..............................
உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கே
கலகம் வருவதும் அதனாலே-மனக்
கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன்
விளக்கம் தருபவர் யார் இங்கே?
பேதங்கள் வளர்வதும் பணத்தாலே-நல்ல
வேதங்கள் கெடுவதும் அதனாலே- வீண்
வாதங்கள் பிறப்பதும் பணத்தாலே- அதன்
பாதங்கள் வெறுப்பவர் யார் இங்கே?
மனமுங் குலைவது பணத்தாலே-நல்ல
குணமும் கெடுவது அதனாலே- அதை
தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
கணமும் இல்லை ஒரு தவிப்பு!
பத்தும் செய்யலாம் பணமிருந்தால் -எந்தப்
பித்தும் பிடிக்கும் அது இருந்தால்!-சிலர்
செத்தும் பிழைப்பார் பணத்தாலே-நற்
முத்துக்குணத்தையும் தான் இழப்பார்!
நிறத்தால் பிரியும் மனிதனையே -தன்
திறத்தால் பிரித்தே வைத்திடுமே-இதை
வெறுத்தோர் என்று யாருமில்லை-பணத்தை
வெறுத்தோர் இங்கே வாழ்வதில்லை!
('தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது ' என்று அறிவித்துள்ளார் தடாக நிறுவனர் நன்றி அவர்தமக்கு)
https://www.facebook.com/thadagamkalaiilakkiyavattam?hc_location=timeline
Tweet | ||||
நல்ல கவிதை.
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.
நன்றி திரு வெங்கட் நாகராஜ்
Deleteபணத்தின் பன்முகப் பரிமாணத்தை
ReplyDeleteமிக மிக அழகாகச் சொல்லிப்போகும்
அருமையான கவிதை
பரிசு பெற்றமைக்கும் பகிர்வுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி திரு ரமணி
Deleteபித்து பிடிக்கும் வரிகள் உட்பட அனைத்தும் உண்மை...
ReplyDeleteமுதலாம் இடத்தைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
நன்றி டிடி
Deleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி டிடி
Deleteஉண்மைதான்
ReplyDeleteஆமாம் பணம்தானே ஆட்டிப்படைக்கிறது உலகை? கருத்துக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன்
Deleteஅழகான கவிதை... பரிசுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றிசங்கவி
Deleteவாழ்த்துக்கள் ஷைலஜா...
ReplyDeleteநன்றி எழில்
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅட நீங்களா! நன்றி திரு லதானந்த
Deleteபணம் போன்றே VERY VERY VALUABLE கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDelete//சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது ' //
மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி திரு வைகோ சார்!
Delete
ReplyDelete/அதை
தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
கணமும் இல்லை ஒரு தவிப்பு!/....... ?
வணக்கம் ஜி எம் பிஸார் ஆம் பணமிருந்தால் எந்தவித தவிப்பும் இல்லையே ....பணமில்லாத ஏழையின் நிலை என்றும் தவிப்புதானே எல்லாவற்றிர்க்கும் அதனைத்தான் குறிப்பிட்டேன். பணத்தைசேர்த்துவைத்துக்கொண்டு தினமும் அதனை வணங்கும் மனிதனுக்கு என்பது பணத்தை பத்திரப்படுத்துபவனுக்கு எனப்பொருளாகிறது இங்கு..
Deleteஅருமையான கவிதை....
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சே குமார் அவர்களுக்கு
Deleteபரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ?!
ReplyDeleteநன்றி ராஜி..பெங்கலூர் வரப்போ உங்களுக்கு ட்ரீட்!
Deleteநிதர்சனம்.
ReplyDeleteபரிசுக்கு நல்வாழ்த்துகள்!