக்கென்னவோ அவன்மேலதான் டவுட் உன் துப்பறியும் மூளைய உபயோகிச்சி இதை நீ கண்டுபிடிக்க வரியாடா ஆதித்? "

"வரேன் வரேன் இல்லேன்னா என் மூளையும் துருப்பிடிச்சிடுமே? இப்போவே வரேன்.."

ஆதித் நேரில் போய்அப்புவை விஜாரித்தான்.

அப்பு கடைசியில்," உண்மையை சொல்லிடறேனுங்க... சின்னய்யா குளிக்கபோனதும் அவரு கோட்ஸ்டாண்டுல மாட்டி இருந்த ப்பேண்டிலேருந்து ஆயிரம் ரூபா நோட்டைஎடுத்தேங்க.. ஆனா அப்போபாத்து அவரு குளிச்சிவர்ரது தெரியவும் சட்டுனு அதை அப்படியே அங்க இருந்த ஒருபுத்தகம் நடுவில வச்சிட்டு வந்துட்டேன் ..அப்றோம் யார் எடுத்தாங்களோ எனக்கு தெரியாதுங்க"
என்றான்.

"ஓஹோ நீபணத்தைவச்சது என்னபுத்தகம்னு நினைவிருக்கா?"

"இருக்குதுங்க..டெலிபோன் மேஜைமேல இருக்குற கம்பராமாயணபுத்தகங்க"

"ஐசீ? எந்தப்பக்கம்ன்னு நினைவு இருக்குதாஅப்பு?"

'ஓ நல்லா இருக்குங்க...273ஆம் பக்கத்துக்கும் 274ஆம் பக்கத்துக்கும் இடைல செருகி வச்சது நல்லா
நினைவுல இருக்குங்க..வேற யாரோ அதை எடுத்துருக்கணும்... அப்ப வர்ட்டுங்களா நான்?"

ஆதித் அட்டகாசமாய் சிரித்தான் .

பிறகு,"காமேஷ்! இவன் சொல்வது பக்கா டூப்..ஹிந்தில ஜூட்.
அதை அழகா சொல்லிட்டு இவனுமிப்போ விடறான் ஜூட்டு! பிடிங்க அவனை. இவந்தான்
திருடினான் "என்றான் உறுதியான குரலில்.

ஆதித் ஏன் இப்படிக்கூறினான் என உங்களில் யாராவது துப்பறிந்து சொல்லமுடியுமா?

13 comments:

 1. Suresh T7:00 AM

  Page 273 is right facing and 274 is left facing (next page). Theoretically there is no page or gap between 273/274 to keep the money. :)

  ReplyDelete
 2. Suresh T said...
  Page 273 is right facing and 274 is left facing (next page). Theoretically there is no page or gap between 273/274 to keep the money. :)

  வாங்க சுரேஷ்! வந்த உடனே விடையைச் சொல்லி இப்படி 10பின்னூட்டம் வார்ரதை தடுத்துட்டிங்களே நியாயமா?:):)எனினும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. இன்னொரு பாஸிபிலிட்டி..

  புஸ்தகம் முதல் பாகமாவோ இல்லை வேற பாகமாவோ இருந்து 200 பக்கத்துக்குள்ள இருந்து இருக்குமோ :)

  ReplyDelete
 4. Suresh T7:13 AM

  ayaago mikka varuthangal. mundari kottaiya erundhuten.

  10 pinoottam thane, ippadiye arambicha, ellarum senthupaanga.

  thavira, idhu than ennodaiya mudhal pinootam (padhipu ellam illai). tamizhil thattaachu ellam inimel than. aangilathuku mannikavum.

  nanri...

  ReplyDelete
 5. சரியான பதிலுக்கு என்னோட ரீப்பிட்டேய்யய்ய்ய்ய்

  ReplyDelete
 6. எப்போத்தில் இருந்து ஷைலஜா சாம்பு அவதாரம் எடுத்தாங்க? :-)

  ReplyDelete
 7. ஷைல்சுக்குத் தேவை பத்து பின்னூட்டமா?

  ReplyDelete
 8. சரி கச்சேரியை ஆரம்பிச்சிருவோம்!

  ReplyDelete
 9. //புஸ்தகம் முதல் பாகமாவோ இல்லை வேற பாகமாவோ இருந்து 200 பக்கத்துக்குள்ள இருந்து இருக்குமோ :)//

  அரை பிளேடு அண்ணாச்சி,
  புத்தகம் கம்ப ராமாயணம்! 200 பக்கத்துக்குள்ளாற எல்லாம் போடணும்-னா ரொம்ப கஷ்டம்! மொத பாகமே பக்கக் கணக்குல எகிறிடும்! :-)
  ஸோ, இன்னும் நல்லா ஷார்ப்பன் பண்ணிக்கிட்டு வாங்க! :-)

  ReplyDelete
 10. //'எதுக்கு சர்ச்சில் குடும்பத்துக்கு சுருட்டு தயாரிக்கவா//

  மறைந்த முன்னாள் பிரதமரின் பெயருக்கு மாசு கற்பிக்கும் முயற்சியில் இறங்கும் ஷைலஜா அவர்களே! லண்டினில் உங்களுக்கு எதிரா சுருட்டு பிடி போராட்டம் நடக்கப் போகுது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! - இப்படிக்கு சர்ச்சை இல்லாத சர்ச்சில் சங்கம்!

  ReplyDelete
 11. ஆகா! கணக்கு வச்சிக்கலையே! ஏற்கனவே வந்த பின்னூட்டத்தையும் சேர்த்து, இது பத்தாம் பின்னூட்டம் தானே? :-)

  ReplyDelete
 12. சரி ஒற்றைப் படை எண்ணா இருக்கனும்-னு நியூசென்ஸ் நியூமராலஜி நிகண்டுல சொல்லி இருக்கு! அதுனால 11! :-)

  ReplyDelete
 13. எக்கச்சக்கபின்னூட்டமிட்டு பின்னூட்டத்திலகம் என்று பட்டம் பெறும் திரு கண்ணபிரான் ரவிக்கு நன்றி யுடன் ஒரு ஓ போட்டுடலாமா?:):)

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.