வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.
பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகி றோம்.
பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகி
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.
பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.
என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!
ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.
எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!
--
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.
பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.
என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!
ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.
எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!
அதுபோல நான் செய்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்த நல்லபெற்றோர்கள். இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று தினமும் நினைத்துக்கொள்வதுபோன்ற அருமையான அப்பா அம்மா.
குழந்தை கண்ணனை இடுப்பில்வைத்துக்கொண்டு சந்திரனைப்பார்த்து தாய் சொல்லும் பாவனையில் பெரியாழ்வார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
எல்லா பக்கமும் ஒளி சூழ அதன் ஜோதி எங்கும் பரந்துஎன்ன செய்தாலும் அதெல்லாம் என் மகன் கண்ணன் முக ஒளிக்கு நேராகுமோ என்பதான பொருள்கொண்ட பாடல் . அதாவது முழுநிலவைப்போலமுகம் என்போம் அல்லவா? என்ன பிசாத்துமுழுநிலா நீ என் மகன் கண்ணன் ஜோதி முகம் முன்னாடி நீ ஒண்ணுமில்ல‘ என்கிறாராம் பெரியாழ்வார் பொங்கும் தாய்மைப்பரிவில்.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும்
என் மகன் முகம் நேரொவ்வாய்
அப்படித்தான் நான் பிறந்த சில வருஷங்களுக்கு வீட்டில் தலையில்வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள்.இத்தனைக்கும் ஒன்றும் ராயல் ஃபாமிலி இல்லை..கூட்டுக்குடும்பம் கொண்ட நடுத்தர வர்க்கம்தான்..மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த தொட்டிலை ஓலைக்குடிசையில் இருந்துகொண்டு அண்ணலுக்கு பெரியாழ்வார் மானசீகமாய் அளித்தமாதிரி எங்கள் இல்லத்திலும்மகிழ்ச்சியை வானுயர அளித்தனர்..அப்புறம் உடன்பிறப்புகள் வந்ததும் பாசமும் அன்பும் பகிர்ந்துபோனது! ஆனாலும் இன்றைக்கும் பிறந்தவீட்டுக்கு விருந்தாளிபோல அவ்வப்போது போனாலும் அந்தப்பாசமும் அன்பும் சற்றும் குறைவி ல்லை. குறை ஒன்றும் இல்லை
உறவும் நட்பும் என்று வளர்ந்த நாட்களில் கிடைத்ததில் குறை ஒன்றும் இல்லை
பள்ளி ஆசிரியரிடமிருந்து வாழ்க்கைப்பாடமும் கற்கமுடிந்தது
தமிழை நேசிக்க வைத்த ஆதார வேர் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பமானது.
உதடுபடாமல் பேசாதே
உச்சரிப்புக்கொலை செய்யாதே
எதுவானாலும் மொழி அழகு
அதை மாற்றுங்கால் வரும் பிசகு
என்று இசைக்கவிரமணன் எழுதியதுபோல தமிழின் அழகை ரசிக்க இளம்வயதிலேயே முடிந்தது.
தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
புகுந்தவீடு கணவர் குடும்பம் குழந்தைகள் இங்கும் குறை ஒன்றும் இல்லை. கவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம்புதிதாக வைத்துக்கொள்வோம் கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.
விளங்கிக் கொள்ளமுடியாமல் திணறுகி றோம் நாம்!
விளங்கிக் கொள்ளமுடியாமல் திணறுகி
(இன்று (19.3.)புதிதாய்ப்பிறந்தேன் ஆகவே இப்படி ஒரு பதிவு எழுததோன்றியது)
--
Tweet | ||||
பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
ReplyDeleteகுமரன் (Kumaran) said...
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
8:27 AM
மிக்க நன்றி குமரன்
அழகான பதிவு.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்:)!
இனிய வாழ்த்துகள் ஷைலஜா மேடம் :-)
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் மேடம்
ReplyDeleteகவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.// அற்புதமான வரிகள் ..
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாளின் சிறப்புப் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்
அற்புதமான தகவல்களோடு வந்தப் பதிவு
ReplyDelete"குறை ஒன்றும் இல்லை"
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே
இத்தனையும் இன்று இப்போது புதிதாய் பிறந்த நீவீர்! செய்வீர்!! அதற்கு அன்னை பராசக்தி யவள் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே!
அருமை அருமை பதிவு வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteHappy B'day Mam :)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்......
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்! (நீங்களும் பைசீஸா? இந்த பைசீஸ் ஆசாமிங்க அடிக்கிற கூத்து தாங்கமுடியலே :)
ReplyDeleteபிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். திரும்பத் திரும்பப் படித்தேன். பெரியாழ்வார் வரிகள் ரொம்ப பவர்ஃபுல். Happy birthday.
வணக்கம்! வாழ்த்துக்கள்! சொல்வதில் சற்று தாமதம்தான். மின் வெட்டின் காரணமாக உடனுக்குடன் வலைப் பதிவுகளை பார்க்க முடியவில்லை.
ReplyDeleteவாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி.மின் வெட்டையும் மீறி கிடைக்கும் நேரத்தில் இங்கு வாசித்து பின்னூட்டம் கொடுப்பதில் மகிழ்ச்சி.
ReplyDelete@அப்பாதுரை! இந்த பைசீஸ் ஆசாமிங்க அடிக்கிற கூத்து தாங்கமுடியலே :)
என்று இதுக்கே சொன்னா எப்படி?:) ஆமா இன்னும் எவ்ளோபேரு பைசீஸ்? சமுத்ரா அவர்கள் தவிர?
19 ஆம் தேதி பிறந்த நாளா?அடடா..என் கணவரது பிறந்த நாளும் இன்றே.என் பிறந்த நாள் இன்னும் பத்தே நாட்களில்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷைலஜா அக்காவுக்கு.
//ஸாதிகாsaid...
ReplyDelete19 ஆம் தேதி பிறந்த நாளா?அடடா..என் கணவரது பிறந்த நாளும் இன்றே.என் பிறந்த நாள் இன்னும் பத்தே நாட்களில்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷைலஜா அக்காவுக்கு.
7:45 AM
சமுத்ராsaid...
பிறந்த நாள் வாழ்த்துகள்
10:37 AM
/////
மிக்க நன்றி சாதிகா மற்றும் சமுத்ரா
//ஆமா இன்னும் எவ்ளோபேரு பைசீஸ்?
ReplyDeleteஹிஹி..
//அப்பாதுரைsaid...
ReplyDelete//ஆமா இன்னும் எவ்ளோபேரு பைசீஸ்?
ஹிஹி
/////
ஓஹோ?:)
அருமை.....
ReplyDeleteஉங்களைப் போலவே...
வேறு என்ன சொல்வது!