Saturday, December 24, 2011

அன்புப்பூ ஒன்று வந்தது!





அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட


அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது

ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு

அனைவரையும் கவர்ந்தது.





மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி

மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்

மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,

மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.





தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்

கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது- அந்த

எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு

மண்ணில் உதித்த நாள் இன்று!





19 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை ஷைலஜா.

நண்பர்கள் அனைவருக்கும் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

அருமை ஷைலஜா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Ramani said...

கிறிஸ்மஸ் திரு நாள் சிறப்புப் பதிவு அருமை
இயல்பான வார்த்தைகளால் மிக நேர்த்தியாக
படைக்கப்பட்ட கவிதை உள்ளம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

KParthasarathi said...

அழகான கவிதை.
இந்த நன்னாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

கீதா said...

அன்புப்பூவுக்கு அழகாய் ஒரு கவிப்பூ! இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

அன்புப் பூ! வார்த்தையே பிரமாதமாக இருக்கிறது. உங்களுக்கு என் கிறிஸ்துமஸ் மற்றும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு

மண்ணில் உதித்த நாள் இன்று!
கவிதை அருமை.

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

”அன்புப்பூ”

எவ்ளோ அழகான வார்த்தை இது.

இயேசுபிரானின் அருளால்
‘எண்ணிய முடிதல் வேண்டும்’

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

vgk

தமிழ் விரும்பி said...

நற்செய்தி கொணர்ந்த குளிரச் சூரியன்
புனித மேரியின் புதல்வனான தேவகுமாரன்
அவனின் புகழ்பாடிய தங்களின் கவிதை மிக நன்று..
தங்களுக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...

மாதேவி said...

எண்ணிலாப் பெருமைகொண்ட இறைவன் அவதரித்த இந்நாள் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்கள்.

Shakthiprabha said...

கலக்குங்க! கலக்குங்க! பாராட்டுக்கள்.

க்ருஸ்மஸ் அண்ட் new year wishes. உங்க ப்ளாக் ன்னா ஒரு தனி சுதந்திரம் எனக்கு.... to post whatever i wanna say! நடுல நடுல தங்க்ளிஷ் க்கு தாவலாம் lol :P

//மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி

மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்

மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
///

எனக்கு இந்த வ்ரிகள் ரொம்ப பிடிச்சது.
கவிதைக்கு வாழ்த்துக்கள்!

Rathnavel said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

ரசிகன் said...

தாமதமாக வந்தாலும், கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா.

//ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு//
மலர்ந்திட்டு இந்த பதம் சரியா?!

நல்ல கவிதை. நன்றாக எழுதி உள்ளீர்கள்.

ராஜி said...

தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்

கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது
>>
ரசித்தேன். தாமத கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஷைலஜா said...

பின்னூட்ட மடல் பூக்கள் அளித்த அனைவர்க்கும் மிக்க நன்றி.

ரசிகன் said...

ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html