'ப்ரபாகர் ப்ரபாகர்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா இரண்டுநாட்களாய் மௌனவிரதம் இருக்கிறாள்.
'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய் வித்தகன் சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..' வேலாயுதம் கூட்டிப்போய் வேண்டியமட்டும் வாங்கிக்கட்டிக்கிட்டேன் அதான் வித்தகனுக்கு மல்டிப்ளசுக்கு வரசொல்லவில்லை. படம் பவித்ராக்குப்பிடிக்கலைன்னா கல்யாணம் ஆகுமுன்பே டைவர்ஸ் செய்துவிடுவாள் என்கிற பயம்தான்! செல்போனை செல்லாதபோனாய் ஆக்கிவிட்டாள்.எப்போதும் ஸ்விட்ச்ட் ஆஃப் என்கிறது அது!
யோசித்தபடி உன்னோடு பேசாத கணங்கள் என்ற தலைப்பில் ப்ரபாகர் புதுக்கவிதை எழுதப்பார்த்தான்.வரவில்லை. கோபமாய் ஐபோனில் யு ட்யூப்பில் எதையோதேடினான்.. ஒய்திஸ்கொலைவெறிடி என்றார் தனுஷ்.
அடப்ப(பா)வி! என்கூட பேசாமலே இருக்கியே.. ஒய் திஸ் கொலைவெறிடி?
இப்படித்தான் காதலிக்க ஆரம்பித்த புதிதில் தசாவதாரம் சினிமாவிற்கு ப்ரபாகர் போய்விட்டான் என்று கோபித்துக்கொண்டாள்
. கொஞ்சம் (தசா) அவதாரகாலத்துக்குப்போய்வரலாம் வாங்க...
அன்று....
" லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் ,·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் கோபாலன் மால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.
இடைவேளையில் மெக்டொனால்ட்டில் விரல் வறுவல்(ஃபிங்கர் சிப்ஸ்) சாப்பிடும்போது் பவித்ரா போன் செய்தாள்.
்" ஹாய் பவி...!" ஆசையாய் அழைத்தான்.
"ப்ப்ப்ரப்ப்பாக்கர்ர்ர்.!.சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ... ஆம்ம்ம்மா” என்றாள்.பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள் பட்டாசாய் வெடிக்கும்!
பவி தொடர்ந்தாள்.
உன்னைப்பழிவாங்க நைட் என் ஹாஸ்டல்ரூம்போனதும் என் ஃபேவரிட் ஆக்டர் Tom Cruise
நடிச்ச ஒரு ஹாலிவுட்மூவி பாக்கப்போற்ற்றேன்.
" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!
'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள்.
அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்எனபவித்ரா, ப்ரபாகரிடம் உயிராய் பழகுபவள்.
அப்படிப்பட்டவளிடமிருந்து இப்போது ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...குறுஞ்செய்தி இல்லை!முக நூலில் ட்விட்டரில் என்று எங்கும் தேடி பவியைக்காணா மனமும் வாடுதே என்று ப்ரபாகர் பாடினான்.
.'என்னாச்சு பவித்ராவுக்கு? இப்போ நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி்,'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'
ப்ரபாகர் கிளம்பினான்.
அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கேஇரண்டுநாளாய் வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...
அப்போ உடம்புதான் சரி இல்லை...
உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே? அதனால்தான் ஆஃப் செய்து வைத்திருக்கிறாயா?
அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.
"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப் பாடலாய்க் கூவி அழைத்தான்.
அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!
மெல்லத்திரும்பியவள், ப்ரபாகரைக்கண்டதும் கண்மலர" ப்ரபாகரா! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்,.ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..
அவளுக்கு பவித்ராவின் காதலன் ப்ரபாகர் என நன்கு தெரியும் .
்"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல கன்னடத்துல பேச வச்சி என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'
" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .நீங்க லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் வர்முட்யாது. அதுக்கே நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'
புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்!மூணு மணிக்கு லால்பாக் க்ளாஸ் ஹவுசுக்கு அவளை வரச்சொல்லு. மாடு(செய்) அகிலா மாடு”என்றான்.
“நாட்டிபாய்! மாடுன்னா கன்னடத்துல செய்..ஆனா தமிழ்ல என்னன்னும் தெரியுமே..யானைன்னு சொல்லாதவரை ஒல்லேது(நல்லது) என்று நகர்ந்த அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.
ஒன்றும் இளைப்பாய் தெரியவில்லை.அனுஷ்கா உயரத்தில் ஆப்பிள் கன்னத்தில் ஜோதிகா கண்களில் துறுதுறுவென்றே தெரிந்தாள்.
"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு ப்ரபாகர். மூணுவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட சென்னைல கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் வித்தகன் சினிமா போனால் அதுக்கு நீ இப்படி மெத்தனமா நடந்துக்கணுமா?
சத்தமேயின்றி மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.
“அடப்பாவி பவி! 48மணிநேரமா பாக்கலயே! இப்ப கண்டதும் ப்ரபாகர்னு ஓடிவந்து கட்டிப்பேன்னு நினச்சா என்னவோ சிலைமாதிரி நிக்கற?”
பவித்ரா தயக்கமுடன்,”அது அது....”என்றாள்.
என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..
அது அது...எனகு பேசவே வரல
ஏன் அதான் பேசறியே?
அழுத திருதமா நாக புரட வரல
வாட்? என்ன மொழி பேசறே?
தமிதா
என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி!
ஐயொ பெரபாகர பெரபாகர எனகு பேசவரல முனபோல..
வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு
இல இல
என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!
எபடி சொலவே பெரபாகர?
என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்காட்டு..
கைப்பையிலிருந்து தேடி ஏதோ துணிக்கடை பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.
அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,
" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா,ஹாரர் மூவி பார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி? போன் செய்யாதகாரணமும் இதுதானா, குறுஞ்செய்தி மின்மடல் எல்லாம் அனுப்ப மனசு தயங்கி குறுகுறுத்ததால் எதுவும் அனுப்பலையா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",
ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசு
வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா அல்லது புலவர் சா. ராமானுசம் அவர்களிடம் உன்னை நல்ல தமிழ்கற்றுக்கொள்ள அனுப்பட்டுமா?
உனகு என நெலமை புரியாதா ? இதுகுதான் நா எதுவு சொலல ரடு நாளா உனகிட....சகதிபிரபா கிட சொனபோ அவ ஆறுதலா யு விலபி ஆலரைடுன்னு இதமா சொனா..நீ கிடல் செயறே..
கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.
பைக்கை ஸ்டார்ட் செய்தான் ப்ரபாகர். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது.
“நீ எதுல வந்தே பவி?உன் ஆக்டிவாலயா?
இல..அது ரிபே(ர்) அகிலா அவ (ஸ்க்)கூ(ட்)டில லாலபாகல கொடு விடு போயிடா
லால்பாக் வாசல் வரை இருவரும் நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.
சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.
சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?
பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.
கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.(டாக்டர்கிட்டபோங்க)." என்றார் கிண்டலாய்.
நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து ப்ரபாகர் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்
"தாஙஸ பெரபாகர? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.
பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..
எபடி இல எபடிகற? சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?
கஷ்டம்தான் உனக்கு.. ம்ம்...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால்,வித்தகன் கண்டுவந்தால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்தரு பத்தித்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா
்ஹே சிரிகாத..
அவளை பரிசோதித்துவிட்டு " இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... " என்று வழக்கம்போல் மூக்குக்கண்ணாடியைக் கழற்றியபடியே டாக்டர் சொன்னார்.
”இதற்கு என்னசிகிச்சை டாக்டர்? அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"
நோ நோ...இது ஒருமனபிராந்தி
அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?
யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்
எப்போ டாக்டர்? இன்னும் மூணுவாரத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!
\"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க ,க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.
"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.
பவித்ராவை அழைத்துக்கொண்டு ப்ரபாகர் தன்அறைக்கு வந்தான்.
"என்ன பெரிய படம் அது? காஞ்சனா படத்தைவிடவா? படுபயங்கரமான அந்தப்படத்தை என் ஃப்ரண்ட்ஸ் ராஜேஷ் சசிகுமார் ரசிகன்லாம் கூட பார்க்கமுடியாதுப்பான்னு ஓடிட்டாங்க.. ஆனா நான் தனியா சிடிலபார்த்தேன்..அப்படி ஒருவீரன்கிட்ட நீ பேசிட்டு இருக்கே பவி! அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?
நானா? நோ நோ... பய பய எனகு
அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!
தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.
பவித்ரா " வேடா வேடா " என்றாள்.
வேடா?யார் வேடன்?
இல...மூவி பாக வேடா
படம் பாக்க வேண்டாமா?
ஆமாஆமா
எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."
டிவிடி ப்ளேயரில் 1408 என்னும் அந்தப் பேய்ப்படம் ஆரம்பமானது.ஸ்டிஃபன்கிங் எழுதியது.
ஹ என்ன பெரிய ஹாலிவுட்படம்னா உடனே பயப்படணுமா?
ப்ரபாகர் கிண்டலாய் சிரித்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.
இன்னும் சில நிமிடங்கள் ஆனதும்...
அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...ஐயொ..அம்மா... ரத்தவாந்தி எடுத்துடுவேன் போலிருக்குதே.....
என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.
பவித்ரா படத்தில் ல்யித்திருந்தவள் திரும்பினாள்.
" ஐய்யெய்யோ.என்னாச்சு ப்ரபாகர் ஏன் இப்படிகூச்சல்போடறே,முத தடவை பயமாத்தான் இருக்கும் ஆனா இப்போ நான் சுத்தமா பயப்படாம ரசிச்சி பாக்கறேன்..ஆமா என்ன பயந்துட்டீயா நீயும்?"என்றாள்
அப்போதுதான்
சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.
"வாவ்வ்வ்வ்வ்வ்! ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.
மயக்கம் சற்று தெளிந்த ப்ரபாகர் கண்விழித்தான்.
,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.
"ஐய்யோ..ப்ரபாகர் உனக்கு என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ மை காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா... “
--
Tweet | ||||
யாராவது இண்ட்லி உலவில் உடான்சில் சேர்த்து விட்டால் மெய் உள்ளவரை மறக்கமாட்டேன்!!!
ReplyDelete>>>ஷைலஜா said...
ReplyDeleteயாராவது இண்ட்லி உலவில் உடான்சில் சேர்த்து விட்டால் மெய் உள்ளவரை மறக்கமாட்டேன்!!!
hi hi அட்டாச்மெண்ட் ஃபீஸ் ரூ 50 எம் ஓ செய்க
>>. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்
ReplyDeletehi hi ஹீரோ என்னைப்போல ..
கதை நல்லாருக்கு, வித்தியாசமான சிந்தனை, ராணி புக்குக்கு அனுப்புங்க, கண்டிப்பா செலக்ட் ஆகும், ரூ 400 பரிசு வரும், அதுல 100 ரூபா எனக்கு
ReplyDeleteநல்ல நகைச்சுவை கதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கதை நலா இருகு! :)
ReplyDelete#அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்# நோ நோ...#இது ஒருமனபிராந்தி அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா? # ..
ReplyDeleteநச் நச் னு நகைச்சுவை நல்லா இருக்கு ...
#'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய் வித்தகன் சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..#
ReplyDeleteபவித்ராட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க .. ஒஸ்திக்கு நான் பிரபாகரோட போகல , சிம்புவோட பாத்துக்குறேன் ...
உங்கள் பின்னூட்டம் கண்டு இங்கு வந்தேன். நன்றி. சாவகாசமாய் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.
ReplyDeleteஉங்கள் வலைமனையை நான் பிந்தோடர்ந்தாலும் உங்க பதிவும் அப்டேட் எனது டாஷ்போர்டில் வரவில்லையே ?
உங்க பதிவு எனது டாஷ்போர்டில் இருக்கிறது.. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் பதிவிட்டது போல சொல்கிறது. ஏன்? புரியவில்லை.
ReplyDeleteநல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.
ReplyDelete// பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள் பட்டாசாய் வெடிக்கும்! //
நல்ல உதாரணம்னு நெனைச்சா.. அதுதான் கதையோட கருவா ? பலே.. பலே..
//அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை //
ஹா.. ஹா.. உங்க கதையில காமெடியும் இருக்கு..!!
//ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் //
எழுத்தாளர் ராஜேந்த்ரகுமார் - தாக்கம் !!
// அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.
இன்னும் சில நிமிடங்கள் ஆனதும்... //
இந்த இடத்தில் கதையின் முடிவை ஓரளவிற்கு கணிக்க முடிந்தது என்னால்.
கடைசியாக.... எனக்கு ஒரு டவுட் ?
'விரல் வறுவல்' -- வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா. ?
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
உங்களுக்கு ஹாஸ்யம் ஒரு வரப்ப்ரசாதம். கலக்கல். பல இடத்துல வாய்விட்டே சிரிச்சேன் (ஆனா இப்பவும் முகத்துல வாய் ஒட்டிட்டு இருக்கு...che...humour is contagious!)
ReplyDelete//பவித்ராக்குப்பிடிக்கலைன்னா கல்யாணம் ஆகுமுன்பே டைவர்ஸ் செய்துவிடுவாள்//
//ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..//
//என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி! //
//கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.
கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.//
//ஹ்ம்ம்....முத்தைத்தரு பத்தித்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா //
:)))))))))))))) ரொம்ப ரசிச்சேன்
//யோசித்தபடி உன்னோடு பேசாத கணங்கள் என்ற தலைப்பில் ப்ரபாகர் புதுக்கவிதை எழுதப்பார்த்தான்.வரவில்லை. //
இது என் நிலமை மாதிரி இருந்ததலா, இன்னும் நல்லா சிரிச்சேன் :))))))))))
way to go ! :)
This comment has been removed by the author.
ReplyDeletebtw, க்ளைமாக்ஸ் கிட்ட நெருங்கறச்சே என்னால முடிவு கெஸ் பண்ண முடிஞ்சது
ReplyDeleteஎன்னவோ ப்ராப்ளம் நான் போடும் கமெண்ட்சையே எதிர்க்கிறது இங்க:)
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>ஷைலஜா said...
யாராவது இண்ட்லி உலவில் உடான்சில் சேர்த்து விட்டால் மெய் உள்ளவரை மறக்கமாட்டேன்!!!
hi hi அட்டாச்மெண்ட் ஃபீஸ் ரூ 50 எம் ஓ செய்க
6:38 AM
>>>>
ஒன்லி 50 செந்தில்?:)
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்
hi hi ஹீரோ என்னைப்போல ..
6:42 AM
<<<<<<< அட்ரா சக்கைஅப்படியா?:)
கோமதி அரசு said...
ReplyDeleteநல்ல நகைச்சுவை கதை.
வாழ்த்துக்கள்.
7:56 AM
ஆமா கோமதி அரசு கடந்த 2கதைகலில் ரொம்ப அழ வச்சதா மன்னைமாதவன் ஃபீல் பண்ணினார் அதனாலதான்.. நன்றி
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteகதை நலா இருகு! :)
8:33 AM
வாங்க வெங்கட் நீங்கதான் சரியா பதில் கொடுத்ருக்கிங்க:0 நன்றி
ananthu said...
ReplyDelete#அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்# நோ நோ...#இது ஒருமனபிராந்தி அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா? # ..
நச் நச் னு நகைச்சுவை நல்லா இருக்கு ...
9:06 AM
நன்றி அனந்து
/ananthu said...
ReplyDelete#'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய் வித்தகன் சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..#
பவித்ராட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க .. ஒஸ்திக்கு நான் பிரபாகரோட போகல , சிம்புவோட பாத்துக்குறேன்
//
>>>>??
:) சொல்லிடறேன்:):0
/////Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் கண்டு இங்கு வந்தேன். நன்றி. சாவகாசமாய் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.
உங்கள் வலைமனையை நான் பிந்தோடர்ந்தாலும் உங்க பதிவும் அப்டேட் எனது டாஷ்போர்டில் வரவில்லையே ?
10:13 AM
...
என்னன்னு தெரியலையே மாதவன் சரிபண்ணப்பாக்கறேன்
//Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஉங்க பதிவு எனது டாஷ்போர்டில் இருக்கிறது.. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் பதிவிட்டது போல சொல்கிறது. ஏன்? புரியவில்லை.
10:15 AM
.....<<<
அசச்சோ அப்டியா மாயலோகம் ராஜேஷ்தான் இதுக்கு பதில் சொல்லணும்!!
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteநல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.
// பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள் பட்டாசாய் வெடிக்கும்! //
நல்ல உதாரணம்னு நெனைச்சா.. அதுதான் கதையோட கருவா ? பலே.. பலே..
?
'விரல் வறுவல்' -- வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா. ?
11:00 AM.......<<<>வெஜ்ஜுக்கு வெஜ் நான் வெஜ்ஜுக்கு நான் வெஜ்:):)
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
12:23 PM
புதியவருக்கு நல்வரவு வாழ்த்துக்கு நன்றி வரேன் உங்க இடுகை படிக்கவும்
Shakthiprabha said...
ReplyDeleteஉங்களுக்கு ஹாஸ்யம் ஒரு வரப்ப்ரசாதம். கலக்கல். பல இடத்துல வாய்விட்டே சிரிச்சேன் (ஆனா இப்பவும் முகத்துல வாய் ஒட்டிட்டு இருக்கு...che...humour is contagious!)
இது என் நிலமை மாதிரி இருந்ததலா, இன்னும் நல்லா சிரிச்சேன் :))))))))))
way to go ! :)
க்ளைமாக்ஸ் கிட்ட நெருங்கறச்சே என்னால முடிவு கெஸ் பண்ண முடிஞ்சது
1:42 PM.யு ஆர் ஸ்மார்ட் ! நீ நானசும்மா நான் போன்ல பேசினாலே சிரிச்சிட்டு இருப்போம்!! இப்போ கேக்கணுமா?:) நல்ல மனசு ஷக்தி உனக்கு வாழ்க! நன்றி விவரமான பின்னூட்டத்துக்கு!
1:39 PM
மன்னிக்கவும் சகோ! நான் இப்பொழுது தான் கவனித்தேன்... அருமை பகிர்ந்திம்ருகீங்க.. அடுத்த முறை ஓடாமல் திகில் படத்தை பார்த்து விடுகிறோம்... நன்றி சகோ!
ReplyDelete//அசச்சோ அப்டியா மாயலோகம் ராஜேஷ்தான் இதுக்கு பதில் சொல்லணும்!! //
ReplyDeleteவேண்டாம்.. நான்தான் தவறுதலா '4 மணி முன்னர்' என்பதை '4 நாட்களுக்கு முன்னர்னு' படிச்சிட்டேன் (என்னோட Dashபோர்டுல)
//மாய உலகம் said...
ReplyDeleteமன்னிக்கவும் சகோ! நான் இப்பொழுது தான் கவனித்தேன்... அருமை பகிர்ந்திம்ருகீங்க.. அடுத்த முறை ஓடாமல் திகில் படத்தை பார்த்து விடுகிறோம்... நன்றி சகோ!
9:14 PM
////<<<<வாங்க ராஜேஷ் எங்க காணோமேன்னு பார்த்தேன் மாய உலகம்னு வலைப்பூபேரு வச்சிட்டு அப்பப்போ மாயமா போயிடறீங்க:) நன்றி கருத்துக்கு
//Madhavan Srinivasagopalan said...
ReplyDelete//அசச்சோ அப்டியா மாயலோகம் ராஜேஷ்தான் இதுக்கு பதில் சொல்லணும்!! //
வேண்டாம்.. நான்தான் தவறுதலா '4 மணி முன்னர்' என்பதை '4 நாட்களுக்கு முன்னர்னு' படிச்சிட்டேன் (என்னோட Dashபோர்டுல)
9:26 PM
/////>>>>>
இதுக்குப்பிராயச்சித்தமா மாதவா ஒரு ஹெல்ப் பண்ணுங்க இந்தப்பதிவு தமிழ்மணத்துல இணைய அடம்பிடிக்குது உதவுங்களேன் ப்ளீஸ்!
நான் ஆட் பண்ணிட்டேன். எனக்கு என்ன கிஃப்ட் தர போறீங்க?
ReplyDelete//Shakthiprabha said...
ReplyDeleteநான் ஆட் பண்ணிட்டேன். எனக்கு என்ன கிஃப்ட் தர போறீங்க?
10:55 PM
////
thankyou shakthi..தனுஷ் படம் கொலைவெறிபாட்டு வருமே அதுக்கு உன்னை முதநாமுத ஷோ கூட்டிப்போறேன் ஒகேயா?:)
மேடம்... உண்மையைச் சொல்லுங்க... இந்த கதைல வர்ற ப்ரபாகர் நான்தானே... அப்படியே பவித்ரா யாருன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
ReplyDeleteஅனுஷ்கா உயரம், ஆப்பிள் கன்னங்கள், ஜோதிகா கண்கள்... அடடே சீக்கிரம் சொல்லுங்க மேடம் யார் அந்த பவி...???
வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க மேடம்... க்ளைமாக்சை யூக்கிக்க முடிந்தது மட்டும் தான் குறை...
ReplyDeleteவர்ணனைகள் பல இடங்களில் பிரமாதம்...
// அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக் //
// என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி! //
// மெய்மறந்த மேனகை பவித்த்ரா //
// அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?
//
உண்மையிலே குறும்புத்திலகம் நீங்கதான் மேடம்...
// விரல் வறுவல்(ஃபிங்கர் சிப்ஸ்) //
ReplyDeleteஅடேங்கப்பா... என்ன ஒரு முழி பிதுங்கும் மொழியாக்கம்...
// பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள் பட்டாசாய் வெடிக்கும் //
ReplyDeleteகதையின் பிற்பாதிக்கு வித்திட்ட வரிகள்...
// 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome! //
ReplyDeleteச்சீ... போங்க மேடம்... நீங்க ரொம்ப மோசம்...
Philosophy Prabhakaran said...
ReplyDeleteமேடம்... உண்மையைச் சொல்லுங்க... இந்த கதைல வர்ற ப்ரபாகர் நான்தானே... அப்படியே பவித்ரா யாருன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
அனுஷ்கா உயரம், ஆப்பிள் கன்னங்கள், ஜோதிகா கண்கள்... அடடே சீக்கிரம் சொல்லுங்க மேடம் யார் அந்த பவி...???
12:46 AM
<<<<>.\
வாங்க ஹீரோ! உங்கபேரை மனசுலவச்சிதான் எழுதினேன் ஆனா உங்க வலைப்பூல வந்து சொல்ல கொஞ்சம் தயக்கம்!!! மத்த உங்க நண்பர்களா வரவங்கபேரையெல்லாம் உடனே அவங்களுக்கு சொல்லிட்டேன்!!! அருமைத்தம்பி கோச்சிட்டீங்கன்னா என்ன செய்றதுன்னு ப்ரபாகர் கற்பனையாவே இருக்கட்டும்னுவிட்டுட்டேன்!! இப்போ நீங்களே அது நாந்தானேன்னு கேட்டா மறுக்கமுடியுமா?:) ஆனா பாருங்க அனுஷ்கா உயரத்துல ஆப்பிள்கன்னத்துல ஜோதிகாகண்களோட வர பவித்ரா மட்டும் கற்பனைதான்:):)
// நிஜமாவே கோவிச்சிட்டுதா "கிளி்" //
ReplyDeleteமேடம்... இப்போ பவித்ரா யாருன்னு எனக்கு மைல்டா ஒரு க்ளு கிடைச்சிடுச்சு...
//sophy Prabhakaran said...
ReplyDeleteவித்தியாசமா யோசிச்சிருக்கீங்க மேடம்... க்ளைமாக்சை யூக்கிக்க முடிந்தது மட்டும் தான் குறை...
வர்ணனைகள் பல இடங்களில் பிரமாதம்...
//
//
உண்மையிலே குறும்புத்திலகம் நீங்கதான் மேடம்...//
:):) எல்லாம் ரெவரியோட நீென்னும்கவிதைக்கு நான் பற்றி நீங்ககேட்ட்ட அந்த பஞ்சாபிதாபாக்குப்போனீங்களா என்கிற குறும்புவரிதான் காரணம்:):)
12:51 AM
//Philosophy Prabhakaran said...
ReplyDelete// பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள் பட்டாசாய் வெடிக்கும் //
கதையின் பிற்பாதிக்கு வித்திட்ட வரிகள்...
12:53 AM
/////
கரெக்டா பாயிண்ட்டுக்குவரீங்க ப்ரபாகர்!! ஸ்மார்ட் தான் நீங்களும்:)
//Philosophy Prabhakaran said...
ReplyDelete// 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome! //
ச்சீ... போங்க மேடம்... நீங்க ரொம்ப மோசம்...
12:53 AM
///>>.:):):):)
Philosophy Prabhakaran said...
ReplyDelete// நிஜமாவே கோவிச்சிட்டுதா "கிளி்" //
மேடம்... இப்போ பவித்ரா யாருன்னு எனக்கு மைல்டா ஒரு க்ளு கிடைச்சிடுச்சு...
12:54 AM
>>>>>>>>
பச்சைக்கிளிகள் பலபல பெங்களூரில்:):)
நான் தான் கொலைவெறித்தனமா நடுராத்திரில பின்னூட்டம் போடுறேன்னா நீங்களுமா...?
ReplyDelete// வாங்க ஹீரோ! உங்கபேரை மனசுலவச்சிதான் எழுதினேன் ஆனா உங்க வலைப்பூல வந்து சொல்ல கொஞ்சம் தயக்கம்!!! //
ReplyDeleteஇதுல என்ன மேடம் தயக்கம் வேண்டியிருக்கு... நான் எதுக்கும் கோவிச்சிக்குற டைப் கிடையாது...
மற்றவர்கள் ப்ளாக்கில் கமெண்ட் போடத்தான் கொஞ்சம் பயமா இருக்கு... நேற்று ஒரு பெண் பதிவர் தளத்தில் வழக்கம் போல குறும்புத்தனமாக ஒரு பின்னூட்டம் போட, அவர் தவறாக புரிந்துக்கொண்டார்...
உங்களுக்கு தெரியுமான்னு தெரியல... நானும் ஒரு ஹாரர் பட விரும்பிதான்... (ஆண்பால் வார்த்தை விரும்பன் என்று வரணுமோ...???)
ReplyDeletehttp://philosophyprabhakaran.blogspot.com/2011/09/paranormal-activity.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/paranormal-activity-2.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/paranormal-activity-3.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/cannibal-holocaust.html
ஹையயோ!!!!!!!!!!!! மெய மறநதேன
ReplyDeleteஇப்படி நகைசுவையிலே தூள கிளபிடீக:-))))
மெய் மறந்த மேனகை பவித்ரா - செமையா ரசிச்சுப் படிச்சேன்.
ReplyDeletePhilosophy Prabhakaran said...
ReplyDeleteநான் தான் கொலைவெறித்தனமா நடுராத்திரில பின்னூட்டம் போடுறேன்னா நீங்களுமா...?
1:58 AM
...
கம்ப்யூட்டர் இப்போ வீட்லஒண்ணுதான் அது எனக்குவர நடுராத்ரி ஆகிடும் சிலடைம் அதான்:)
Philosophy Prabhakaran said...
ReplyDelete// வாங்க ஹீரோ! உங்கபேரை மனசுலவச்சிதான் எழுதினேன் ஆனா உங்க வலைப்பூல வந்து சொல்ல கொஞ்சம் தயக்கம்!!! //
இதுல என்ன மேடம் தயக்கம் வேண்டியிருக்கு... நான் எதுக்கும் கோவிச்சிக்குற டைப் கிடையாது...
மற்றவர்கள் ப்ளாக்கில் கமெண்ட் போடத்தான் கொஞ்சம் பயமா இருக்கு... நேற்று ஒரு பெண் பதிவர் தளத்தில் வழக்கம் போல குறும்புத்தனமாக ஒரு பின்னூட்டம் போட, அவர் தவறாக புரிந்துக்கொண்டார்
<<<<<நானும் கோவிச்சிக்கமாட்டேன்
:)
Philosophy Prabhakaran said...
ReplyDeleteஉங்களுக்கு தெரியுமான்னு தெரியல... நானும் ஒரு ஹாரர் பட விரும்பிதான்... (ஆண்பால் வார்த்தை விரும்பன் என்று வரணுமோ...???)
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/paranormal-activity.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/paranormal-activity-2.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/paranormal-activity-3.html
http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/cannibal-holocaust.html
2:04 AM
<<,அடேயப்பா இவ்ளோவா? எனக்கு ஹாரர் பயமோ பயம்...அந்தப்படம் பதிவில் சொன்னதுதான் பாக்க நடுங்கி பாதில ஓடிவந்துட்டேன்!! நீங்க நல்ல தைரியசாலிதான் உங்க இடுகைகளை ஒவ்வொண்ணா வாசிச்சிட்டுவரேன் நன்றி ப்ரதர்
//துளசி கோபால் said...
ReplyDeleteஹையயோ!!!!!!!!!!!! மெய மறநதேன
இப்படி நகைசுவையிலே தூள கிளபிடீக:-))))
4:13 AM
//
சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான்:) நீங்களும் மெய் மறந்திருக்கீங்கன்னு பின்னூட்டத்துல தெரியுதே!!! நன்றி நன்றி!!!
//விச்சு said...
ReplyDeleteமெய் மறந்த மேனகை பவித்ரா - செமையா ரசிச்சுப் படிச்சேன்.
6:25 AM
///
வாங்க விச்சு ரசிச்சதுக்கு நன்றி..பொதுவா பெண் எழுத்தென்றால் சோகம் என்று சிலர் முத்திரைகுத்திட்டாங்க அதனால் நான் அவ்வப்போது இப்படி எழுதுவது வழக்கம்!!
கொஞ்சம் கடுமையான வேலை. ஓடிக்கிட்டே இருக்கேன். ஒரு மாதத்துக்கு ஆறு இடுகை ன்னு கணக்கு வச்சிகிட்டதால அவசரமா மகிழ்ச்சியை எழுதினேன். அவசியம் இன்று இரவுக்குள் படித்து விடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDelete//"ப்ப்ப்ரப்ப்பாக்கர்ர்ர்.!//
ReplyDeleteஇந்த அழுத்தம் அவர்கள் அன்பை சொல்கிறது என நினைத்து கடந்தேன். ஆனால் கதையே அந்த அழுத்தத்தில் தான் இருந்திருக்கிறது.
//அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!//
தி.மகால் ன்னா திருமலை நாயக்கர் மஹாலா? (கொஞ்சம் குசும்பு தான்)
//மெய்மறந்த மேனகை பவித்த்ரா//
//முத்தைத்தரு பத்தித்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது.//
ஹா... ஹா... ஹா... ஹா...
ஏங்க, கலக்கிட்டீங்க. கதை முழுக்கவே சிரிச்சு கிட்டே இருந்தேன். நகைச்சுவை கதை எழுதறது சாதாரண விஷயம் இல்ல. (நாம எழுதலாம். ஆனா படிக்கிறவங்க சிரிக்கணும்). உங்களுக்கு அது லாவகமா வருது. வாழ்த்துக்கள். இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.
ரசிகன் said...
ReplyDelete//"சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!//
தி.மகால் ன்னா திருமலை நாயக்கர் மஹாலா? (கொஞ்சம் குசும்பு தான்)
<<<<<ிருமலைமஹால்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?:) வெரிகுட்:)
//ஏங்க, கலக்கிட்டீங்க. கதை முழுக்கவே சிரிச்சு கிட்டே இருந்தேன். நகைச்சுவை கதை எழுதறது சாதாரண விஷயம் இல்ல. (நாம எழுதலாம். ஆனா படிக்கிறவங்க சிரிக்கணும்). உங்களுக்கு அது லாவகமா வருது. வாழ்த்துக்கள். இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.
10:26 PM//
அதில்ல ரசிகன் என்னவோ பெண்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியே கிடையாது அழுமூஞ்சிங்கன்னு ஒருத்தர் புலம்பினாரு அதான் ,,,அதுவும்மில்லாமல் எனக்குப்பிடிச்சது நகைசுவையா எழுதுவதுதான் ஆனா அதிகம் எழுத வராது இம்மாதிரி எப்போதாவதுதான் நன்றி பின்னூட்டமிட்டதற்கு.
எனக்க்கு கதை ர்ர்ர்ரொம்பப் பிடிச்ச்ச்சிருக்கு ஷைல்ல்ல்லஜாக்கா... இதுகு மேல எபடி பாராடறதுனு தெரில... ஹி... ஹி...
ReplyDelete//கணேஷ் said...
ReplyDeleteஎனக்க்கு கதை ர்ர்ர்ரொம்பப் பிடிச்ச்ச்சிருக்கு ஷைல்ல்ல்லஜாக்கா... இதுகு மேல எபடி பாராடறதுனு தெரில... ஹி... ஹி...
2:50 PM
....
ஆஹா இதைவிட பார்ர்ர்ராட்ட்ட்ட்டு வேறன்ன்ன்ன தேவை கண்ண்ண்ண்ணேஷு?:)