வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.
பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்
பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்
கொண்டி ருப்பதாகப்படுகிறோம்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.
பார்டிக்கள் Particle இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.Man is a pattern seeking animal என்ற கூற்று உண்டு. பல நூறு வருடங்களாக இதைத்தான் மனிதன் அறிவிலிலும் கலையிலும் தேடுகிறான். எல்லையற்ற பிரபஞ்சத்திலிருந்து தனக்குத் தேவையான ஒழுங்கை சமைத்து எடுத்துக் கொள்கிறான் -
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.
என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!
ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.
எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!.

தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோல வாழலாம்.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம் புதிதாக வைத்துக்கொள்வோம்
கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.
இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி .
அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.
விளங்கிக் கொள்ளமுடியாமல் திணறுகிறோம் நாம்!
விளங்கிக் கொள்ளமுடியாமல் திணறுகிறோம் நாம்!
(ஒண்ணுமில்ல நாளைக்கு 19 மார்ச் பிறந்த நாள் அதான் கொஞ்சம் சீரியசா யோசிச்சி எழுதினேன்:):)
//Pisces women are very captivating and fascinating. She is charming, soft and feminine. //::) எப்படி?:)(குறைகளை சொல்லமாட்டோம் இல்ல?:)
Tweet | ||||
/குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!./ நிச்சயமாக!
ReplyDeleteஅட்வான்ஸாக இன்றே சொல்லிக் கொள்கிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :) !
வணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
happy birthday
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்
subbu thatha
அடடா...! என்னவோ நினைச்சேன்...!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ஜீஎம்பி ஐயா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com
http://ponnibuddha.blogspot.com
மிக்க நன்றி ஸார் தகவலுக்கு வலைச்சரம் சென்று பார்க்கிறேன்
Delete