Social Icons

Pages

Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!








எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.
ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் மாதம் மும்மாரியில் ஒரு மாரி குறைந்தாலும் ஆபத்துதான் என்பது.ஆக எப்போதோ மாதம் மும்மாரி பொழிந்தது. வானத்தில் புகைமூட்டம் இல்லை வாகன நச்சுப்புகை வளி மண்டலத்தை நிரப்பவில்லை மும்மாரி பொழிந்தது.குளிர்சாதன இயந்திரங்களின் கொடிய நச்சு வாயு வெளியேறவில்லை மனிதன் அமைதியாக வாழ்ந்தான் ஓசோனில் ஓட்டைவிழவில்ல, பூமி வெப்பம் அடையவில்லை ஆகவே மழை பொழிந்தது அன்று.
மாதம் மும்மாரி பொழிய வளிமண்டலம் சுத்தமாக அல்ல,பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இப்போதோ கரியமில வாயு-மீத்தேன் நைட்ரஜன் ஆக்சைடு சல்பா ஹெக்சா புளோரைடு ஹைட்ரோ ஃப்ளோரைடுகார்பன், பெர்புளோரா கார்பன்கள் ஆகிய தீயநச்சுவாயுக்கள் பூமியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
முன்னே வனங்கள் செழிப்பாக பசுமையாக இருந்தன மும்மாரி பொழிந்தன. இன்று விஞ்ஞான வளர்ச்சி என்னும் வரங்களே நமக்கு சாபங்களாகிவிட்டன.
இமயத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டு இருக்கின்றன.பனிக்கரடி இனம் பூ்ண்டோடு அழிந்துபோய்விடும் அபாயம், அரிய தாவரங்கள் அழியும் துயரம்,. மனி்தனுக்கு குடிநீர் கிடைக்காமல்போகும் அவலம் ஏற்படும்.
மரங்களை பாதுகாத்து மரங்களை அதிகம் நட்டு இருப்பிடத்தை பசுமைக்காடாக மாற்றினால் கரியமில வாயு எனும் அரக்கன் ஒழிவான் ஓசோன் காப்பற்றப்படும். புவி வெப்பமய்மாகாது மாதம் ஒரு மாரியாவது பெய்யும்.தண்ணீர்கஷ்டம் தீரும்.


வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்.

ஔவை  வாக்கு மெய்ப்படவேண்டும்!
.
இந்த உலகில் 75% தண்ணீர்.இருக்கிறது.

இதில் 97% சமுத்திரம்.(உப்புத் தண்ணீர்.)
3% மட்டுமே குடிப்பதற்கு உபயோகப் படுத்தலாம்.

ஏறத்தாழ 75% நல்ல தண்ணீர் போலார் பகுதிகளில் ஐஸ் கட்டியாக உரைந்து கிடக்கிறது.

ஒரு மனிதனால் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியும் ஆனால், தண்ணீர் இல்லாமல் ஏறத்தாழ ஒரு வாரம் தான் வாழ முடியும்.

ஒரு கேலன் தண்ணீர் என்பது 3.785 லிட்டர்கள் ஆகும்

பற்களை துலக்க தினமும் ஒரு மனிதன் 2 கேலன் தண்ணீர் செலவிடுகிறான்.

கழிவறையில் flush செய்ய 2-7 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

குளிப்பதற்கு மட்டும் 25-50 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

..

மனிதனால் உப்பு நீரை குடிக்க முடியாது.

நம் உடலானது 66% தண்ணீர்.

நம் இரத்தத்தில் 82% தண்ணீர் உள்ளது.
நல்ல தண்ணீரை நம்பி வாழும் விலங்கினங்கள் மற்ற விலங்குகளை விட 5 மடங்கு அதிகமாக மறைந்து வருகிறது.

இந்தியா என்ற நமது தேசத்தின் பெயர், இன்டஸ் என்ற நதியின் பெயரில் இருந்து உருவானது.

நமது தட்பவெப்பநிலையை தண்ணீரே தீர்மானிக்கிறது.
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் குடிக்கும் நீருக்காக 3 மணி நேரம் நடக்க வேண்டி உள்ளது.

இந்த உலகில் கால் வாசி மக்கள் பாதுகாபற்ற குடிநீரே குடித்து வாழ்கின்றனர்.

இன்றைய நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உருவாகும்.

உலகில் தினமும் 3900 குழந்தைகள் அசுத்த நீரை குடிப்பதாலும், சுகாதரமற்ற முறைகளாலும் இறக்க நேரிடுகின்றனர்.
கவிதை தாகத்தில் எழும் கவிதையோடு பதிவை முடித்துவிடுகிறேன்.
நீ தாய்
தவிக்கும்போதெல்லாம்
தாகம் தீர்ப்பதில்!
நீ மரம்
நெஞ்சுக்கு நிழலாக
இருப்பதில்!
நீ மொழி
அனைவரிடமும்
உலா வருவதில்!
நீ நடிகை
எல்லா பாத்திரங்களுக்கும்
ஏற்றதாய் வடிவெடுப்பதில்!
நீ மரம்
பலவகைகளில்
பயன்படுவதில்!
நீ தெய்வம்
மழையாகப்
பொழிகையில்!
நீ விளக்கு
வாழ்வின் ஒளியாக
இருப்பதில்!
நீ உயர்ந்தவள்
உலகில் பெரும்பகுதி
உன்னுடையதாயிருப்பதில்!
நீதான் நான்
என்னுள்ளே
கலந்து இருப்பதில்!

--







--




--


13 comments:

  1. நீ தாய்
    தவிக்கும்போதெல்லாம்
    தாகம் தீர்ப்பதில்!
    நீ மரம்
    நெஞ்சுக்கு நிழலாக
    இருப்பதில்!
    நீ மொழி

    தாயான தண்ணீரைப் பற்றித் த்யவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...
    நீ தாய்
    தவிக்கும்போதெல்லாம்
    தாகம் தீர்ப்பதில்!
    நீ மரம்
    நெஞ்சுக்கு நிழலாக
    இருப்பதில்!
    நீ மொழி

    தாயான தண்ணீரைப் பற்றித் த்யவான பகிர்வுகள்..
    >>>>

    அட முதல்ல வந்து வாசிச்சி கருத்தும் கூறிவிட்டீர்களே! மிக்க நன்றி இராஜேஸ்வரி.

    ReplyDelete
  3. நீ தான் நான்- என்னுள்ளே கலந்து இருப்பதில். அருமையான கவிதை. மழையாய் பொழிவதில் நீ தெய்வம் என்ற வரிகளும் அருமை. தண்ணீர் பற்றிய இந்தப் பகிர்வு தாகம் தீர்த்தது. தமிழ்10 இணைக்க வரலை. மத்த எ.தி.இ. அக்கா!

    ReplyDelete
  4. Anonymous10:08 AM

    தண்ணீர் பற்றிய விவரத்தோடு கவிதையும் மிக நன்று .வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. கவிதை அருமை ஷைலஜா.

    தண்ணீர் பற்றிய பகிர்வும் அருமை.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி,
    தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்.

    தண்ணீர் பற்றிய விவரங்களும்
    தண்ணீருக்காய் ஒரு அழகிய கவிதையும்
    மிக அருமை சகோதரி.

    ReplyDelete
  7. கவிதை சூப்பருங்க!

    ReplyDelete
  8. தகவலுக்கு தகவல் கவிதைக்கு கவிதை என பிரமாதம்!

    'அன்புடன் ஒரு நிமிடம்'
    இரண்டாவது பகுதி.
    'முழுமையாக ஒரு வாழ்த்து...'
    http://kbjana.blogspot.com/2012/03/blog-post_21.html

    ReplyDelete
  9. தண்ணீர் கவி வரிகள் அருமை

    ReplyDelete
  10. வணக்கம்! “ நீரின்று அமையாது உலகு “ என்ற வள்ளுவரின் வாக்குக்கு விரிவான விளக்கம். உங்கள் கட்டுரை.

    ReplyDelete
  11. ///நீ தெய்வம்
    மழையாகப்
    பொழிகையில்!
    நீ விளக்கு
    வாழ்வின் ஒளியாக
    இருப்பதில்!
    நீ உயர்ந்தவள்
    உலகில் பெரும்பகுதி
    உன்னுடையதாயிருப்பதில்!
    நீதான் நான்
    என்னுள்ளே
    கலந்து இருப்பதில்!///

    நீ மகா சக்தி
    பஞ்ச பூதங்களும்
    உன்னுள்ளேக்
    கொண்டதனால்.:):)

    கவிதை ஆக்கம் அருமை..
    - தமிழ் விரும்பி.

    ReplyDelete
  12. நிறைய விவரங்கள் கொண்ட கட்டுரை.
    இந்தி பேசுறதால இந்தியானு பேர் வந்துச்சுனு நெனச்சேன்.. இல்லியா? கரியமில வாயு அரக்கன் ஒழிஞ்சா நாமெல்லாரும் காலிதான்.. எதுக்குங்க?
    உலகம் எப்படி அழியும் என்று ஒரு கூட்டம் ஆராய்ச்சி செய்கிறது. நிறைய சாத்தியங்களை அலசுகிறார்கள். இதுதான் அவர்களுக்குத் தொழில் (நம்ப முடிகிறதா?). அவர்கள் சொல்லியிருக்கும் சாத்தியங்களில் மூன்றாவதாக இடம்பெறுவது உலகளாவியத் தண்ணீர்த் தட்டுப்பாடு. அதை நீங்க எளிமையா அழகா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  13. கருத்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.