அன்று ....
புரண்டு புலம்புவதிலேயே சுகம்
கண்டுமகிழ்ந்தனர் பெண்கள்
சுதந்திரம் பெற்றாலும் பறக்கமுடியாத
ஜோதிடக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்
சமத்துவம் பெற்றாலும் எண்ணச்சிறகுகளை
வடிவுக்குக்கொண்டுவர இயலாத
ஊமைக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்!
இன்று
பெண்கள் நிலையில் பெரும் மாற்றம்!
சென்றுவிட்டன அவநம்பிக்கை, ஏமாற்றம்!
மென்மை என்பது தேவைதான் எனினும் அதுவே
நன்மை பெண்மைக்கு என்னும் நிலைஇன்று இல்லை
மலர்களை மட்டும் சூடியபெண்கள் இன்று
மாநிலத்தையே நடத்தும் மங்கையர்க்கரசிகள்.
காய்கறிகளை மட்டும் துண்டுபோட்ட காரிகைகள்
நியாயங்களின் கண் இமைகள் நசுக்கப்படும்பொழுது
அநியாயங்களைத்துண்டுபோடவும்
அறிந்து வைத்திருக்கிறார்கள்
ஏழுஸ்வரங்களை இசைக்கும் வாயும் பெண்ணைத்
தாழ்வாய் நினைப்பவர்களிடம் இடியாய் முழங்குகிறது
வழி தவறுகிற கோவலக்கணவர்களை தன் விதியெனப்
பழி ஏற்காமல் காவலில் வைத்து தண்டிக்கிறார்கள்!
கண்ணகியின் வாரிசுகளான பெண்கள் இன்று
காணாமல் அழிக்கவேண்டியது ஒரு நகரத்தை அல்ல
பெண்மைக்குக்களங்கம் கற்பிக்கும் கயவர்களை
எண்ணை விட்டு எரித்துப்பொசுக்குவதுதான்.
கற்பென்பது இருபாலருக்கும் சொந்தம் என்பதை
கற்பிக்கவேண்டும் ஆரம்பப்பள்ளியிலே.
பெண்மை மென்மைதான் ஆயினும் அதன்
மேன்மையை ஆண்மை மதிக்கத்தவறினால்
வன்மையாய் சீறும் என்பது உண்மை.
இதுதான் புது யுகப்பெண்மை !பாரதி கண்ட
புதுமைப்பெண்ணின் தன்மையை
பூக்கள் தூவி வரவேற்பது
சமூகத்திற்கு நன்மை!
Tweet | ||||
// கற்பென்பது இருபாலருக்கும் சொந்தம் என்பதை
ReplyDeleteகற்பிக்கவேண்டும் ஆரம்பப்பள்ளியிலே.//
இன்றைய முக்கியத் தேவை.....
மகளிர் தின நல்வாழ்த்துகள்.
பெண்ணை மதியாதார் எண்ணப்போக்கை பெண்கள் மாற்ற குமுறி எழவேண்டும்.ஆண்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.ஓரளவு
ReplyDeleteமாறுதலை காண்கிறேன்.இது போதாது.
நல்ல பதிவு
அருமை... வரவேற்றால் தான் நன்மையே...
ReplyDelete//பெண்மை மென்மைதான் ஆயினும் அதன்
ReplyDeleteமேன்மையை ஆண்மை மதிக்கத்தவறினால்
வன்மையாய் சீறும் என்பது உண்மை.//
அருமை ஷைலஜா
பெண்மை வாழ்க! பெண்மைக்கு என் வணக்கங்கள்
ReplyDeleteபெண்மை வாழ்க! பெண்மைக்கு என் வணக்கங்கள்
ReplyDeleteகருத்துக்களை கூறிய அனைவர்க்கும் என் நன்றி.
ReplyDelete