Social Icons

Pages

Tuesday, February 21, 2012

மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!

பிப்ரவரி 21.


ஸ்ரீஅரவிந்த அன்னையின் பிறந்த நாள் இன்று.






அன்னையின் அருள் அவரை ஒருமுறை நினைத்தவருக்கு எளிதாகக்கைகூடும்.








புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை ஏற்படுவதை அனுபவித்து மெய்சிலிர்க்க இயலும்!



மலர்களை வைத்து அன்னையை நாம் வழிபடுவது மலர்போன்ற மென்மையான மனமும் மலர்போன்ற மலர்ந்த மனத்தையும் நமக்கு உண்டாக்கிவிடும்!

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது வெற்றிகளை விட தோல்விகளே மனமாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும் என்பதாகும்.இப்படிச் சொல்வதனால் தோல்வியே வெற்றிக்குத்தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக்கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக
இருப்பதென்னவோ உண்மை.







மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே தான் இருக்கிறது.விதை முளைப்பதற்குஉதவியாக நம்முடைய அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பதே கேள்வி.இறைக்கருணை இல்லாவிடில் எதுவும் சாத்தியமில்லை நாம்தான் அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கிறோமே அதனால்தான்வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அசதோ மா சத் கமய



தமஸோ மா ஜ்யோதிர் கமய



ம்ருத்யோர் மா அம்ருதம் கமய



ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:










பராசக்தியின் அம்சமான அரவிந்த அன்னையின் அமுதமொழிகள் சில...



 என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன்.



பயம் என்பதே எப்போதும் கூடாது,. அச்சமற்றவனுக்கே வெற்றி.



எப்போதும் நான் உனக்கு உறுதுணையாய் இருந்து உன்னை ரட்சிப்பேன். ஒருபோதும்பயப்படக்கூடாது தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும் ஆபத்து ஏற்படின் என்னை அழைக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும்



இறைசக்தியைப்பற்றி மட்டுமே நினை அது உன்னுடன் இருக்கும்}



அன்னை கூறிய சில கதைகள்...........


ஒரு கிராமத்துப்பண்ணை வீட்டில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது.

அது 150 ஆண்டுகள் இடைவிடாமல்ஓடி சரியான நேரத்தைக்காட்டிவந்தது.

ஒவ்வொருநாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்ததும் முதலில் அந்தகடிகாரம் அருகில் சென்று அது சரியாக ஓடுகிறதா என்றுபார்ப்பார்.

ஒருநாள்காலை அவர் இப்படி நின்றுபார்த்தபோது திடீரென கடிகாரம் பேசத்தொடங்கியது.


 150 ஆண்டுகளாக நானும் வேலை செய்துவருகிறேன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது எனக்கு ஓய்வு வேண்டாமா : என்று கேட்டது.


;உன்னுடைய புகார் சரி இல்லை என் அருமை கடிகாரமே என்று ஆரம்பித்த விவசாயிதொடர்ந்தார்,

உன்னுடைய ஒவ்வொரு டிக்கிலும் ஒருவினாடி ஓய்வு இருப்பதை நீ மறந்துவிட்டாயே: !


கடிகாரம் ஒருநிமிடம் யோசித்தது பிறகு மறுபடி தன்பணியைத்தொடர்ந்தது.
இந்தக்கதை கூறும் நீதி என்ன

ஓர் ஒழுங்குமுறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்குமுறையே அதிகபளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கிவிடும் என்பதுதான்!

**********************************


பெர்ஷியாவில் தேன் விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்.
அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள்.

அவளுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்து தேன் வாங்குவது வழக்கமாகிவிட்டது.

இதைப்பார்த்து என்ரிச்சலைடைந்த ஒருமனிதன் அதே வியாபாரத்தை தானும் செய்ய நினைக்கிறான்

கடை வைத்து வரிசையாக தேன்குடங்களைக்கொண்டுவந்து அடுக்கினான் அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான் .

ஒருவர் இதைகவனித்துக்கூறினாராம், கடுமையான இவன்முகம் விஷத்தைவிற்கிறமாதிரி இருக்கிறதே!

சிரித்தபடியே இருந்த அந்த தேன்விற்கும்பெண்மணி இயற்கையாகவே முகமலர்ச்சியுடன் இருந்தாள் .அவள் வாடிக்கையாளர்களுக்கு தேனைமட்டும் விற்கும்பெண்ணாகத்தெரியவில்லை அதற்கும் மேலானவளாக உலகின் அதிகமுகமலர்ச்சி உள்ளபெண்ணாகத்தெரிந்தாள்.

நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.

அந்த தேன் விற்கும்பெண்போல இயற்கையான முகமலர்ச்சியைக்கொண்டிருக்கவேண்டும் .அந்த மலர்ச்சியே தோழமையை அதிகப்படுத்தும்!

**********************************************************************

ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருள் தோழமைகளுக்கு என்றும் கிடைத்திட இந்நாளில் அன்னையிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ
ஓம் ஆனந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!









--














--







16 comments:

  1. எல்லாத் திரட்டிகள்லயும் இணைச்சுட்டேன். மிரா என்ற இயற்பெயர் கொண்ட அன்னையின் மலர்ப் பாதத்தை தங்கள் மூலம் பணிந்து வணங்குகின்றேன்.

    ReplyDelete
  2. புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை ஏற்படுவதை அனுபவித்து மெய்சிலிர்க்க இயலும்!


    உணர்ந்து வந்த அற்புத அனுபவத்தை மீண்டும் நினைவில் மலரச்செய்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,,

    ReplyDelete
  3. நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.

    அந்த தேன் விற்கும்பெண்போல இயற்கையான முகமலர்ச்சியைக்கொண்டிருக்கவேண்டும் .அந்த மலர்ச்சியே தோழமையை அதிகப்படுத்தும்!

    தேனாய் இனித்து மலர்போல மலரச்செய்த அற்புத்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,, வாழ்த்துகள்,,

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    தரிசன நாட்களில் முடிந்த வரை தவறாது பாண்டி செல்வது வழக்கம். தற்போது முடியவில்லை. வீட்டில் மலர் அஞ்சலி செய்வது மட்டுமே இயலுகிறது. அன்னையின் பாதங்களில் மீண்டும் ஒரு சமர்ப்பணம்

    ReplyDelete
  5. மலர்போல,
    மலர்போல மனம் வேண்டும் தாயே!

    தலைப்பும், பதிவும், தகவல்களும் அருமை.

    புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமம் ஓர் முறை போய் உணர்ந்திருக்கிறேன்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.


    படிக்கும்போதே அகமும் முகமும் மலர்கிறது.

    ReplyDelete
  8. அன்னைக்கு போற்றுதல்கள்!

    ReplyDelete
  9. உண்மையில் ஒரு அதிசயம் இங்கே எங்கள் நாட்டில் தொலைக் காட்சிப் பெட்டியில்
    ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்து பார்க்கும் இந்நேரம்,
    அதைப் பார்த்துக் கொண்டே இணையத்தில் உங்கள் வலப் பதிவை பார்க்கிறேன்...
    அதிசயம் என்ன என்றால் தொலைக் காட்சி நிகழ்ச்சி புதுச்சேரியைப் பற்றியது...

    ஸ்ரீ அரவிந்த அன்னையினைப் பற்றியத் தகவல்களுக்கும், அவரின் சமாதியில்
    தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி...
    எனக்கும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது...
    அடுத்தமுறை அங்கு வரும் போது அவசியம் சென்று வரவேண்டும்.

    ReplyDelete
  10. வணக்கம்! தங்கள் கட்டுரையை படிக்கும் போதும், படித்து முடித்த பின்னரும் “மலர் போல, மலர் போல மனம் வேண்டும் தாயே “ என்ற பாடல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ( காலையில் தொலைக் காட்சி ஒன்றில் ஒளி பரப்புவார்கள் ) நன்றி!

    ReplyDelete
  11. அன்னையின் சமாதியில் தங்களுக்கான அனுபவம்
    என்னை நெகிழச் செய்தது சகோதரி.
    அன்னை பற்றிய பல தகவல்களுக்கு நன்றி.
    அன்னையின் பாத கமலங்களுக்கு மலர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  12. மனதை மலரச் செய்த பகிர்வு. நன்றி ஷைலஜா.

    ReplyDelete
  13. நன்றி..... குட்டிக் கதைகளை ரொம்பவும் ரசித்தேன்.

    ReplyDelete
  14. //மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே தான் இருக்கிறது.விதை முளைப்பதற்குஉதவியாக நம்முடைய அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பதே கேள்வி.இறைக்கருணை இல்லாவிடில் எதுவும் சாத்தியமில்லை//

    சத்தியமான வார்த்தைகள் ஷைலஜா மேடம்.

    ReplyDelete
  15. ஷைலஜாக்கா... தங்களை ஒரு தொடர் பதிவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_28.html

    நன்றி!

    ReplyDelete
  16. இடுகையில் கருத்திட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.