Social Icons

Pages

Friday, November 18, 2011

குலம் தரும்!




விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது?

மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு கோபுரம்! ஊரில் உள்ள 21 கோபுரங்களுள் இதன் சிகரப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.. இன்று ராஜகோபுரமாய் விண்ணைத் தொட்டு நிற்கிறது!

ஒரு சின்னதிலிருந்து ஒரு பெருசு. விதைக்குள்ளிருந்து விகசித்துக் கொண்டு விருட்சம் வெளிப்படுகிறதே அதுபோல்!

மனிதனுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்கணும் அந்த லட்சியம்-இலக்கு- உன்னதமாக இருக்க வேண்டும் இருந்துவிட்டால் அது நிறைவேறியே தீரும் அதற்கு சாட்சி இந்தக் கோபுரம் மணவாளன் பெருமூச்சு விடுகிறான். அவனுக்குக்கூட ஓர் ஆசை,ஒருகனவு ,ஒரு லட்சியம் இருக்கிறது ரொம்பக் காலமாக இருக்கிறது அதை வாய்விட்டு யாரிடமும் அவனால் சொல்ல இயலவில்லை சொல்லி என்ன பயன்? ஏழை கனவு காணக்க்கூடாது அவனுக்கு அந்த உரிமை இல்லை அவன் அப்பாகாலத்தில் குடும்பம் ரொம்ப செழிப்பாகத்தான் இருந்தது அந்தப் பரம்பரையில்வந்த தோஷம்-ஒருவேளை-அதுவே வியாதியாகப்போயிற்றோ?

மணவாளனுக்கு இன்னமும் எட்டுக்கல் விட்டெறிகிற நினைப்பு.

"மணவாளா! கோபுரத்திருப்பணிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கிறியா? "கேட்டவர் இளையாழ்வார்

தபாலாபிசில் வேலை பார்த்து சமீபத்தில் ரிடையர் ஆனவர் எந்த நேரமும் அவர் கையில் நன்கொடை ரசீதுடன் ஊரில் வளைய கொண்டிருந்தார்.

"வாங்கணும் சாமி கட்டாயம் வாங்கணும்" என்றான் மணவாளன்.
"பத்துருவா தான் ஒருசீட்டு கிழிக்கட்டுமா?'

"இப்பொ வேண்டாம் சாமி கையிலே பணமில்லை,,ஒரு சீட்டு என்ன சாமி நூறு சீட்டு வாங்கறதா நேர்ந்துட்டு இருக்கேன்"


இளையாழ்வார் தபாலாபீசில் சேமிப்புக்கணக்கு இன்ஷ¥ரன்ஸ் எல்லாம் வரவு செலவு செய்பவர் அவர் மனசு கணக்கு போட்டது ஓராயிரம் ரூபாயாவது இவன் இந்த ஜன்மத்தில் சேர்க்கிறதாவது?அப்பன் பாட்டன் காலத்திலே வகையாய் வாழ்ந்துடாங்க இல்ல அந்த நினைப்பு விடல்ல... பாவம் மணவாளன்..

அவர் வேறு ஆள் பார்க்க நகர்ந்துவிட்டார்.

அன்னிக்கு சொல்லியாயிற்று இளையாழ்வாரிடம் ..ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று மணவாளனுக்குத்தோன்றவே இல்லை ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையா?பெரிய பெருமாள் மனசு வச்சா தாயார் கடைக்கண் பார்த்தா ஆயிரம் என்ன லட்சம் கூட தீயினில் தூசாகும்!
திருமங்கை மன்னர் ஒருராத்திரியிலெயே மதில் கட்டினாராம
அம்மாடியோவ்! அவங்க எல்லாம் மனுஷங்க இல்ல...தெய்வம்!

மணவாளன் பெருமூச்சு விடுகிறான்

"அப்போவ்"

கனவு கலைகிறது

எதிரே மகள், பெயர் நப்பின்னை இதுலே எல்லாம் குறைச்சல் இல்லை

வாய்த்தபெண்டாடியின் பெயர் நாச்சியார் மகன் நம்பி-தாத்தாவின் பேர் கடைகுட்டி வகுளாபரணன்.

இந்த நம்பிப்பயல் ஸ்டேட் ·ப்ஸ்ட் வருவாவானென்று மணவாளன் கனவு கண்டான் கடைசியில் என்னவென்ரால் அவன் நம்பரே பேப்பரில் வரவில்லை ஒருதடவை இரண்டுதடவை உஹும் அவன் நம்பர் வரவே இல்லை.

கடைசியில் நம்பி டூரிஸ்ட் பஸ் ஏதும் வராதா யாராவது வடநாட்டுக்காரன் அதிர்ஷ்டவசமாய் வெளினாட்டு ஆசாமி கிடைக்க மாட்டானாஎன்று அலைகிற டூரிஸ்ட் கைடாகப் போய்விட்டான்

தானாகக் கைவந்த கலை-கேட்டுக்கேட்டுப் பழகிய பழம் பெருமைகளை புது மெருகுடன் உடைசல் ஆங்கிலம் தெலுங்கு இந்தியுடன் சமயத்திற்குத்தக்கவாறு எடுத்துச் சொல்லி ஒருநாளில் அதிக பட்சம் முப்பதுரூபாய் சமபாதித்து காலத்தை கழித்துவருகிறான்


"அப்போவ்' மறுபடி கூவினாள் நப்பின்னை

"என்னம்மா?'

"ஸ்கூல் ·பீஸ் கட்டணும் நாலைக்கு கட்டாட்டி பேரை அடிச்சிருவாங்களாம்.."

மணவாளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்



நப்பின்னையின் கண்கள் அழகாய்ப் பெரிதாய் காதளவு நீண்ட கண்கள்-அவனைப்போலவே அவளும் கனவு காண்கிறாள் என்பதை நினைவூட்டின
"நாளைக்குத்தானேகட்டணும் கட்டிட்டாப் போச்சு?"

"போங்கப்பா! நீங்க இப்படித்தான் சொல்வீங்க ஆனா முடியலன்னு கடேசில கட்டமாட்டிங்க" சிணுங்கியபடியே அவள் நகர்ந்தாள்

இந்தப்பெண்கூட என்னை எவ்வளவு நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறது?

நம்பி அவசரவசரமாக வந்தான்
"அப்பா இருபது ரூபா குறையுது,,, உங்கிட்ட இருக்குமா?; என்று கேட்டான்

"என்னப்பா என்ன விஷயம்?"

நம்பி பதில் சொல்வ்சதற்குள்"நமஸ்காரண்டி" என்றபடியே ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளே நுழைந்தார்

"பாவம்பா..ஆந்திராக்காரராம்..நம்ம ஊருக்கு வந்த இடத்துல இவர் பையை எவனோ திருடுட்டானாம். கோயில்ல மண்டபத்துல தவிச்சிடிருந்தாரு...யாரும் இவர லட்சியம் செய்யல.. நாந்தான் பாத்து விவரம் கேட்டேன்...என் கையிலே இருபது ரூபா இருக்குது நீங்க ஒரு இருபது ரூபா கொடுத்தா டிக்கட் வாங்கி சொந்தக்காரங்க ஊருக்கு- பக்கத்துலதானாம்- போயிட்றராம் ..ஊரு போயிச் சேர்ந்ததும் பணம் திருப்பிடுறேங்கறாரு.."



மணவாளன் பெருமூச்சு விட்டான்.

புலிக்குப்ப்பிறந்தது பூனையாகுமா?


என்னைப்போலவே நீயும் பைத்தியக்கரானாய் இருக்கியேடா? அவனவன் ஆளுகிடச்சா தேட்டை போட்றான் நீ என்னடான்னா கைக்காசை எடுத்து தானம் கொடுக்கிறேங்கறே.... வம்சாவளிடா எல்லாம் வம்சாவளி...


அப்பாவின் மௌனம் மகனுக்குப் புரிந்து போனது

கடைசியில் அந்த ஆந்திரவாடு இருபதுருபாயோடுதான் புறப்பட்டுப்போனார்

கும்பாபிஷேகத்துக்கு நாள்கூட வைத்துவிட்டர்கள் இப்போது மணவாளன் அந்த ஆயிரம் ரூபாயை கோபுரத்திருப்பணிக்குச் செலுத்திவிட பரபரக்க ஆரம்பித்தான்.

திண்ணையில் படுத்தபடியே ஆகாயத்தைப் பார்த்தவனுக்கு ஒருவழியும் புலப்படவில்லை. இந்தத்திருப்பணிக்கு எங்க வம்சத்துக் காணிக்கை எப்படியாவது போய்ச்சேரணும் பணம் செலுத்தறதா நேர்ந்துட்டிருக்கக்க்கூடாது அப்படி நேர்ந்துக்கிட்ட பிறகு அதை செலுத்தாம இருந்தா அது பேரன் பேத்திகாலம் வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்குமாம்.



அழகியமணவாளா! நம்பெருமாளே! உன் திரு உள்ளம் என்னவோ?


'குலம் தரும் செல்வம் தரும்

அடியார்படுதுயராயினவெல்லாம்..'

வாய் பாசுரம் முணுமுணுத்தபடி இருக்க கண் மூட ஆரம்பித்தது ஆனால் இனந்தெரியாத துயரம் ஒன்று

பெருமூச்சாய் வெளிப்பட்டு அதுவே மெல்ல மெல்ல விம்மலாகி உள்ளேயே அமிழ்ந்து நெஞ்சை அடைக்க ஆரம்பித்துப் பிறகு தூக்கத்தில் கொண்டு விட்டது.

எத்தனை நேரமாயிற்றோ திடீரெனத் தன்னை யாரோ வந்து உலுக்கவும் விழித்தான்


"ஏய் என்ன தூக்கம் இன்னமும்?'

குரல் மிக அருகாமையி;ல் அவனைக்கிட்டத்தட்ட அணைத்துக் கொண்டு ரொம்பவும் அந்நியோன்னியமாய் அதட்டியது மனவாளன் அந்தகுரலைத் துழாவிப்பார்த்தான் எங்கோ கேட்ட குரல்! ஆத்மாவை ஊடுருவும்குரல் !அந்தக்குரலுக்குள் பழமை நெடி வீசிற்று.

"ஏய் என்னைதெரியல....மணவாளா என்னடா,என்ன முழிக்றே?'

மணவாளன் எழுந்து உட்கார்ந்தான் இப்போது அவனுக்குத்தெரிந்து போயிற்று

"நீ நீ ...குல சேகரன் இல்ல?"என்ற்வன் சட்டென குதூகலமாகிப்போனவனாய் மனைவியை அழைத்து," ஏய் நாச்சி இங்க வாயேன் இது யார் தெரியுமில்ல,,, குலசேகரன் முழுப்பேரு குலேசுதான் நான் கூப்டுவேன்... நாச்சி !நானும் இவனும் அந்தநாளில் அடிச்சிருக்குற கொட்டம் கணக்கு வழக்கில்ல .."என்றான்

மறுபடி குலேசைப்பார்த்து," குலேசு பம்பாய்க்கில்ல போனே? எப்படி இருக்கே புள்ளை குட்டிங்க சுகமா?" என்று கேட்டான்


" எல்லாரும் நலம்...மணவாளா!உன்னை இவ்ளவு நாள் கழிச்சிப்பார்க்கிறபோது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம ஊரே மாறிப்போயிருக்குடா இப்போ... ஆனா நீமட்டும் மாறவே இல்ல"


மணவாளன் மெல்லச் சிரித்தான்

"சரி கிளம்பு ?"என்றான் குலசேகரன்

"எங்கே?"

"முதலிலே கொள்ளிடத்திலே குளிக்கணும்.. எம்பெருமான் சேவை பண்ணீக்கணும் அப்புறமா கோபுரத்திருப்பணிக்காக ஒரு சின்னத்தொகை கொண்டுவந்திருக்கேன் அதை செலுத்திடணும் அவ்வளவுதான் மணவாளா"

"ஓ!புறப்படலாமே? நாச்சி! மதியத்துக்கு சாப்பாடு தயார் செய்துவை." என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் உட்புறம் சென்று சமையற்கட்டில் மனைவியிடம் "வராதவன் வந்திருக்கான், ஒருபாயசம் படைச்சாதான் மரியாதை.." என்று நெளிந்தான்.

நாச்சியாரம்மாள் தலையை அசைத்தாள். ஆனல் அவள் எப்படி பாயசம் வைப்பாள் என்பது மணவாளனுக்குப் புரியாத புதிராக இருந்தது பிள்ளையாண்டானோ கிடைத்த இருபதை அந்த ஆந்திரக்காரனுக்கு தானம் வார்த்து விட்டான், தானும் பைசா காசு கொடுக்கவில்லை
செப்படிவித்தை செய்தாலே ஒழிய அடுப்பில் பால் பொங்கவே வழி இல்லை ஆயினும் நாச்சியார் தலை அசைத்ததிலிருந்து ஒருபாரம் நீங்கிய நிம்மதி நண்பர்கள் கொள்ளிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்

வழிநெடுக பழைய கதையெல்லாம் குலசேகரன் விவரித்தான்.

பம்பாயில் சொந்தவீடு ஒரு கார் மகன் அமெரிக்காவில் படிக்கிறானாம்...

கேட்கக்கேட்க மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

ஒருகாலத்தில் கோபுரமாயிருந்த தன்னுடைய வம்சம், குப்பை மேடாகிவிட்டதையும் ஒருகாலத்தில், குப்பைமேடாயிருந்த் குலசேகரனின் வம்சம் இப்போது கோபுரமாகி விட்டதையும் எண்ணிப்பார்க்கிறபோது அந்த வியப்பு பெரிய வினாக் குறீயாக மாறிற்று.

"மணவாளா! ஒரு பத்தாயிரம் ரூபா கோபுரத் திருப்பணிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன் ஆனாலும் பாருடா எனக்கு உன்னைப் பார்த்தா பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கு. என்னால தரமுடிஞ்சதெல்லாம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் ..ஆனா நீ, உன் உழைப்பை ரத்தத்தை வேர்வையை மூச்சை என்று எல்லாத்தியும் ஆத்மார்த்தமாய் பெருமாளுக்குச் செலுத்தி இருக்கியேடா!நானெல்லாம் காசுபணம் என்று ஊரைத் துறந்து போனவன் ஆனால் நீ அப்படி இல்லடா....பொறந்தமண்ணை மதிச்சி அதுக்கு உயிரைக்கொடுக்க வாழ்ந்திட்டு இருக்கிறவன்.”

மணவாளனுக்கு இந்தப்பேச்சு சற்று சமாதானமாக இருந்தாலும் நேர்ந்துகிட்டதை தன்னால் நிறைவேற்றமுடியாது என்பதால் ஏற்பட்ட ஏக்கம் பெருமூச்சாக வெளிப்பட்டது.

 "மணவாளா !என்னால இந்தப் பத்தாயிரம் ரூபா இப்போ கொடுக்கமுடியுதுன்னா அதுக்கு யார் காரணம் தெரியுமா?" தொடர்ந்து  வினவினான் குலசேகரன்

மணவாளன் விழித்தான்

"நீதான் காரணம், உங்ககுடும்பம் காரணம் ! நீங்க ஏத்தி வச்ச விளக்கு கார்த்திகை தீபமாய் எரியுதுடா.."

"குலேசு, நீ என்ன சொல்றே?"

"ஏண்டா? மறந்திட்டியா? அப்போ நான் பம்பாய் போகிறபோது உங்கப்பா என்னை ஆசிர்வாதம் செய்து பணம் கொடுத்தாரே,ஞாபகமில்லயா உனக்கு?"

"அப்படியா? இருக்கலாம்... அவர் காலத்தில் செயலாய் இருந்தாரு கொடுத்தாரு.."


"அந்தப்பணத்தில் தாண்டா என் வாழ்க்கையே உன்னதமான நிலைக்கு வந்தது..அட..பணத்தைவிட்டுத்தள்ளு.. உங்கப்பாவிடம் பெற்ற ஆசிர்வாதம் தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவிட்டிருக்குதடா.... மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"


மணவாளனுக்கு கண்களில் நீர் சுரந்தது.

அவனுடைய தெய்வம் தனது கோபுரத் திருப்பணிக்கு அவன் நேர்ந்து கொண்டதை எவ்வளவு அழகாய் கணக்காய் வசூல் செய்து கொள்ளத் திட்டமிட்டுவிட்டது?
எதிரே குலசேகரன், கோபுரமாய், தன்னுடைய கனவின் நனவாய், ஆதர்சமாய் நிற்கக் கண்டான்.
***************************************************************************************************************


(கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான  (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!

32 comments:

  1. அற்புதமான ஸ்டோரி..
    சென்சேஷனல்...
    படித்ததும் என்னையறியாமல் கண்களில் நீரோடியது..

    ReplyDelete
  2. நல்ல எழுத்து நடை..

    ஆமாம் சொல்ல மறந்திட்டேன்.. என்னோட கதைக்கு (பரிசல்காரன், ஆதி - சிறுகதைப் போட்டி) ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. (one of the final 15)

    ReplyDelete
  3. //Madhavan Srinivasagopalan said...
    அற்புதமான ஸ்டோரி..
    சென்சேஷனல்...
    படித்ததும் என்னையறியாமல் கண்களில் நீரோடியது..

    8:52 PM


    Madhavan Srinivasagopalan said...
    நல்ல எழுத்து நடை..

    ஆமாம் சொல்ல மறந்திட்டேன்.. என்னோட கதைக்கு (பரிசல்காரன், ஆதி - சிறுகதைப் போட்டி) ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. (one of the final 15)

    8:54 PM

    ////<<<<<< சவால்போட்டில ஆறுதல்பரிசுக்கு வாழ்த்துகள் மாதவன். மேலும் நிறைய பரிசுவாங்கணும்.இந்த என் கதையை பாராட்டினதுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஆறுதலான கதை!
    ஆறுதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்-க்கா:)

    ReplyDelete
  5. அற்புதமான கதை
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    உங்களுக்கு மட்டுமா
    படிப்பவர்கள் அனைவருக்கும் பிடித்த கதையாய்
    நிச்சயம் இக்கதை இருக்கும்
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  6. -குப்பை மேடு கோபுரமாவதையும், கோபுரம் குப்பை மேடாவதையும் நான் கண்டிருக்கிறேன். அதனூடாக ஆன்மீகத்தை இழையவிட்டு அழகாக கதை செல்லியிருக்கிறீர்கள். படித்து முடித்ததும் மனதில் எழும் நிறைவு உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியக்கா...

    ReplyDelete
  7. kகல்கியில் கதை வந்ததற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"//

    பெருமாளுக்கு கொடுக்கவும் தெரியும் ,பெற்றுக் கொள்ளவும் தெரியும்.

    கதை அருமை.
    மனதை நெகிழ வைத்து விட்டது.

    ReplyDelete
  9. (கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!//

    அப்போதும் பிடித்தது.

    இப்போது அதிகமாக பிடிக்கிறது.

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. இண்ட்லியில் இணைத்து பரிந்துரைத்துரைத்துவிட்டேன் விருப்பமாக..

    ReplyDelete
  11. //இராஜராஜேஸ்வரி said...
    இண்ட்லியில் இணைத்து பரிந்துரைத்துரைத்துவிட்டேன் விருப்பமாக..

    6:26 PM

    //<<<நன்றி இராஜேஸ்வரி நான் இணைக்க முயற்சி செய்தேன் முடியவில்லை

    ReplyDelete
  12. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஆறுதலான கதை!
    ஆறுதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்-க்கா:)

    7:05 AM

    ///.ஹலோ ஆறுதல்பரிசா யாருக்கு? என்னவோ குழப்பம் உங்க்ளுக்கு கே ஆர் எஸ்!!! எனிவே சொன்ன வேளை ஏதாவது பரிசு கிடைக்கட்டும் வாழ்த்துக்கு நன்றீ.

    ReplyDelete
  13. // Ramani said...
    அற்புதமான கதை
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    உங்களுக்கு மட்டுமா
    படிப்பவர்கள் அனைவருக்கும் பிடித்த கதையாய்
    நிச்சயம் இக்கதை இருக்கும்
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2

    7:26 AM


    கணேஷ் said...
    -குப்பை மேடு கோபுரமாவதையும், கோபுரம் குப்பை மேடாவதையும் நான் கண்டிருக்கிறேன். அதனூடாக ஆன்மீகத்தை இழையவிட்டு அழகாக கதை செல்லியிருக்கிறீர்கள். படித்து முடித்ததும் மனதில் எழும் நிறைவு உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியக்கா
    //

    நன்றி திருரமணி மற்றும் கணேஷ்

    ReplyDelete
  14. சி.பி.செந்தில்குமார் said...
    kகல்கியில் கதை வந்ததற்கு வாழ்த்துகள்

    8:25 AM

    >>>ஆமா முன்ன எப்பொவோ வந்தது செந்தில் நன்றி

    ReplyDelete
  15. // கோமதி அரசு said...
    மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"//

    பெருமாளுக்கு கொடுக்கவும் தெரியும் ,பெற்றுக் கொள்ளவும் தெரியும்.

    கதை அருமை.
    மனதை நெகிழ வைத்து விட்டது.

    2:27 PM

    //

    <<<>>>மிக்க நன்றி கோமதி அரசு

    ReplyDelete
  16. //இராஜராஜேஸ்வரி said...
    (கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!//

    அப்போதும் பிடித்தது.

    இப்போது அதிகமாக பிடிக்கிறது.

    வாழ்த்துகள்..

    6:19 PM

    ///

    இராஜேஸ்வரி அப்போதே வாசித்தீர்களா? மீண்டும் வாழ்த்துவதற்கு நன்றி மிக

    ReplyDelete
  17. ஆஹா.. நம்ம ஸ்ரீரங்க கஸ்தூரி வாசனை.. மணக்கிறது..
    இளையாழ்வார்.. மணவாளன்.. குலசேகரன்.. நப்பின்னை.. நம்பி..

    பெயர்களை பார்க்க பார்க்க.. என்ன ஒரு ஆனந்தம்..

    ReplyDelete
  18. // ரிஷபன் said...
    ஆஹா.. நம்ம ஸ்ரீரங்க கஸ்தூரி வாசனை.. மணக்கிறது..
    இளையாழ்வார்.. மணவாளன்.. குலசேகரன்.. நப்பின்னை.. நம்பி..

    பெயர்களை பார்க்க பார்க்க.. என்ன ஒரு ஆனந்தம்..

    7:15 PM

    ////அதைவிட ரிஷபனின் வருகையில் எனக்கு ஆனந்தம் நன்றி ரி!!!

    ReplyDelete
  19. தீந்தமிழ்ப் பெயர்களோட அருமையான கதை.

    எடுக்கத் தெரிஞ்சவனுக்குக் கொடுக்கத் தெரியாதா என்ன :-)

    ReplyDelete
  20. ஷைலூ,

    படிச்சதும் கண்ணுலே கரகர.........
    என்ன ஒரு நடை......... !!!!!

    'பெருமாள் அவனுக்கு வேண்டியதை எப்படியெல்லாம் வாங்கிக்கறான் பாரேன்'ன்னு........ மனசு கூவுதுப்பா.

    ReplyDelete
  21. ////
    ><<<>எவ்ளோஅழகா சொல்றீங்க அமைதிச்சாரல் நன்றி நன்றி!

    ReplyDelete
  22. துளசி கோபால் said...
    ஷைலூ,

    படிச்சதும் கண்ணுலே கரகர.........
    என்ன ஒரு நடை......... !!!!!

    'பெருமாள் அவனுக்கு வேண்டியதை எப்படியெல்லாம் வாங்கிக்கறான் பாரேன்'ன்னு........ மனசு கூவுதுப்பா.

    5:42 AM

    /////வாங்க துள்சி...உங்க மனசு கூவுறதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி...மனசிலிருந்து வார்த்தைகளை அள்ளி வீசும் துளசியின் ம(ண)னம் வாழ்க! நன்றி மிக.

    ReplyDelete
  23. //Kanchana Radhakrishnan said...
    கதை அருமை.

    10:53 AM

    ///மிக்க நன்றி காஞ்சனா

    ReplyDelete
  24. தேர்ந்த எழுத்துக்கள். கதையின் மனிதர்களை மனதிற்கு பக்கத்தில் கொண்டு வந்த நடை. சுஜாதா, பாலகுமாரன் படித்த உணர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. அரங்கனின் ஆடல் அளவிட இயலாது இதுவும் அவன் விளையாட்டே!
    அருமை!

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. அரங்கனின் ஆடல் அளவிட இயலாது இதுவும் அவன் விளையாட்டே!
    அருமை!

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. அரங்கனின் ஆடல் அளவிட இயலாது இதுவும் அவன் விளையாட்டே!
    அருமை!

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. //ரசிகன் said...
    தேர்ந்த எழுத்துக்கள். கதையின் மனிதர்களை மனதிற்கு பக்கத்தில் கொண்டு வந்த நடை. சுஜாதா, பாலகுமாரன் படித்த உணர்வு. வாழ்த்துக்கள்.

    6:24 PM

    ////நன்றி ரசிகன்.. தேர்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்களுடன் என் நடையும் சற்று சேர்ந்திருப்பதாய் சொன்னதில் மகிழ்ச்சியும்.

    ReplyDelete
  29. புலவர் சா இராமாநுசம் said...
    அரங்கனின் ஆடல் அளவிட இயலாது இதுவும் அவன் விளையாட்டே!
    அருமை!

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    6:25 PM

    >>>>>.நன்றி புலவர் ஐயா......தமிழ்மணத்தில் ஓட்டுபோட்டதற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. மிகவும் அழகாக அருமையாக கூறியக் கதை... அங்கங்கே மனதை கசியச் செய்கிறது...
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
    சங்கு சுட்டாலும் வெண்மையே தரும்..

    கல்வியில் சிறக்காவிட்டாலும் உயர்குடிக் காண (வாழ்ந்த நல்லக் குடும்பத்திற்கான) லட்சணம் மகனிடம் மறையாமல் இருப்பதைக் காண்பது தந்தைக்கு மகிழ்ச்சியே!
    நன்றி பாராட்டுவதும்... அந்த நன்றி உணரவே நண்பனை உயர செய்திருக்கிறது என்பதும்... எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் தேட
    வெளியில் சென்றாலும்.... மண்ணுக்கு செய்ய வேண்டியவைகளை நாம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த நண்பனிடம் வெளிப்படுத்தியதும் அருமை... அது அனுபவ உண்மையே!

    அருமையான கதை.. நன்றிகள் சகோதிரி..

    ReplyDelete
  31. தமிழ் விரும்பி said...
    மிகவும் அழகாக அருமையாக கூறியக் கதை... அங்கங்கே மனதை கசியச் செய்கிறது...
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
    சங்கு சுட்டாலும் வெண்மையே தரும்..

    கல்வியில் சிறக்காவிட்டாலும் உயர்குடிக் காண (வாழ்ந்த நல்லக் குடும்பத்திற்கான) லட்சணம் மகனிடம் மறையாமல் இருப்பதைக் காண்பது தந்தைக்கு மகிழ்ச்சியே!
    நன்றி பாராட்டுவதும்... அந்த நன்றி உணரவே நண்பனை உயர செய்திருக்கிறது என்பதும்... எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் தேட
    வெளியில் சென்றாலும்.... மண்ணுக்கு செய்ய வேண்டியவைகளை நாம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த நண்பனிடம் வெளிப்படுத்தியதும் அருமை... அது அனுபவ உண்மையே!

    அருமையான கதை.. நன்றிகள் சகோதிரி..

    10:51 AM

    >>>ஆழ்ந்த வாசிப்பின் எதிரொலியாய் அழகிய விமர்சனம் நன்றி தமிழ் விரும்பி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.