Social Icons

Pages

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

பல்லவி.

அரங்கத்திருவே!  கற்பகத்தருவே!
வரங்கள் அளிக்கும் வரமஹாலஷ்மியே!(அரங்க)

அனுபல்லவி
பரமன் அரங்கனின் பட்டமகிஷி தேவி
கரங்கள் கூப்பி அவளை தினம் சேவி!(அரங்க)

சரணம்.

சகல  உயிர்களையும் காத்திடுகின்றாள்.
அகலகில்லேன் அம்மா உன் திருவடிதனைப்பிரிந்து.
நிகழும் அனைத்தும் நின் செயல் அன்றோ?
புகழ்வது உன் நாமமெனில் புல்லரிக்கின்றதன்றோ!
(அரங்க)

...திருவரங்கப்ரியா(ஷைலஜா)  எழுதியது.

7 comments:

  1. தன்யாசி ராகமும் பொருந்துகிறது.
    அடாணா ராகமும் எடுப்பாக இருக்கிறது.

    அரங்கத்து தேவி அவளை நினைந்துருகி
    கரங்கள் கூப்பி மனம் குழைய பாடுகையில்
    ஸ்வரங்கள் மட்டும் சும்மா இருக்குமோ !

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பாடலுக்கு வாழ்த்துகள் சுப்புத்தாத்தாவின் இசையைக் காணவில்லையே

    ReplyDelete
  4. பாட்டும் கவிதையும் எழுத ஆரம்பித்ததில் மிக்க சந்தோஷம்.அதிலும் உங்களுடைய திறமை நன்றாக வெளிப்படுகிறது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. you can listen the song
    https://www.youtube.com/watch?v=eeZ1U-eO3p0

    subbu thatha
    http://subbuthathacomments.blogspot.in/

    ReplyDelete
  6. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கனிவுடன் வருகைதந்து கருத்து
    தெரிவித்த அனைவர்க்கும் நன்றி ...சுப்பு தாத்தா ! பாட்டு அமர்க்களம் எனக்குத்தெரிந்த மாமி கல்யாணி ராகத்தில் பாடிக்கொடுத்தார் அதையும் அளிக்கின்றேன் சிறப்புநன்றி தங்களுக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.