Social Icons

Pages

Friday, November 11, 2011

11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!



இன்று மேலே குறிப்பிட்ட நேரத்துல என்னென்வோ சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறதாம்!.நம்ம பங்குக்கு சில பதிவர்களைப்பற்றி  இப்படி எழுத தோன்றியது கிசுகிசு என்று சும்மா தலைப்பு கொடுத்தால்தான்  ஒரு 11பேராவது உடனே ஆஜராவீங்கன்னு தெரியும்! ஆனா  நிஜத்துல இது அது இல்ல. பின்ன என்னதுன்னு கேக்கறீங்களா கீழே போங்க  இந்த அழகுப்பாப்பாவைப்பார்த்தபடி ! பாப்பாக்கு வயசு 11க்குக்கம்மிதான் ஆனா க்யூட்!


 சரி, எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்றவங்களுக்கு 11 மைசூர்பாக் வைத்த பார்சல் வரும்!



முன்குறிப்பு....... இதெல்லாம் பதிவர்பற்றிய கேள்விகள்.
கேள்விகளில் இலைமறைவுகாய்மறைவா க்ளூ கொடுக்கப்படும்!

கேள்விகள்  இங்கே! எல்லாரும் பரிட்சைக்கு ரெடியா?!

1.இடி மழையுடன் வருவதில் வரிகளை எழுதுவாராம் .. ஷ்.....சரியா யூகிக்கணும்,யார் இவர்?


2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!


3பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.


4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!


5பதிவுலகினில் இவர்  வைகோ!.

6இவரது வலைப்பூ கண்டால் சொல்வீங்க ஐ லைக் இட் ’வெரி’ மச் என்று.


7சிவனின் வாகனம் பெயரிலும் வலைப்பூவிலும்!


8,அல்லிக்கு எதுகையாய் அழகுப்பேர்கொண்ட அன்பான (அண்மை) பெண்நட்சத்திரம்.


9,உலகே மாயம் இவருக்கு.



10கல்லிடைகற்கண்டு ரொம்பவே குறும்பு உம்மாச்சிதான் இவரக் காப்பாத்தணும்!



11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!
******************************************************************

*(இன்று என் மகளின் பிறந்த நாளும்கூட!)









































96 comments:

  1. உங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

    பதிவுலகம் பற்றி அவ்வளவாக தெரியாது..!!!

    9,உலகே மாயம் இவருக்கு.///

    இவர் மாய உலகம் தானே???

    ReplyDelete
  2. மழை said...
    உங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

    பதிவுலகம் பற்றி அவ்வளவாக தெரியாது..!!!

    9,உலகே மாயம் இவருக்கு.///

    இவர் மாய உலகம்தானே?//

    வாங்கமழை..11கேள்விக்கும் யார் சரியா பதில்தராங்கன்னு பாக்கலாம் காத்திருங்க:) மகளைவாழ்த்தினதுக்கு நன்றி மழை.

    ReplyDelete
  3. Anonymous5:48 AM

    தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... many more happy returns of the day... ;-)

    ReplyDelete
  4. Anonymous5:49 AM

    நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாளான இன்று.. தங்கள் வலைப்பூவில் எனது வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  5. மாய உலகம் said...
    தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... many more happy returns of the day... ;-)

    ///
    நன்றி மாய உலகம்.

    மாய உலகம் said...
    நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாளான இன்று.. தங்கள் வலைப்பூவில் எனது வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு மனம் கனிந்த நன்றி.

    5:49
    /////

    நன்றில்லாம் இருக்கட்டும்..மத்த 10பேரு யாரு தெரிஞ்சுதா?:)மைசுர்பாக் வேண்டாமா?:)

    ReplyDelete
  6. Anonymous5:54 AM

    பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.//

    இது சகோ அம்பாளடியாள்... ஐ மைசூர்பாக்கு

    ReplyDelete
  7. Anonymous5:56 AM

    பதிவுலகினில் இவர் வைகோ!.//

    இது வைகோபாலகிருஷ்ணன் சார்....

    ReplyDelete
  8. //மாய உலகம் said...
    பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.//

    இது சகோ அம்பாளடியாள்... ஐ மைசூர்பாக்கு

    5:54 AM

    /////போங்க மாய உலகம்!!:) ஒரு கேள்விக்கு மட்டும் சொன்னா மைசூர்பாக் கிடையாது வெறும் பாக்குதான்:):)

    ReplyDelete
  9. Anonymous5:57 AM

    2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!//

    இது அநேகமாக சகோதரி சாகம்பரி அவர்களின் மகிழம்பூச்சரம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. மாய உலகம் said...
    2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!//

    இது அநேகமாக சகோதரி சாகம்பரி அவர்களின் மகிழம்பூச்சரம் என நினைக்கிறேன்.

    5:57 AM

    <<<>>>>>>>
    ஹலோ ப்ரதர் மகிழம்பூ நவரத்தினத்துல எப்போ சேர்ந்ததுங்க?:):)

    ReplyDelete
  11. Anonymous5:59 AM

    4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!//

    நம்ம சகோ ராஜேஷ்வரி அவர்களது வலைப்பூவை சுட்டிக்காடுவது போலிருக்கு..

    ReplyDelete
  12. Anonymous6:01 AM

    ஹலோ ப்ரதர் மகிழம்பூ நவரத்தினத்துல எப்போ சேர்ந்ததுங்க?:):)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அப்போ அவங்க இல்லையா...

    ReplyDelete
  13. Anonymous6:01 AM

    வெறும் பாக்கும் மட்டுந்தானா... போக போக அது கிடைக்காது போலருக்கே.. ஹா ஹா.. ஏங்க ஏதாவது ஒரு சின்ன க்ளு கொடுக்கப்படாதா...

    ReplyDelete
  14. மாய உலகம் said...
    4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!//

    நம்ம சகோ ராஜேஷ்வரி அவர்களது வலைப்பூவை சுட்டிக்காடுவது போலிருக்கு..

    5:59 AM

    <<<<>>>>> 11ம் சரியா யாரோ சொல்லப்போறாங்க அப்போ தெரியும் மாய உலகம்....!11மணிக்குள்ள சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறேன்!!

    ReplyDelete
  15. Anonymous6:04 AM

    க்ளு கொடுங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. Anonymous6:05 AM

    மைசூர்பாக் எனக்கில்ல... எனக்கில்ல ... சொக்கா

    ReplyDelete
  17. Anonymous6:05 AM

    2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!//

    கண்டுபிடிச்சுட்டேன்... முத்துச்சரம்

    ReplyDelete
  18. மாய உலகம் said...
    வெறும் பாக்கும் மட்டுந்தானா... போக போக அது கிடைக்காது போலருக்கே.. ஹா ஹா.. ஏங்க ஏதாவது ஒரு சின்ன க்ளு கொடுக்கப்படாதா...

    6:01 AM
    //

    >>>என்னது சின்ன க்ளூவா? உங்க வலைப்பூவில் மாயமோமாயம் பண்றீங்க..எனக்கு அதெல்லாம் தெரியுமா?:) ஏதோ இப்படி சில கேள்விகள்தான் கேக்கத்தெரியும் அதுவும் இது 11வயசுக்குழந்தைக்குக்கூட தெரியறமாதிரியான ஈசி கேள்விகள்..ஆகவே க்ளூ நஹி ஹை ப்ரதர்!:)

    ReplyDelete
  19. //மாய உலகம் said...
    2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!//

    கண்டுபிடிச்சுட்டேன்... முத்துச்சரம்

    6:05 AM

    //மாய உலகம் said...
    மைசூர்பாக் எனக்கில்ல... எனக்கில்ல ... சொக்கா//


    :):) பொறுத்தார் மைசூர்பாக் ஆள்வார் சம்ஜே?:)

    6:05 AM

    ReplyDelete
  20. Anonymous6:10 AM

    11வயசுக்குழந்தைக்குக்கூட தெரியறமாதிரியான ஈசி கேள்விகள்..//

    சகோ எனக்கு 10 வயசுதானே ஆகுது... அதுக்கேத்த மாதிரி க்ளு கொடுக்கலாமே... அவ்வ்வ்... ஓகே.. 5 கேள்விக்கு சரியா பதில் சொல்லிருக்கேன்.. 5 மைசூர்பாக்கூஊ எனக்கூஊஊ

    ReplyDelete
  21. Anonymous6:13 AM

    11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!//

    மாதவி பந்தல்

    ReplyDelete
  22. //மாய உலகம் said...
    11வயசுக்குழந்தைக்குக்கூட தெரியறமாதிரியான ஈசி கேள்விகள்..//

    சகோ எனக்கு 10 வயசுதானே ஆகுது... அதுக்கேத்த மாதிரி க்ளு கொடுக்கலாமே... அவ்வ்வ்... ஓகே.. 5 கேள்விக்கு சரியா பதில் சொல்லிருக்கேன்.. 5 மைசூர்பாக்கூஊ எனக்கூஊஊ

    6:10 AM

    /////


    அச்சச்சோ நாளும்கிழமையுமா இப்படி அழலாமோ?:) தங்களுக்கு எனது மைசூர்பாக் மகாத்மியம் தெரியவில்லை போலும் அதுதான் இவ்வளவு ஆரவமாக கேட்கிறீர்கள் விதி வலியது மா.உ:)

    ReplyDelete
  23. நீங்கள் மேலே குறிப்பிட்ட அந்த 11.... நேரத்தில் உங்களின் மகளுடன் இருந்தால் அதுவே இந்த நாளின் சிறப்பு !
    ஒரு படம் பிடித்து பதிவு போடுங்கள்...
    அது ஏணிப்படியாகக் கூட இருக்கலாம் !

    ReplyDelete
  24. Anonymous6:15 AM

    1.இடி மழையுடன் வருவதில் வரிகளை எழுதுவாராம் .. ஷ்.....சரியா யூகிக்கணும்,யார் இவர்?//

    அமைதிச்சாரல்

    ReplyDelete
  25. ஆகாயமனிதன்.. said...
    நீங்கள் மேலே குறிப்பிட்ட அந்த 11.... நேரத்தில் உங்களின் மகளுடன் இருந்தால் அதுவே இந்த நாளின் சிறப்பு !
    ஒரு படம் பிடித்து பதிவு போடுங்கள்...
    அது ஏணிப்படியாகக் கூட இருக்கலாம் !

    6:15 AM

    <<<<<<<<>>>>>>>வாங்க ஆகாயமனிதன்..பூமிலதான் நாங்க இருக்கோம்:) உங்கள ஏணிவச்சிதான் பாக்கணுமா?:)(சும்மா கிட்டிங்):)
    மகளோடு படம்போட்டா போச்சி...ஏணிப்படி ஏனிப்படி ஆகாயமனிதன்?:)

    ReplyDelete
  26. Anonymous6:22 AM

    கல்லிடைகற்கண்டு ரொம்பவே குறும்பு உம்மாச்சிதான் இவரக் காப்பாத்தணும்!//

    தக்குடு

    ReplyDelete
  27. மாய உலகம் said...
    11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!//

    மாதவி பந்தல்

    6:13 AM

    <<<<<<<>>>>ஹலோ மாயம் 11ம் சொல்லாம் இப்படி தனிதனியா அவுட் பண்ணினா டீச்சர் பனிஷ்மெண்ட் தருவாங்க:)

    ReplyDelete
  28. Anonymous6:24 AM

    திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!//

    மதுரையம்பதி..........

    ReplyDelete
  29. Anonymous6:25 AM

    சகோ.. ஒண்ணொன்னா கண்டுபிடிக்க வேணாமா..... ;-)

    ReplyDelete
  30. மாய உலகம்! சும்மா ரைட் ராங்காகலக்கறீங்க....ஆனா முடிவு கடைசிலதான்:)
    உங்கள் வரவால் பின்னூட்ட எண்ணிக்கை இணையவரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளோ சீக்கிரம் கால்சதம் தாண்டிட்டது அதுக்கே மைசூர்பாக் தரணும் உங்களுக்கு!!

    ReplyDelete
  31. 11ஐயும் சொல்லணும்னு ஆசைப்படறேன். மூணு பேரை இன்னும் கண்டுபிடிக்கலை. கொஞ்ச நேரத்துல திரும்பி வர்றேன். மைசூர்பாக்கை அள்றேன். பிறந்தநாள் காணும் உங்கள் செல்லத்துக்கு என் அன்பான மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்...

    ReplyDelete
  32. //கணேஷ் said...
    11ஐயும் சொல்லணும்னு ஆசைப்படறேன். மூணு பேரை இன்னும் கண்டுபிடிக்கலை. கொஞ்ச நேரத்துல திரும்பி வர்றேன். மைசூர்பாக்கை அள்றேன். பிறந்தநாள் காணும் உங்கள் செல்லத்துக்கு என் அன்பான மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்...

    6:32 AM

    //கணேஷ் வருக..11,.11 11 வாழ்த்துகள்! இன்னும் மூணுதானா? வெரிகுட்.வாங்க சீக்கிரம்.மகளுக்கு வாழ்த்தை தெரிவிச்சிடறேன்

    ReplyDelete
  33. அன்பு ஷைல்ஸ், முத்ல்ல அந்தக் குட்டிப் பாப்பாவுக்கு முத்தங்கள். செம க்யூட்.
    அல்லிக்கு எதுகை வல்லி.
    மாலின் மார்பில் விளையாடும்
    கோபாலின் துணை துளசி.
    உம்மாச்சியோடு விளையாடறது தக்குடு.

    ReplyDelete
  34. கோவலனின் மாதவிக் கொடியைப் பாடும் பந்தல்.
    கோவிந்த நாமம் கொண்ட கண்ணபிரான்.ரவிசங்கர்.


    அம்பாளடியாள் அம்பிருக்குமன்பு.

    வை கோவிந்தசாமி சார்.

    ReplyDelete
  35. ரத்தினங்களில் முத்தான ராமலக்ஷ்மி
    முத்துச்சரத்தினை அலங்கரிக்கும் சகல கலாவல்லி.
    மழை ஷ்ரேயான்னு பதிவர் இருந்தார்.
    இப்ப மனசில வரது நம் அமைதிச்சாரல்

    ReplyDelete
  36. 1.வானவில்
    2.முத்துச்சரம்
    3. அம்பாளடியாள்
    4.துளசி கோபால்
    5. VGK சார்
    6. அதீதம்
    7. ரிஷபன்
    8. வல்லி சிம்ஹன் மேடம்
    9. மாய உலகம்
    10.கும்மாச்சி
    11.மிடில் க்ளாஸ் மாதவி

    அவ்ளோதான் இனி யோசிக்க முடியாது.

    ReplyDelete
  37. இன்னோண்ணு ரிஷபன்.
    ஓ!
    அம்பு சொல்வது நம் மதுரையம்பதியையா!!

    உங்க பொண்ணுக்கு என் மனமார்ந்த

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் மா. குழந்தை நன்னா இருக்கணும்.

    ReplyDelete
  38. மறத்துட்டேன் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. முதலில் உங்கள் மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

    நான் வரும் முன் பதில்களை பலரும் சொல்லி விட்டார்கள்:)! தருமி போல எத்தனை பதில் சரியோ அத்தனை மைசூர்பாகு தருவீர்கள்தானே எனக் கேட்க இருந்தேன், சட்டென 5 மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததால்:))!

    ஹெட்டர் படம் அருமை.

    என் சரத்தையும் பதினொன்றில் ஒன்றாகக் கோர்த்தமைக்கு நன்றி:)!!!

    ReplyDelete
  40. //..வல்லிசிம்ஹன் said...
    அன்பு ஷைல்ஸ், முத்ல்ல அந்தக் குட்டிப் பாப்பாவுக்கு முத்தங்கள். செம க்யூட்.
    அல்லிக்கு எதுகை வல்லி.
    மாலின் மார்பில் விளையாடும்
    கோபாலின் துணை துளசி.
    உம்மாச்சியோடு விளையாடறது தக்குடு.

    6:59 AM

    ..//


    வல்லிமா...ஆஹா துளசியை மோந்தாச்சா நீங்க வெரி குட். தக்குடு ரொம்ப ஈசியா இருக்கு எல்லாருக்கும்.

    ReplyDelete
  41. வல்லிசிம்ஹன் said...
    கோவலனின் மாதவிக் கொடியைப் பாடும் பந்தல்.
    கோவிந்த நாமம் கொண்ட கண்ணபிரான்.ரவிசங்கர்.


    அம்பாளடியாள் அம்பிருக்குமன்பு.

    வை கோவிந்தசாமி சார்.

    7:08 AM

    <<<<<<<<>. ஆஹா வல்லிமா கலக்கல்ஸ்!

    ReplyDelete
  42. //வல்லிசிம்ஹன் said...
    ரத்தினங்களில் முத்தான ராமலக்ஷ்மி
    முத்துச்சரத்தினை அலங்கரிக்கும் சகல கலாவல்லி.
    மழை ஷ்ரேயான்னு பதிவர் இருந்தார்.
    இப்ப மனசில வரது நம் அமைதிச்சாரல்

    7:15 AM

    ////// அமைதிச்சாரல் மட்டும் இப்போ தப்பு வல்லிமா.....

    ReplyDelete
  43. //சாகம்பரி said...
    1.வானவில்
    2.முத்துச்சரம்
    3. அம்பாளடியாள்
    4.துளசி கோபால்
    5. VGK சார்
    6. அதீதம்
    7. ரிஷபன்
    8. வல்லி சிம்ஹன் மேடம்
    9. மாய உலகம்
    10.கும்மாச்சி
    11.மிடில் க்ளாஸ் மாதவி




    சாகம்பரி மூணூ தப்புபோல்ருக்கு மத்தபடி சரிதான்

    ReplyDelete
  44. இந்த அபூர்வமான நாளில் பிறந்த நாள் கொண்டாடும்
    தங்கள் புதல்வி வாழ்வில் எல்லா நலங்களையும்
    வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக் கொள்கிறேன்

    (நான்கு பதிவர்களுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவில்லை
    வெற்றிகரமாக ஜகா வாங்கிக் கொள்கிறேன்)

    ReplyDelete
  45. வல்லிசிம்ஹன் said...
    இன்னோண்ணு ரிஷபன்.
    ஓ!
    அம்பு சொல்வது நம் மதுரையம்பதியையா!!

    உங்க பொண்ணுக்கு என் மனமார்ந்த

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் மா. குழந்தை நன்னா இருக்கணும்.

    7:23 AM

    >>>>>>>அம்பாளடியாள் சரிதான் வல்லிமா..பொண்ணுக்கு உங்க வாழ்ந்த்து கிடச்சது ரொம்ப மகிழ்ச்சி

    ReplyDelete
  46. //ராமலக்ஷ்மி said...
    முதலில் உங்கள் மகளுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

    நான் வரும் முன் பதில்களை பலரும் சொல்லி விட்டார்கள்:)! தருமி போல எத்தனை பதில் சரியோ அத்தனை மைசூர்பாகு தருவீர்கள்தானே எனக் கேட்க இருந்தேன், சட்டென 5 மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததால்:))!

    ஹெட்டர் படம் அருமை.

    என் சரத்தையும் பதினொன்றில் ஒன்றாகக் கோர்த்தமைக்கு நன்றி:)!!!

    7:26 AM

    /////

    உங்க சரம் எனக்குப்பிடிச்ச சரமாச்சே ராமல்ஷ்மி சேர்க்காம விடுவேனா? முத்து என் ராசி வேற!! ஆமா பலர் சிலபதிலை சரியா சொல்லிட்டாங்க....பாக்லாம் இன்னும் எவ்ளோபேர் எல்லாம் சரியா சொல்றாங்கன்னு... வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  47. //சாகம்பரி said...
    மறத்துட்டேன் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்கள்.

    7:23 AM

    /// நன்றி சாகம்பரி குட்டிப்பாப்பால்லாம் இல்லகொஞ்சம் பெரிய பாப்பாதான்!!

    ReplyDelete
  48. // Ramani said...
    இந்த அபூர்வமான நாளில் பிறந்த நாள் கொண்டாடும்
    தங்கள் புதல்வி வாழ்வில் எல்லா நலங்களையும்
    வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக் கொள்கிறேன்

    (நான்கு பதிவர்களுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவில்லை
    வெற்றிகரமாக ஜகா வாங்கிக் கொள்கிறேன்)

    7:29 AM

    /////வாங்க ரமணி உங்க பேரையும் சேர்க்க நினச்சேன் ஆனா 11 லிமிட்னு இருந்ததால் முடியல..வெற்றிகர ஜகாவா அப்போ மைசூர்பாக் வேண்டாமா?:) மகளுக்கு வாழ்த்தை சொல்லிடறேன்

    ReplyDelete
  49. மகளின் பிறந்தநாளைமுன்னிட்டு சின்ன நகர் உலா முடிச்சிவரேன்..11க்கும் சரியான பதில் எழுதி மைபா பெறப்போகும் அதிர்ஷ்டசாலிக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்...பிரிவோம் சிலமணிநேரங்கள் கழித்து சந்திப்போம்! நன்றி.

    ReplyDelete
  50. Anonymous7:56 AM

    தங்கள் புதல்விக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    Many more happy returns of the day....

    ReplyDelete
  51. தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  52. Anonymous8:10 AM

    தங்கள் வலைப்பூவில் என்னையும் இழுத்தமைக்கு மனம் கனிந்த நன்றி...

    வீட்டுக்காரம்மா உங்க பொண்ணுக்கு சுத்தி போடசொன்னாங்க... எங்களுக்கு பையன் இருந்திருந்தா இப்பவே ரிசேர்வ் பண்ணி இருப்பாங்களாம்...-:)

    நாளை காலை வந்து விடை பார்க்கிறேன்...மைசூர் பாக் பிடிக்காது...-:)

    ReplyDelete
  53. மகளுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்!
    குழந்தை நல்லா இருக்கட்டும்.

    புதிருக்கு விடை ஏதோ கொஞம் தெரிஞ்ச மாதிரி இருக்கு.

    ரெண்டு....... முத்துச்சரம்

    எட்டுக்கு வல்லி.

    மூணு மை பா போதும்ப்பா. ஷுகர் இருக்காம்!

    நாலுக்கு...... தன்னடக்கம் தடுக்குதேப்பா :-))))

    ReplyDelete
  54. கொஞம் = கொஞ்சம்.

    கொஞ்ச(ம்) விட்டுப் போச்சு :-)

    ReplyDelete
  55. Anonymous8:49 AM

    11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  56. இப்ப எனக்குத் தோணினது...
    1. நான்தேங்...
    2. ராமலட்சுமி அம்மா
    3. அம்பாளடியாள்
    4. துளசி கோபால்
    5. விஜிகே சார்
    6. ரெவெரி
    7. ரிஷபன் சார்
    8. வல்லிசிம்ஹன் மேடம்
    9. மாய உலகம்
    10. கும்மாச்சி
    11. எவ்வளவு யோசிச்சாலும் தெரியலை...
    சரிதானாக்கா... என்னையும் சேர்த்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  57. தங்களின் மகளுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களும், மனமார்ந்த ஆசிகளும்.

    விதயாசமான பதிவு. அதில் எங்களில் சிலருக்கும் விளம்பரங்கள். மைசூர்பாகு சாப்பிட்டது போல மகிழ்ச்சி.

    vgk

    ReplyDelete
  58. தங்கள் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்கள்.

    நான் நினைத்தவையும் ராமலெஷ்மி அக்காவோட பதில்களோட ஒத்துப்போகுது. ஆனா நீங்க அதுலயும் ஒண்ணு தப்புன்னு சொல்லியிருக்கீங்க... அப்ப மைசூர்பாக் யாருக்குமே இல்லையா... சரி எங்க சார்பா பிறந்தநாள் கொண்டாடும் குட்டிப்பாப்பாவுக்கு கொடுத்துடுங்க...

    ReplyDelete
  59. தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... many more happy returns of the day... ;-)

    என்னையும் சேர்த்ததுக்கு நன்றி

    ReplyDelete
  60. ராமலக்‌ஷ்மி, மாதவிப்பந்தல் மாதிரி கொஞ்சம் கொஞ்சம் கண்டிபிடிச்சேன். :)

    உங்க மகளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

    ReplyDelete
  61. //ரெவெரி said...
    தங்கள் புதல்விக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    Many more happy returns of the day....

    7:56 AM

    ////
    <<<வாங்க ரெவெரி.....உங்க பேரை பலர் கண்டுபிடிக்கல் பார்த்தீங்களா?:) வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  62. இராஜராஜேஸ்வரி said...
    தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    8:02 AM

    >>>நன்றி இராஜேஸ்வரி

    ReplyDelete
  63. ரெவெரி said...
    தங்கள் வலைப்பூவில் என்னையும் இழுத்தமைக்கு மனம் கனிந்த நன்றி...

    வீட்டுக்காரம்மா உங்க பொண்ணுக்கு சுத்தி போடசொன்னாங்க... எங்களுக்கு பையன் இருந்திருந்தா இப்பவே ரிசேர்வ் பண்ணி இருப்பாங்களாம்...-:)

    நாளை காலை வந்து விடை பார்க்கிறேன்...மைசூர் பாக் பிடிக்காது...-:)

    8:10 AM

    >>>>>>>அடட்டா மைசூர்பாக் பிடிக்காதா? நம்ம மைபா ரொம்ப பிரசித்தம் ஆச்சே...பொண்ணுக்கு சுத்திப்போட்டுடறேன்...விடை இன்னிக்கு இரவுக்குள்ள..

    ReplyDelete
  64. /////மகளுக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்!
    குழந்தை நல்லா இருக்கட்டும்.

    புதிருக்கு விடை ஏதோ கொஞம் தெரிஞ்ச மாதிரி இருக்கு.

    ரெண்டு....... முத்துச்சரம்

    எட்டுக்கு வல்லி.

    மூணு மை பா போதும்ப்பா. ஷுகர் இருக்காம்!

    நாலுக்கு...... தன்னடக்கம் தடுக்குதேப்பா :-))))

    8:38 AM

    <<<<<<<<<<< துள்சிமேடம் அந்த தன்னடக்கத்தை முதல்ல எனக்கு சொல்லிக்கொடுங்க உங்க வருகையே எனக்குப்பெரிசு...நேர்ல இருக்கு மைபா!

    ReplyDelete
  65. //மாய உலகம் said...
    11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    8:49 AM

    ///// மிக்க நன்றி ராஜேஷ்....ஆர்வமா 11ல் கலந்துட்டதுக்கு சிறப்புப்பரிசு தரேன் என்ன?

    ReplyDelete
  66. ////கணேஷ் said...
    இப்ப எனக்குத் தோணினது...
    1. நான்தேங்...
    2. ராமலட்சுமி அம்மா
    3. அம்பாளடியாள்
    4. துளசி கோபால்
    5. விஜிகே சார்
    6. ரெவெரி
    7. ரிஷபன் சார்
    8. வல்லிசிம்ஹன் மேடம்
    9. மாய உலகம்
    10. கும்மாச்சி
    11. எவ்வளவு யோசிச்சாலும் தெரியலை...
    சரிதானாக்கா... என்னையும் சேர்த்ததுக்கு நன்றி.

    9:36 AM

    ///வருக கணேஷ் உங்க மின்னல்வரிகள் வலைப்பூ பலருக்கு தோன்றமுடியாமல் போக என் க்ளூ காரணமா இருக்கலாம் ஆனா நீங்களும் 11ம் கண்டுபிடிக்கல..பரவால்ல just for fun தானெ இது?

    ReplyDelete
  67. சே.குமார் said...
    தங்கள் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்கள்.

    நான் நினைத்தவையும் ராமலெஷ்மி அக்காவோட பதில்களோட ஒத்துப்போகுது. ஆனா நீங்க அதுலயும் ஒண்ணு தப்புன்னு சொல்லியிருக்கீங்க... அப்ப மைசூர்பாக் யாருக்குமே இல்லையா... சரி எங்க சார்பா பிறந்தநாள் கொண்டாடும் குட்டிப்பாப்பாவுக்கு கொடுத்துடுங்க
    >>>>>>>>>>>வாங்க சே குமார்..வாழ்த்தினை மகலுக்கு சொல்லிடறேன் குட்டிப்பாப்பா இல்ல நல்ல வளர்ந்த பொண்ணு அதான் போட்டோல்லாம் போடலை:) எல்லார்க்கும் எல்லாரையும் கண்டுபிடிக்கறது கொஞ்சம் சிரமமா இருக்கு நான் க்ளூ இன்னும் சரியா கொடுத்திருக்கலாமோ? 12 12 12 ல இதை சரி செய்துடுவோம் நன்றி குமார்.

    ReplyDelete
  68. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களின் மகளுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களும், மனமார்ந்த ஆசிகளும்.

    விதயாசமான பதிவு. அதில் எங்களில் சிலருக்கும் விளம்பரங்கள். மைசூர்பாகு சாப்பிட்டது போல மகிழ்ச்சி.


    >>>>>>>நன்றி வைகோ சார்.... மகள் இன்று உங்களைப்போல பலரிடம் வாழ்த்தும் ஆசியும் வாங்குவதும் பாக்கியமே. 11க்கு வித்யாசமா ஏதும் செய்ய நினைத்து அவசரமாய் இப்படி என்னவோ செய்தேன்... பதிவர்கள் யாரையும் மனம்புண்படவைக்காமல் புன்னகைக்க வைக்கமட்டும் நினச்சி உங்கக்கிட்டல்லாம் அனுமதி கேட்காமல் பதிவில் பெயர்களையும் பத்தித்துவிட்டேன் ..அதைப்
    பாராட்டியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  69. ரிஷபன் said...
    தங்களின் மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... many more happy returns of the day... ;-)

    என்னையும் சேர்த்ததுக்கு நன்றி

    11:08 AM

    //// வாழ்த்துக்கு நன்றி ரி///சிவனின் வாகனம் என்றதும் உங்கள டக்குனு கண்டுபிடிச்ச்சிட்டாங்க

    ReplyDelete
  70. பதிலில் பிழையிருக்கிறதா... சரி, எத்தனை பிழை இருக்கிறதோ, அத்தனை மைசூர் பாகை குறைத்துக் கொள்ள வேண்டியது தானே... மன்னா, ஸாரி, அக்கா... கொடுங்கள்...

    ReplyDelete
  71. ///புதுகைத் தென்றல் said...
    ராமலக்‌ஷ்மி, மாதவிப்பந்தல் மாதிரி கொஞ்சம் கொஞ்சம் கண்டிபிடிச்சேன். :)

    உங்க மகளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

    4:07 PM

    //

    >>>ஆமா புதுகைத்தென்றல்.. அதெல்லாம் கொஞ்சம் ஈசி ..க்ளூவை நாந்தான் இன்னும் கொஞ்சம் ஈசியா கொடுத்திருக்கணும்போல இருக்கு):

    வாழ்த்தை மகளுக்கு சொல்லிடறேன் ரொம்ப நன்றி

    ReplyDelete
  72. //கணேஷ் said...
    பதிலில் பிழையிருக்கிறதா... சரி, எத்தனை பிழை இருக்கிறதோ, அத்தனை மைசூர் பாகை குறைத்துக் கொள்ள வேண்டியது தானே... மன்னா, ஸாரி, அக்கா... கொடுங்கள்...

    5:24 PM

    /./////
    ஆஹா இதென்ன பாண்டியன் அவையா?:) பிழை என்று ஏதுமில்லை பிள்ளையார்பெயர் கொண்டவரே ஏதோ ஒருநாள்பொழுதுபோக்கு அவ்வளவுதான்:) மைசூர்பாக் எப்படியும் தங்களுக்கு உண்டு(பல் ஸ்ட்ராங் தானே?:))

    ReplyDelete
  73. //கணேஷ் said...
    பதிலில் பிழையிருக்கிறதா... சரி, எத்தனை பிழை இருக்கிறதோ, அத்தனை மைசூர் பாகை குறைத்துக் கொள்ள வேண்டியது தானே... மன்னா, ஸாரி, அக்கா... கொடுங்கள்...

    5:24 PM

    /./////
    ஆஹா இதென்ன பாண்டியன் அவையா?:) பிழை என்று ஏதுமில்லை பிள்ளையார்பெயர் கொண்டவரே ஏதோ ஒருநாள்பொழுதுபோக்கு அவ்வளவுதான்:) மைசூர்பாக் எப்படியும் தங்களுக்கு உண்டு(பல் ஸ்ட்ராங் தானே?:))

    ReplyDelete
  74. எதையும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணலை .என்ன என் பெயர் இருக்காதே

    ReplyDelete
  75. //Avani Shiva said...
    எதையும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணலை .என்ன என் பெயர் இருக்காதே

    6:04 PM

    ///// shivaa... அடுத்தமுறை உங்களை ஆட்டத்துல சேர்த்துக்கறேன் இந்த11 எண் 11பேரைத்தான் சேர்த்துக்கொண்டது 111 செய்திருக்கலாம்..

    ReplyDelete
  76. 1.ஷ்ரேயா
    2.முத்துச்சரம் ராமலஷ்மி(ஹை. இவ்ளோ ஈஸி க்ளூவா :-)
    3.அம்பாளடியாள்
    4.துள்சியக்கா
    5.வை.கோ
    6.ஒரு மைசூர் பா மைனஸ்.
    7.ரெண்டாவது மைசூர்பாவும் போச்சா.. அவ்வ்வ்வ்
    8.வல்லிம்மா
    9. மாய உலகம்
    10. தக்குடு(கல்லிடைன்னாலே தக்குடுதான் ஞாபகம் வர்றார் :-))
    11.மாதவிப்பந்தல் கண்ணபிரான்

    நீங்க மைசூர்பாக் புராணம்ன்னு சொன்னதுலேர்ந்து கொஞ்சம் உதறலா இருக்கு. பாக்கை வெச்சுக்கிட்டு மைசூரைக் கொடுத்தாக்கூட போதும் :-))


    இடி மழைன்னதும் இந்த சாரலையும் நினைச்சுக்கிட்ட அன்புள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.... ஜோடா ப்ளீஸ் :-)

    ReplyDelete
  77. மகளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஷைலஜா மேடம் :-))

    ReplyDelete
  78. அமைதிச்சாரல் said...
    1.ஷ்ரேயா<<<<<>.இல்லை கணேஷ் என்பவரின் மின்னல்வரிகள் என்னும் வலைப்பூ வரிகள்னு க்ளூ கொடுத்தேனே?

    2.முத்துச்சரம் ராமலஷ்மி(ஹை. இவ்ளோ ஈஸி க்ளூவா :-)ரைட்டு
    3.அம்பாளடியாள்
    ரைட்டு

    4.துள்சியக்கா
    ரைட்டு

    5.வை.கோ
    ரைட்டு

    6.ஒரு மைசூர் பா மைனஸ்.
    7.ரெண்டாவது மைசூர்பாவும் போச்சா.. அவ்வ்வ்வ்
    >>>அடட்டா போச்சா”_


    8.வல்லிம்மா
    9. மாய உலகம்
    10. தக்குடு(கல்லிடைன்னாலே தக்குடுதான் ஞாபகம் வர்றார் :-))
    11.மாதவிப்பந்தல் கண்ணபிரான்

    நீங்க மைசூர்பாக் புராணம்ன்னு சொன்னதுலேர்ந்து கொஞ்சம் உதறலா இருக்கு. பாக்கை வெச்சுக்கிட்டு மைசூரைக் கொடுத்தாக்கூட போதும் :-))
    >>>ஆஹா நினைவிருக்கா அமைதிச்சாரல்?:) மைசூரைக்கொடுக்கலாம்தான் உடையார் குடும்பத்தைக்கேட்டுத்தரேன் என்ன?:)

    //இடி மழைன்னதும் இந்த சாரலையும் நினைச்சுக்கிட்ட அன்புள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.... ஜோடா ப்ளீஸ் :-)//


    ஆமா உங்களை இழுக்க நினச்சேன் ஆனா இந்த11 ரொம்பபேரை இணைக்கவிடல...அமைதிச்சாரலுக்கு இவ்ளோ அழகா பேசினதுக்கு ஜோடா என்ன கோலாவேதரலாம் நன்றி தங்கச்சியே!

    6:48 PM

    >>>>

    ReplyDelete
  79. //அமைதிச்சாரல் said...
    மகளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஷைலஜா மேடம் :-))

    6:50 PM

    //////சொல்லிடறேன்மா நன்றி மிக

    ReplyDelete
  80. அப்படி இப்படின்னு மூணு கண்டு புடிச்சுட்டேன். எனக்கு தெரிந்தவைகள் , முத்துச்சரம், துளசி மேடம், வைகோ சாரி.

    for every 11 mysorepak, gimme three...hehehe.. மைசூர்பாகு பிட்டை வாய்ல பொட்டுடுங்க....ஓடி பொய்டறேன்.

    ReplyDelete
  81. //Shakthiprabha said...
    அப்படி இப்படின்னு மூணு கண்டு புடிச்சுட்டேன். எனக்கு தெரிந்தவைகள் , முத்துச்சரம், துளசி மேடம், வைகோ சாரி.

    for every 11 mysorepak, gimme three...hehehe.. மைசூர்பாகு பிட்டை வாய்ல பொட்டுடுங்க....ஓடி பொய்டறேன்.

    7:45 PM

    /////<<<வா ஷக்தி....3போதுமா?:) ஹஹ்ஹா ஒகே//அதுக்கே ஓடிப்பொயிடறேங்கறே?:)

    ReplyDelete
  82. 11மணிக்குள்ள சரியான பதில்களை இங்கே கொடுத்துடறேன். சும்மா ஏதும் வித்யாசமா செய்வோம்னு இப்படி ஆரம்பிச்சேன் ...பதிவர்கள் பலரைவிட்டுட்டோமேன்னு இருந்தது.இங்கே குறிப்பிட்டவர்களின் மனம் புண்படாவண்ணம் எழுதினேன்னு நினைக்கிறேன் அப்படி ஏதும் மனம் வருத்தப்படிருந்தால் மன்னிச்சிடுங்க.

    1.இடி மழையுடன் வருவதில் வரிகளை எழுதுவாராம் .. ஷ்.....சரியா யூகிக்கணும்,யார் இவர்?

    <<<<< மின்னல் வரிகள் என்கிற வலைப்பூவின் பதிவர் கணேஷ்!

    2,நவரத்தினத்தில் ஒன்றை சரமாய்க்கோத்து பதிவில் போட்டிருப்பவர்!
    <<<>>>ராமலட்சுமியின் வலைப்பூ முத்துச்சரம்.

    3பேர்ல அம்பானால் என்ன பதிவுக(பாடல்)ளில் மலராய் வருடுவாரே!\.

    <<<<<<>>> அம்பாளடியாள் அம்பா எனும் முதல்பேரை குறிப்பிட்டேன் ஆனா பலர் கண்டுபிடிச்சிட்டாங்க.


    4,திருமால்கோயில் தீர்த்தத்திலும் வாசம்,திருமேனியிலும் வாசம்!<<<<>

    திருமால்கோயிலில் துளசிதீர்த்தம் தான் தருவாங்க..அவர் மேனில துளசி விசேஷம் அதனால் துளசிதளம் வலைப்பூக்கார துளசியை இங்கே குறிப்பிட்டேன்.


    5பதிவுலகினில் இவர் வைகோ!.>>>>

    வை கோபால க்ருஷ்ணன் அவர்கள்

    6இவரது வலைப்பூ கண்டால் சொல்வீங்க ஐ லைக் இட் ’வெரி’ மச் என்று.
    <<>>>>ரெவரி இவர் பெயர்...அதனால் இப்படி குறிப்பிட்டேன் ஆனா க்ளூ கொஞ்சம் பலருக்கு கஷ்டமாகிடிச்சி சாரி!

    7சிவனின் வாகனம் பெயரிலும் வலைப்பூவிலும்!>>>>>

    ரிஷபன்! பலர் சொல்லிட்டாங்க.


    8,அல்லிக்கு எதுகையாய் அழகுப்பேர்கொண்ட அன்பான (அண்மை) பெண்நட்சத்திரம்.

    <<<>வல்லிநரசிம்மன்!


    9,உலகே மாயம் இவருக்கு.<<<

    மாய உலகம் எனும்வலைப்பூகொண்டவர்.



    10கல்லிடைகற்கண்டு ரொம்பவே குறும்பு உம்மாச்சிதான் இவரக் காப்பாத்தணும்!<<<>>

    பெயர் தக்குடு வலைப்பூ உம்மாச்சி காப்பாத்து.



    11கோவலனின் காதலியை பந்தலில் அழைச்சிருக்கிறார்!<<<>>>>கண்ணபிரான் ரவிசங்கர் என்னும் கே ஆர் எஸ்..மாதவிப்பந்தல் வலைப்பூ பெயர்.


    ஆர்வமுடன் பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மறுபடி இன்னொரு கேள்விபதில் பகுதில பலபதிவர்களை சேர்த்துடுவோம்! நன்றி வணக்கம் டாட்டா!
    ******************************************************************

    ReplyDelete
  83. வித்தியாசமான முயற்சி & பப்ளிசிட்டிக்கு ரொம்ப டாங்க்ஸ் :-)))

    ReplyDelete
  84. வணக்கமுங்கோ....ஏதோ பழக்கதோஷம் என்பது இதான் போல...


    மதுரையம்பதின்னு கெஸ் பண்ணக்கூட ஆள் இருக்கிறதே....பேஷ் பேஷ். :)

    ReplyDelete
  85. அடடா... ரொம்ப லேட்டா வந்துருக்கேன் போலருக்கே!

    குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அடுத்த வருஷத்துக்கு. அட்வான்சா சொல்லிட்டேன். :p )

    மைசூர் பா யாருக்கு கிடைச்சது?

    ReplyDelete
  86. //தக்குடு said...
    வித்தியாசமான முயற்சி & பப்ளிசிட்டிக்கு ரொம்ப டாங்க்ஸ்
    ///late aa vandhuvittu thanks veraya?:0 Maappillai aaka pora thakkudukku vaazththukaL!

    ReplyDelete
  87. /மதுரையம்பதி said...
    வணக்கமுங்கோ....ஏதோ பழக்கதோஷம் என்பது இதான் போல...


    மதுரையம்பதின்னு கெஸ் பண்ணக்கூட ஆள் இருக்கிறதே....பேஷ் பேஷ். :)

    9:52 PM

    //>>>> :):) ellaarukkum ungala theriyum Mouli.... thanks commentskku

    ReplyDelete
  88. /ரசிகன் said...
    அடடா... ரொம்ப லேட்டா வந்துருக்கேன் போலருக்கே!

    குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அடுத்த வருஷத்துக்கு. அட்வான்சா சொல்லிட்டேன். :p )

    மைசூர் பா யாருக்கு கிடைச்சது?

    9:33 AM

    >>>vaanga Rasikan kaanomennu paarthen ...maisurpa yaarukkum illai..coz naan clue sariya kotukkala.."):) innoru Q&A vachi kotuthutalaam....:) thanks for yr comments and wishes ellathukkum(sorry thamiz font makkar athan ipdi thanglish:)

    ReplyDelete
  89. நான் இந்த போட்டியிலே கலதுகல!
    எனக்கு மைசூர்பார்கு வேண்டாம்
    ஏற்கனவே என் உடம்பில்
    இனிப்பு நிறையவே இருக்கு
    தங்களின் குழந்தைக்கு என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  90. //PM


    புலவர் சா இராமாநுசம் said...
    நான் இந்த போட்டியிலே கலதுகல!
    எனக்கு மைசூர்பார்கு வேண்டாம்
    ஏற்கனவே என் உடம்பில்
    இனிப்பு நிறையவே இருக்கு
    தங்களின் குழந்தைக்கு என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    9:14 AM

    ////புலவருக்கு வணக்கம்.....மைசூர்பாகாய் மரபுக்கவிதைகள் வடிக்கிறீர்களே அதைவிட வேறென்ன வேண்டும் ஐயா! மகளை ஆசிர்வதித்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  91. கல்லிடையின் காதல் மன்னனை இங்கு குறிப்பிட்டதற்கு அவருடைய அகில உலக ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

    நல்ல பதிவு.

    Birthday Baby-க்கு வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  92. //RVS said...
    கல்லிடையின் காதல் மன்னனை இங்கு குறிப்பிட்டதற்கு அவருடைய அகில உலக ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

    நல்ல பதிவு.

    Birthday Baby-க்கு வாழ்த்துகள். :-)

    6:58 PM

    ////


    நன்றி ஆர் வி எஸ்/// கல்லிடைக்காரர் மாப்பிள்ளையாகபோறார்!!! உங்களுக்கு சவால்போட்டில முதல்ல வந்ததுக்கு இங்கயும் பாராட்டு.மகளை வாழ்த்தியதுக்கு நன்றி

    ReplyDelete
  93. இந்தப் போட்டி கீட்டியெல்லம் எனக்கு ஒத்து வராது.அதனால்தான் தாமதம். அழகான பதிவு.பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  94. /சென்னை பித்தன் said...
    இந்தப் போட்டி கீட்டியெல்லம் எனக்கு ஒத்து வராது.அதனால்தான் தாமதம். அழகான பதிவு.பாப்பாவுக்கு வாழ்த்துகள்.

    7:58 PM

    ......

    வாங்க....போட்டில்லாம் இல்லைங்க சும்மா ஃபன் தான்:) தாமதமானா என்ன நீங்க வந்ததுல சந்தோஷமே.. பாப்பாவை வாழ்த்தினதுக்கு நன்றி.

    ReplyDelete
  95. அச்சோ!.. தாமதமா வந்திட்டேனே!

    உங்கள் குழந்தைக்கு எனது மிகவும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    நான் 21/ 11...உங்கள் பெண் 11/11! முன்பே பிறந்ததால் மூத்தவள் ஆகிவிட்டால். ஹி..ஹி.. ஹி..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.