Social Icons

Pages

Saturday, October 17, 2009

தீபாவளிக்குதூகலங்கள்!

அன்று.....
-- ஒருவாரம் முன்பே
அம்மாதயாரித்துவிடும்
மிக்சரும் மைசூர்ப்பாகும்
பாதுஷாவும் பாதாம் அல்வாவும்
இன்னும் சில
பலகாரங்களையும்
எங்கள்பார்வையில்
படக்கூடாது என்று
தூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்
சந்தோஷப்பூரணத்தை
உள்ளேவைத்திருக்கும்
சோமாசிப்பலகாரம்
முரசடித்து தன் இடத்தை
அறிவிக்க
தம்பிகளுடன் சேர்ந்து
தூக்கு வைத்த இடத்தை
மோப்பம் பிடித்து
பாதிதூக்கைக்
காலிசெய்துவிடுவோம்
’இறைவனுக்குப்படைக்குமுன்பே
எதற்கு எடுத்தீர்கள்?’
என்று அம்மாகேட்கும்போது
’குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே அம்மா?’
என்ற எங்கள்பதிலில்
அம்மாவின்கோபமெல்லாம்
பறந்தேபோய்விடும்!


தூக்கக்கலக்கத்தில்
தலையணைக்கடியில் வைத்த
விரல்களைப்பிடித்திழுத்து
மருதாணி வைக்கும்போது
சில்லிட்டுப்போவது
உள்ளங்கைமட்டுமல்ல
அம்மாவின் பாசத்தில்
உறையும் இதயமும்தான்

முதல்நாளேபட்டாசுகளை
முறத்திலிட்டு
மொட்டைமாடியில்
காயவைத்து
அவரவர் பங்கிற்கு
எது எது என்று
முன்கூட்டியே திட்டமிடுவோம்
பெரும்பாலும்
பெண்குழந்தைகளுக்கு
கம்பிமத்தாப்புகளும்
தரைச்சக்கரமும்
விஷ்ணுசக்கரமும்
பூவானமும்தான்
வழங்கப்படும்

வாழ்த்து அட்டைகள்தவிர
அஞ்சலட்டையிலும் அழகாய்
ஒருமயிலோ அல்லது அன்னமோ
வரைந்து அன்பான தீபாவளி
‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்


பணிக்களைப்பில்
கரகரத்துப்போனகுரலில்
அம்மாவின் நலங்குப்பாட்டோடு
தலையில் எண்ணை அரங்கேறும்
நீமுந்திநான்முந்தி என
குளியலறக்குப்போட்டிபோட்டு
குளித்துவந்ததும்
அம்மாவின் கையினால்
சாம்பிராணிப்புகைவாசம்
கூந்தலில் படரும்

’பார்த்துப்பார்த்து’
என்று அப்பா
பலதடவைஎச்சரித்தும்
பட்டாசுக்காயம்
கட்டைவிரல் நுனியிலோ
கால்விரல் இடுக்கிலோ
பட்டுக்கொள்ளாமல்
பெரிய தம்பி
தெருவைவிட்டு வந்ததில்லை.

தொடங்கிய கொஞ்சநேரத்திலேயே
வெடிக்கும்பட்டாசின்
கந்தக்கத்துகள்
கண்ணில்பட்டுவிட
பாதியிலே
அடங்கிப்போகும் என்
பட்டாசு ஆர்வம்

வெளிக்காய வலி அறியா
உளமனசின் உற்சாகங்கள்,
மகிழ்ச்சி ,கலகலப்பு,
உறவினர்களின் வருகை,
பேச்சு ,சிரிப்பு என்று
மதியம் மாலைவரைநீண்டு
இரவில் மத்தாப்பாய்
ஒளிர்விடும்!

இன்று..

பண்டிகைநாள் என்றாலே
கண்டிப்பாய் பலநிகழ்ச்சிஎன்று
உறவுகளுக்கிடையே
இடைவெளியை உருவாக்கி
இல்லத்திற்குள்வந்து
உட்கார்ந்து ஆளுமைசெய்யும்
தொலைக்காட்சிப் பெட்டியால்
தொலைந்தேதான் போனது
தீபாவளிக் குதூகலங்கள்!

11 comments:

  1. \\வாழ்த்து அட்டைகள்தவிர
    அஞ்சலட்டையிலும் அழகாய்
    ஒருமயிலோ அல்லது அன்னமோ
    வரைந்து அன்பான தீபாவளி
    ‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்\\

    ஆகா!! அதுல வேற உனக்கு எத்தனை எனக்கு எத்தனைன்னு அங்கையும் சண்டை வரும் ;))

    அருமையாக வந்திருக்குக்கா கவிதை ;)

    தீபாவளி வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  2. பழைய நினைவுகள் அத்தனையையும் மீட்டெடுத்து வந்து விட்டன உங்கள் வரிகள். முடிவாய் சொல்லியிருப்பதும் நிஜமோ நிஜம்.

    தீபாவளி வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  3. //சோமாசிப்பலகாரம்
    முரசடித்து தன் இடத்தை
    அறிவிக்க
    தம்பிகளுடன் சேர்ந்து
    தூக்கு வைத்த இடத்தை
    மோப்பம் பிடித்து
    பாதிதூக்கைக்
    காலிசெய்துவிடுவோம்//

    தம்பிங்க காலி செய்திருக்க மாட்டேங்களே! அவங்க நல்ல பசங்க! ஒன்னே ஒன்னு எடுத்திருப்பாங்க! மீதியெல்லாம் வழக்கம் போல நீங்க தானேக்கா காலி செய்வீங்க? :))

    இனிய தீப-ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. //தொலைக்காட்சிப் பெட்டியால்
    தொலைந்தேதான் போனது
    தீபாவளிக் குதூகலங்கள்!//

    தொலைக் காட்சியால்
    தொலைந்த காட்சியாகி
    விட்டதா குதூகலம்?
    அதான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒரு OFF Button இருக்கே-க்கா? அதை அழுத்தி விடுங்கள்! அம்புட்டு தான்! சின்ன புள்ளையா இருக்கச் சொல்ல, வீட்டில் அப்பா கேபிள் ஒயரைப் பிடுங்கி விடுவார்! :))

    ReplyDelete
  5. அப்பா.... ஒரு வ‌ழியா ஷைல‌ஜா மேட‌ம் மௌன‌ம் கலைந்து ப‌திவுல‌க‌த்தினுள் பிர‌வேசித்து விட்டார்... அத‌ற்காக‌வே அவ‌ருக்கு ஒரு ஷொட்டு... வாங்கோ...வாங்கோ...

    //அம்மாதயாரித்துவிடும்
    மிக்சரும் மைசூர்ப்பாகும்
    பாதுஷாவும் பாதாம் அல்வாவும்
    இன்னும் சில
    பலகாரங்களையும்
    எங்கள்பார்வையில்
    படக்கூடாது என்று
    தூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்//

    எல்லா வீட்டிலும் இந்த‌ தொந்த‌ர‌வு தானா?? ஆஹா...

    //முரசடித்து தன் இடத்தை
    அறிவிக்க
    தம்பிகளுடன் சேர்ந்து
    தூக்கு வைத்த இடத்தை
    மோப்பம் பிடித்து
    பாதிதூக்கைக்
    காலிசெய்துவிடுவோம்//

    இத‌ ப‌ண்ண‌லேன்னா, நாம‌ நாம‌ளே இல்லையே??!!

    //’இறைவனுக்குப்படைக்குமுன்பே
    எதற்கு எடுத்தீர்கள்?’
    என்று அம்மாகேட்கும்போது
    ’குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே அம்மா?’
    என்ற எங்கள்பதிலில்
    அம்மாவின்கோபமெல்லாம்
    பறந்தேபோய்விடும்!//

    பின்னே... தாய்க்கு தெரியாதா, குழந்தையும் தெய்வ‌மும் ஒண்ணுன்னு..!!

    //தூக்கக்கலக்கத்தில்
    தலையணைக்கடியில் வைத்த
    விரல்களைப்பிடித்திழுத்து
    மருதாணி வைக்கும்போது
    சில்லிட்டுப்போவது
    உள்ளங்கைமட்டுமல்ல
    அம்மாவின் பாசத்தில்
    உறையும் இதயமும்தான்//

    என்னோட‌ சின்ன‌ வ‌ய‌ச‌ ஞாப‌க‌ப்ப‌டுத்த‌றீங்க‌ ஷைல‌ஜா மேட‌ம்...

    //முதல்நாளேபட்டாசுகளை
    முறத்திலிட்டு
    மொட்டைமாடியில்
    காயவைத்து
    அவரவர் பங்கிற்கு
    எது எது என்று
    முன்கூட்டியே திட்டமிடுவோம்
    பெரும்பாலும்
    பெண்குழந்தைகளுக்கு
    கம்பிமத்தாப்புகளும்
    தரைச்சக்கரமும்
    விஷ்ணுசக்கரமும்
    பூவானமும்தான்
    வழங்கப்படும்//

    ம்ம்ம்.... பழசு எல்லாம் ஞாப‌க‌த்துக்கு வ‌ர்ற‌து...

    //வாழ்த்து அட்டைகள்தவிர
    அஞ்சலட்டையிலும் அழகாய்
    ஒருமயிலோ அல்லது அன்னமோ
    வரைந்து அன்பான தீபாவளி
    ‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்//

    அது ஒரு அழ‌கிய‌ க‌னாக்கால‌ம்...

    //பணிக்களைப்பில்
    கரகரத்துப்போனகுரலில்
    அம்மாவின் நலங்குப்பாட்டோடு
    தலையில் எண்ணை அரங்கேறும்
    நீமுந்திநான்முந்தி என
    குளியலறக்குப்போட்டிபோட்டு
    குளித்துவந்ததும்
    அம்மாவின் கையினால்
    சாம்பிராணிப்புகைவாசம்
    கூந்தலில் படரும்//

    ஆஹா... அருமையான‌ ம‌ல‌ரும் நினைவுக‌ள்... ப‌ணி க‌ளைப்பு...ச‌ரியா சொன்னீங்க‌... த‌ன்ன‌ந்த‌னியா உட்கார்ந்து எவ்ளோ ப‌ட்ச‌ண‌ம் ப‌ண்ணுவாங்க‌...

    //வெளிக்காய வலி அறியா
    உளமனசின் உற்சாகங்கள்,
    மகிழ்ச்சி ,கலகலப்பு,
    உறவினர்களின் வருகை,
    பேச்சு ,சிரிப்பு என்று
    மதியம் மாலைவரைநீண்டு
    இரவில் மத்தாப்பாய்
    ஒளிர்விடும்!//

    ச‌ரிதான்... அந்த‌ கொண்டாட்ட‌த்துக்கு அள‌வு ஏது?

    //இன்று..

    பண்டிகைநாள் என்றாலே
    கண்டிப்பாய் பலநிகழ்ச்சிஎன்று
    உறவுகளுக்கிடையே
    இடைவெளியை உருவாக்கி
    இல்லத்திற்குள்வந்து
    உட்கார்ந்து ஆளுமைசெய்யும்
    தொலைக்காட்சிப் பெட்டியால்
    தொலைந்தேதான் போனது
    தீபாவளிக் குதூகலங்கள்! //

    மிக‌ ச‌ரியே... வாழ்க்கையே ந‌ம‌க்கு டி.வி..ஆகி போன‌து....

    ப‌ழைய‌ நினைவுக‌ளை ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌ ஷைல‌ஜா மேட‌ம்... வாழ்த்துக்கள்... இங்க‌ என்னோட‌ தீபாவ‌ளி வாழ்த்து இருக்கு... அங்க‌ வந்து, உங்க‌ளோட‌ "ஸ்பெஷ‌ல் தீபாவ‌ளி கிஃப்ட்" மறக்காமல், மறுக்காமல் வாங்கிக்கோங்க‌....

    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  6. கோபிநாத் said...
    \\வாழ்த்து அட்டைகள்தவிர
    அஞ்சலட்டையிலும் அழகாய்
    ஒருமயிலோ அல்லது அன்னமோ
    வரைந்து அன்பான தீபாவளி
    ‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்\\

    ஆகா!! அதுல வேற உனக்கு எத்தனை எனக்கு எத்தனைன்னு அங்கையும் சண்டை வரும் ;))

    அருமையாக வந்திருக்குக்கா கவிதை ;)

    தீபாவளி வாழ்த்துக்கள் ;)

    6:39 PM
    >>>>>>>>>>>>>>>>>>

    மிக்க நன்றி கோபிநாத் தீபாவளிமும்முரத்தில் தாமதமாய் பார்த்து பதிலிடுகிறேன் வாழ்த்துகளையும் தாமதமா சொல்றேன்!

    ReplyDelete
  7. //ராமலக்ஷ்மி said...
    பழைய நினைவுகள் அத்தனையையும் மீட்டெடுத்து வந்து விட்டன உங்கள் வரிகள். முடிவாய் சொல்லியிருப்பதும் நிஜமோ நிஜம்.

    தீபாவளி வாழ்த்துக்கள் ஷைலஜா!

    7:58 PM
    ////////நன்றி ராமல்ஷ்மி.....

    ReplyDelete
  8. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    /////
    தம்பிங்க காலி செய்திருக்க மாட்டேங்களே! அவங்க நல்ல பசங்க! ஒன்னே ஒன்னு எடுத்திருப்பாங்க! மீதியெல்லாம் வழக்கம் போல நீங்க தானேக்கா காலி செய்வீங்க? :))

    இனிய தீப-ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    8:10 AM>>>>>>>>>>>>>>>>


    ஹஹ்ஹா..நானும் காலிபண்ணினேன் என்பது உண்மை...வாழ்த்துக்கு நன்றி இரவி:)

    ReplyDelete
  9. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //தொலைக்காட்சிப் பெட்டியால்
    தொலைந்தேதான் போனது
    தீபாவளிக் குதூகலங்கள்!//

    தொலைக் காட்சியால்
    தொலைந்த காட்சியாகி
    விட்டதா குதூகலம்?
    அதான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒரு OFF Button இருக்கே-க்கா? அதை அழுத்தி விடுங்கள்! அம்புட்டு தான்! சின்ன புள்ளையா இருக்கச் சொல்ல, வீட்டில் அப்பா கேபிள் ஒயரைப் பிடுங்கி விடுவார்! :))

    8:15 AM
    <>>>>>>>>>>>>>>

    நாம போடலேன்னாலும் வீட்ல பாக்றாங்க இல்ல?:0 அப்படில்ல்லாம் முழுசா தொலச்சிடமுடியாத விஷய்மாயும் ஆகிடிச்சி இப்போ:)

    ReplyDelete
  10. R.Gopi said...
    அப்பா.... ஒரு வ‌ழியா ஷைல‌ஜா மேட‌ம் மௌன‌ம் கலைந்து ப‌திவுல‌க‌த்தினுள் பிர‌வேசித்து விட்டார்... அத‌ற்காக‌வே அவ‌ருக்கு ஒரு ஷொட்டு... வாங்கோ...வாங்கோ...

    <<<<<><>>>வந்தேன் வந்தேன் ஆஹா கோபி என் மௌனத்துக்கு நன்றி சொல்லுங்கப்பா இந்தமட்டும் பதிவெழுதி மக்களைப்படுத்தாம இருக்கேனே என்று:)

    ReplyDelete
  11. R.Gopi said...
    ப‌ழைய‌ நினைவுக‌ளை ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌ ஷைல‌ஜா மேட‌ம்... வாழ்த்துக்கள்... இங்க‌ என்னோட‌ தீபாவ‌ளி வாழ்த்து இருக்கு... அங்க‌ வந்து, உங்க‌ளோட‌ "ஸ்பெஷ‌ல் தீபாவ‌ளி கிஃப்ட்" மறக்காமல், மறுக்காமல் வாங்கிக்கோங்க‌...



    கிஃப்டுக்கு நன்றி கோபி வழக்கம்போல ஆழ்ந்து படிச்சி விமர்சனம் செஞ்சிருக்கீங்க...எப்படி நன்றி சொல்றது தெரியல இருங்க சீக்கிரமே இன்னொரு பதிவு இட்டு (தண்டனை?:) விடறேன்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.