Social Icons

Pages

Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!








கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!

சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.

விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.

பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.

கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!


சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து  செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
 சில கடிதங்களை ,
கனவிலாவது!

37 comments:

  1. தயவு செய்து யாராவது திரட்டிகளில் சேர்த்தால் மிக்க நன்றி/

    ReplyDelete
  2. கார்டுசித்தப்பாக்களும்
    கவர் பெரியப்பாக்களும்
    வாழ்த்து அட்டை வசீகரிகளும்
    வந்தவண்ணம் இருப்பார்கள்

    super !

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது (என்பதை கடிதம் எழுதத்தான் நினைத்தேன்...)

    ReplyDelete
  4. பலவண்ண ஆடை உடுத்தி
    பயணப் பட்டு ரயில் வண்டிகளில்
    மாநாடு போடும் தருணங்கள்
    அக்காலம் என்றாகியது!...

    நல்ல கவிதை!
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நகைச் சுவை த்தும்ப நெஞ்சில்
    நற்கும் கவிதை
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வணக்கம்! செல்போன் சிணுங்கல் எஸ்எமஎஸ் வரிகளை விட கடிதங்களில் எழுதப்பட்ட வரிகள்தான் உயிரோட்டம் நிறைந்தவை. // கடிதப் பலகைமீது தான் காலமே வந்து உட்காரப்போகிறது // என்ற தங்கள் கவிதைக் கனவு நனவாகட்டும்! எண்ணிய முடிதல் வேண்டும்!

    ReplyDelete
  7. "அந்தக் காலத்துல நாங்கல்லாம்"ன்னு இனிமே எந்த பாட்டிகளும் இளைய தலைமுறையை நோக்கி கிண்டலடிக்க முடியாது.

    இப்ப இருக்கற தலைமுறைக்கும் வருங்கால தலைமுறை கிட்ட, "அந்தக் காலத்துல மின்சாரமே இல்லாம நாங்க இருந்தோம் தெரியுமா"ன்னு புலம்பறதுக்கு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு.

    //சிம்மாசன மின்சாரம்
    பம்மாத்து செய்துவிட்டால்//

    அப்படியே ரிவர்சில் கற்காலம் வரைக்கும் போகாம இருந்தாச் சரி.. :-))

    ReplyDelete
  8. ரிஷபன்said...
    கார்டுசித்தப்பாக்களும்
    கவர் பெரியப்பாக்களும்
    வாழ்த்து அட்டை வசீகரிகளும்
    வந்தவண்ணம் இருப்பார்கள்

    super
    //////
    thankyou!!

    ReplyDelete
  9. ரிஷபன்said...
    connected to Indli

    1:00
    >>>>>>மிக்க நன்றி ரி.

    ReplyDelete
  10. கே. பி. ஜனா...said...
    கவிதை நன்றாக இருக்கிறது (என்பதை கடிதம் எழுதத்தான் நினைத்தேன்...)

    1:05 PM
    >>>>>

    வாங்க ஜனா... நன்றி என்று நானும் கடிதம் எழுததான் நினைத்தேன்:)

    ReplyDelete
  11. தமிழ் விரும்பி ஆலாசியம்said...
    பலவண்ண ஆடை உடுத்தி
    பயணப் பட்டு ரயில் வண்டிகளில்
    மாநாடு போடும் தருணங்கள்
    அக்காலம் என்றாகியது!...

    நல்ல கவிதை!

    >>>>

    நனறி திரு தமிழ் விரும்பி

    ReplyDelete
  12. புலவர் சா இராமாநுசம்said...
    நகைச் சுவை த்தும்ப நெஞ்சில்
    நற்கும் கவிதை
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்
    >>> மிக்க நன்றி புலவர் ஐயா

    ReplyDelete
  13. தி.தமிழ் இளங்கோsaid...
    வணக்கம்! செல்போன் சிணுங்கல் எஸ்எமஎஸ் வரிகளை விட கடிதங்களில் எழுதப்பட்ட வரிகள்தான் உயிரோட்டம் நிறைந்தவை. // கடிதப் பலகைமீது தான் காலமே வந்து உட்காரப்போகிறது // என்ற தங்கள் கவிதைக் கனவு நனவாகட்டும்! எண்ணிய முடிதல் வேண்டும்!

    4:08 PM
    >>>>>>>

    கனவு நனவாகும் என்று நிச்சயமில்லை:) ஏனென்றால் இனிமேல் கடிதம் என்பதெல்லாம் நாமே எழுதப்போவதில்லை! ஆயினும் கவிதையில் எழுதும்போது வடிகால்:0 நன்றி தங்களுக்கு

    ReplyDelete
  14. அமைதிச்சாரல்said...
    "அந்தக் காலத்துல நாங்கல்லாம்"ன்னு இனிமே எந்த பாட்டிகளும் இளைய தலைமுறையை நோக்கி கிண்டலடிக்க முடியாது.

    இப்ப இருக்கற தலைமுறைக்கும் வருங்கால தலைமுறை கிட்ட, "அந்தக் காலத்துல மின்சாரமே இல்லாம நாங்க இருந்தோம் தெரியுமா"ன்னு புலம்பறதுக்கு பொன்னான வாய்ப்பு கிடைச்சிருக்கு.

    //சிம்மாசன மின்சாரம்
    பம்மாத்து செய்துவிட்டால்//

    அப்படியே ரிவர்சில் கற்காலம் வரைக்கும் போகாம இருந்தாச்
    சரி>>>>>>


    பெரும் சுனாமி வந்தா மின்சாரம் போயிட்டா பத்து நாள் செல்போன் கம்ப்யூட்டர் இல்லேன்னா..
    அப்போ கைல எழுதுவோம்:) கற்காலம் வரைபோய்ட்டமாதிரி இருக்கா அமைதிச்சாரல்?:) சும்மா ஒரு கற்பனைதானே?

    ReplyDelete
  15. மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. கனவில் எழுதும் கடிதங்கள் எவரை சென்றடையுமோ? :௦)

    ReplyDelete
  16. எப்படியோ எண்ணங்கள் போய்ச் சேர்ந்தால் சரி .

    ReplyDelete
  17. //சிம்மாசன மின்சாரம்
    பம்மாத்து செய்துவிட்டால்
    கடிதப்பலகைமீது தான்
    காலமே வந்து உட்காரப்போகிறது.
    பார்க்கலாம் அதற்குள்
    நானும் எழுதிவிடுகிறேன்
    சில கடிதங்களை ,
    கனவிலாவது!//

    ஆஹா.... பலே பலே...

    ஷைலஜா மேடம்... கலக்கிட்டீங்க போங்க...

    நானும் நெடுநாட்களுக்கு பிறகு கடிதப் பலகையில் அமரலாமா என்று யோசிக்கிறேன்....

    ReplyDelete
  18. ஆஹா... எனக்‌குள்ளும் இந்த ஆதங்கம் உண்டு. முன்பு பக்கம் பக்கமாய் கடிதம் எழுதிய என்னால் இப்போது மின்மடலும் குறுஞ்செய்தியும் வந்த பிறகு அதிகம் கடிதம் எழுத இயல்வதில்லை. நானும் இனி எழுத முயல்கிறேன்! நல்லதோர் கவிதை!

    ReplyDelete
  19. //சிம்மாசன மின்சாரம்
    பம்மாத்து செய்துவிட்டால்
    கடிதப்பலகைமீது தான்
    காலமே வந்து உட்காரப்போகிறது.
    பார்க்கலாம் அதற்குள்
    நானும் எழுதிவிடுகிறேன்
    சில கடிதங்களை ,
    கனவிலாவது!//

    இழந்து விட்டோம்.....

    நானும் நிறைய எழுதி இருக்கிறேன்.... இப்போது எழுதுவதில்லை - கனவில் கூட... :)

    எழுதத் தோன்றுகிறது ....

    ReplyDelete
  20. என் வலைப்பூவில்:
    'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'
    http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
  21. பின்னூட்டமிட்ட கணேஷ் சசிகலா ராதாக்ருஷ்ணன், வெங்கட் நாகராஜன், அதிசியமாய் திரும்பி வந்துள்ள கோபி அனைவர்க்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  22. கே. பி. ஜனா...said...
    என் வலைப்பூவில்:
    'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'
    http://kbjana.blogspot
    >>> இதோ வரேன் ஜனா

    ReplyDelete
  23. டீச்சரம்மா.. நீங்க கம்பெடுத்துட்டு வரது தெரியுது.. அடிக்காதீங்க.. அடிக்காதீங்க.. சீக்கிரமா ஹோம் வொர்க் பண்ணிடுறேன்..

    ReplyDelete
  24. காலங்கள் மாறுவது போல் காட்சிகளும் மாறும்.இது இய்ரகையின் நியதி.அருமையான வரிகளில் கவி படைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  25. Madhavan Srinivasagopalan said...
    டீச்சரம்மா.. நீங்க கம்பெடுத்துட்டு வரது தெரியுது.. அடிக்காதீங்க.. அடிக்காதீங்க.. சீக்கிரமா ஹோம் வொர்க் பண்ணிடுறேன்..

    11:09 PM
    <<<>>mmmm அது:)

    ReplyDelete
  26. //ஸாதிகாsaid...
    காலங்கள் மாறுவது போல் காட்சிகளும் மாறும்.இது இய்ரகையின் நியதி.அருமையான வரிகளில் கவி படைத்து விட்டீர்கள்.

    8:05 AM
    //
    நன்றி சாதிகா

    ReplyDelete
  27. வணக்கம் சகோதரி
    தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்....

    ReplyDelete
  28. கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்..
    மனதில் உள்ளதை கடிதத்தில் எழுதி
    அதை உரியவர் வாசித்து பின்னர்
    பதில் கடிதம் எழுதி அதை நாம் வாசிப்பதெல்லாம்
    ஒரு கனவாக மாறிவிட்டதே...

    அருமையான கவிதை சகோதரி..

    ReplyDelete
  29. எல்லா மாற்றங்களை போல இதுவும் எதிர்பார்த்ததுதான். எல்லாம் பழகிவிடும்.இருந்தும் நல்ல கவிதை பழைய புறாவையும் மறக்காமல் புகுத்திவிட்டீர்களே!!

    ReplyDelete
  30. சின்னப் பெருமூச்சுக்கள் விடச் செய்தக் கவிதை. நல்லா இருக்கு.

    (இந்த மாதிரி தபால் பெட்டிகள் விலைக்குக் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கிச் சேமித்து வையுங்கள்)

    ReplyDelete
  31. மகேந்திரன்said...
    வணக்கம் சகோதரி
    தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்....

    11:04 AM



    மகேந்திரன்said...
    கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்..
    மனதில் உள்ளதை கடிதத்தில் எழுதி
    அதை உரியவர் வாசித்து பின்னர்
    பதில் கடிதம் எழுதி அதை நாம் வாசிப்பதெல்லாம்
    ஒரு கனவாக மாறிவிட்டதே...

    அருமையான கவிதை சகோதரி..

    11:07 AM
    >>>> நன்றி மகேந்திரன் திரட்டில இணச்சதுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்

    ReplyDelete
  32. KParthasarathi said...
    எல்லா மாற்றங்களை போல இதுவும் எதிர்பார்த்ததுதான். எல்லாம் பழகிவிடும்.இருந்தும் நல்ல கவிதை பழைய புறாவையும் மறக்காமல்
    புகுத்திவிட்டீர்களே//


    ?/நன்றி பார்த்தசாரதி ஆமாம்கடிதம் என்னும்போது புறா நினைவு வந்துவிட்டது

    ReplyDelete
  33. அப்பாதுரைsaid...
    சின்னப் பெருமூச்சுக்கள் விடச் செய்தக் கவிதை. நல்லா இருக்கு.

    (இந்த மாதிரி தபால் பெட்டிகள் விலைக்குக் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கிச் சேமித்து வையுங்கள்)

    7:02 PM
    >>>>>>> பாராட்டிற்கு நன்றி திரு அப்பாதுரை.

    பழைய பொருட்களை எல்லாம் பெங்களூர் பெண்கள் கல்லூரி ஒன்றில் இப்படித்தான் சேமிக்கிறார்கள் தபால்பெட்டியும் அதில் சேர்ந்துவிடும் போல இருக்கு

    ReplyDelete
  34. Anonymous8:31 PM

    நானும் அடியான் தங்கள் கொள்கைக்கு நண்பரே..

    ReplyDelete
  35. கடிதப்பலகைமீது தான்
    காலமே வந்து உட்காரப்போகிறது.

    கருத்தைக் கவர்ந்த அருமையான
    கவிதை..

    ReplyDelete
  36. irfan zarook said...
    நானும் அடியான் தங்கள் கொள்கைக்கு நண்பரே..

    8:31 PM



    இராஜராஜேஸ்வரிsaid...
    கடிதப்பலகைமீது தான்
    காலமே வந்து உட்காரப்போகிறது.

    கருத்தைக் கவர்ந்த அருமையான
    கவிதை
    <<>நன்றி தங்கள் இருவருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.