Social Icons

Pages

Thursday, July 11, 2013

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !





 .....................................................
உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கே
கலகம் வருவதும் அதனாலே-மனக்
கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன்
விளக்கம் தருபவர் யார் இங்கே?

பேதங்கள் வளர்வதும் பணத்தாலே-நல்ல
வேதங்கள் கெடுவதும் அதனாலே- வீண்
வாதங்கள் பிறப்பதும் பணத்தாலே- அதன்
பாதங்கள் வெறுப்பவர் யார் இங்கே?

மனமுங் குலைவது பணத்தாலே-நல்ல
குணமும் கெடுவது அதனாலே- அதை
தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
கணமும் இல்லை ஒரு தவிப்பு!

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் -எந்தப்
பித்தும் பிடிக்கும் அது இருந்தால்!-சிலர்
செத்தும் பிழைப்பார் பணத்தாலே-நற்
முத்துக்குணத்தையும் தான் இழப்பார்!

நிறத்தால் பிரியும் மனிதனையே -தன்
திறத்தால் பிரித்தே வைத்திடுமே-இதை
வெறுத்தோர் என்று யாருமில்லை-பணத்தை
வெறுத்தோர் இங்கே வாழ்வதில்லை!






('தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது '   என்று  அறிவித்துள்ளார் தடாக நிறுவனர் நன்றி அவர்தமக்கு)
https://www.facebook.com/thadagamkalaiilakkiyavattam?hc_location=timeline
 


 

25 comments:

  1. நல்ல கவிதை.

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு வெங்கட் நாகராஜ்

      Delete
  2. பணத்தின் பன்முகப் பரிமாணத்தை
    மிக மிக அழகாகச் சொல்லிப்போகும்
    அருமையான கவிதை
    பரிசு பெற்றமைக்கும் பகிர்வுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரமணி

      Delete
  3. பித்து பிடிக்கும் வரிகள் உட்பட அனைத்தும் உண்மை...

    முதலாம் இடத்தைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டிடி

      Delete
  5. உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பணம்தானே ஆட்டிப்படைக்கிறது உலகை? கருத்துக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன்

      Delete
  6. அழகான கவிதை... பரிசுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஷைலஜா...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களா! நன்றி திரு லதானந்த

      Delete
  9. பணம் போன்றே VERY VERY VALUABLE கவிதை. பாராட்டுக்கள்.

    //சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது ' //

    மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி திரு வைகோ சார்!

      Delete

  10. /அதை
    தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
    கணமும் இல்லை ஒரு தவிப்பு!/....... ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி எம் பிஸார் ஆம் பணமிருந்தால் எந்தவித தவிப்பும் இல்லையே ....பணமில்லாத ஏழையின் நிலை என்றும் தவிப்புதானே எல்லாவற்றிர்க்கும் அதனைத்தான் குறிப்பிட்டேன். பணத்தைசேர்த்துவைத்துக்கொண்டு தினமும் அதனை வணங்கும் மனிதனுக்கு என்பது பணத்தை பத்திரப்படுத்துபவனுக்கு எனப்பொருளாகிறது இங்கு..

      Delete
  11. அருமையான கவிதை....
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சே குமார் அவர்களுக்கு

      Delete
  12. பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள். ட்ரீட் எப்போ?!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி..பெங்கலூர் வரப்போ உங்களுக்கு ட்ரீட்!

      Delete
  13. நிதர்சனம்.

    பரிசுக்கு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.