Social Icons

Pages

Thursday, December 11, 2014

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல   ..என்று  பாரதி மகிழ்ந்துகொண்டாடினான்

கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்,
கம்பன் மீது  பாரதிக்கு இத்தனை காதலா! ஆம் இளமையிலேயே  எட்டயபுரம் அரண்மனையில்  புலவர் பலருடனும் பழகித்தமிழ்ப்புலமை  பெற்ற  பாரதி,அங்கிருந்த  கம்பராமாயணம் கற்றுத்தேர்ந்த இருவருடன் நெருங்கிப்பழகி கம்பன் காவியத்தை தெளிவாக  அறிந்துகொண்டான் மாகவிஞன்.

பாரதி அறுபத்தி ஆறு என்ற பகுதியில் ...

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல் என்று ஹிரணியன்   தான் உறுமிக்கேட்க
நல்லதொருமகன் சொன்னான்.’தூணில் உள்ளான்
நாராயணன் துரும்பிலும் உள்ளான்’என்றான்
வல்ல பெருங்கடவுள் இலா அணுவொன்றிலையே


என்று பாரதி பாடியதற்குக்காரணம் கம்பனின் இரணியவதைப்படலப்பாட்டுப்பகுதியை  படித்ததின் பாதிப்புதான்.

சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;
இத்தன்மை காணுதி விரைவின்

என்கிறது கம்பன் பாடல்.


இதன்படி  இறைவன் எங்குமுளன் என்பதை அறிந்த  பாரதி
காக்கைச்சிறகினிலே நந்தலாலா  என்றபாட்டில் காணும் அனைத்திலும் கண்ணனைக்கண்டதாக கூறியும்  திருப்தி அடையவில்லை.

ஞானரதம் ஏறி உலகை வலம் வந்தும்  ஏதோ சொல்ல மனம் விழைவதை உணர்ந்தார்.
அப்போதுபார்த்து  ரதம் அருகே வந்த ஒருவன்,” சாமீ!  இந்த ரதம் ஏறி வானம் போனீங்களா?’ என்றுவியப்பாய் கேட்டான்.
’ஆம்  ..ஞானரதம்  அல்லவா  விண்ணுக்கும் செல்லும் மண்ணுக்கும் மீளும்’ என்றார் மகாகவிஞன்.




‘சாமி! வானம் போயி கடவுளைக்கண்டீங்களா?’

‘ஏன் வானத்தில் தான் கடவுள் இருக்கிறாரா?”

‘கடவுளேன்னு மேல ஆகாயம் பாத்துதானே கை குவிக்கறோம் கண்ணு மூடி வேண்டிக்கறோம்?”

‘அப்படி இல்லை  அப்பா..கடவுள் எங்கும் இருக்கிறான்”

“அதெப்படி சாமி? இப்ப  கோயில்ல இருக்கற சிலையை  செய்தது ஒரு மனுஷன்.விக்கிரகத்தை வடிச்சது மனுஷன். மனுஷன் செய்ததால் சிலை கடவுளானால்  மனுஷன்  என்ன ஆகீறான் கடவுளையே படைச்சவன் மனுஷன் ஆகிறானா? அப்ப மனுஷன் கடவுளா?”

“அப்பா! நீ யாரென்று தெரியவில்லையே.. என்னமாய் கேள்விகேட்கிறாயப்பா”

“நான் உங்க சீடன்னு வச்சிகுங்க சாமி..பதில் சொல்லுங்க..உண்மைல  கடவுள் எங்கதான்  இருக்காரு?”

இப்படி  ஆரம்பிக்கிறார்.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்



மேலும் கம்பனின் பாடல் அவருக்கு நினைவுக்குவருகிறது நீ சொல்லிய சொல்லிலும் உளன்  என்றால் இவனுக்குப்புரியுமா?

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்


என்கிறார்.

கீழான  என்று ஏன் சொன்னேன் ? யோசிக்கிறார் கவிஞர்.

கழுதை  பாரமானஅழுக்குத்துணி சுமக்கிறது  அதனால்தியாகி கழுதை.
ஆனால்  பன்றி தேள்  கீழானவைகள்  ஒன்று மலம்தின்பதால் இன்னொன்று கொட்டி விடம் இடுவதால்.  அப்படிக் கீழானவர்களையும்  பார்த்துகரம் குவிக்கவேண்டுமாம்.கூளம் மலம் எல்லாம் கீழானது அதையும் வணங்கல் வேண்டும்.

தாழ்ந்தோரை உதறித்தாம் உயரமுடியுமோ மேலோரின் தாள்பணிந்தே நிற்பது இயல்பானால் கடவுளும் மேல் நோக்குவானே தவிர குனிந்து இந்தபூமியை நோக்குவானா ?நீங்காதபொருள் அனைத்தும் கொண்டது  பூமியன்றோ? மண்ணைப்புகழாமல்  விண்ணைமட்டும்  உயர்த்துவதா?  உயர்ந்தால் அட மண்ணில் தெரியுது வானம்!

ம்ம்  எழுதியது சரி தான்  என கவி உள்ளம் சமாதானம் அடைகிறது.

விண்நோக்கி  தியானிக்கும் உள்ளம்  மண் நோக்கிக்குனியவும் வேண்டும்.
இறைவனை ஒன்றேபோலக்காணவேண்டும்.
ஆகவே  கடைசியாக  இப்படி முடித்தார்.

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!
சீடனுக்குப்புரிந்ததோ இல்லையோ  கவிஞருக்குத்தன்கவிதை முழுமைபெற்றதில்  மகிழ்ச்சி கொண்டது மனம்!










9 comments:

  1. ஆஹா!... மஹாகவிஞனுக்கு, அருமையான எழுத்தாக்கத்தில் அற்புதமான நினைவஞ்சலி!!!.. இலக்கிய பீட வெளியீடா அக்கா?!.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரு இலக்கியபீட வெளியீடு இல்ல... இன்னிக்குத்தான் பாரதிக்காக எழுதினேன் இன்று
      இம்மாத இலக்கியபீட புத்தகத்தின் பாரதி படம் பிடித்ததால் அதைக்கையில் வைத்துக்கொண்டு போஸ்!!:)

      Delete
  2. விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!

    முழுமையாய் நிறைவு தந்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜ ராஜேஸ்வரி

      Delete
  3. பாரதியின் பிறந்தநாளன்று நினைவுகூர்ந்த விதம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  4. Aarthy Vallur1:46 AM

    Super post mami! Great way to honor the Mhakavi

    ReplyDelete
    Replies
    1. ட்நன்றி ஆர்த்தி நலமா என் சியாட்டல் சிட்டே!!

      Delete
  5. நலமா? எல்லாம் நலமா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.