Social Icons

Pages

Thursday, December 22, 2011

வாரணம் ஆயிரம்!

கனவா கனாவா?
எது சரியான சொல் என்ற ஆராய்ச்சியில் இரண்டுமே சரி என்பதுபோலத்தெரிகின்றன. மங்கியதோர்நிலவினிலே கனவினிது கண்டேன் என்கிறார் பாரதி.

இன்பக்கனா ஒன்று கண்டேன்  என்ற பாடலில் கனா தான் வருகிறது!

ஆண்டாள் கனா என்கிறாள்.

பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கண்ணனை நினைத்துப்பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி என்ற பெயரில் வருகிறது.

வாரணமாயிரம் எனத்தொடங்கும் பத்து பாசுரங்களில் கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆனதாகக்
கனாக்கண்டதை தோழியிடம் கூறுகின்றாள்..இதில் நிச்சயதார்த்தம் கையில் காப்பு கட்டுதல் பாணிக்ரஹண்ம் எனதிருமணச் சடங்குகள் அனைத்தும் சுருக்கமாக வருகின்றன.மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்


கைத்தலம் பற்றக்* கனாக்கண்டேன் தோழிநான்.... என்று ஆண்டாளும்

 வந்தென்னைக் *கரம்பற்றிய* வைகல்வாய்

இந்தஇப் பிறவிக் கிருமாதரைச்

சிந்தையாலும் தொடேன் என்று செவ்வரம்
 தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்


 என்று கம்பனுடைய சீதையும் சொல்லும் கரம்பற்றும் வைபவத்தை  பாரதி தனது புரட்சிகரமான கண்ணோட்டத்தில் பெண்ணிற்கு அவன் தரும் முக்கியத்துவத்தில்
 காதல் ஒருவனைக் *கைப்பிடித்தே* - அவன்

 காரியம் யாவிலும் கைகொடுத்தே
என்று அழகாக   திருப்பிப்போட்டுவிட்டான்!
தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணிற்குத்தருகிறான் எங்கள் பாரதி. பாணி-கிரஹணம் தானே? பற்றுகிற காரணத்தால்தானே சூரிய சந்திர கிரஹணங்கள்?


 மாங்கல்ய தாரணம் பாணிகிரஹணத்தின் ஒரு பகுதி யாக  இருக்கவேண்டும்
மாங்ல்ய தாரணம் செய்வதாய் என்று பேசும் திருமண அழைப்புகள் எங்கும் இல்லை!


 பாணிகிரஹணம் செய்துகொள்வதாய் என்றுதானே திருமண

 அழைப்பில் இருக்கும்!

பாணிக்ரஹணம் பிறகு பார்க்கலாம்  வாருங்கள் முதலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு!
  முதல் பாடல் ஜானவாசம்(மாப்பிள்ளை அழைப்பு) என்று கொள்ளலாம். அந்தகாலத்தில்  யானை  குதிரை
 மீது மாப்பிள்ளை வருவது  இருந்திருக்கிறது இன்றும் வட இந்தியாவில் குதிரை மீது மணமகன் அம்ர்ந்துவரும் ஊர்வலம் அமர்க்களமாய் நடக்கிறது.

காலப்போக்கில்  தென்னகப்பக்கங்களில்அன்னம் அல்லது தோகை மயில் முகப்பினைக்கொண்ட கார் என்றாகிவிட்டது.:)

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றதிர்
பூரண பொற்குடம் வைத்துப்புரமெங்கும்
தோரணம் நான் கட்ட கனாக்கண்டேன் தோழீ  நான்

இதுதான் பாடல்.

என் பிரிய தோழியே! ஆயிரம் யானைகள்(வாரணம்) சூழ்ந்துவர வீதிகளில் நாராயணன் ஊர்வலமாக வருகின்றான். இதை அறிந்து அவனைக்காணவும் வணங்கவும் ஒவ்வொரு வீடுகளும் பூரணபொன்கும்பங்களாலும்(நீர் நிறைந்த பொன்குடங்கள்) தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்படுவதை நான் கனவில் அனுபவித்தேன்!

வாரணம் என்றால்யானைபன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது.

 ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
எனும் திரைப்பாடல் நினவுக்கு வருகிறதா?
 ஒவ்வொரு கதவாய் தட்டினான் மன்னன்
என்பது சரியா ஒவ்வொரு கதவுகளாய் தட்டினான் மன்னன் என்பது சரியா?

சரி அதை விடுங்கள்!
இந்தப்பாடலைப்பார்ப்போம்.நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்நடக்கின்றான்

(எனவே எதிர்கொண்டழைக்க)பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,

எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ)நான்’இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.----------------------------------------------------------------

ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை)வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.

பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!

எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!அவள் தன் அனுபவத்தைசொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின் தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானவைஅகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!17 comments:

 1. திரட்டிகளில் இணைப்பவர்களுக்கு நூறுதடா --இல்லை இல்லை--- நூறுகிராம் சக்கரைப்பொங்கல் மூட நெய்பெய்து முழங்கை வழிவார மார்கழிக்கடைசியில் உண்டு ஆனா அதுக்கு எங்க இல்லம் வந்தால் தான் உள்ளம் குளிரக்குளிர சூடாய் பொங்கல் கிடைக்கும்!!

  ReplyDelete
 2. உங்க இல்லத்துக்கு வரணும்ங்கறதுதானே என் விருப்பமும். கண்டிப்பா வந்து பொங்கல் வாங்கிக்கறேன்க்கா...

  ReplyDelete
 3. வாரணம் என்றதும் ஓடிவராமல் இருக்கக் காரணம் ஏதும் உண்டோ?????

  தோ.......... ஓடி வந்தேன்.

  பாரதி 'கொடுத்த' உரிமையைக் கையில் எடுத்துக் கனகாலமாச்சு:-)

  அருமை ஷைலூ!

  ReplyDelete
 4. வாரணம் ஆயிரம் பாடலை இப்படி ஒரு கோணத்தில் நான் பார்க்கவில்லை. இப்போது நீங்கள் சொல்கையில் மிகவும் ரசிக்க முடிந்தது. மிக நன்றுக்கா!

  ReplyDelete
 5. மார்கழித் திருநாட்களில் மாதவனின்
  புகழ் கேட்பது மனதுக்கு இதமாய்
  இருக்குது சகோதரி.

  மாப்பிளை அழைப்பின் விளக்கம்
  மிக அருமை சகோதரி...

  ReplyDelete
 6. வணக்கம் அக்கா

  நான் தலைப்பை பார்த்திட்டு சினிமா விமர்சணம் என்று வந்தேன் அவ்வ்வ்வ்

  ஆனாலும் அருமையாக சுவாரஸ்யமாக சொல்ல்யிருக்கீங்க.நான் கொஞ்சம் பிந்திட்டேன் இல்லை என்றால் திரட்டிகளில் இணைத்து சக்கரைப்பொங்கல் சாப்பிட்டு இருக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. மார்கழிச் சிந்தனை அருமை
  ஒப்பீடு மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. /////அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை
  அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம்
  கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!/////

  நீங்களும் ஒரு ஆண்டாளாய் உணர்வு லயிக்க;
  கருத்து மிக்க விளக்கம் தந்து வைத்தீர் எங்களை சொக்க!

  அற்புதம்... அருமை. அருமை.

  "அழகுத் தெய்வம்" மகாகவி பாரதி...
  "மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
  வயது பதினாறிருக்கும்....."
  கூறும் கனவில் இது என்பதும் 'கனா'வே...
  வார்த்தைகளை வார்த்தவர்களையும் வார்த்தைகளையும்
  நீங்கள் வார்த்தது அழகு சகோதிரி..

  ////தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணிற்குத்தருகிறான் எங்கள் பாரதி ////
  பார்த்தீங்களா.. நீங்க மட்டும் தானா! எல்லோருக்கும் இல்லையா...
  அவனின் மீது கொண்ட காதல் தனியுரிமை செய்யச் சொல்கிறது என்பதும்
  மகிழ்வானதே...

  ////மாங்ல்ய தாரணம் செய்வதாய் என்று பேசும் திருமண அழைப்புகள் எங்கும் இல்லை! ///
  "தாரணம்" என்றால் அனுவித்தல் & உறுதி செய்தல் என்று பொருள் படுகிறது..
  ஓ! இதைத்தான் தாரம் வார்த்து தருவதாகச் சொல்வார்கள் போலும்..

  ////ஒவ்வொரு கதவாய் தட்டினான் மன்னன்
  என்பது சரியா ஒவ்வொரு கதவுகளாய் தட்டினான் மன்னன் என்பது சரியா?///

  ஒவ்வொரு என்பதால் கதவாய் என்பது தான் சரி எனத் தோன்றுகிறது..

  ///பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி///
  //// தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ) /////
  ஆங்காங்கே இலக்கண அமைதிகளையும் அருமையாக சுட்டிக் காண்பித்து
  அற்புதமாக சமைத்து இருக்கிறீர்கள்...
  பதிவிற்கும், பகிர்விற்கும் நன்றிகள் சகோதிரி....

  ReplyDelete
 9. பின்னூட்டம் பெரிதாகவே போகிறது....பொறுத்தருளவேண்டும்!..
  "நீதி நூல் பயில்" "நுனியளவு செல்" "நூலினைப் பகுத்துணர்"
  நம்ம மகாகவி நமக்கு சொன்னது... அதனால் விழைந்தது...
  புத்தகமும் கூடு நாலு பக்கம் போக நெடு நேரமாகிறது
  தற் பெருமைகளை அள்ளி வீசவில்லை!..
  அடக்கத்துடன் பகிர்ந்துக் கொள்கிறேன்....
  சில நேரம் பின்னூட்டம் போட்டப் பின்பு.. எங்கே அதிகப் பிரசங்கித் தனமாக எழுதி இருக்கிறோமோ!
  என்றும் தோன்றும்... எண்ணத்தை பகிர்ந்து கொள்ளவே..
  அது நீங்கள் அறிந்த விசயங்களாகக் கூட இருக்கலாம் என்ற நிதானம் இருக்கும்...
  இங்கே ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்திருப்பதில்லை...
  அதனால் தான் தன்னிலை விளக்கமாக கூறுகிறேன்....
  பெரும்பாலானோர் நன்று, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்பார்கள்
  நான் அதிகம் எழுதுவதால் இப்படி கூறத் தோன்றியது... நன்றிகள் சகோதிரி.

  ReplyDelete
 10. ஆண்டாளின் வித்யாசமான அனுபவங்களை அழகாக விளக்கி உள்ளீர்கள்.வாரணம் ஆயிரம் அருமை.

  ReplyDelete
 11. நன்றாக எழுதி உள்ளீர்கள்.
  வரிகளுக்கு இடையே உள்ள இடத்தை ஒழுங்கு செய்யலாமே.

  ReplyDelete
 12. ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானவை

  கோதை ஆண்டாள்.. தமிழை ஆண்டாள்.. (நன்றி கண்ணதாசன்)

  அத்தனை ஆழ்வார்களுக்கு மத்தியில் பெண் சிங்கமாய் கர்ஜித்த ஆண்டாளுக்கு ஈடு இணை உண்டா..

  ரசமான பதிவு.

  ReplyDelete
 13. ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானவை

  >>>
  அந்த வித்தியாசமான தளத்தில் வலம் வந்தேன் சகோதரி

  ReplyDelete
 14. நல்ல சிந்தனை....:)

  ReplyDelete
 15. வாரணம் என்றதும் விரைந்து வந்த துளசி, சக்கரைப்பொங்கலுக்கு மட்டுமல்ல எப்போதுமே சட்டென என் இடுகைபடித்துப்ப்பாராட்டும் அன்புத்தம்பி கணேஷ், வித்தியாச கவிதைகளை சிந்திக்கும்படி எழுதும் ம்கேந்திரன், திரைத்தலைப்பு என ஏமாந்து(அதுக்குத்தானே திட்டமிட்டது இப்படி?:) வந்த ராஜா, ரம்யமான பதிவுகள் இடும் ரமணி, ராம்வி பார்த்தசாரதி( பார்த்தசாரதி நீங்க சொன்னபடி சரி செய்றேன்) ராஜி ரிஷபன் ரத்னவேல் மதுரையம்பதி எல்லார்க்கும் மிக்க நன்றி.
  தமிழ்விரும்பி அவர்களே உங்களைப்போல எனக்கு இப்படி பெரிய பின்னூட்டமே இட வருவதில்லை ரசித்து வாசிக்கிறேன் உங்க கருத்துக்களை.. ஆகவே தொடர்ந்து எழுதவும்..நான் நிறையக்கற்றுக்கொள்கிறேன் உங்களிடமிருந்து.அதற்கு நான் தான் நன்றி சொல்லி உங்களை தொடர்ந்துவரவேற்கவேண்டும்.

  ReplyDelete
 16. அவசர உலகம் பெரும்பாலானோருக்கு அவகாசமில்லை...
  ஆகவே அதுவும் சரியே! நானும் நான் படித்த கேள்வியுற்றவைகளை
  எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்கிறேன்.. தங்களின்
  புரிதலுக்கும், அனுமதிக்கும் நன்றிகள் சகோதிரி...

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.