ராமாயணத்தை பழைய பஞ்சாங்கம், ’’Ramayana is full of cliche rhetorics. ’ திரும்பத் திரும்ப சொல்லப் பட்ட பழைய விஷயங்கள் என்கிறார்கள்! புதிய கல்யாணத்துக்கு பழையபஞ்சாங்கத்தில் தான் நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள். . சூரியன் பழசு சந்திரன் பழசு ஏன் வானமே பழசுதான். ’..இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நாம் கூவினாலும் நாளையின் பார்வையில் நாமே பழைய ஆட்கள்தானே!!
சரி இங்கே நாம் பழைய கதையை தொடரலாம்! இராவணன் போரில் இராமனிடம் தோற்று சீதையை விட்டுவிடு விபீஷணனை அரசனாக்கு இன்றுபோய் நாளைக்குவா என்று சொல்லியதை எல்லாம் இந்தக்காதுகளில் வாங்கி அந்தக்காதுகளில் விட்டுவிடுகிறான்.. நேரே அசோகவனம் வருகிறான்.சீதையைக்காமப்பார்வை யில் பார்த்துவிட்டு,”மந்திரமில்லை வேறோர் மருந்தில்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாயமுதலா லமுதச்சொல்லீர்”என்று அத்துமீறி உளறுகிறான்.வந்தீர் போனீர் சொல்லீர் என்ற மரியாதைச்சொற்களுக்கு ஒன்றும் குறைவில்லை :)
சீதை சினத்துடன் சொல்கிறாள்.”போர்க்களம் புக்கப்போதென்
ஆசையின் கனியைக் கண்ணிற்கண்டிலைபோலும் அஞ்சி” என்கிறாள்.
ஆசையின் கனி! பழைய கம்பராமாயணத்தில் என்ன ஒரு புதிய வார்த்தை பாருங்கள்! தன் அன்புக்கணவனை ஆசையின் கனி என்கிறாள் சீதை. ஆசைபழுத்த பழமாம்! இன்றைக்குப்புதிய கவிஞர்கள் எங்காவது இப்படி எழுதி இருந்தால் தெரியப்படுத்தவும்.
ஆசை பழுத்த பழம்போன்ற என் கணவனைப்போர்க்களத்திற் புகுந்திருக்கிற இவ்வேளையில் அஞ்சிக்காணவில்லைபோலும்?’ என இராவணனைக்கேட்கிறாள்.
இராவணன் அப்போது மாயசனகன் உருவில் ஒருவனை ,”உன் தந்தையைக்கைப்பற்றி விட்டேன் பார்” என அவள் முன்பு கொண்டுவந்து நிறுத்துகிறான், தன்னால் அப்பாவும் இந்த நிலைக்கு ஆளானதில் சீதை முதலில் வருந்தி துடிக்கிறாள் பிறகுதான், அந்த மாயசனகன்,”...நின் பொருட்டாகப்பட்டேன் ஆவியோ அழிதல் அன்றோ அமரர்க்குமரசனாவான் தேவியாயிருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்” என்று சொல்லவும் சீதை சுதாரிக்கிறாள். தன்னைப்பெற்ற தகப்பன் ஒருநாளும் இப்படி இரு வார்த்தையை சொல்லமாட்டான் என்று அறிவு விழிக்கிறது. அமரரக்கும் அரசனாம் இராவணனுக்கு தேவியாகவேண்டுமாம்! சனகனா இப்படிச்சொல்வான்?
மாயவேட சனகன் எனப்புரிந்ததும்,,”அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்தழுக்கு தின்னும் நரியொடும் வாழ்வதுண்டோ நாயினும் கடைப்பட்டோனே’ என்று நெருப்பாய் உமிழ்கிறாள். ஆண்சிங்கத்தோடு வாழ்ந்த பெண் சிங்கமடா இது , சாக்கடை அழுக்கைத்தின்னும் நரியுடன் வாழ்வதென்பது எங்காவது நடக்குமா?
உடனே இராவணன் அவளை மேலும் பயமுறுத்த மாயசனகனை வெட்டுமாறு சொல்கிறான்.
“நீ என்னையும் கொல்லும் வல்லமை படைத்தவனில்லை இப்போது இவனையும் கொல்லப்போவதில்லை உன்னையும் கொன்றுகொள்ளமாட்டாய், ஆனால் என் தலைவன் இராமனின் அம்பினால் சுற்றத்தாருடன் பிழைத்திராமல் உயிர் நீங்குவாய் “ என்று சொல்கிறாள்!
சீதை சொன்னதுதானே நடந்தது!
Tweet | ||||
வணக்கம்
ReplyDeleteஇராமயணத்தில் சீதை சொன்னது போல் நடந்தது... அதைத்தான் இப்போது சொல்வார்கள்
பெண்பாவம் சும்மா விடாது என்பார்கள்... சரியாத்தான் உள்ளது இந்த காலத்தில்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள்...
அன்புக்கணவனை-ஆசைக்கனி..... நல்ல வார்த்தை.....
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்..
Deleteபலரின் பிதற்றலை தவிர்த்து விடுவதே நல்லது...
ReplyDeleteநீங்கள் தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
வாழ்த்திற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி டிடி
Deleteநீங்கள் தொடருங்கள்...
ReplyDeleteமற்றவற்றை விட்டுத் தள்ளுங்கள்..
நன்றி பரிவை சே குமார்
Delete/////'இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நாம் கூவினாலும் நாளையின் பார்வையில் நாமே பழைய ஆட்கள்தானே!! '///////
ReplyDeleteசரியான பாயிண்ட்!.. முன்னோர்கள் பழசு என்றால் அவர்கள் மூலம் பூவுலகுக்கு வந்த நாமும் நாளைய பழசு தானே!...
காட்சிகளைக் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்!. நெருப்பாய் உமிழும் சீதையின் உணர்வு, நம்மையும் பற்றிக் கொள்கிறது!.. வாழ்த்துக்கள் அக்கா!.