Social Icons

Pages

Tuesday, February 07, 2012

கோல மயில் மீதேறி.....

கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?

கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!



பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?

பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!



பூசத்திற்கே இன்று உன்னால்தானே மகிமை?

 புகழ்ந்துன்னைப் பாடுவதே எங்களுக்கு பெருமை!



பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?

பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!



ஈசனுக்கு உபதேசம் செய்தவனும் நீயோ?

ஈன்றவள் போல் காப்பதனால் நீ எங்கள் தாயே!



வற்றாத நதிபோலும் பெருகுமோ உந்தன் அருள்?

வந்து விடும் புதுஒளியில் மறையுமே எங்கள் இருள்!


பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?

(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!


13 comments:

  1. குமரன் மேல் நீங்கள் பாடிய பாமாலை ரொம்ப நல்லா இருக்குக்கா. இதோ திரட்டிகள்ல இணைச்சிடறேன்...

    ReplyDelete
  2. thai poosathukku muruganukku paa-vazhi paadu.arumai.

    ReplyDelete
  3. கேள்வி பதில் பாணியில் தை பூச தமிழ் பா... நன்றாயிருக்கிறது அக்கா.

    ReplyDelete
  4. தைப்பூசத்துக்கு ஏற்ற நல்ல பாடல்.

    ReplyDelete
  5. Anonymous3:39 PM

    அழகான பக்திப் பாமாலை !
    அனைவர்க்கும் அவனருள் நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  6. வணக்கம்! ” தைப் பூசத் திருநாளில் தமிழ் எடுத்துப் பாடுவோம் “
    என்ற பாடலுக்கு ஏற்ப , தமிழ்க் கடவுள் முருகன் மீது அழகிய பாமாலை சூட்டியுள்ளீர்கள்! நன்றி!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Anonymous12:50 AM

    கேள்வி பதில் பாணியில் தை பூச பாமாலை அருமை சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. Dear shylaja,

    எனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான
    ஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு
    அளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய
    எழுதுங்கள்.

    விருது வழங்கிய சுட்டி கீழே:
    http://minminipoochchigal.blogspot.in/2012/02/liebster.html

    ReplyDelete
  10. பக்தி மணம் கமழுது பாமாலை.

    ReplyDelete
  11. அருமையானக் கவிதை...
    அழகனை பற்றிய அழகானக் கவிதை...

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

    ReplyDelete
  12. கருத்து தெரிவித்த அனைவரையும் வேல் முருகன் காக்க! நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.