வெட்டவெளியில்
அரவத்தின் சீற்றலாய்
மௌனம்.
உடலில் ஊர்ந்து, நகர்ந்து,பின்
வளைக்கும் உத்தேசத்தில்
காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
காற்றுவெளியில்
சொற்கள் சிதறிய
காலடிப்பாதைகள்.
அவ்வப்போது தலைதூக்கிப்படமெடுக்கும்
நாகத்தின் அழகில்
மயங்கத்தான் தோன்றும்மனதைப்போல
நெஞ்சக்கூட்டிலேயெ
அடைந்துகிடக்கும் சொற்கள்
புறம்தள்ளி வரும்போது
புதுமைக்கீறல்
விடியல்வானில்!
Tweet | ||||
This comment has been removed by the author.
ReplyDeleteமெளனத்தை இப்படியும் பார்க்காலாமா? ஆகா ஷைலஜாவால் தான் முடியும் போல! :-)
ReplyDelete//காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
காற்றுவெளியில்
சொற்கள் சிதறிய
காலடிப்பாதைகள்//
நான் மிகவும் ரசித்த வரிகள்!
நல்ல கவிதை ... வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரவி மற்றும் அதிஷா உங்களின் வருகைக்கும் கருத்துக்க்கும்.
ReplyDelete