Social Icons

Pages

Wednesday, December 14, 2011

வானும் கடலும்!

மேகத்திரள்கள்


எழுகின்ற அலைகள்!


நட்சத்திரங்களோ

ஆழ்கடல்முத்துக்கள்!


பிறைநிலாதான்

கவிழும் படகு!


சாயம் இழக்கா

சமுத்திர வர்ணம்!


தலைகீழ்கடல்தான்

இரவுவானம்!



33 comments:

  1. வானும் கடலும் கண்ணாடி பிம்பமென
    கூறி நிற்கும் கவிதை அருமை சகோதரி..

    ReplyDelete
  2. தமிழ்மணத்திலும், தமிழ் பத்திலும் இணைத்தாச்சு சகோதரி.

    ReplyDelete
  3. இன்னிக்கும் அரைமணி நேர இடைவெளில மகேந்திரன் முந்திட்டார். அடுத்த முறை நானா அவரான்னு பாத்துடலாம். நான் ஓட்டு மட்டும் போட்டுடறேன்.

    அக்கா... கவிதைக்கு படம் செலக்ட் பண்ணீங்களா? படத்துக்குக் கவிதை எழுதினீங்களா? அவ்வளவு பிரமாதமாயிருக்கு இரண்டும்! சூப்பர்ப்!

    ReplyDelete
  4. பிறைநிலாதான்
    கவிழும் படகு!
    சாயம் இழக்கா
    சமுத்திர வர்ணம்!

    கவிதைல பின்றீங்க..
    படம் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  5. /தலைகீழ்கடல்தான்

    இரவுவானம்! /

    அழகான வரிகள் அந்த அழகு வானத்தைப் போலவே.

    ReplyDelete
  6. //மகேந்திரன் said...
    வானும் கடலும் கண்ணாடி பிம்பமென
    கூறி நிற்கும் கவிதை அருமை தமிழ்மணத்திலும், தமிழ் பத்திலும் இணைத்தாச்சு சகோதரி.

    7:50 PM

    .<<<<யாரங்கே தம்பி மகேந்திரனுக்கு
    ஆயிரம்பொற்கிழி கொண்டுவந்துகொடுங்கள்!!! ஆமா மகெந்திரன் நான் மட்டும் மகாராணியா இருந்தா இந்த உதவிக்கு இப்படித்தான் சொல்லி இருப்பேன் பதிவைப்போட்டுவிட்டு அ்டுப்பு மேடையை கவனிக்கப்போய்விட்டேன்!! பார்வையாளர் மேடையில் ஏற்றி உதவியதற்கு நன்றி..கணேஷ் அடுத்த தடவை உஷாரா இருக்கப்போறார் ஜாக்கிரதை!!!

    கவிதை கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //கணேஷ் said...
    இன்னிக்கும் அரைமணி நேர இடைவெளில மகேந்திரன் முந்திட்டார். அடுத்த முறை நானா அவரான்னு பாத்துடலாம். நான் ஓட்டு மட்டும் போட்டுடறேன்.

    அக்கா... கவிதைக்கு படம் செலக்ட் பண்ணீங்களா? படத்துக்குக் கவிதை எழுதினீங்களா? அவ்வளவு பிரமாதமாயிருக்கு இரண்டும்
    ......

    ஓட்டு போட்டதுக்கு சிறப்பு நன்றி...என்னாச்சு லேட் கணேஷ்சாரு?:) ஆயிரம்பொற்கிழி மகேந்திரனுக்கு போயிடிச்சே.:)

    வானையும் கடலையும் பாக்றப்பல்லாம் தோணும் சிந்தனைதான் கவிதையானது..படம் சுட்ட இடம் கூகுலார் தான்..:) நன்றி கணேஷ்.

    ReplyDelete
  8. ராமலக்ஷ்மி said...
    /தலைகீழ்கடல்தான்

    இரவுவானம்! /

    அழகான வரிகள் அந்த அழகு வானத்தைப் போலவே.

    9:06 PM

    .....நன்றி ராமல்ஷ்மி உங்க காமிரா இருந்தா இன்னும் சிறப்பா படம் பிடிச்சி போட்ருக்கலாம்

    ReplyDelete
  9. ரிஷபன் said...
    பிறைநிலாதான்
    கவிழும் படகு!
    சாயம் இழக்கா
    சமுத்திர வர்ணம்!

    கவிதைல பின்றீங்க..
    படம் சூப்பரோ சூப்பர்

    8:41 PM

    <<<<<<<<
    நன்றி எங்கபிறந்த ஊர்க்காரரே!

    ReplyDelete
  10. தலைகீழ் கடல்தான் இரவு வானம் .அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  11. தலை கீழ் கடல்தான் இரவு வானம்
    வித்தியாசமான பார்வை
    அழகான கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  12. ஃபோட்டோக்கள் கலக்கல். உங்க சொந்த ஃபோட்டோவா?

    ReplyDelete
  13. தென்றல் கதை போட்டில நீங்க வின் பண்ணூனதா தமிழோவியம் குரூப் மெயில்ல போட்டிருந்ததே, அது நீங்கதானா?

    ReplyDelete
  14. ஆஹா! அருமை... அருமை... அற்புத கவிதை.
    வாழ்த்துக்கள் சகோதிரி.

    ReplyDelete
  15. அருமை போட்டோக்கள் சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  16. அழகிய கற்பனை. தலைகீழ் கடலையும் வானையும் மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  17. ஆஹா! பிரமாதமான கற்பனை!

    ReplyDelete
  18. //அம்பாளடியாள் said...
    தலைகீழ் கடல்தான் இரவு வானம் .அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .

    11:32 PM


    அம்பாளடியாள் said...
    தமிழ்மணம் 3

    11:33 PM

    //
    <<<<<..நன்றி அம்பாளடியாள்

    ReplyDelete
  19. //Ramani said...
    தலை கீழ் கடல்தான் இரவு வானம்
    வித்தியாசமான பார்வை
    அழகான கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    4:16 AM

    /////தொடர்ந்து த.ம. ஓட்டளிக்கும் ரமனிக்கு சிறப்பு நன்றி

    ReplyDelete
  20. சி.பி.செந்தில்குமார் said...
    ஃபோட்டோக்கள் கலக்கல். உங்க சொந்த ஃபோட்டோவா?

    6:33 AM


    சி.பி.செந்தில்குமார் said...
    தென்றல் கதை போட்டில நீங்க வின் பண்ணூனதா தமிழோவியம் குரூப் மெயில்ல போட்டிருந்ததே, அது நீங்கதானா?

    6:33 AM

    >>>.போட்டோ கூகுள் உபயம் செந்தில்!
    ஆமா தென்றல்போட்டில நான் தான் 3ம்பரிசுவாங்கி இருக்கேன் தமிழோவியம் க்ரூப் மெயில் என்ன அது எனக்கு அதை அனுப்ப்ப இயலுமா நன்றி

    ReplyDelete
  21. //தமிழ் விரும்பி said...
    ஆஹா! அருமை... அருமை... அற்புத கவிதை.
    வாழ்த்துக்கள் சகோதிரி.

    7:17 AM

    //நன்றி தமிழ் விரும்பி

    ReplyDelete
  22. ..K.s.s.Rajh said...
    அருமை போட்டோக்கள் சிறப்பாக இருக்கு

    10:44 AM

    ’ நன்றி ராஜா போட்டோக்கள் நான் எடுக்கல ஆனா சுட்டேன்:)

    ReplyDelete
  23. // கீதா said...
    அழகிய கற்பனை. தலைகீழ் கடலையும் வானையும் மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.

    10:54 AM

    //மிக நன்றி கீதா ரசித்தமைக்கு

    ReplyDelete
  24. //கே. பி. ஜனா... said...
    ஆஹா! பிரமாதமான கற்பனை!

    1:36 PM

    >>>.பிரபல எழுத்தாளர் இப்படி புகழறார்னா கவிதை நிஜமாவே நல்லாருக்கணும்! நன்றி திரு ஜனா.

    ReplyDelete
  25. அட அட அட! என்னமா வர்ணனை ஒப்புமை பண்ணிடீங்க!

    இரண்டுமே வேறு வேறு ஆகினும் மாயக்கண்ணன் நிறத்தால் இரண்டும் ஒன்று.

    ReplyDelete
  26. V.Radhakrishnan said...
    அட அட அட! என்னமா வர்ணனை ஒப்புமை பண்ணிடீங்க!

    இரண்டுமே வேறு வேறு ஆகினும் மாயக்கண்ணன் நிறத்தால் இரண்டும் ஒன்று.

    5:51 PM

    .....பார்க்கும் இடத்தில் எல்லாம் நந்தலாலா! உங்களின் கற்பனை மற்றும் ஒப்புமை அழகு இன்னமும் நன்றி மிக

    ReplyDelete
  27. உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்தது

    ReplyDelete
  28. "Superb"!

    Romba azhagaana uvamai, karpanai...SUPERB.

    ReplyDelete
  29. அருமையான கற்பனை சகோதரி.படங்கள் கவிதையை மெருகூட்டுகிறது !

    ReplyDelete
  30. அட! அழகான கற்பனை. அழகான கவிதை.

    ReplyDelete
  31. Anonymous1:57 PM

    நல்ல வருணனையும், படங்களும் வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. Anonymous11:42 PM

    நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.