’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்று எங்கள் காலனி மக்கள் படையெடுத்தோம்.
ஹோசூரிலிருந்து பெங்களூருக்கு நுழையும்போது சில்க்போர்டுக்கு அருகே HSR layout ல் இந்தஹோட்டல் திறந்து இன்னும் ஒருவருடம் ஆகவில்லை..அதற்குள் பிரபலமாகிவிட்டதற்குக்காரணம் வார இறுதி நாட்களில் தலைவாழை இலைபோட்டு அம்ர்க்களமாக அவர்கள் உணவு பரிமாறுவதும் அதுஅபார ருசியுடன் இருப்பதும்தான் இதர நாட்களில் டிபன் சாப்பாடும் உண்டு.
ஆனால் இன்று மிக வித்தியாசமாக உணவு வகைகளை அதுவும் நிஜமாகவே மறந்துபோய்விட்ட பதார்த்தங்களை செய்து வைத்திருந்தனர்.
சொல்லமறந்துவிட்டேனே ஹோட்டல் அறுசுவை நடராஜன் அவர்களின் பேரனின் மேற்பார்வையில் நடக்கிறது இளைஞராக இருக்கும் இவர் வந்தவர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார் பணியாளர்களும் மிகவும் சுறுசுறுப்பாகவும் சாப்பிடும்போது கேட்டு விஜாரித்து அக்கறையுடன் பரிமாறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இன்றும் நாளையும் சிறப்பு தினங்களாக இப்படி மறந்துபோன பழைய உணவு வகைகளை அளிக்கும் தினமாக இருப்பதைக்கொண்டாட அறுசுவை நடராஜன் அவர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
அன்போடு வரவேற்றார் எங்கள் யாவரையும்
.
சரி இனி சாப்பிட செல்வோம்.
முதலில் பானகம் சுக்குகாபி திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் ஆக வழங்கப்பட்டது.கூடவே பானையிலும் மண்சட்டிகளிலும் வாழைப்பூகோலா வடை தவலைவடை திருவாதிரைக்களி
பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக்கொழுக்கட்டை(இனிப்பு மற்றும் உப்புவகைகளில்)..இவையெல்லாம் பஃபே என்பதால் சாப்பிட சாப்பிட இதிலேயே பசி அடங்கிவிட்டது..தலைவாழை இலைக்குப்போக சிறிதுநேரம் தயக்கமாகவே இருந்தது.
(தாத்தாவும் பேரனும் ”எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள்!
அப்புறம் இலையில்போய் உட்கார்ந்தோம் குழம்பில் மட்டும் நாலுவகை வற்றல்குழம்பு மோர்க்குழம்பு சாம்பார் ஓமக்குழம்பு என..நான்கில் ஓமக்குழம்பு முதல் பரிசைத்தட்டிக்கொண்டது.
ரசத்தில் மூன்றுவகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.
நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி பீர்க்கங்காய் துவையல் பூசணிக்காய் ரசவாங்கி சேனை ரோஸ்ட் மோர்க்களி வெண்டை டாங்கர் பச்சடி
மோர்க்களி பருப்புசிலி அங்காயப்பொடி சாதம் கத்திரிககய் துவையல் அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி கோங்குரா துகையல் கல்கண்டுபொங்கல்
இத்தனையையும் ஒரே நேரத்தில் பார்த்தாலே பிரமிப்பாக இருக்குமே! எப்படி அத்தனையையும் சாப்பிடுவது என திகைத்தபடி எல்லாவற்றிலும் கொஞ்சமாய் போட்டுக்கொண்டு ருசிபார்த்தோம்.. அத்தனையும் அருமை தான்! ஓரிரு பதார்த்தஙக்ள் மட்டும் சர்று சுமார் என்று சொல்கிறபடி இருந்தனவே தவிர மற்ற அனைத்தும் அமர்க்களம்!
இறுதியில் பீடாவும் வாழைப்பழமும்!
சாதாரணமாய் வார இறுதி நாட்களில் 190ரூ ஓர் இலைக்கு இன்றும் நாளையும் சிறப்புதினங்கள் என்பதால் கூடுதல் விலையானாலும் அறுசுவைக்காக மறந்தேபோன நம் வீட்டு உணவுவகைகளை நாம் நினைவுகூர்ந்து சுவையோடு உணபதால் விலை ஒரு பொருட்டாக இல்லைதான்!!
என்ன பெங்களூர் வாசிகள் நாளைக்கு அறுசுவை மதுரம் ஹோட்டலுக்குப்போகிறீர்கள் தானே!!
பிகு(காமிராவில் தேதி மாற்றத்தவறிவிட்ட கணவரை நான் மன்னித்தமாதிரி நீங்களும் மன்னித்துவிடுங்கள்:)
Tweet | ||||
பதார்த்தங்களின் வகைகள் மனதையும் நிறைத்தது...!
ReplyDeleteவாங்க டிடி..வயிற்றையும் நிறைத்தது அவை:)
Deleteஅக்கா,போஜனம் பண்ண வாருங்கள் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது..அடேங்கப்பா..எத்தனை எத்தனை ஐட்டங்கள்.
ReplyDelete் நிறைய ஐட்டம் தான் ஆன அதினமும் இல்லை பாரம்பரிய உணவு மேளா என்பதால்..நன்றி சாதிகா வருகைக்கு
Deleteவயிற்றில் இடம் வேண்டுமே இது அத்தனையையும் சாப்பிட :-)
ReplyDeleteஅதான் அமைதிச்சாரல் முடியவே இல்ல...ஆனா எல்லாம் டேஸ்ட் பார்க்கமுடிஞ்சுது:)
Deleteநல்ல ஹோட்டல் பகிர்வு. பெங்களூர் வாசிகள் ஒரு முறை போய் வாருங்கள்...
ReplyDeleteபெங்கலூர்க்காரங்க போகணும்னு தான் எழுதி இருக்கேன் நீங்க வரப்போ சொல்லுங்க அழைச்சிப்போகிறேன் குமார்
Deleteஐய்யோ முருகா.. ஓமக் கொழம்பு கண்ணுல (வாயில) காட்டேன்:)
ReplyDeleteஅக்கா...
ஓமக் கொழம்பு கெட்டிக்குக் கொஞ்சம் மொறு மொறு அரிசி மாவும் போடுவாங்க பாருங்க!
ஓமம் வாசனை தூக்கும்; மூக்ககுக்கும் நல்லது; நாக்குக்கும் நல்லது:)
//ரசத்தில் மூன்றுவகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்//
அப்போ நவ-ரசம்?:)
தக்காளி ரசம்
இஞ்சி ரசம்
பூண்டு ரசம்
மெளகு ரசம்
வேப்பம் பூ ரசம்
கொத்துமல்லி ரசம்
திப்பிலி ரசம்
பருப்பு ரசம்
கொள்ளு ரசம்
எலுமிச்சை ரசம்
பைனாப்பிள் ரசம்
ஹெசருகாலு சாறு (பச்சைப் பருப்பு) ரசம்
எல்லாவற்றுக்கும் மேலா ஜிரா ரசம் (சீரக ரசத்தைச் சொன்னேன்):)))
வருக என் அருமைத்தம்பியே! உடலும் உள்ளமும் நலம் தானே?:) நவரசமா?:) குறும்புதான் அதைவிட ஜிரா ரசம் என்னனு புரிஞ்சுது உங்க ஜிக்ரி தோஸ்த் ஜிரா தானே?:)
Deleteஓமக்குழம்பு ரெசிபி கேட்டுட்டேன் ..அந்தப்பக்குவ முறையெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கிற ரவிக்கு ஜே:)(ஆமா எந்தக்கலையாவது விட்டு வச்சிருக்கீங்களா?:)
சேனை ரோஸ்ட் = அய்யோ! இத்தினி ரசத்துக்கும் தொட்டுக்க இதொன்னே போதுமே!
ReplyDeleteமோர்க் களி = பால் களி கூட இருக்கு! ஒரு முறையாச்சும் இதை முருகனுக்குத் திங்கக் குடுக்குணும் - பிரசாதமா:)
//டாங்கர் பச்சடி//
அதென்ன டாங்கர்? ஆர்மிக்காரன் சமையலா?:)
//ரச வாங்கி//
அப்படீன்னா?
ரத்த வங்கி தெரியும்; blood bank
ரச வங்கி? ரசத்துக்கெல்லாம் bank இருக்கா-க்கா?:)
ரவி
Deleteடாங்கர் பச்சடினன உளுத்தமாவு பச்சடி அதுல வெண்டைக்காயைப்போட்டுட்டாங்க ..கொழ கொழன்னு எனக்கு அவ்ளோ பிடிக்கல:)
ரசவாங்கி தெரியாதோ?:) கத்ரிக்கா பாகக்காய்ல பண்லாமே.
ரத்தவங்கி உங்களுக்குத்தெரியாம போகுமா உடம்புல சொட்டு வைக்காம அதான் தானம் பண்ணிக்கிட்டே இருக்கீங்களெ தம்பி!
பால் களி என்னது?
படிக்க நல்லா இருக்கு. சாப்பிட வயசில்லையே என்று வருந்துகிறேன்.
ReplyDeleteஎல்லாம் முடியலேன்னாலும் சிலது நீங்க சாப்பிடலாமெ ஐயா..நல்ல சுவையும் உடல்நலத்துக்கேற்றதுமா செய்திருந்தாங்க
Deleteஅறுசுவை மதுரம் அருமை ..!
ReplyDeleteநன்றி இராஜேஸ்வரி
Deleteநான் இப்போது பெங்களூரில் இல்லையே.... :(
ReplyDeleteபடிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.....
பீர்க்காங்காய் துவையல்!
்நீங்க வரப்போ சொல்லுங்க இப்படி நடந்தா எல்லாரமாபோகலாம்:)
Deleteஎத்தனை வகை? ராஜ்தானி ஹோட்டலை நினைவு படுத்துகிறது. அங்கும் வரிசையாக 32 வகை போல. திணறி விடுவோம். இங்கே நம்ம ஊர் மெனு. கேட்கணுமா? நல்ல விருந்தாக இருந்திருக்கும். அருகே என்றால் சென்றிருக்கலாம். எப்போதேனும் செல்ல குறித்துக் கொள்கிறேன் நினைவில், அறுசுவை மதுரத்தை.
ReplyDeleteசுவையான பகிர்வு ஷைலஜா:)!
ஆமா ராமலஷ்மி ராஜ்தானி ஹோட்டல்போல வெரைட்டீஸ் ஆனா எல்லாம் பாரம்பரிய உணவு வகைகள்>>> அறுசுவை மதுரம் அவசியம் போய் வாருங்கள்
Deleteபடிக்கும்போதே சுவையாக இருக்கிறது...கொடுத்து வைத்தவர்கள் அந்த ஏரியா அருகில் இருக்கறவங்க....
ReplyDeleteஆமா தொலைவிலிருந்தால் இந்த பெங்கலூர் ட்ராஃபிக்குக்கு போகவே இயலாது:) நன்றி கருத்துக்கும் வருகைக்கும் எழில்.
Delete
ReplyDeleteஎன் மனைவி சாதாரணமான சமையல் செய்ய முடியாதபோது ஒரு மாற்றத்துக்காக இம்மாதிரி ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவாள். இதில் சொல்லப் பட்ட வகைகளில் ஏறத்தாழ எல்லாமே சமைத்திருக்கிறாள். பூவையின் எண்ணங்கள் பதிவில் பாசிப் பருப்பு ரசம் பற்றி நானே எழுதி இருக்கிறேன். ஒரு முறை மஹாத்மா காந்தி ரோட் அருகே ஒரு கேரள ஓட்டலுக்குப் போனோம் ETHNIC SETTING -ல் கேரள பாரம்பரிய உடையில் உணவு பரிமாறப்பட்டது. கட்டன் காப்பி என்ற பால் இல்லாத காய்ச்சிய காப்பியை ஒரு கப் ரூ.15- என்று கொடுத்தார்கள். உணவின் போது கொடுக்கப் பட்ட பாயசம் சுவையாக இருந்ததால் இன்னும் என்று கேட்டோம். அரைல் கப் கொடுத்துவிட்டு ரூ30/ சார்ஜ் செய்தார்கள். இப்போது அந்த ஓட்டல் இருக்கிறதா தெரியவில்லை. கோகோனட் என்னும் ஏதோபெயரில் இருந்தது. பாரம்பரிய உணவுகள் வீட்டில் தயார் செய்து சாப்பிடுவதே சிறந்தது. ஏதோ என் அனுபவம் பகிரத் தோன்றியது.
வாங்க ஜி எம் பி ஸார் ...கேரலபாரம்பரிய உணவு சாப்பிட்ட அனுபவம் புதுமையாய் இருக்கே... பாரம்பரிய உணவுகளை வீட்டிலேயே சமைக்கலாம் தான் நானும் ஓரளவு செய்வது வழக்கம் அன்று ஒரு மாறுதலுக்காய் மேலும் தமிழ்நாட்டுப்பாரம்பரிய உணவு வகைகள் சேர்ந்து ஒரே நேரத்தில் கிடைப்பதால் சென்றோம்.. உங்கள் அனுபவக்கருத்துக்கு நன்றி
Deleteஅடடா! இப்போதுதான் படிக்கிறேன். மிஸ் பண்ணிட்டேனே!
ReplyDeleteஅடுத்த முறை......
ம்ம் அடுத்த முறை போய்வாருங்கள் ரஞ்சனி.
Deleteதிரும்பவும் சென்னை போய் இன்று காலை தான் வந்தேன். மிஸ் பண்ணிட்டேனே என்று வருத்தமாக இருந்தது. எப்படியும் இந்த வாரம் சும்மாவானும் போலாமான்னு திங்கிங். ஓமக்குழம்பு ரெசிபி தாங்க அக்கா!!.
ReplyDeleteஒமக்குழம்பு சாப்பிடத்தான் தெரியும் தங்காய்! :) ரெசிப்பி யாராவது கொடுத்தால் நன்று..
Deleteபெங்களூராவிலிருந்து ஒரு தமிழ் பிளாக். wow...
ReplyDeletehttp://thalaivazhaivirundhu.blogspot.in/
http://thalaivazhaivirundhu.blogspot.in/2013/08/blog-post.html
வாங்க ராமன் கிருஷ்ணமாச்சாரி அவர்களே..உங்க ப்ளாக்ல தலைவாழை இலைபோட்டு அசத்தலா விருந்து ஐட்டம் நலலருக்க்கே
Deleteபடிக்கும்போதே ருசியாக இருக்கிறது. இதிலுள்ளவற்றில் சிலவற்றை அம்மாவின் கைவரிசையில் ருசித்திருக்கிறேன். அடுத்த முறை இந்தியா வரும் போது நிச்சயம் ருசி பார்க்க ஆவலாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete