கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!
சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.
விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.
பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.
கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!
சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
சில கடிதங்களை ,
கனவிலாவது!
Tweet | ||||
தயவு செய்து யாராவது திரட்டிகளில் சேர்த்தால் மிக்க நன்றி/
ReplyDeleteகார்டுசித்தப்பாக்களும்
ReplyDeleteகவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்
super !
connected to Indli
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது (என்பதை கடிதம் எழுதத்தான் நினைத்தேன்...)
ReplyDeleteபலவண்ண ஆடை உடுத்தி
ReplyDeleteபயணப் பட்டு ரயில் வண்டிகளில்
மாநாடு போடும் தருணங்கள்
அக்காலம் என்றாகியது!...
நல்ல கவிதை!
பகிர்வுக்கு நன்றி.
நகைச் சுவை த்தும்ப நெஞ்சில்
ReplyDeleteநற்கும் கவிதை
அருமை!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்! செல்போன் சிணுங்கல் எஸ்எமஎஸ் வரிகளை விட கடிதங்களில் எழுதப்பட்ட வரிகள்தான் உயிரோட்டம் நிறைந்தவை. // கடிதப் பலகைமீது தான் காலமே வந்து உட்காரப்போகிறது // என்ற தங்கள் கவிதைக் கனவு நனவாகட்டும்! எண்ணிய முடிதல் வேண்டும்!
ReplyDelete"அந்தக் காலத்துல நாங்கல்லாம்"ன்னு இனிமே எந்த பாட்டிகளும் இளைய தலைமுறையை நோக்கி கிண்டலடிக்க முடியாது.
ReplyDeleteஇப்ப இருக்கற தலைமுறைக்கும் வருங்கால தலைமுறை கிட்ட, "அந்தக் காலத்துல மின்சாரமே இல்லாம நாங்க இருந்தோம் தெரியுமா"ன்னு புலம்பறதுக்கு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு.
//சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து செய்துவிட்டால்//
அப்படியே ரிவர்சில் கற்காலம் வரைக்கும் போகாம இருந்தாச் சரி.. :-))
ரிஷபன்said...
ReplyDeleteகார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்
super
//////
thankyou!!
ரிஷபன்said...
ReplyDeleteconnected to Indli
1:00
>>>>>>மிக்க நன்றி ரி.
கே. பி. ஜனா...said...
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது (என்பதை கடிதம் எழுதத்தான் நினைத்தேன்...)
1:05 PM
>>>>>
வாங்க ஜனா... நன்றி என்று நானும் கடிதம் எழுததான் நினைத்தேன்:)
தமிழ் விரும்பி ஆலாசியம்said...
ReplyDeleteபலவண்ண ஆடை உடுத்தி
பயணப் பட்டு ரயில் வண்டிகளில்
மாநாடு போடும் தருணங்கள்
அக்காலம் என்றாகியது!...
நல்ல கவிதை!
>>>>
நனறி திரு தமிழ் விரும்பி
புலவர் சா இராமாநுசம்said...
ReplyDeleteநகைச் சுவை த்தும்ப நெஞ்சில்
நற்கும் கவிதை
அருமை!
புலவர் சா இராமாநுசம்
>>> மிக்க நன்றி புலவர் ஐயா
தி.தமிழ் இளங்கோsaid...
ReplyDeleteவணக்கம்! செல்போன் சிணுங்கல் எஸ்எமஎஸ் வரிகளை விட கடிதங்களில் எழுதப்பட்ட வரிகள்தான் உயிரோட்டம் நிறைந்தவை. // கடிதப் பலகைமீது தான் காலமே வந்து உட்காரப்போகிறது // என்ற தங்கள் கவிதைக் கனவு நனவாகட்டும்! எண்ணிய முடிதல் வேண்டும்!
4:08 PM
>>>>>>>
கனவு நனவாகும் என்று நிச்சயமில்லை:) ஏனென்றால் இனிமேல் கடிதம் என்பதெல்லாம் நாமே எழுதப்போவதில்லை! ஆயினும் கவிதையில் எழுதும்போது வடிகால்:0 நன்றி தங்களுக்கு
அமைதிச்சாரல்said...
ReplyDelete"அந்தக் காலத்துல நாங்கல்லாம்"ன்னு இனிமே எந்த பாட்டிகளும் இளைய தலைமுறையை நோக்கி கிண்டலடிக்க முடியாது.
இப்ப இருக்கற தலைமுறைக்கும் வருங்கால தலைமுறை கிட்ட, "அந்தக் காலத்துல மின்சாரமே இல்லாம நாங்க இருந்தோம் தெரியுமா"ன்னு புலம்பறதுக்கு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு.
//சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து செய்துவிட்டால்//
அப்படியே ரிவர்சில் கற்காலம் வரைக்கும் போகாம இருந்தாச்
சரி>>>>>>
பெரும் சுனாமி வந்தா மின்சாரம் போயிட்டா பத்து நாள் செல்போன் கம்ப்யூட்டர் இல்லேன்னா..
அப்போ கைல எழுதுவோம்:) கற்காலம் வரைபோய்ட்டமாதிரி இருக்கா அமைதிச்சாரல்?:) சும்மா ஒரு கற்பனைதானே?
மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. கனவில் எழுதும் கடிதங்கள் எவரை சென்றடையுமோ? :௦)
ReplyDeleteஎப்படியோ எண்ணங்கள் போய்ச் சேர்ந்தால் சரி .
ReplyDelete//சிம்மாசன மின்சாரம்
ReplyDeleteபம்மாத்து செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
சில கடிதங்களை ,
கனவிலாவது!//
ஆஹா.... பலே பலே...
ஷைலஜா மேடம்... கலக்கிட்டீங்க போங்க...
நானும் நெடுநாட்களுக்கு பிறகு கடிதப் பலகையில் அமரலாமா என்று யோசிக்கிறேன்....
ஆஹா... எனக்குள்ளும் இந்த ஆதங்கம் உண்டு. முன்பு பக்கம் பக்கமாய் கடிதம் எழுதிய என்னால் இப்போது மின்மடலும் குறுஞ்செய்தியும் வந்த பிறகு அதிகம் கடிதம் எழுத இயல்வதில்லை. நானும் இனி எழுத முயல்கிறேன்! நல்லதோர் கவிதை!
ReplyDelete//சிம்மாசன மின்சாரம்
ReplyDeleteபம்மாத்து செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
சில கடிதங்களை ,
கனவிலாவது!//
இழந்து விட்டோம்.....
நானும் நிறைய எழுதி இருக்கிறேன்.... இப்போது எழுதுவதில்லை - கனவில் கூட... :)
எழுதத் தோன்றுகிறது ....
என் வலைப்பூவில்:
ReplyDelete'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
பின்னூட்டமிட்ட கணேஷ் சசிகலா ராதாக்ருஷ்ணன், வெங்கட் நாகராஜன், அதிசியமாய் திரும்பி வந்துள்ள கோபி அனைவர்க்கும் மனம் கனிந்த நன்றி
ReplyDeleteகே. பி. ஜனா...said...
ReplyDeleteஎன் வலைப்பூவில்:
'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'
http://kbjana.blogspot
>>> இதோ வரேன் ஜனா
டீச்சரம்மா.. நீங்க கம்பெடுத்துட்டு வரது தெரியுது.. அடிக்காதீங்க.. அடிக்காதீங்க.. சீக்கிரமா ஹோம் வொர்க் பண்ணிடுறேன்..
ReplyDeleteகாலங்கள் மாறுவது போல் காட்சிகளும் மாறும்.இது இய்ரகையின் நியதி.அருமையான வரிகளில் கவி படைத்து விட்டீர்கள்.
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
ReplyDeleteடீச்சரம்மா.. நீங்க கம்பெடுத்துட்டு வரது தெரியுது.. அடிக்காதீங்க.. அடிக்காதீங்க.. சீக்கிரமா ஹோம் வொர்க் பண்ணிடுறேன்..
11:09 PM
<<<>>mmmm அது:)
//ஸாதிகாsaid...
ReplyDeleteகாலங்கள் மாறுவது போல் காட்சிகளும் மாறும்.இது இய்ரகையின் நியதி.அருமையான வரிகளில் கவி படைத்து விட்டீர்கள்.
8:05 AM
//
நன்றி சாதிகா
வணக்கம் சகோதரி
ReplyDeleteதமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்....
கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்..
ReplyDeleteமனதில் உள்ளதை கடிதத்தில் எழுதி
அதை உரியவர் வாசித்து பின்னர்
பதில் கடிதம் எழுதி அதை நாம் வாசிப்பதெல்லாம்
ஒரு கனவாக மாறிவிட்டதே...
அருமையான கவிதை சகோதரி..
எல்லா மாற்றங்களை போல இதுவும் எதிர்பார்த்ததுதான். எல்லாம் பழகிவிடும்.இருந்தும் நல்ல கவிதை பழைய புறாவையும் மறக்காமல் புகுத்திவிட்டீர்களே!!
ReplyDeleteசின்னப் பெருமூச்சுக்கள் விடச் செய்தக் கவிதை. நல்லா இருக்கு.
ReplyDelete(இந்த மாதிரி தபால் பெட்டிகள் விலைக்குக் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கிச் சேமித்து வையுங்கள்)
மகேந்திரன்said...
ReplyDeleteவணக்கம் சகோதரி
தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்....
11:04 AM
மகேந்திரன்said...
கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்..
மனதில் உள்ளதை கடிதத்தில் எழுதி
அதை உரியவர் வாசித்து பின்னர்
பதில் கடிதம் எழுதி அதை நாம் வாசிப்பதெல்லாம்
ஒரு கனவாக மாறிவிட்டதே...
அருமையான கவிதை சகோதரி..
11:07 AM
>>>> நன்றி மகேந்திரன் திரட்டில இணச்சதுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்
KParthasarathi said...
ReplyDeleteஎல்லா மாற்றங்களை போல இதுவும் எதிர்பார்த்ததுதான். எல்லாம் பழகிவிடும்.இருந்தும் நல்ல கவிதை பழைய புறாவையும் மறக்காமல்
புகுத்திவிட்டீர்களே//
?/நன்றி பார்த்தசாரதி ஆமாம்கடிதம் என்னும்போது புறா நினைவு வந்துவிட்டது
அப்பாதுரைsaid...
ReplyDeleteசின்னப் பெருமூச்சுக்கள் விடச் செய்தக் கவிதை. நல்லா இருக்கு.
(இந்த மாதிரி தபால் பெட்டிகள் விலைக்குக் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கிச் சேமித்து வையுங்கள்)
7:02 PM
>>>>>>> பாராட்டிற்கு நன்றி திரு அப்பாதுரை.
பழைய பொருட்களை எல்லாம் பெங்களூர் பெண்கள் கல்லூரி ஒன்றில் இப்படித்தான் சேமிக்கிறார்கள் தபால்பெட்டியும் அதில் சேர்ந்துவிடும் போல இருக்கு
நானும் அடியான் தங்கள் கொள்கைக்கு நண்பரே..
ReplyDeleteகடிதப்பலகைமீது தான்
ReplyDeleteகாலமே வந்து உட்காரப்போகிறது.
கருத்தைக் கவர்ந்த அருமையான
கவிதை..
irfan zarook said...
ReplyDeleteநானும் அடியான் தங்கள் கொள்கைக்கு நண்பரே..
8:31 PM
இராஜராஜேஸ்வரிsaid...
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
கருத்தைக் கவர்ந்த அருமையான
கவிதை
<<>நன்றி தங்கள் இருவருக்கும்.