Social Icons

Pages

Wednesday, April 30, 2014

துளசிகோபாலின் செல்லங்களைப்பற்றி.....




வானத்திடம் போய் சூரியனின் பெருமையை   பேசுவதுபோலத்தான் இருக்கும், இணைய மக்களிடம் வலை உலக ராணியான துளசிகோபாலைப்பற்றி   நான்.சொல்வது. ஆமாம் பின்னே, ஆயிரத்தி ஐநூறுக்கு  மேல் பதிவுகளை எழுதிக்குவித்துவிட்டு ஆரவாரமே செய்யாமல் இருக்கும் துளசி அவர்கள் எழுதியபுத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதுவது அபடித்தான் இருக்கப்போகிறது! துளசி டீச்சர் (ரீச்சர்) என நூற்றுக்கணக்கான  இணைய மக்கள் அன்போடு அழைக்கும் அழகான அமைதியான உள்ளம் கொண்டவர் துலசி கோபால்.

. ஆனாலும்,  டாஃபடல்ஸ், ட்யூலிப்ஸ் செர்ரிப்ளாஸம்   போன்றுஅதிகம்  பூக்கள் மலரும் சியாட்டல் நகரில் துளசிமணம்  கண்டால் அதை உடன் அனுபவித்து எழுதுவதும் மனதுக்கு நிறைவுதானே!

அண்மையில்  சியாட்டல் நூலகம் ஒன்றில்   அந்த ஏராளப்பகுதியின் அழகான அலமாரிகளில்  தேடினால்  ஓரமாய் சின்னதாய்  தமிழுக்கு என்று ஏழெட்டுப்புத்தகங்கள்  இருந்தன

.கண்டேன் தமிழை  என்று கண்கள் துடித்தன!  அதிலும் துளசிகோபால் என்கிற பெயரைப் பார்த்ததும்  முதலில் அதைத்தான் எடுத்தேன்.. 2009லேயே  வந்தபுத்தகம்   ! Better late than never   என்பதுபோல  எழுதாமலே இருப்பதைவிட இப்போதாவது விமர்சனம் எழுத முடிகிறதே என  சின்ன மகிழ்ச்சி.

செல்லங்கள் என்றாலே எதை,யாரைப்பற்றி ஆசிரியர் சொல்லப்போகிறார் என ஓரளவுவிளங்கும்  ’என்செல்ல செல்வங்கள்’ என்றால்  அவைகள்மேல் ஆசிரியர்க்கு உள்ள மகாப்பிரியத்தை நன்குபுரிந்துகொள்ளமுடிகிறது.

“Until one has loved an animal, a part of one's soul remains unawakened.”   


.மதுமிதாவின் அருமையான முன்னுரை  புத்தகத்துக்குள் நுழைய நல்வரவு சொல்கிறது.

. வளர்ப்புப்பிராணிகளின்மீதுள்ள  அளவற்ற பாசத்தை  தனது எளிமையான  வார்த்தைகளால் துளசி அவர்கள் எழுதியவிதம் மிக நேர்த்தி..


வாழ்க்கைப்பற்றி அடிப்படையான உணர்வுகளை அன்பு, பரிவு, பாசம், அழகின் லயம் போன்ற தன்மைகளை குழந்தைகளுக்கு எந்தப்பள்ளிக்கூடமும் ஆழமாக கற்பித்துவிடமுடியாது. சுற்றி உள்ள வளர்ப்புபிராணிகள், பறவைகள், பூக்கள் கொடிகள் தான்  குழந்தைக்கு
\மௌனமாக ஆழமாக வாழ்க்கைபற்றிய நேசத்தைப்பிணைப்பை போதிக்கின்றன.

துளசியும் தன்புத்தகத்தில் மிக எதார்த்தமாக  தன் வாழ்வில்  இணைந்துகொண்ட  வளர்ப்புப்பிராணிகளைப்பற்றி  சொல்கிறார். அவைகளைப்பிரியும்போது  ஏற்படும் மனவலியை அவரது எழுத்துக்களில் உணரமுடிகிறது.

 நாய்கள் பூனைகளைப்பற்றி அவற்றோடு தான் இணைந்த வாழ்க்கையை நடந்த நிகழ்வுகள் மிக இயல்பாக சொல்லிக்கொண்டுபோகிறார். ஊரூராய் சுற்றியபோதிலும்   அவர் குடிபோன எல்லா இடத்துக்கும் நம்மையும் அழைத்துப்போகிறார் நம் மனசும் அவர் வளர்த்த செல்லம் போல  உடன் போகிறது என்றால்  அவருடைய எளிமையான எழுத்துநடைதான். என் தந்தை அடிக்கடி சொல்வார், ‘எழுதுவது என்பது வாசிப்பவரின்  கண்களோடு  போய்விடக்கூடாது மனதில் புகுந்து  சிம்மாசனமிட்டு அமரவேண்டும்.. அதற்கு வார்த்தைகளைத்தேடி வானத்திற்குப்போகவேண்டாம் .மனசில் அமர மனசால் எழுதவேண்டும்’ என்பார். துளசியின் எழுத்து மனத்திலிருந்து வருவதை  ஒவ்வொரு வரிகளிலும் காணலாம்.

அதிலும் ஏழுமாசம் கஷ்டபட்டு வளர்த்த அந்த  வாயில்லா ஜீவனுக்கு சுகவீனம்  வந்ததால்  ஊசிபோட்டுஅதன்  வலியை நிரந்தரமாய் நிறுத்திய காட்சியை    வாசிக்கிறபோதே மனம் பதைக்கிறது.

(திருகோபால் சாரின் மணிவிழாவில்  இடமிருந்து  மதுமிதா, அருணா சீனிவாசன், நான், நிர்மலா,  லஷ்மி தன்குழந்தையுடன்,  வல்லிமா--)

  நியூசிலாந்தில் வளர்த்தபூனைகள் விவரம்  படிக்க சுவாரஸ்யம்..

பூனைகளைப்பத்தினரகசியம் என் சொல்கிறார்..: வீட்டுக்கு யாரும் புதுஆட்கள் வந்தால் அவர்கள் நம்பிக்கை உகந்தவரா என பூனைகளுக்குத்தெரியுமாம் அப்படியாரும் வந்தால் நம்மோடு பூனையும் வந்து அறையில்  உரையாடல் நிகழ்வின்போது  உட்கார்ந்துஇருக்குமாம் எதிர்மறை எண்ணங்களோடு ஒருவர் வந்தால் ஒரு விதமான அதிர்வை அவை  உணருமாம் உடனே இடத்தைவிட்டு விலகிப்போய்விடுமாம் .

 எதிர்பாராபிரிவின் வேதனை... எத்தனை எத்தனை  செல்லங்களை வளர்த்து அவற்றுக்காக  பாடுபட்டிருக்கிறார் அவைகளின் நினைவுகளை மனசில் தேக்கிக்கொண்டு  எல்லாவற்றையும்  எழுதி இருக்கிறார் என்பதை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

 கற்பகம் என்கிற கப்பு வும் கோபால கிருஷ்ணனையும்  என்னாலயே மறக்கமுடியாத அளவுக்கு  அவர்களை(அவைகளை)ப்பற்றி எழுதி இருப்பதை நீங்களும்தான்  வாசித்துப்பாருங்களேன்..


என்செல்ல செல்வங்கள்
 ஆசிரியர் துளசிகோபால்
சந்தியா பதிப்பகம்
 அசோக்நகர்
 சென்னை 83

-- 

14 comments:

  1. ஹைய்யோ!!!! நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, ஷைலூ.

    நீங்கள் எழுதியதை நம்ம ரஜ்ஜூ (ராஜலக்ஷ்மி)வுக்கு வாசித்துக் காட்டினேன்! 'அவன்' கண்களிலும் மின்னல் வந்து போனது!

    ReplyDelete
    Replies
    1. அருமையாய் எழுதி இருக்கீங்க துளசி ... ரஜ்ஜூவும் ரசிச்சதா ஆஹா! நன்றி சொல்லிடுங்க:

      Delete
  2. நீங்கள் சல்வது போல செல்லங்கள் என்றார் பெயரே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.. நிச்சயம் வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிமுரளிதரன்

      Delete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. மிகவும் அருமையான புத்தகம். நானும் படித்து ரசித்த புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?நன்றி வெங்கட்நாகராஜ்..நாவலைப்போல விறுவிறுப்பு அல்லவா?

      Delete
  5. சுருக்கமாக சொன்னதே சுவாரஸ்யம்... வாங்கிப் படிக்க வேண்டும்...

    ReplyDelete
  6. நேர்த்தியான விமர்சனம் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  7. சமீபத்திய காசிப்பயணத்தில் பித்ருக்களோடு... தங்களைப் பிரிந்து சென்ற செல்லங்களுக்கும் பிண்டம் வைத்த செயலொன்றே போதுமே... துளசி டீச்சருடைய அன்பினைப் பறைசாற்ற! வாசிக்கக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஷைலஜா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதமஞ்சரி இப்பதான் அதையும் வாசித்தேன் என்ன ஒரு பரிவு அவைகளிடத்தில் துள்சி அவர்களுக்கு...

      Delete
  8. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
  9. படிங்க டிடி..நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.