திரு வெசா திரு ஹரிகி
தமிழின் மிகப்பெரிய ஆளுமைக்குரியவரும், விமர்சன வித்தகருமான
திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை வெசா என்று தமிழ் அன்பர்கள் அழைப்பார்கள்.
வடக்கே பல காலம் இருந்தவர் .இவரது விமர்சனங்களில் பலர் வளர்ந்திருக்கிறார்கள். ‘எங்களுக்கு முன்னோடி வெசா அவர்கள்தான்’ எனபல கலைஞர்கள் சொல்வார்கள்.
நேர்மையான வெளிப்படையான கருத்துக்கள் திரு வெசா அவர்களுடையது.
. கதை கவிதை கட்டுரைதிரைப்படம் பரதம் ஓவியம் நாடகம் என பன்முக ஆளுமை கொண்டவர்.
அவரது விமர்சனத்தில் தன் பெயர் எங்காவதுவருமா என ஏங்கும் கலைஞர்கள் பலர் உண்டு(நானும் தான்! என்றாவது ஒரு நல்லபடைப்பினில் அவர் பாராட்டினைப்பெற்றுவிடவேண்டும் என்பது லட்சியமும் கூட)
இந்த சுட்டியில்....
வெ சா அவர்களுக்கு பெங்களூர் நகரம் பெருமைப்படுத்தியதை விவரமாககாணலாம்..
பெங்களூருக்கு வெசா வந்திருக்கிறார் என்று தெரிந்தநாளிலிருந்தே எங்களுக்கெல்லாம் வெசா அவர்களை சந்திக்க மிக ஆவலானது.
நம் மதிப்பிற்குரிய திருவெங்கட் சாமிநாதன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பிற்குக்காத்திருந்தோம்.(மகேஷ் ,திருமூல நாதன்,பின்னே திருமால், ராமலஷ்மி ஷைலஜா, ரஞ்சனி நாராயணன், ஹரிகிருஷ்ணன்.)சென்றவருடம் அமர்க்களமாக நடந்தவிழாவில் அவருக்குப் பொன்னாடை போர்த்தி பரிசுப்பணம்கொடுத்து, மைசூர்தலைப்பாகை வைத்து(அந்த தலைப்பாகையை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா என கேட்க நினைத்தேன் கடைசியில்மறந்துவிட்டேன்:)திரைபிரபலங்கள் மற்றும் இதரமொழி இலக்கியப்பிரபலங்கள் புடைசூழ அன்று விழாநாயகர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். எல்லாவற்றையும் இணையத்தில்தான் பார்த்தோம்! அன்றிலிருந்தே மிகவும் ஆவலுடன்
வடக்குவாசல் ஆசிரியராக இருந்த திருபென்னேஸ்வரன் பெங்களூர்வந்தபோது ‘சந்திக்க அழைத்துப்பொவதாய் சொன்னார் ஆனால் கடைசிநிமிஷத்தில் அவருக்கு இயலவில்லை தலைநகர் திரும்பிவிட்டார்.
அப்படி இப்படி2வருடங்களாய் திட்டமிட்டுதிட்டமிட்டு நாங்கள் கண்ட கனவு நனவானது!
(ஜீவ்ஸ் ஐய்யப்பன் ராமலஷ்மி ரஞ்சனி ஹரிகிஜி திரு.
வெசா)
ஆம் சென்ற சனிக்கிழமை மதியம் ஹெப்பால் பகுதியில் எஸ்டீம் மால் மூன்றாம் தளத்தில் திரு வெசா அவர்களுடன் இரண்டுமணி நேரம் நடந்த இனிய சந்திப்பு மறக்கமுடியாதது! வேகமாக நடக்க இயலாத நிலையில் எங்கள் அழைப்பினை ஏற்று அந்த இடத்திற்கு , வந்த திருவெசா அவர்களுக்கு மிக்க நன்றி.
சந்திப்பிற்கு வந்தவர்களில் திருமூல நாதன் என்னும் இளைஞனைப்பற்றி நிறைய சொல்லவேண்டும் ஏனென்றால் தமிழ் உலகம் இந்த இளைஞரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 4வயதிலேயே 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்தவர் , . இன்னமும் இவர் பெருமையை மகிமையைக்கூற ஓரு பெரிய
பதிவே எழுதவேண்டும்.
சிலரை சந்திப்பதற்கு முன்பு என்னவெல்லாம் பேசவேண்டும் என தீர்மானித்துவைத்திருப்போம் மனதிற்குள் ஒரு ஒத்திகையும் நடந்திருக்கும்! ஆனால் திரு வெசா அவர்களிடம் அப்படியெல்லாம் ஏற்பாடுடன் செல்லவில்லை..இயல்பான ஒரு சந்திப்பாகவும், இனிய நம் குடும்பப்பெரியவரை சந்தித்துப்பேசிமகிழ்ந்ததாகவும் அமைந்தது.
சந்திப்பிற்கு வந்திருந்த மகேஷ் என்னும் இளைஞர்(கம்பராமாயண முற்றோதல்வகுப்பின் தலையாய் மாணவர்களில் இவரும் ஒருவர்) திருவெசா அவர்களிடம்,விமர்சனக்கலையில் உங்களுக்குப்பிறகு முழுமையான விமர்சகர் யார் என நினைக்கிறீர்கள்?” என்கேட்டார்.
”யாரும் வரலாம் அதை நீங்க தான் வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்றார் வெ சா.
“அகிலனுக்கு ஞானபீட விருதுகிடைத்தபோது நீங்கள் எழுதிய விமர்சனம் மறக்கமுடியாதது”
“ஆமாம் இந்த எழுத்துக்கெல்லாம் ஞானபீடம் விருதா என மற்றவர்கள் வாசிக்கும்போது நினைக்கக்கூடாதபடி படைப்பு இருக்கவேண்டும்” என்றேன்.
”போட்டோ எடுப்பது ஓவியம்போல இல்லை அது ஒரு கருவியின் வேலைஆயினும் அது ஒரு கலையா?”
ஆம் அதுவும் கலைதான் கலை என்பது எதையும் ரசிக்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது.எடுப்பவர் பார்வையில் அது பெருமையடைகிறது பிரபலமாகிறது உதாரணத்திற்கு ராம லஷ்மி எடுக்கும் படங்கள்நன்றாக உள்ளன பறவைகள் பற்றிய அவர் படங்கள் பிரமாதமாக இருந்தன .ரசனையில் மேன்மை இருக்க வேண்டும்!”
உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் சேர்த்து ஒரே புத்தகமாகப்போட்டால் என்ன?
இப்படி மகேஷ் கேட்டதும் வெசா சிரித்தபடி,” யார் தயாராக இருக்கிறார்கள்?
நீங்கள் தயார் என்றால் எல்லாவற்றையும் இப்போதே தருகிறேனே!”என்றார்
உங்கள் காலத்தில் உங்கள் பார்வையில் கூர்மையான விமர்சனம் இருந்தது
ஆனாலிப்போது ஜெ யமோகம் சொல்வதுபோல் இணையத்தில் எழுத வாய்ப்புகள் பெருகிவிட்ட இந்தக்காலத்தில் குப்பைகள் பெருகிவிட்டன என்பதைப்பற்றி தங்கள் கருத்து?
ஆமாம் குப்பையும் பெருகிவிட்டன ஆனால் நல்ல எழுத்துக்களும் தென்படுகின்றன .
இப்படி மேலும் சுவையாக செவிக்குவிருந்தாக பேசிக்கொண்டு போக, ராமல்ஷ்மி ஜீவ்ஸ் ஐய்யப்பன் ரஞ்சனி நாராயணன் ஆகியோர்
தங்களின் புதிய சிறுகதை கவிதை நூல்களை வெ சா அவர்களிடம் அளித்து ஆசி பெற நானும் என் அப்பாவின் சமீபத்தியமறுபதிப்பு வெளியீடான நாவலை அவரிடம் அளிக்க, அன்றைய சந்திப்பில் சமோசா ஜாமூன் நான் கொண்டுபோன மைசூர்பாக்(இதைப்பற்றி அன்று சாப்பிட்டவர்கள் முக்கியமாய் சந்திப்பின் நாயகர் தான் கருத்து சொல்லவேண்டும்):) காபி என்று இடையே வயிற்றுக்கும் விருந்தாக அமைய மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. எங்கள் அனைவரின் சார்பில் வெசா அவர்களுக்கு பெங்கலூரின் குளிருக்குப்பாதுகாப்பாக கம்பளி சால்வையை திரு ஹரிகிருஷ்ணனும் ஐய்யபனும் போர்த்தினார்கள்.
எங்கள் கனவு நனவானதில் அனைவரும் மகிழ்ந்து பின் விடைபெற்று வீடு திரும்பினோம்.
(ராமலஷ்மி ஷைலஜா ரஞ்சனி ஹரிகிருஷ்ணன் நடுவில் திரு வெசா)
(சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்..திரு ஹரிகிருஷ்ணன், மகேஷ், திருமூலநாதன், ஐய்யப்பன், திருமால் பார்வதி ஷைலஜா ராமலஷ்மி ரஞ்சனி நாராயணன் ஆகியோர்)
Tweet | ||||
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉங்களின் பல நாள் விருப்பம் நிறைவேறியதில் மிக சந்தோஷம்.
ReplyDeleteபடைப்பாளிகளுக்கு நல்ல விமரிசகர்கள் ரொம்ப முக்கியமும் அவசியமுமான தேவை.அவர்களால் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள ஏதுவாகும்