Social Icons

Pages

Friday, July 19, 2013

கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!

கவிஞர்  வாலி   என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமாயிருந்து சென்ற் ஆண்டு இதே கறுப்பு ஜூலையில்  அமரரான   திரு ஏ எஸ் ராகவனின்  நண்பருமாவார். சிலவருடங்கள் முன்பு ஒரு  விழாவில் வாலியைக்கண்டு நானும் அப்பாவும்  பார்த்தபோது  ஸ்ரீரங்கத்தையும் சித்திரைவீதியையும்  பற்றி    நண்பர்கள்  இருவரும்மனம் விட்டுப்பேசிக்கொண்டனர்.


(நான்  கவிஞர் வாலி  அப்பா  எழுத்தாளர் மகரம்)

பழைய நட்பை மறக்காத பண்பாளர் வாலி அவர்கள் அப்பாவிம் மரணச்செய்தியை  சென்ற ஆண்டு அவருக்கு போனில் கூறியபோது,’வாலிக்கு முன்னே  ராகவன்  போய்விட்டாரா?” என்று இருபொருள்படக்கேட்டு  வருந்தினார். 


மல்லிகைக்கு விளம்பரம் தேவை இல்லை வாசனையே காட்டிக்கொடுத்துவிடும் கவிஞர் வாலியைப்பற்றி  அனைவரும் அறிந்ததுதான்.ஆனாலும் அவரது நூல்களில்  எனக்கு மிகவும் பிடித்த  நூலான  ‘பெண்ணின் பெருந்தக்க  யாவுள?’ என்னும் தலைப்பிலான  புத்தகம்  என்னை மிகவும் பாதித்தது. பாரதியைப்போல   பெண்கள் மீது ஆழ்ந்த அக்கறையான சிந்தனை கொண்ட கவிதைப்புத்தகம் இது. தவிர தமிழை  பெண் இனத்தின் அத்தனை வடிவங்களும் காண்கிறார் கவிஞர்..பெண்  தெய்வங்கள் பலவற்றிர்க்கு  வந்தனம் கூறி முடிக்கிறார்.

அதிலிருந்து சில  பக்கங்களை  இங்கே  அளித்து  அரங்கநகர்பெற்ற அருங்கவிஞனுக்கு அஞ்சலி செய்கிறேன்.


   பெண்ணில் பெண்மையைக்கண்டு பெண்மையில் பொதிந்த உண்மையைப்  போற்றுபவர்தான் கவிஞர்.  வாலி தனது இந்த நூலில் அதைதான் செய்திருக்கிறார்.

பெண்ணுக்குக்கல்வி அவசியம் என்பதை

நுண்ணறிவை  பெண்ணுக்கு
நூல் கொடுக்கும்  அவள்

காலமெல்லாம் நிற்பதற்குக்
கால் கொடுக்கும்.‘


ஆரேனும்  -நீ
அமரவேண்டிய இடம்
அடுப்படி என்றால்..
கடுப்படி
வாழ்க்கைப்படகை -நீ
வகையாய் செலுத்தக்
கல்விதான்  -நீ
கையேந்த வேண்டிய   துடுப்படி


என்கிறார்.

புதுக்கவிதைகளின் மத்தியிலே வெண்கலிப்பாக் கண்ணிகளிலே  ‘ஒருகவனிப்பு’ அதனில்...

‘என்னைக் கவனிக்க
எனக்கேது  பொழுது  -நான்
உன்னைக் கவனித்தே
உருகும் நெய் விழுது

என்ற அபாரமான பல்லவியுடன்  உள்ளது.

உருகுதலுக்கு மெழுகைச்சொல்லவில்லை பாருங்கள்  மெழுகாக  உருகிவிட்டால் காதலியை நெருங்குகையில்  ஒன்றும் மிச்சம்  இருக்காதே  நெய் விழுதானால்  அவளின் நெருங்குகையில் மனம் குளிர்ந்து  உறையும் காணாமல் போகாதாம்!

இந்தப்பாட்டில் தமிழின் ழகர அழகை  மேலும் கவனியுங்கள்

கோழிக்கு முன்னெழுந்து
கோலம் நீ போடுதற்கு
ரேழிக்கு வருகையிலென்
ராத்தூக்கம் பாழாக
மேழிக்கு ஆட்பட்ட
மேதினியாய் என் மனது
நாழிக்கு நாழியிங்கு
நைந்தபடி கூழாக...


தமிழை தாயாய் தாரமாய்  தங்கையாய்  இன்னும் பலவாய் கடைசியில் தெய்வமாய்  கூறும் பாடலில் இந்த  வரிகள் அருமையாக இருக்கின்றன

கல் வடிவில் நிற்கும்
தெய்வத்தைவிடவும்
சொல் வடிவில் நிற்கும்
செந்தமிழ்த்தெய்வம்
நாய்க்கும் கீழாய்
நலிந்து கிடந்தவனைப்  பெற்ற
தாய்க்கும் மேலாய்த்
தயவு காட்டி மேனை செய்தது
தரையில் அமர்ந்தவனைப் பொன்
தவிசில் அமர்த்தி  ஒரு
வரையில் அருள் மழையை மிக
வாஞ்சையோடு  இவன் மேல் பெய்தது

  கவிஞர், ஆனைக்கா  அன்னையைப்போற்றுவதை  கூறி  முடிக்கிறேன்

நாவமரும் நற்றமிழும்
நற்றமிழில் நானெழுதும்
பாவமரும் பருப்பொருளும்
பெருமாளாய்த் திருவரங்கத்
தீவமரும் திருமாலின்
திருத்தங்கை திருவானைக்
காவமரும் ஈஸ்வரியின்
கடைக்கண்கள் ஈந்தவையே!













 

20 comments:

  1. திரு ஆனைக்காவில் அமர்ந்த ஈஸ்வரியின் புகழ் பாடும்
    வரிகள் பார்த்தேன்.

    கண்கள் பனித்தன.


    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. வாலிபக் கவிஞரின் வைர வரிகளை பகிர்ந்திருக்கிறீர்கள் அக்கா. அவருடன் பழகும் வாய்ப்பும் பெற்றிருந்தது சிறப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்திப்போம் குமார்.தமிழன்னைநமக்கு அளித்த நற்புதல்வர் வாலி.

      Delete
  3. இவரின் வரிகளுக்கு சாவே இல்லை...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
    Replies
    1. காலன் கவிஞரைக்கொண்டுபோகலாம் கவிதைகளை அதன் சுவையான வரிகளைக்கொண்டுபோகமுடியுமா அதற்கு சாவே இல்லைதான் டிடி!

      Delete
  4. எங்கிருந்தபோதும் திருவரங்கத்தை மறவாதவர்கள் நீங்களும் வாலியும். நீங்கள் எழுதிய ” கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி! ” நல்லதோர் நினைவஞ்சலி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தமிழ் இளங்கோ.....பிறந்து வளர்ந்த ஊர் என்பதையும் விட ஏதோ ஒன்று காந்தமாய் அங்கு இழுக்கிறதே அரங்கனா அகண்டகாவிரியா அன்னைஅரங்கநாயகியா ஆழ்வார்களும் எதிராஜரும் இறை அன்பர்களும் பாதம் பதித்த திருக்கோயிலா கோயிலின் கம்பர் மண்டபமா கொள்ளிடக்காற்றா ..எது என்று தெரியாமல் எல்லாமே கை கோத்து நிற்கிறது! நன்றி மிக கருத்துக்கு.

      Delete
  5. ஆமாம் சுப்புத்தாத்தா அந்தவரிகளில் நானும் நெகிழ்ந்தேன் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. /கவிதைகளில் வாழ்கின்றார்/

    உண்மை. ஆழ்ந்த அஞ்சலிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமல்ஷ்மி கவிதைகளில் வாழ்பவருக்கு நல்லதொரு தமிழ்க்கவிஞருக்கு ்நாம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவது கவிஞர்களாகிய நம் கடமை நன்றி மிக வருகைக்கு

      Delete
  7. அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்தோம்
    என்று நினைத்துப் பெருமை படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. அருணா செல்வம்சரியாக சொன்னீர்கள் நன்றி வருகைக்கு

      Delete
  8. இங்கே நீங்கள் தந்திருக்கும் கவிஞரின் வரிகளைப் படிக்க படிக்க தமிழர்களுக்கு எத்தனை பேரிழப்பு நேர்ந்திருக்கிறதென தெற்றென உணர முடிகிறதுக்கா! மகத்தான அந்தக் கவிஞரை எண்ணி மனம் கனத்துப் போனது. அவரின் ஆன்ம சாந்தி்க்காய் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கணேஷ் பேரிழப்புதான் அவர்தம் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கும் உங்களுக்கு நன்றி

      Delete
  9. நல்லதொரு கவிஞரை நாம் இழந்து விட்டோம்.... அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றும் மறையாது.....

    எனது அஞ்சலியும்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அஞ்சலி செலுத்தியமைக்கும் நன்றி வெங்கட்நாகராஜ்

      Delete
  10. எல்லோரும் வாலியின் சினிமாப் பாடல்களை புகழ்ந்து எழுதுகையில், நீங்கள் அவரது வேறொரு திறமையை பாராட்டி அஞ்சலி செலுத்தியது மனதை வருடிச் சென்றது. சந்தோஷமாகவும் இருந்தது.
    வித்தியாசமான நினைவு கூர்தல்!

    ReplyDelete
    Replies
    1. அழகிய சிங்கர் என்னும் புத்தகம் வாசித்து அதையும் விமர்சிக்க ஆவல் ரஞ்சனி நாராயணன் ..உங்களைப்போல ரசித்துப்பாராட்டுபவர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

      Delete
  11. கவிஞரின் வரிகளில் மெய்சிலிர்த்தேன். அன்னாரோடு பழகிய பேறு தங்களுக்கு வாய்த்தப் பெரும்பேறு. மனம் நெகிழ்வுறும் பதிவு. மிக்க நன்றி ஷைலஜா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதமஞ்சரி....கவிஞரின் பாடல் வரிகள் நம்மை நெகிழ்த்துகிறது உண்மைதான்

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.