Social Icons

Pages

Sunday, March 04, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)

பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!
 எழிலான  ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்  மேட்டில் அமர்ந்திருக்க கீழே பள்ளமான பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.


பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்றாகத் தேங்கும் பள்ளம் , பள்ளி! .பாடசாலை என்கிறார்கள் இலங்கையில். அழகான பொருள் கொண்ட சொல்தான் இதுவும்.திருப்பள்ளி எழுச்சி இறைவனுக்கு சொல்கிறோம். இறைவன் இருக்குமிடம்  சிறந்தது அல்லவா அதனால் திருப்பள்ளி.   ’அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே* என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில் அதென்ன பள்ளிக்கட்டில்?

!

* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!

* பள்ளி = படுக்கை என்றும் பொருள்.சங்ககாலப்பாடல்களில் இதற்கு உதாரணம் உள்ளது.  பள்ளியறை என்பது படுக்கை அறை!

* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை! இன்னமும் வைணவர் வீடுகளில் சமையல் அறையை திருமடப்பள்ளி என்பார்கள் அது திரிந்துஇன்று  திருமாப்படி ஆகிவிட்டது !


வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு!மனதின் ஆழத்திலிருந்து வரும் பாட்டு பள்ளுப்பாட்டு! (முக்கூடற் பள்ளு) அதான் பாரதி  ஆடுவோமே பாட்டு பாடுவோமே என்று சொல்லவில்லை.ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றான் போலும்!

பள்ளிவாசல் என்பது இறைவனின் கருணை வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

 பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி என்று பதிவர் கேஆர் எஸ் தன் வலைப்பூவில்  கூறியதை அப்படியே இங்கே காப்பியடிக்கிறேன்:)


 மடைப் பள்ளி  என்னும் சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!


அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்! அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!

அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை! அந்த அரியணையைத்தான் ஆண்டாள் பள்ளிக்கட்டில் என்கிறாள் தன் பாசுரத்தில்.

 பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டும் நினைவுக்கு வரணுமே!

எதற்கு இப்படி பள்ளிக்கு  இன்று இவ்வளவு முக்கியத்துவம் என்றால் பதிவர் கணேஷ் அவர்கள்  என்னை தொடர்பதிவாக  எழுத அழைத்துள்ளார். மீண்டும் பள்ளிக்கூடம் போக சொல்கிறார்! ரொம்ப பின்னாடி நான் போகணும் இதுக்கு! தம்பி உடையாள் படைக்க அஞ்சலாமா?:) அதனால்  நினைவுக்கு வருவதை இங்கே படைக்கிறேன்!!கொஞ்சம் பெரிய படையல் பொறுமையா படிங்க  ..உங்களை மாட்டிவிட்ட புண்ணியம் கணேஷுக்கே!!!

            *************************************************

சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம்  சொல்லியபடிகறுப்பு நிற  காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் ஆனால் பொய் சொன்னா போஜனம் கிடைக்காதாமே..  சாப்பிடாம எப்படி உயிர்வாழறது இன்னும் எழுதி எல்லாரையும் எப்படிப்படுத்தறதாம் அதனால நிஜத்தையே சொல்லிடறேன்:)
    
அப்போல்லாம் இந்த எலிகேஜி பூனை கேஜில்லாம் கிடையாது நேரா ஒண்ணாம்கிளாஸ்தான் நான் பள்ளிக்குப்போக  மூணுவயசிலிருந்து ஒற்றைக்காலில் நின்னதால் அம்மா என் அப்பாக்குத்தெரியாம 2வயசு ஜாஸ்திபோட்டு ஒண்ணாங்கிளாசில் சேர்த்துட்டாங்க ஆள்வேற அப்படித்தான் பம்ளிமாஸ் மாதிரி இருப்பேனா யாருக்கும்  சந்தேகமே வரலையாம்.ஆனா இந்த வயசுக்கூடுதலாய் போட்டதுக்கு அம்மா இன்னிவரைக்கும் அப்பாகிட்ட அர்ச்சனைவாங்கிட்டு இருக்காங்க:)( என்னவோ நான் பெரிய கலெக்டர் வேலை பாக்கறமாதிரி  கரண்டி உத்தியோகம்தான் கல்யாணம் ஆன நாள் முதலாய்!!!)

வீட்ல அப்பாவின் பெற்றோர்கள்  கல்யாணமாகாத தங்கைகள் அதாவது என் அத்தைகள் என்று கூட்டுக்குடும்பம் குடும்பத்தின் முதல் பேத்தி நான் தான் ஆகவே அளவுக்கு மீறீய செல்லம் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்!  இரண்டாம் வகுப்புவரை இரண்டு டஜன் சிலேட்டுகளை தொலைத்துவிட்டேனாம்!! சிலேட்டையாவது தொலைத்தால் சரி ஒருநாள்  இரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டுவருகிறபோதே நானே தொலைந்துவிட்டேனாம். அன்று.வீட்டில் ஒரே கலவரமாகிவிட்டது  ஏகப்பட்ட தெய்வங்களுக்கு மஞ்சள்துணிமுடிப்புகள் பிரார்த்தனைகள் அழுகை கண்ணீர் கதறல்.

கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன்  கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங்  வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன்  கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட  பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.

அதற்குப்பிறகு நாலாம்வகுப்புவரை அத்தைகளில் ஒருவர் அரைகிலோமீட்டர் அருகிலிருந்த பள்ளிவரைகொண்டுவிடுவது திரும்ப அழைத்துவருவது என்று பொறுப்பேற்றனர்.
சின்ன அத்தை பாதிதூரம் மூச்சிறைக்க தூக்கிக்கொண்டே வந்துவிடுவார்! அவ்வளவு பிரியமும் பாசமும்!

பள்ளிக்கூட ஆண்டுவிழாவிற்காக   எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தார்கள். அப்போ பிடித்தது நடன ஆசை.யாராவது வீட்டிற்குவந்தால் அவர்கள்  ஆ என்பதற்குமுன்பாக  ஆட  ஆரம்பித்துவிடுவேன். நிறுத்தவே மாட்டேன். பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)

அப்பா எழுத்தாளராயிருந்ததால்(இருப்பதால்) வீட்டில் மாடி ரூமில்வெள்ளைதாள்கள் நிறைய இருக்கும். ஒருநாள் அதில் ஒன்றை எடுத்து ஒரு ஜோக் எழுதும்போது அம்மா வந்துவிட்டாள்” மொட்டை மாடில் உக்காந்து வடாத்தைப்பார்த்துண்டு பாடம்படின்னா  என்ன எழுதறே பேப்பர்ல?” என்றாள்/

ஜோக்கும்மா

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?


ஆனால் அப்பா பார்த்து புகழ்ந்துதள்ளிவிட்டு அதை விகடனுக்கு எப்படி அனுப்புவதென சொல்லி அதை அனுப்பி ஜோக்கும் வெளிவந்து விட்டது.ஆஹா அன்று பள்ளிக்கு எல்லாருக்கும் பாரிஸ் சாக்லேட் தந்தேன். என்னவோ  ஞானபீட பரிசு  வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.

கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே வழக்கம்போலஅதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட்ட நடந்ததை சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை விலங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..


அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு

தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!
தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"


"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு

மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!
ஐந்தாவது வகுப்பிலிருந்து எங்கள் கிழக்குரங்காபள்ளிக்கூடத்தைவிட்டு ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் 6த்ஸ்டாண்டர்ட் சேர்ந்தபோது அருகில் இருந்த பாய்ஸ் ஹைஸ்கூலைக்கடந்துதான் செல்லவேண்டும். அந்தப்பக்கமே பாக்காமல் நேராபோகணம் தெரிஞ்சுதா என்று வீட்டில் அதட்டி அனுப்பிவைப்பார்கள். கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் நாங்க நாலைஞ்சிபேர்!
 
குடுகுடுராமசந்திர ஐயர் என்று ஒரு வாத்தியார் இருந்தார் அவர் குடுகுடுவென வேகமாக நடப்பார் என்பதால் பாய்ஸ் ஹைஸ்கூலில் அந்தப்பட்டபெயர் அவருக்கு .அவர் இரண்டுபள்ளிகளுக்கும் காம்ப்வுன்ட் குறுக்கே இருக்கும் சின்ன தடுப்புகதவுவழியே வந்து பாடம் எடுப்பார். என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.

ஏழு எட்டாம் வகுப்புகளில்
பள்ளியில் NCCயில் சேர்ந்துவிட்டேன்  ஞாயிறுகளில் சிற்றஞ்சிறுகாலை காக்கி உடுப்போடு பள்ளிக்குப்போய்விடுவேன்  பின்ன ரங்கபவன்லேந்து சூடா இட்லி வடை சாம்பார் கிடைக்குமே!

 அம்மா,’என்சிசில சேர்ந்தா நாளைக்குகல்யாணம் ஆகுமா இவளுக்கு?  எதுக்கு ஆண்பிள்ளையாட்டம் பாண்ட் சர்ட் போட்டுண்டு போறா வேண்டாம்னு சொல்லுங்கோ” என அப்பாவிடம் சொல்லிச்சொல்லி  இரண்டேவருஷத்தில் அதிலிருந்து நான்விலகும்படி ஆகிவிட்டது அதற்குள் ஜே1 சர்டிஃபிகேட் வாங்கிவிட்டேன்! எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த  பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!

எழுத்தாளர் ஜெயகாந்தன்  சிறுமியாய்  இருக்கறப்போ வீடுவந்தார் அவரையும் விடவில்லை"   மாமா தெற்குவாசல்போய் கூல்ட்ரிங்க் வாங்கித்தாங்க" என்றேன் . கருப்பாயிருந்தாலும் ஹாண்ட்சம்மாய் இருப்பார். எப்போ பார்த்தாலும் சிகரெட் கையில் இருக்கும். ‘ஏன்மாமா சிகரெட் பிடிக்கறீங்க?”
‘பிடிச்சதை பிடிக்கறேன்மா’ என்பார் சிரித்தபடி எனக்கு ஒன்றும் புரியாது.
‘ஏம்மா உனக்கு கூந்தல் சுருட்டையா அழகா இருக்கே தவிர  நீளம் போதலையே  அதுக்கு ஒரு தைலம் வாங்கித்தரேன்” என்று தெற்குவாசல் கடையில் ஒரு கூந்தல் வளர் தைலம் வாங்கிக்கொடுத்தார்.
அடுத்த ஏழெட்டுமாதத்தில் திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் மறுபடி ஸ்ரீரங்கம் வீடுவந்தார் அப்போ கேட்டார்’ என்னம்மா  வளர்ந்திச்சா?’ நானும், “ ம்ம் வளந்திச்சி மாமா  அந்த கூந்தல் தைலக்கம்பெனி வியாபாரம் நாந்தான்  நிறைய வாங்கறேன் ஆனா என்  தலைமுடி அப்படியே இருக்கு” என்றேன் சிரித்துவிட்டு .

அப்பாவிடம்,’இதுமகாவால்’என்றார்.

அப்பாவோடு பல எழுத்தாளர்கூட்டங்களுக்குப்போயிருக்கிறேன் கவனமெல்லாம்  கேசரி வெண்பொங்கல் பஜ்ஜி வாசனையில்தான் இருக்கும் மேடை சொற்பொழிவை கவனிக்காமல் விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்! குயிலன் என்றொரு மகாகவிஞர் வருவார் வீட்டுக்கு அவரிடம்  ‘ஏன்மாமா இவ்ளோ கருப்பா இருக்கீங்க” என்று கேட்டுவிட்டேன் அவரும் .”அதான்மா நான் குயிலன்” என்றார். அவர் போனதும் அப்பா அம்மாவிடம் எனக்கு கிடைத்தது லட்சார்ச்சனை! பின்னாளில் அவர் கவிதைகளை  வாசித்தபோது கண்பனித்தது அவரிடம் பழைய நிகழ்வை சொல்லி மன்னிப்பு கேட்டேன்  “ என்னம்மா நீ? குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது  வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.

ப்ளஸ்டூ வரை பள்ளியில் படிப்பைவிட மற்ற கலை நிகழ்ச்சிகளில் நான் பிரசித்தம். மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.அப்பாவின் தொடர்கதை அப்போது  ராணி யில்வந்துகொண்டிருந்தது.சில ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.

துணி நீயப்பா என்று  பழம் நீயப்பா பாடல்பாணியில் பாட்டு எழுதி  மாம்பழம் முருகன் வினாயகர் சம்பவத்தை  அப்படியே நவீனமாய் மாற்றி  பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன்.  அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு  பிரபலமானது.

ஆக  எனக்கு இப்போ ஏதாவதுகொஞ்சம் சுமாரா எழுதவருகிறதென்றால் அதற்கு வித்திட்டது என் பள்ளிக்கூட நாட்கள்தான். பசுமை நிறைந்த நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கஅன்று என்னை  ஆதரித்த ஆசிரியர்களும் தோழிகளும்  பழகிய அனைவரும்  இன்று எங்கங்கோ சிதறி இருக்கிறார்கள்.....  என்றாவது மீண்டும் கண்டால் அவர்களுக்கு சொல்ல என்றே நல்லகதை ஒன்றையும் வைத்திருக்கிறேன்!

இது தொடர்பதிவு  ஆகவே நான் இதைத்தொடர நாலுபேரை அழைக்கிறேன் அவர்களும் பள்ளி நினைவுகளை அசைபோடும்படி அன்போட கேட்டுக்கறேன்.

1மாதவன்

2ஷக்திப்ரபா

3மகேந்திரன்

4புதுமாப்பிள்ளை தக்குடு!43 comments:

 1. Anonymous4:12 PM

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  ReplyDelete
 2. ரெணடுலருந்து நாலு கரண்ட் இல்ல. இப்ப திரட்டிகள்ல இணைச்சிட்டேன்க்கா!
  பள்ளி என்பதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை போல ஒரு விளக்கம் தந்து ஆரம்பிச்சதே அசத்தல்! ‌ஜெயகாந்தன், குயிலன் ஆகியவர்களுடனான உங்கள் பழக்கத்தைச் சொன்ன விதம் நகைச்சுவையுடன் கூடிய பிரமிப்பு! சின்ன வயசில் ஸ்லேட்டையும், தன்னையுமே தொலைத்ததை நீங்கள் விவரித்ததில் சிரிப்பு! ஆக எல்லாச் சுவைகளையும் வழங்கி விட்டீங்கக்கா!

  ReplyDelete
 3. எங்கண்ணன் ஆறு வயசுல இருந்தப்ப, வாசல்ல பஞ்சு மிட்டாய் வண்டிக்காரன் கிட்ட வெள்ளி அரைஞாண் கொடியைக் கழட்டித் தந்துட்டு, பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்டுக்கிட்டே வீட்டுக்குள்ள வந்தாராம். அப்பா, நல்லவேளை... அவன் புள்ளையத் தூக்கிட்டுப் போய்டாம, அரைஞாண் கொடியத் தானே தள்ளிட்டுப் ‌போனான், விடுன்னு ஆறுதல் பட்டுக்கிட்டாராம். நீங்க தொலைஞ்சு போய் கிடைச்சப்ப உங்கப்பாவும் அதுமாதிரி தான் ஃபீல் பண்ணிருப்பாருல்ல...

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வயசுல மட்டுமில்லாம எழுத்து விஷயத்துலயும் என்னை மிஞ்சின அக்காவா எப்படி இருக்கீங்கன்றதுக்கு இப்போ விடை தெரிஞ்சிடுச்சு. பள்ளி நாட்கள்லயே அதுக்கான விதை விதைக்கப்பட்டிருக்கு. எனக்கெல்லாம் கல்லூரி நாட்களுக்கப்புறம்தானே!

  ReplyDelete
 6. சுவையான நினைவுகள்.....

  நன்றாக எழுதுகிறீர்கள் சகோ.... நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதும் பாணி நன்று...

  வாழ்த்துகள்.... தொடருங்கள்... தொடர்கிறேன்....

  ReplyDelete
 7. ஸ்கூல் ஃப்ரெண்டோட நோட்டைத் தொலைச்சுட்டு நீங்க பட்ட பாடு... Very Funny! என்னோட Mummy கூட என்னை கட்டுரை, நெட் பக்கம் போறதுக்கெல்லாம் லேசுல Allow பண்ணலை. எல்லா மம்மீசும் ஒரே மாதிரிதான் போல!

  ReplyDelete
 8. குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.//////////

  இப்பவும் நீங்க அப்படியேதானே இருக்கீங்க அக்கா.

  நல்ல பதிவு

  ReplyDelete
 9. ’தாகமாயிருக்கு கூல்ட்ரிங் வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் .

  பள்ளி நினைவுகள் அருமை. கிழக் குரங்கான்னு பதம் பிரித்து சுஜாதா கேலி செய்த மீட்டிங் நினைவில் வந்தது.

  ReplyDelete
 10. கூகிள்சிறி .கொம் said...
  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  4:12 PM

  <<<நன்றி பயன்படுத்திக்கொள்வேன்

  ReplyDelete
 11. கணேஷ் said...
  ரெணடுலருந்து நாலு கரண்ட் இல்ல. இப்ப திரட்டிகள்ல இணைச்சிட்டேன்க்கா!
  பள்ளி என்பதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை போல ஒரு விளக்கம் தந்து ஆரம்பிச்சதே அசத்தல்! ‌ஜெயகாந்தன், குயிலன் ஆகியவர்களுடனான உங்கள் பழக்கத்தைச் சொன்ன விதம் நகைச்சுவையுடன் கூடிய பிரமிப்பு! சின்ன வயசில் ஸ்லேட்டையும், தன்னையுமே தொலைத்ததை நீங்கள் விவரித்ததில் சிரிப்பு! =<<<< நன்றி கணேஷ் பொறுமையா படிச்சீங்களா நீள்மாகிவிட்டது தவிர்க்க இயலவில்லை நன்றிதிரட்டில இணைச்சதுக்கு

  ReplyDelete
 12. Rathnavel Natarajan said...
  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  4:29 PM

  <<<நன்றி மிக திருரத்னவேல்

  ReplyDelete
 13. கணேஷ் said...
  வயசுல மட்டுமில்லாம எழுத்து விஷயத்துலயும் என்னை மிஞ்சின அக்காவா எப்படி இருக்கீங்கன்றதுக்கு இப்போ விடை தெரிஞ்சிடுச்சு. பள்ளி நாட்கள்லயே அதுக்கான விதை விதைக்கப்பட்டிருக்கு. எனக்கெல்லாம் கல்லூரி நாட்களுக்கப்புறம்தானே!

  4:29 PM

  <<<<<<<<<<அப்படில்லாம் இல்ல கணேஷ் ஏதோ ஒரு ஆர்வம் அவ்ளோதான்

  ReplyDelete
 14. வெங்கட் நாகராஜ் said...
  சுவையான நினைவுகள்.....

  நன்றாக எழுதுகிறீர்கள் சகோ.... நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதும் பாணி நன்று...

  வாழ்த்துகள்.... தொடருங்கள்... தொடர்கிறேன்....

  4:37 PM
  >>>நன்றி திரு வெங்கட்நாகராஜ்
  இன்னொரு இடுகைக்கு நேற்று நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 15. ,,நிரஞ்சனா said...
  ஸ்கூல் ஃப்ரெண்டோட நோட்டைத் தொலைச்சுட்டு நீங்க பட்ட பாடு... Very Funny! என்னோட Mummy கூட என்னை கட்டுரை, நெட் பக்கம் போறதுக்கெல்லாம் லேசுல Allow பண்ணலை. எல்லா மம்மீசும் ஒரே மாதிரிதான் போல!

  4:41 PM
  ..<<<ஆமா மம்மிகள் மாறுவதில்லை(நானும்தான்):)

  ReplyDelete
 16. ஜோசப் பி. கே said...
  குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.//////////

  இப்பவும் நீங்க அப்படியேதானே இருக்கீங்க அக்கா.

  நல்ல பதிவு

  <<<<< ஜோக்கு என் மேல எவ்ளோ பாசம்! நன்றி ஜோ!

  ReplyDelete
 17. ..//ரிஷபன் said...
  ’தாகமாயிருக்கு கூல்ட்ரிங் வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் .

  பள்ளி நினைவுகள் அருமை. கிழக் குரங்கான்னு பதம் பிரித்து சுஜாதா கேலி செய்த மீட்டிங் நினைவில்
  வந்தது///<<>>>>>

  ஹஹ்ஹா கிழக்கு ரங்காவை சுஜாதா இப்படி கிண்டல் செய்தாரா?:) குறும்புக்கார மனுஷர்!

  ReplyDelete
 18. அருமையான நினைவலைகள்:)! மிக சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  /கேட்டால் காற்றில் பறந்துவிட்டது /

  சரிதான்:))!

  /நானே தொலைந்துவிட்டேனாம். /

  நானும் இப்படித் தொலைந்து, கிடைத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 19. வணக்கம்! எங்கிருந்த போதும் திருவரங்கத்தை தாலாட்டும் நீங்கள் “ திருவரங்கமும் தமிழும் “ என்ற தலைப்பில் உங்கள் பெயர் சொல்லும்படியான ஒரு நல்ல நூலை எழுதலாம். ஏனெனில் திருவரங்கத்தைப் பற்றிய பல செய்திகளை பாடல்களாகவும் கட்டுரையாகவும் அவ்வப்போது தருகிறீர்கள். படிக்க சுவையாகவும் இருக்கின்றன. தங்கள் தந்தையும் ஒரு எழுத்தாளர் என்பது மேலும் மகிழ்ச்சியான ஒரு தகவல்.

  ReplyDelete
 20. //தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்! //

  :)))))))

  அப்போலெருந்தே கதை எழுத பழகிட்டு இருந்திருக்கீங்க...'


  //கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன் கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங் வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன் கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.
  //

  ஆஹா........!!!!! பெரிய ஆள் தான் நீங்க...அவனையே கதிகலங்க அடிச்சிருக்கீங்க :)))

  //பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)

  //

  :))))))

  //என்னவோ ஞானபீட பரிசு வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.

  //

  :)))

  ஒரு எழுத்தாளி(!!) உருவாகிறாள்!!!

  //என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.
  //

  you are simply awesome!!

  //எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!
  //

  :)))

  //இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.//

  :)

  //ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.
  //

  :)

  //முருகன் வினாயகர் சம்பவத்தை அப்படியே நவீனமாய் மாற்றி பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன். அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு பிரபலமானது.
  //

  :)

  ரொம்ப (இன்னும் 10 ரொம்ப பொட்டுக்குங்க) ரசிச்சேன்...
  என் பள்ளி நினைவுகள் கிண்டி விட செய்திருக்கிறீர்கள்.
  விரைவில் எழுதுகிறேன்.

  ReplyDelete
 21. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?
  எல்லாரும் ஏன் இப்படியே சொல்றாங்க ...
  அருமையான பகிர்வு .

  ReplyDelete
 22. மலரும் நினைவுகளை சிரிக்க சிரிக்க பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

  சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம் சொல்லியபடிகறுப்பு நிற காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் //ஹா ஹா..உங்கள் அளப்பறிய நகைச்சுவை உணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட்.

  ReplyDelete
 23. பள்ளிக்கு பல பொருட்கள்
  மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க சகோதரி....

  விடுமுறைக்கு இந்தியா வந்திருப்பதால்
  கொஞ்சம் தாமதமாகி விட்டது சகோதரி...

  இதோ தங்களின் கட்டளையை சிரமேற்கொண்டு
  இதோ இப்போதே செய்து விடுகிறேன்....

  என் மீது அன்பு வைத்து தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு
  நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
 24. ராமலக்ஷ்மி said...
  அருமையான நினைவலைகள்:)! மிக சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  /கேட்டால் காற்றில் பறந்துவிட்டது /

  சரிதான்:))!

  /நானே தொலைந்துவிட்டேனாம். /

  நானும் இப்படித் தொலைந்து, கிடைத்திருக்கிறேன்<<<<<<

  நன்றி ராமல்ஷ்மி கருத்துக்கு ஓ நீங்களும் தொலைஞ்சி கிடச்சீங்களா எழுதுங்க அதை சுவாரஸ்யமா இருக்குமே

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. //தமிழ் இளங்கோ said...
  வணக்கம்! எங்கிருந்த போதும் திருவரங்கத்தை தாலாட்டும் நீங்கள் “ திருவரங்கமும் தமிழும் “ என்ற தலைப்பில் உங்கள் பெயர் சொல்லும்படியான ஒரு நல்ல நூலை எழுதலாம். ஏனெனில் திருவரங்கத்தைப் பற்றிய பல செய்திகளை பாடல்களாகவும் கட்டுரையாகவும் அவ்வப்போது தருகிறீர்கள். படிக்க சுவையாகவும் இருக்கின்றன. தங்கள் தந்தையும் ஒரு எழுத்தாளர் என்பது மேலும் மகிழ்ச்சியான ஒரு தகவல்.

  9:39 PM

  //


  நன்றி திரு இளங்கோ
  திருவரங்கம் பற்றி முழுமையாய் எழுதணும் அரங்கன் அருள் அதற்கு கிடைத்து எழுதிவிடுகிறேன் நன்றி மனம்திறந்த தங்களின் விமர்சனத்துக்கு

  ReplyDelete
 27. Shakthiprabha said...
  //=ரொம்ப (இன்னும் 10 ரொம்ப பொட்டுக்குங்க) ரசிச்சேன்...
  என் பள்ளி நினைவுகள் கிண்டி விட செய்திருக்கிறீர்கள்.
  விரைவில் எழுதுகிறேன்.

  12:18 PM

  ..//


  நன்றி ஷக்தி உன் பதிவையும் ஆர்வமாய் படிக்கவரேன்

  ReplyDelete
 28. சசிகலா said...
  அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?
  எல்லாரும் ஏன் இப்படியே சொல்றாங்க ...
  அருமையான பகிர்வு .

  2:41 PM

  <<<<<<நன்றி சசிகலா

  ReplyDelete
 29. சசிகலா said...
  அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?
  எல்லாரும் ஏன் இப்படியே சொல்றாங்க ...
  அருமையான பகிர்வு .

  2:41 PM

  <<<<<<நன்றி சசிகலா

  ReplyDelete
 30. ஸாதிகா said...
  மலரும் நினைவுகளை சிரிக்க சிரிக்க பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

  சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம் சொல்லியபடிகறுப்பு நிற காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் //ஹா ஹா..உங்கள் அளப்பறிய நகைச்சுவை உணர்வுக்கு
  ராயல் சல்யூட்??


  ஆஹா அவ்ளோ நல்லாருக்கா என்னயும் அறியாம சுமாரா எழுதிட்டேனா

  நன்றி மிக

  ReplyDelete
 31. மகேந்திரன் said...
  பள்ளிக்கு பல பொருட்கள்
  மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க சகோதரி....

  விடுமுறைக்கு இந்தியா வந்திருப்பதால்
  கொஞ்சம் தாமதமாகி விட்டது சகோதரி...

  இதோ தங்களின் கட்டளையை சிரமேற்கொண்டு
  இதோ இப்போதே செய்து விடுகிறேன்....

  என் மீது அன்பு வைத்து தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு
  நன்றிகள் சகோதரி.

  9:55 PM

  <<<<<<

  வாங்க மகேந்திரன் உங்களோடபள்ளிநினைவுகளைப்படிக்க பலர் ஆரவ்மாய் இருக்கோம்

  ReplyDelete
 32. ஆஹா.. மிகவும் அருமையாக வரைந்திருக்கிறீர்கள்....
  நான் தான் தாமதமாக வந்திருக்கிறேன்.

  முதலில் பள்ளி என்ற வார்த்தையைப் பற்றிய ஆராய்ச்சியே அருமை...
  அம்மாவும் சீக்கிரம் பொண்ணு நிறைய படிச்சு பெரியாளா வரணும்னு
  பள்ளிக்கு அனுப்பிட்டாங்க...

  இருந்தாலும் சீநியரோடு போட்டி போடணுமே என்பது
  அப்பாவின் எண்ணமாயிருந்திருக்கும்.

  உங்களின் தந்தையார் யார் என்பதை நான் அறியவில்லை...
  இருந்தாலும் புலிக்குப் பிறந்த இந்த பெண் புலியைப் பார்த்து
  கற்பனை செய்ய முடிகிறது...

  போனப் பதிவில் முதல் ஆக்கம் ஜோக்கு என்று சொல்லி இருந்தீங்க
  நான் கூட சும்மா ஜோக்குன்னு நினைத்தேன்... ஆனால் அது இவ்வளவு பெரிய
  பாராட்டையும் பெருமையையும் தந்த ஆக்கம் என்பதை இப்பத் தெரிந்துக் கொண்டேன்.

  மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது தங்களின் பள்ளிக் கூட மலரும் நினைவுகள்.

  பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

  எனது வலைப் பூவிற்கு வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்களேன்...
  ஒரு புது கருத்துக் கொண்டு ஒரு பதிவை இட்டு இருக்கிறேன்.
  உங்களின் வெளிப்படையானக் கருத்தையும் சொல்லவும்.
  நன்றி.

  ReplyDelete
 33. உங்களது இஸ்டைலில் அருமையாக இருக்கிறது....:-)

  ReplyDelete
 34. ஒரு இலக்கியச் சோலையினுள் இத்தனைக் காலம் வந்து
  இளைப்பாறி இருந்துக் கொண்டு நான் ஏதோ பிதற்றி இருந்திருக்கிறேன்.
  தென்றலில் வீசிய மணத்தை நானும் மனமெல்லாம்
  நிரப்பிக் கொண்டு இங்கு வந்து இதயம் திறக்கிறேன்.

  இந்த தமிழுக்குத் தான் எத்தனை சக்தி...
  நல்ல வேலை கொஞ்சம் நல்லத் தமிழை பேசத் தெரிந்ததால்
  உங்களோடு உரையாடி இருக்கிறேன்!

  ஒன்று மட்டும் எனக்கு நிச்சயம் நான் எங்கேயோ
  தங்களோடு பழகியதாக எனக்குள் ஒரு உணர்வு இருந்தது....
  அது எங்கென்று எனக்கத் தெரியவில்லை...

  தங்களின் அனைத்து சாதனைகளுக்கும்
  எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதிரியாரே!
  இன்னும் பல சாதனைகளை புரிந்து இமய வெற்றிப் பெற
  அன்னை அபிராமியை வேண்டிக் கொள்கிறேன்.

  எதற்கும் நான் கொஞ்சம் கவனமாகவே இனி பேசுகிறேன்.:):)

  நன்றி... சகோதிரியாரே!

  ReplyDelete
 35. தமிழ் விரும்பி ஆலாசியம் said...
  ஆஹா.. மிகவும் அருமையாக வரைந்திருக்கிறீர்கள்....
  நான் தான் தாமதமாக வந்திருக்கிறேன்.>>>


  நல்வரவு த்மிழ்விரும்பி அவர்களே தமாதமாய் வந்தால் பராவாயில்லை வருவதே மகிழ்ச்சி அல்லவா?  //முதலில் பள்ளி என்ற வார்த்தையைப் பற்றிய ஆராய்ச்சியே அருமை...
  அம்மாவும் சீக்கிரம் பொண்ணு நிறைய படிச்சு பெரியாளா வரணும்னு
  பள்ளிக்கு அனுப்பிட்டாங்க...

  இருந்தாலும் சீநியரோடு போட்டி போடணுமே என்பது
  அப்பாவின் எண்ணமாயிருந்திருக்கும்.

  உங்களின் தந்தையார் யார் என்பதை நான் அறியவில்லை...
  இருந்தாலும் புலிக்குப் பிறந்த இந்த பெண் புலியைப் பார்த்து
  கற்பனை செய்ய முடிகிறது...???
  /////

  அடட்டா நான் புலி இல்லைங்க சாதாரண சராசரீபெண்தான் என்ன கொஞ்சம் என்னைப்பத்தி இப்படி சில பதிவுகளில் சொல்லிடறேன் பலர் தன்னடக்கமாய் இருக்காங்க!

  //போனப் பதிவில் முதல் ஆக்கம் ஜோக்கு என்று சொல்லி இருந்தீங்க
  நான் கூட சும்மா ஜோக்குன்னு நினைத்தேன்... ஆனால் அது இவ்வளவு பெரிய
  பாராட்டையும் பெருமையையும் தந்த ஆக்கம் என்பதை இப்பத் தெரிந்துக் கொண்டேன்.

  மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது தங்களின் பள்ளிக் கூட மலரும் நினைவுகள்.

  பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!//
  மிக்க நன்றி பொறுமையய படிக்கிறீங்களே அதுக்கு ஸ்பெஷல் நன்றி.

  எ//னது வலைப் பூவிற்கு வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்களேன்...
  ஒரு புது கருத்துக் கொண்டு ஒரு பதிவை இட்டு இருக்கிறேன்.
  உங்களின் வெளிப்படையானக் கருத்தையும் சொல்லவும்.
  நன்றி.//
  >>>>வரேன் விரைவில்

  2:16 PM

  //தமிழ் விரும்பி ஆலாசியம் said...
  ஒரு இலக்கியச் சோலையினுள் இத்தனைக் காலம் வந்து
  இளைப்பாறி இருந்துக் கொண்டு நான் ஏதோ பிதற்றி இருந்திருக்கிறேன்.
  தென்றலில் வீசிய மணத்தை நானும் மனமெல்லாம்
  நிரப்பிக் கொண்டு இங்கு வந்து இதயம் திறக்கிறேன்.

  இந்த தமிழுக்குத் தான் எத்தனை சக்தி...
  நல்ல வேலை கொஞ்சம் நல்லத் தமிழை பேசத் தெரிந்ததால்
  உங்களோடு உரையாடி இருக்கிறேன்!

  ஒன்று மட்டும் எனக்கு நிச்சயம் நான் எங்கேயோ
  தங்களோடு பழகியதாக எனக்குள் ஒரு உணர்வு இருந்தது....
  அது எங்கென்று எனக்கத் தெரியவில்லை...

  தங்களின் அனைத்து சாதனைகளுக்கும்
  எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதிரியாரே!
  இன்னும் பல சாதனைகளை புரிந்து இமய வெற்றிப் பெற
  அன்னை அபிராமியை வேண்டிக் கொள்கிறேன்.

  எதற்கும் நான் கொஞ்சம் கவனமாகவே இனி பேசுகிறேன்.:):)

  நன்றி... சகோதிரியாரே!

  6:55 PM?//


  அடட்டா என்னங்க நீங்க? நான் சும்மா ஏதோ சொல்லப்போக அதுக்கு இப்படி எழுதுவீங்களா?:) சாதனை ஒண்ணுமே நான் பண்ணலையே முன் கூட்டியே வாழ்த்தறீங்களா என்ன?:) சரி நன்றி நன்றீ!அன்னை அபிராமி எனக்கும் அன்னை அவளது உதிக்கின்ற செங்கதிர் திலகம் பற்றி பதிவு எழுத அவளை எனக்கு அருள் புரியச்சொல்லுங்கள்!! மிக எளியவள் நான் ஆகவே இயல்பாக பழகுங்கள் சகோதரரே!அதுதான் நல்லது!

  ReplyDelete
 36. //மெளலி (மதுரையம்பதி) said...
  உங்களது இஸ்டைலில் அருமையாக இருக்கிறது....:-)

  5:07 PM

  ///

  <,,அருமைத்தம்பி மௌலி! இந்த இஸ்டைலை நிங்க சொன்னா ஜோரா இருக்கு நன்றி கருத்துக்கு!!!

  ReplyDelete
 37. நல்லாவே லூட்டி அடிச்சிருக்கீங்க போல.. !!
  :-)

  தொடர அழைத்தமைக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன்.

  ReplyDelete
 38. ரெண்டாம் வகுப்பு நினைவு கொஞ்சம் பயமான த்ரில்..
  கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் - சுவாரசியம். நிறைய நினைவுகளைக் கிளறுது.
  குடுகுடு போலவே எங்கள் சம்ஸ்க்ருத பள்ளியில் 'கீவே கோபாலன்' என்று ஒருவரை அழைப்பார்கள் (போம்). 'கிழிந்த வேட்டி' என்று தெரிந்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது, was too late.
  ஸ்கூல் நாள்ல படிச்ச செய்யுளோ இங்கிலிசு poemஓ சட்னு எது நினைவுக்கு வருது?

  ReplyDelete
 39. அப்பாதுரை said...
  ரெண்டாம் வகுப்பு நினைவு கொஞ்சம் பயமான த்ரில்..
  கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் - சுவாரசியம். நிறைய நினைவுகளைக் கிளறுது.
  குடுகுடு போலவே எங்கள் சம்ஸ்க்ருத பள்ளியில் 'கீவே கோபாலன்' என்று ஒருவரை அழைப்பார்கள் (போம்). 'கிழிந்த வேட்டி' என்று தெரிந்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது, was too late.
  ஸ்கூல் நாள்ல படிச்ச செய்யுளோ இங்கிலிசு poemஓ சட்னு எது நினைவுக்கு வருது?

  7:41 PM

  <<<<<<

  நன்றி திரு அப்பாதுரை ஆமாம் schooldays ல படிச்சசெய்யுளோ poem எங்க நினைவுக்கு வருது சட்டுனு உணமைதான்:)

  ReplyDelete
 40. பள்ளி கொண்டான் என ஆரம்பித்து பள்ளி என்றால் என்ன சுவையான விசயங்களை எழுதி பள்ளிக்கு பெரும் சிறப்பு சேர்த்துவிட்டீர்கள். அரியணை. அட!

  பள்ளி நினைவுகளை ஆரம்பிக்கும்போதே சுவாரஸ்யம். இப்போதும் எப்போதேனும் தொலைந்து போவீர்களா? பொருள்களை தொலைத்து கொண்டிருப்பீர்களா? என உங்கள் சிறு வயது அனுபவம் கேட்க தூண்டும் அளவுக்கு உங்களின் சிறு வயது பள்ளி அனுபவங்கள் பயம் தருகின்றன.

  எழுத்தாளர் அப்பா. ஞான பீட பரிசு பெற்றதை போன்ற ஒரு சிலிர்ப்பு. நடன ஆர்வம். வெகுளியாய் கேள்வி கேட்கும் அனுபவம் என பள்ளி அனுபவங்கள் சிறப்பு. காதல் வந்து போகுமோ?

  போலீஸ்காரர் தந்த பயம், அது நேரில் இல்லாது போனது, தைலம் பற்றிய சுவாரஸ்யம் என மிகவும் அருமை. வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
 41. Madhavan Srinivasagopalan said...
  நல்லாவே லூட்டி அடிச்சிருக்கீங்க போல.. !!
  :-)

  தொடர அழைத்தமைக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன்.

  6:11 PM

  <<<<<<நன்றி இன்னும் எழுதலபோல்ருக்கு?:) சீக்கிரம் சீக்கிரம்!

  ReplyDelete
 42. .Radhakrishnan said...
  பள்ளி கொண்டான் என ஆரம்பித்து பள்ளி என்றால் என்ன சுவையான விசயங்களை எழுதி பள்ளிக்கு பெரும் சிறப்பு சேர்த்துவிட்டீர்கள். அரியணை. அட!


  நன்றி திரு ராதா கிருஷ்ணன் எல்லாம் வாசிப்பு அனுபவத்தில் கிடைத்தவைகள் தான்.


  //இப்போதும் எப்போதேனும் தொலைந்து போவீர்களா? பொருள்களை தொலைத்து கொண்டிருப்பீர்களா? என உங்கள் சிறு வயது அனுபவம் கேட்க தூண்டும் அளவுக்கு உங்களின் சிறு வயது பள்ளி அனுபவங்கள் பயம் தருகின்றன//


  >>>>>>இப்போ அதிகமா தொலைப்பதில்லை ஆனால் நினைவலைகளில் எங்காவது மனதைக்கொண்டு வைத்துவிடுவேன் யாருடனாவது பேசும்போது மனது தொலைந்து எங்காவதுபோய்விடுகிறது பிறகு நானே மீட்டுவிடுவேன்!:)

  //<<<<<<<<<காதல் வந்து போகுமோ?

  போலீஸ்காரர் தந்த பயம், அது நேரில் இல்லாது போனது, தைலம் பற்றிய சுவாரஸ்யம் என மிகவும் அருமை. வாழ்த்துகள் சகோதரி..//

  <<<<<

  காதல் என்று வரவில்லை ஆனால் சிலரிடம் அபிமானம் இருந்தது காதலிச்சா தப்புன்னு வீட்டுல பயமுறுத்தி பயமுறுத்தி அதை நினைக்கவே பயம்!!


  மிக்க நன்றி இப்படி வரிக்குவரி வாசித்து கருத்துகூறுவது என்பது சாமான்ய செயல் அல்ல. இதை நான் மதிக்கிறேன் சகோதரரே!

  ReplyDelete
 43. பசுமை நிறைந்த நினைவுகள் பாடிக்களித்த காலங்கள்..
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.