Social Icons

Pages

Monday, November 14, 2011

மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)

'ரோஜாவின் ராஜா’

 ஆசிய ஜோதி !

டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளர்

மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கம்

குழந்தைகளால் மாமா என்றழைக்கப்பட்ட மாமணி!


பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று.தன்பிறந்த நாளைக்குழந்தைகள் தினமாய் தாய்நாடு கொண்டாடவேண்டும் என்றவரைப்பற்றி  இன்று எத்தனை குழந்தைகளுக்குத்தெரியும்?  திரை நடிகநடிகைகளைத் தெரிந்துகொள்கிற ஆவல் நாட்டின் சுதந்திரவரலாற்றில் இடம்பெற்ற பலதலைவர்களைப்பற்றி அறிந்துகொள்ளமுடியாமல் அவர்களை திசை திருப்புவது எது?

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவில் நன்மைகள் பல என்றால் தீமைகளும் சில இருக்கத்தான் செய்கின்றன.

அவைகளில் முதலிடம் பெறுவது தொலைக்காட்சிப்பெட்டிதான். அமெரிக்காவில் எடுத்தகுறிப்பு் ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக  இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.




தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல்,  சண்டைக்காட்சிகள், கொலை, கொள்ளை, காதல், வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள்.  இது பிஞ்சுமனங்களின் நெஞ்சில் நஞ்சாய்ப்பரவுகிறது இவை கற்பனை என்று பெரியவர்களுக்குத்தெரியும் அந்தக்குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களின் கள்ளம் கபடம் இல்லா மனத்தினை  அசைக்கிறது இந்த காட்சிகள்.

கம்ப்யூட்டரில் வரவர குழந்தைகள் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள் ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாம் சர்வசகஜமாகிவிட்டது.

ஒருவயதுக்குழநதை உணவுசாப்பிட  நிலவும் வானும் நினைத்தால் ஐபோனில் கிடைக்கின்றன. உலகத்தைதேடிக்குழந்தைகளைக்கூட்டிபோய் அந்தப்பயணத்தின் இனிமையை அனுபவிக்க வைத்தகாலம்போய் உலகமே குழந்தையின் கையில் வந்துவிட்ட விஞ்ஞானமுன்னேற்றத்தின் விளைவு இது.


காலம் மாறிவிட்டது ஆண்களோடு பெண்களும் வேலைக்குப்போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது குழந்தைகளுடன்  இயந்திரங்கள் அதிகம் பேசுகின்றன.அதனை வாங்கி வீட்டில்வைப்பது நாம்தான் ..ஆனால் டிவி கம்ப்யூட்டர் செல்போன் இல்லாமல் இருக்கமுடியாத காலமாக இருப்பதால் அவைகளை அளவோடு உபயோகிக்க குழந்தைகளை பழக்கவேண்டும். ஏற்கனவே கூட்டுக்குடும்ப மறந்துபோய் உறவு எல்லை சுருங்கிவிட்ட நிலையில் இயந்திரங்களின் ஆதிக்கம் குழந்தைகளை மிகவும்  பாதிக்கிறது. இதனால் மழலைகளின் எதிர்காலத்தில் மானிட மாண்பே அவர்களுக்குதெரியாமல் வாழ்க்கை முற்றிலும் இயந்திரத்தனமாகப்போகும் அபாயம் ஏற்படலாம்.அதைதவிர்க்க குழந்தைகளுடன் நாம் நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் மனம்விட்டுப்பேசவேண்டும்.  விளையும் பயிரான குழநதைகளின் வேர்கள் நாம்தான் வேரிலே பழுதை வைத்துக்கொண்டு  விழுதுகளைகுறை சொல்லிப்பயனில்லை.

குழந்தைகளின் மைனஸ்பாயிண்டுகளைமட்டும் ஏன் சொல்லவேண்டும்? இத்தனை திசை திருப்பும் சாதனங்கள்  இருக்கும்போதிலும் பலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்ககூடாது.

சிலவருடங்கள்முன்பு கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமண்யம் அவர்களுடன் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்கு சென்றென் நிகழ்ச்சிமுடிவில் கீழாம்பூர் அங்கிருந்த அந்த பத்துவயது சிறுவர்கள் சிலரிடம்  இப்படிக் கேட்டார்.

“இவ்வளவு சினிமாபாட்டெல்லாம் பாடுகிறீர்கள் அதற்குஅபிநயித்து  நன்றாக ஆடுகிறீர்களே
உங்களில் யாருக்காவது நம் நாட்டு  தேசியகீதத்தை முழுக்க பாடத்தெரியுமா அப்படிப் பாடினால் உடனே மேடைக்கு வந்து என் கையால் நூறுரூபாய் தருவேனே?”

பல குழந்தைகள் இரண்டே வரிகளுக்குப்பிறகு  விழித்துக்கொண்டு நன்றன. ஒரே ஒருசிறுவன் முழுவதையும் நன்றாக  கூறி முடிக்கவும் ஆசிரியர் அகமகிழ்ந்து  மேடையிலேயே  100ரூபாயை அவனிடம் கொடுத்துப் பாராட்டினார்.

விழாமுடிந்து நாங்கள் வெளியெ வந்தபோது அந்த சிறுவன கலைமகள் ஆசிரியரை நோக்கிஓடிவந்தான்.. “ரொம்பநன்றி சார் ,நான் தேசியகீதம்  பாடினதை பாராட்டினதுக்கு! தேசியகீதத்தை அறிந்திருக்கவேண்டியது்   ஒவ்வொரு இந்தியனின் கடமைன்னு என் அப்பா சொல்வார்.நான் கடமையைத்தான் செய்தேன்,.  அதற்கு   நீங்க தந்த  நூறுரூபாயை  பொது மேடையில்  வேண்டாம்னு சொல்லி மறுக்க தயக்கமாக இருந்தது. அது உங்களை அவமானப்படுத்தும்னு தோன்றியது. அதனால்  இங்கே வந்து கொடுக்கிறேன்..” என்று அந்த நூறு ருபாயை அவர்கையில்கொடுத்தான்.

குழந்தைகளிடமிருந்து பலநேரங்களில் நாம் உன்னதமான விஷயங்களை  தெரிந்து கொள்கிறோம் என்பதுதான் எவ்வளவு உண்மை?



அழைப்பு தந்து எழுதவைத்த  மின்னல்வரிகள் வலைப்பூவின் சொந்தக்காரர் கணேஷுக்கு
நன்றி கணேஷ் பதிவில் ஏதோ புதிர் போட்டு மின்னூல் பரிசு என்கிறார்..என்னன்னு போய்ப்பாருங்க!

அவர் சொல்லியபடி இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை  அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாமே! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்  எழுப்பலாம் !!!  ஏற்கனவே 11-11-11க்கு  11 கேள்வி  நான் அனுப்பி பலரை டார்ச்சர் செய்தாகிவிட்டது ஆகவே  சின்னக்கவிதையோட முடிக்கிறேன்!


பொம்மைகளை பரப்பிவைத்து
விளையாடச் சொல்லிவிட்டு
நகர்ந்து செல்லும் தாயையே
பார்த்துக்கொண்டிருக்கிறது
குழந்தை!

இப்போது நான் அழைப்பவர்கள்...

ஆண்களில்..... ரசிகன்  மற்றும்
 ரமணி

பெண்களில்  அமைதிச்சாரல்  மற்றும்

சாகம்பரி

நன்றி நால்வருக்கும்  தாங்களும் இதேபோல பதிவு+ ஒரு கவிதை+ முடிந்தால் சின்ன புதிரோடு  முடித்து  நீங்கள்  தொட நினைக்கும் நால்வரை தொடர அழையுங்கள்! மழலைகள் உலகம்  பற்றிய  பரந்த சிந்தனையை பகிர்ந்துகொள்வோம்!

36 comments:

  1. பிஞ்சு நெஞ்சங்களில் எதுவும் ஆழப் பதியும். அவற்றில் நல்ல விஷயங்களையே பதிக்க வேண்டும் என்பது எனது ஆசை, ஆதங்கம். அழகாக நெகடிவ், பாஸிடிவ் விஷயங்களை அலசியிருக்கிறீர்கள் அக்கா... நீங்கள் கொடுத்திருக்கும் கவிதையும் அருமை. (உனக்கு தோணலையேடா கணேஷ்...) என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  2. really great shylu.. lovely

    ReplyDelete
  3. அழைப்பிற்கு நன்றி. குழந்தைகளின் உலகம் பற்றிய என்னுடைய பார்வையையும் பதிக்கிறேன். கண்டிப்பாக தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. அக்கறையான பதிவு அருமை...குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. அழகா அலசியிருக்கீங்க.. என்னையும் அழைச்சதுக்கு நன்றி..

    தொடர்ந்துட்டேன் பதிவை :-))

    http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post_14.html

    ReplyDelete
  6. ஒருவயதுக்குழநதை உணவுசாப்பிட நிலவும் வானும் நினைத்தால் ஐபோனில் கிடைக்கின்றன. உலகத்தைதேடிக்குழந்தைகளைக்கூட்டிபோய் அந்தப்பயணத்தின் இனிமையை அனுபவிக்க வைத்தகாலம்போய் உலகமே குழந்தையின் கையில் வந்துவிட்ட விஞ்ஞானமுன்னேற்றத்தின் விளைவு இது//

    என் இரண்டு வயது பேரன் கையில் ஐ பாடு வைத்துக் கொண்டு அவனுக்கு வேண்டிய பாடல்களை தேர்வு செய்து பாடுகிறான்.

    அம்மா இங்கே வா வா, நிலா நிலா ஓடி வா, போன்ற நல்ல பாடல்கள் கேட்டுப் பாடுகிறான்.

    நீங்கள் சொல்வது போல் உலகமே குழந்தைகள் கையில் வந்து விட்டது.

    ReplyDelete
  7. //கணேஷ் said...
    பிஞ்சு நெஞ்சங்களில் எதுவும் ஆழப் பதியும். அவற்றில் நல்ல விஷயங்களையே பதிக்க வேண்டும் என்பது எனது ஆசை, ஆதங்கம். அழகாக நெகடிவ், பாஸிடிவ் விஷயங்களை அலசியிருக்கிறீர்கள் அக்கா... நீங்கள் கொடுத்திருக்கும் கவிதையும் அருமை. (உனக்கு தோணலையேடா கணேஷ்...) என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி!

    8:44 AM

    ///

    வாங்க கணேஷ் .பிள்ளையார் சுழி போட்டவர் நீங்க நாங்கள் தொடர்கிறோம்! நன்றி உங்களுக்கே.

    ReplyDelete
  8. //சுந்தரவடிவேலு said...
    really great shylu.. lovely

    8:59 AM

    //// தாங்க்ஸ் சுந்தர்வடிவேலு

    ReplyDelete
  9. //சாகம்பரி said...
    அழைப்பிற்கு நன்றி. குழந்தைகளின் உலகம் பற்றிய என்னுடைய பார்வையையும் பதிக்கிறேன். கண்டிப்பாக தொடர்கிறேன்.

    10:01 AM

    /// எழுதுங்கள் சாகம்பரி...உங்கள் எழுத்தில் மழலை உலகம் பற்றி மேலும் அறிவோம்.

    ReplyDelete
  10. //ananthu said...
    அக்கறையான பதிவு அருமை...குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ...

    1:33 PM

    /// நன்றி அனந்து வரவுக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  11. //அமைதிச்சாரல் said...
    அழகா அலசியிருக்கீங்க.. என்னையும் அழைச்சதுக்கு நன்றி..

    தொடர்ந்துட்டேன் பதிவை :-))

    http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post_14.html

    1:40 PM

    ///// பார்த்தேன் அமைதிச்சாரல் நன்றி மிக அழைப்பை ஏற்றதற்கு

    ReplyDelete
  12. கோமதி அரசு said...

    என் இரண்டு வயது பேரன் கையில் ஐ பாடு வைத்துக் கொண்டு அவனுக்கு வேண்டிய பாடல்களை தேர்வு செய்து பாடுகிறான்.

    அம்மா இங்கே வா வா, நிலா நிலா ஓடி வா, போன்ற நல்ல பாடல்கள் கேட்டுப் பாடுகிறான்.

    நீங்கள் சொல்வது போல் உலகமே குழந்தைகள் கையில் வந்து விட்டது.

    3:40 PM//ஆமாம் கோமதி அரசு... இதெல்லாம் எங்கபோய் முடியும்னு தெரியல.. எதிர்காலத்தூண்கள் உறுதியாக இருக்க வேண்டும் நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  13. அன்பார்ந்த ஷைலஜா அவர்களுக்கு
    தங்கள் அழைப்புக்கு மனமார்ந்த நன்றி
    நான் தற்சமயம் வெளியூரில் உள்ளேன்
    விரிவாக எழுதி பதிவிடும் நிலையில் இல்லை
    16 ம் தேதி காலைஊர் திரும்பியதும் பதிவிட
    முயல்கிறேன் தாமதத்திற்கு வருந்துகிறேன்

    ReplyDelete
  14. //Ramani said...
    அன்பார்ந்த ஷைலஜா அவர்களுக்கு
    தங்கள் அழைப்புக்கு மனமார்ந்த நன்றி
    நான் தற்சமயம் வெளியூரில் உள்ளேன்
    விரிவாக எழுதி பதிவிடும் நிலையில் இல்லை
    16 ம் தேதி காலைஊர் திரும்பியதும் பதிவிட
    முயல்கிறேன் தாமதத்திற்கு வருந்துகிறேன்

    6:56 PM

    //////??/
    வாங்க ரமணி மெதுவா பதிவிடுங்க பரவாயில்லை... அழைப்பை ஏற்பதற்கு நன்றி

    ReplyDelete
  15. சைலஜா...குழந்தைகளிடம் படிக்க பெரியவர்களுக்கு நிறையவே இருக்கு.சிலசமயங்களில் திணறியே போகிறோமே அவர்கள் கேள்விகளுக்குள்.நல்லதொரு பதிவு.இனிய குழந்தைகளுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  16. இனிய நட்பிற்கு, தாங்கள் கேட்டுக் கொண்ட படி, மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவை தொடர்ந்திருக்கிறேன். இயன்றவரை செம்மையாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
    http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

    ReplyDelete
  17. Anonymous10:53 PM

    அழகாக அலசியிருக்கிறீர்கள் ... கவிதை அருமை...

    குழந்தைகள் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. //ஹேமா said...
    சைலஜா...குழந்தைகளிடம் படிக்க பெரியவர்களுக்கு நிறையவே இருக்கு.சிலசமயங்களில் திணறியே போகிறோமே அவர்கள் கேள்விகளுக்குள்.நல்லதொரு பதிவு.இனிய குழந்தைகளுக்கு வாழ்த்துகள் !

    10:30 PM

    ///

    வாங்க ஹேமா..மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகையில்....பதிவைப்பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி மிக.

    ReplyDelete
  19. //ரசிகன் said...
    இனிய நட்பிற்கு, தாங்கள் கேட்டுக் கொண்ட படி, மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவை தொடர்ந்திருக்கிறேன். இயன்றவரை செம்மையாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
    http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

    10:44 PM

    //
    <<<<>அழைப்பை ஏற்று பதிவும் அளித்தாயிற்றா வெரீகுட் ரசிகன் இதோ வரேன் நன்றி.

    ReplyDelete
  20. //ரெவெரி said...
    அழகாக அலசியிருக்கிறீர்கள் ... கவிதை அருமை...

    குழந்தைகள் தின வாழ்த்துகள்...

    10:53 PM

    ////

    கவிதை அருமை என்றதற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரெவரி

    ReplyDelete
  21. அந்தக் கவிதை பிரமாதம்!

    ReplyDelete
  22. /கே. பி. ஜனா... said...
    அந்தக் கவிதை பிரமாதம்!

    11:29 PM

    ///வாருங்கள் பிரபல எழுத்தாளர் ஜனா அவர்களே! நல்வரவு முதலில்.அந்தக்கவிதை தானே.. அது என் மகள் குழந்தையாய் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான்..தேடிதேடி பொம்மைவாங்கிப்போட்டு ஆசையாய் விளையாடுவாள் என ஒருவயசுக்குழந்தையை ஹாலில்விட்டு சமையல்கட்டுக்குபோனால் அது என்னையே பார்க்கிறது மறுபடி ஹால்வருமவரை பார்வையை அப்படியே தேக்கிக்கொண்டு! இந்த தாய்களுக்கும் குழந்தையை தூக்கினால் இடுப்பு வலிக்கிறது கீழே விட்டால் மனசு வலிக்கிறது!!!

    ReplyDelete
  23. ரசிகன் சார் என்னை கோத்து விட்டுட்டார்.. முயற்சி செய்கிறேன்,,,

    ReplyDelete
  24. அழகாக சொல்லியுள்ளீர்கள் கவிதையோடு முடித்தவிதம் அருமை.

    ReplyDelete
  25. suryajeeva said...
    ரசிகன் சார் என்னை கோத்து விட்டுட்டார்.. முயற்சி செய்கிறேன்,,,

    9:30 AM
    <<<<< சூர்யஜீவா நன்றாக எழுதுவீங்க வாழ்த்துகள்!

    // அன்புடன் மலிக்கா said...
    அழகாக சொல்லியுள்ளீர்கள் கவிதையோடு முடித்தவிதம் அருமை.

    10:21 AM..

    நன்றி மலிக்கா வருகைக்கும் கருத்துக்கும்

    <<<<<<<<

    ReplyDelete
  26. குழந்தைகளின் மைனஸ்பாயிண்டுகளைமட்டும் ஏன் சொல்லவேண்டும்? இத்தனை திசை திருப்பும் சாதனங்கள் இருக்கும்போதிலும் பலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்ககூடாது.


    மறுக்கமுடியாத அருமையான கருத்து.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  27. அருமையான அலசல் அக்கா.உங்களுக்கே உரித்தான் நடையுடன் விவரித்திருப்பது அருமை.

    ReplyDelete
  28. / இராஜராஜேஸ்வரி said...
    குழந்தைகளின் மைனஸ்பாயிண்டுகளைமட்டும் ஏன் சொல்லவேண்டும்? இத்தனை திசை திருப்பும் சாதனங்கள் இருக்கும்போதிலும் பலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் மறுக்ககூடாது.


    மறுக்கமுடியாத அருமையான கருத்து.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    7:31 PM


    ஸாதிகா said...
    அருமையான அலசல் அக்கா.உங்களுக்கே உரித்தான் நடையுடன் விவரித்திருப்பது அருமை.

    10:11 AM

    <<<,மிக்க நன்றி இராஜேஸ்வரி மற்றும் ஸாதிகா

    ReplyDelete
  29. Anonymous6:41 PM

    அக்கறையான பதிவு...அழகாக சொல்லியுள்ளீர்கள் கவிதையோடு முடித்த விதம் அருமை...

    ReplyDelete
  30. நல்லதொரு படைப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. //ரெவெரி said...
    அக்கறையான பதிவு...அழகாக சொல்லியுள்ளீர்கள் கவிதையோடு முடித்த விதம் அருமை...

    6:41 PM


    ராஜி said...
    நல்லதொரு படைப்பு. வாழ்த்துக்கள்

    7:18 PM

    ////
    நன்றி மிக ரெவரி மற்றும் ராஜி இருவருக்கும்.

    ReplyDelete
  32. வணக்கம் மேடம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன இனி தொடர்ந்துவருவேன்

    ReplyDelete
  33. அன்புநிறை சகோதரி,
    நிதர்சனத்தில் மழலைகள் உலகம் மிகவும் மகத்தானது என்பது சாலச் சிறந்தது. மழலைகளின் இயல்பை அதன் தூய மனதை கொண்டாடும் நாம் ஏன் அந்த மழலையை தாண்டி வருகையில் தவறுகள் குடியேறி கசடு நிரம்பி தீயவைகளின் கொட்டாரம் ஆகிறோம்...
    மழலையாய் இருத்தல் வேண்டும் என நான் இந்த தொடர்பதிவை சகோதரி,பேராசிரியை சாகம்பரி அவர்களின் அழைப்பின் பெயரின் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து படியுங்கள்.
    நன்றி.

    http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post_17.html

    ReplyDelete
  34. //K.s.s.Rajh said...
    வணக்கம் மேடம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றன இனி தொடர்ந்துவருவேன்

    8:31 AM

    ///

    வாங்க ராஜா! பராக் பராக் பராக்..ராஜாவாச்சே அதான் இப்படிவரவேற்றேன்!!!தொடர்ந்து ராஜவிஜயம் செய்யவேண்டும் நானும் உங்கவலைப்பூ வரேன் இனி நன்றி

    ReplyDelete
  35. /மகேந்திரன் said...
    அன்புநிறை சகோதரி,
    நிதர்சனத்தில் மழலைகள் உலகம் மிகவும் மகத்தானது என்பது சாலச் சிறந்தது. மழலைகளின் இயல்பை அதன் தூய மனதை கொண்டாடும் நாம் ஏன் அந்த மழலையை தாண்டி வருகையில் தவறுகள் குடியேறி கசடு நிரம்பி தீயவைகளின் கொட்டாரம் ஆகிறோம்...
    மழலையாய் இருத்தல் வேண்டும் என நான் இந்த தொடர்பதிவை சகோதரி,பேராசிரியை சாகம்பரி அவர்களின் அழைப்பின் பெயரின் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து படியுங்கள்.
    நன்றி.


    /////


    கண்டிப்பா வரேன் மகேந்திரன்..நன்றி பதிவைத்தொடர்வதற்கு.

    ReplyDelete
  36. மனிதர்குல மாணிக்கம் அது ஆசிய ஜோதியாய் ஒளித்தது....

    /// “ரொம்பநன்றி சார் ,நான் தேசியகீதம் பாடினதை பாராட்டினதுக்கு! தேசியகீதத்தை அறிந்திருக்கவேண்டியது் ஒவ்வொரு இந்தியனின் கடமைன்னு என் அப்பா சொல்வார்.நான் கடமையைத்தான் செய்தேன்,. அதற்கு நீங்க தந்த நூறுரூபாயை பொது மேடையில் வேண்டாம்னு சொல்லி மறுக்க தயக்கமாக இருந்தது. அது உங்களை அவமானப்படுத்தும்னு தோன்றியது. அதனால் இங்கே வந்து கொடுக்கிறேன்..”////

    இன்னும் நம்முடன் அந்த நேருவும்... மோதிலாலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    விகிதம் மட்டும் மாறவில்லை என்பது மட்டுமே வேதனை...
    இது தொல்லைக் காட்சியில் தொலைந்து போவோரின் எண்ணிகையை ஒப்பிடுகையில் மிகவும் சொற்பம் தான்... காலமும் காட்சியும் மாறும் என நம்புவோம்.

    "பொம்மைகளை பரப்பிவைத்து
    விளையாடச் சொல்லிவிட்டு
    நகர்ந்து செல்லும் தாயையே
    பார்த்துக்கொண்டிருக்கிறது
    குழந்தை!"

    அற்புதம்... அருமை! உணர்வுகளின் ஊர்வலம் இங்கே போகிறது...

    நன்றி!...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.