
முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று
அடிநிலை ஈந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற
காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற
ஆராவமுதனைப்...