Social Icons

Pages

Thursday, April 10, 2008

மூலிகையே! மூலிகையே!

முன்குறிப்பு..
மறக்காமல்பின்குறிப்பு பார்க்க:)

மேனகா ஆறுமாதம் முன்புவரை மேனகா கார்த்திகேயனாக இருந்தாள் இப்போது மூலிகைமாமணிமேனகாகார்த்திக் என்றாகிவிட்டாள்.


இந்த ஆறுமாதத்தில் நடந்தது என்னன்னு கேக்கறீங்களா?

ரொம்ப டார்டாய்ஸ் வத்தி சுத்தவேண்டாம்னாலும் நாலுமாதம்முன்பு என்பதால் கொஞ்சம்பின்னோக்கித்தான் போகணும்.

அன்னிக்கு ஹொசூர்-க்ருஷ்ணகிரி நெடுஞ்சாலைல நானும் மேனகாவும் போய்க்கொண்டிருந்த கார் ,
ஹோசுரைத் தாண்டியதுமே எல்லைதாண்டிய வருத்தமோ என்னவோ சட்டுனு நின்னுபோச்சி.

"என்னாச்சு ட் ரைவர்? நாங்க கிருஷ்ணகிரி மலைக்கோயில் பாக்கணும்னுதான்
காலைலயேபெங்களூரைவிட்டுப்புறப்பட்டோ ம் மணி 7ஆகுது...8மணிக்குள்ல போயிடமுடியுமா?'

"தெரில்லம்மா என் கார் ஆஞ்சநேயர் மாதிரி அதன் பலம் அதுக்கே தெரியாது நாமதான்
நினைவுபடுத்தணும்...இருங்க பாக்றேன்"

என்று கார்கீழே குனிந்தவர் நீங்க அப்படி "ஓரமாமர நிழல்ல உக்காருங்க இல்ல காலாற நடந்திட்டுவாங்களேன்...நான் ரிப்பேர் ஆனதும் செல்போன்ல கூப்பிடறேன்" என்றார்

நேரம் ஆனதே தவிர கார் ரிப்பேர் சரிஆகல...

஢ நாங்க பக்கத்துல ஏதோ பாதை தெரியவும் அதில் நடக்க ஆரம்பித்தோம்..பச்சைபச்சைநிறமேன்னு பாடலாம் போல அவ்ளோ பச்சைசுற்றிலும். அதைரசித்தபடி நடந்து வந்ததில் எங்கோவழிதவறிகாட்டுக்குள்புகுந்து விட்டதை உணர்ந்தோம்.

"பயமாருக்கே மனித சஞ்சாரமே இல்லையேடி?" நான் இருமுறை மரியாதையாய்(திருதிரு) முழித்தேன்.

"காட்டுவழிபோறபுள்ள கவலப்படாத.. "பாட ஆரம்பித்தாள் மேனகா.

மேனகா=துணிச்சல்.

ஆனாலும் இத்தனை துணிச்சல் ஆகுமா?


"வீரப்பன் வசிச்ச காடுமாதிரி இருக்கு...கரடி எதும் வரபோகுது ...திரும்பிப் போயிடலாமே...கார் ரிப்பேர் ஆயிடிச்சான்னு ட் ரைவர்கிட்ட கேக்கலாம்னு பார்த்தா செல்போன் ஒர்க் ஆகல...அவரும் போன் செய்து இந்தக்காட்டுல லைன் கிடச்சிருக்காதுபோல.."

"லைன்(lion)னதும் ஏதோ சிங்கம் உறுமறாப்ல இல்ல? கர்ஜனை கேக்குதா உனக்கு?"

"ஐயோ சி சி சிங்கமா? நாய் வள்ளுன்னாலே நடுங்கிபோறவளிடம் சிங்க கர்ஜனை கேட்குதான்னு கேக்கறியே மேனகா? உனக்கு இப்போகூட பயமேவராதா?"

"என்ன பயம்? கைப் பையில தான் ஆயுதம் இருக்கே, உன் உலகப் புகழ்பெற்ற மைபா?"

சுமதியின் கிண்டலுக்கு வேறு இடமாயிருந்தால் அவளுக்குக்கிடைக்கவேண்டிய தண்டனையே வித்தியாசமாய் இருந்திருக்கும் இங்கே
காட்டில் இப்போ அவளை நம்பி இருப்பதால் மௌனமாய் நின்றேன்.

"திரும்பிப் போயிடலாம் வா சுமதி" என நான் கெஞ்ச ஒருவழியாய் அவள் சம்மதிக்க ..


அப்போது

சிம்மகர்ஜனை அருகில் கேட்டுவிட்டது.பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. மரணபயம்.!

அன்புத்தம்பிவிழியன் கல்யாணத்துக்குப்போகும் முன்பே என்னை சிங்கம் விழுங்கிவிடுமா? ஐயோ என் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலே போய்விடுமா?

மறுபடி சிம்மகர்ஜனை..

ஐயோ சிங்கம் அருகில் மிக அருகில்...
நான் "ஆதீமூலமே அரங்கநாதானே காப்பத்து"கடைசிபிரார்த்தனைகளோடு கண்களைமூடிவிட்டேன்

மெல்லக் கண்திறந்தபோது........

எதிரில் காவிஉடையுடன் அறுபதுவயது மதிக்கத்தக்க பெரியவர் கொள்ளிடத்தில் சலவை செய்த வேட்டியின்வெள்ளை
நிறத்தில்தேன்கூடுபோல்தாடி வைத்துக்கொண்டு,சந்நியாசி மாதிரி தெரிந்தார்.
..அவர் கையில் கொடிகளும்பச்சைச்செடிகளும் சில இருந்தன எனலமா அல்லது அவைகள் அவர்மேல் படர்ந்திருந்தன எனலாமா என யோசிக்கையில்,

"ஷைலஜா..இவர்தான் சிங்கம்போக கர்ஜனை செய்தபடிநடந்துவந்தாராம்...காட்டுல விலங்குகள் வருமாம அதுக்குபாதுகாப்புக்கு இப்படி செய்வாராம் சொன்னாரே உன் காதுல விழலயா?" என மேனகா கேட்டாள்.

"எனக்குத்தான் கண்ணைமூடினதும் காதும் பயத்தில் அடைத்துக்கொண்டுவிட்டதே யார் என்ன பேசினார்களோ எதுவும் காதில் விழவில்லை
அப்போது.."
என்று சொல்ல வந்து சொல்லாமலே தயங்கினேன்.


"குழந்தைகளே!" என்றார்.

நாங்கள் பின்னாடிதிரும்பிப்பார்த்தோம் .

எந்தக் குழந்தையையும் காணவில்லை.

"உங்களைத்தான் குழந்தைகளே!" என்று எங்களை நோக்கி சொன்னார்.

ஆஹா ஏழுகழுதைவயதாகும் நாங்கள் குழந்தைகளா?:)

மகிழ்ச்சியில் உடல் எடை ஒருகிலோ ஐம்பதுமூணுகிராம் ஏறியது.

சுமதி சிரித்தபடி கைகுவித்தாள். அறிமுகப்படுத்திக்கொண்டு பிறகு,

வழிதெரியாமல் காட்டிற்குள் வந்த கதையை விவரித்தாள்.

நீங்க நல்ல உன்னதமான இடத்துக்கு வந்திருக்கீங்க..எல்லாரையும் இந்தப்பாதை இழுத்துவராது பெண்களே..பாக்கியசாலிகள் நீங்கள் அதான் வந்துவிட்டீர்கள்,ஆமாம்,,இந்தப்ரதேசம்முழுவதும் அபூர்வ மூலிகைகள் பல கொண்டது ..காற்றில் வீசும் நறுமணமே அதற்குசாட்சி.
கருணான்ந்த சமய்சஞ்சீவி வைத்தியசாலை முன்னாளில் தஞ்சாவூரில் ரொம்பப்பிரபலம்...சித்தவைத்தியம் மூலிகைசிகிச்சையில் புகழ்வாய்ந்தது. அந்த பரம்பரைல வந்தவன் அடியேன்... அபூர்வவைத்தியங்கள் செய்பவன்.."

"காளிமுத்து டாக்டர் மாதிரியாடீ?"

"உஸ் சும்மா இரு ஷைலஜா"

அவர் தன்கையிலிருந்த சிலசெடிகளின் இலைகளை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்தார். தனது வெண்தாடியின் ஒருபக்கம் தடவினார்
ஐந்தே நிமிஷங்களில்... என்ன ஆச்சரியம் நரைத்த அந்தமுடி சரேலென கருத்துப்போனதைக்கண்டோ ம்.

"ரசவாதம் தெரியுமா உங்களுக்கு?" சுமதியின் கண்களில் ஆயிரம் வாட்ஸ்பல்பு.
சிரித்தார் அவர் , பிறகு"அது சகலமும் அறிந்த சித்தர்களுக்குதெரியும் தாயே...நான் சாதாரண மானுடன்...ஆனால் மூலிகைரகசியங்கள்
அறிந்தவன் அவ்வளவுதான்" என்றார்.

சுமதி தனக்கு லேசாய் ஜலதோஷம் என்றாள்

இன்னொரு செடியின் இலைகளை முகரச்சொன்னார் தயங்கிதயங்கிமுகர்ந்தாள்
அடுத்த கண்மே தும்மல் நின்று ஜலதோஷம் போயேபோச் கான் போயிந்தி ஹோகித்து!

"இது போலபலமூலிகைகள் உள்ளன... இங்கு நான் ஒரு மூலீகைவைத்தியன் தான் ஆனால் நகரத்திற்குவரமாட்டேன் என்னைத்தேடி இங்குவருபவர்களுக்குமட்டும் சிகிச்சைஅளிப்பேன் விருப்பமுள்ளவர்களுக்கு மூலிகை ரகசியம் சொல்லித் தருவேன்"

எனக்கு மூலிகையாவது ரகசியமாவது எப்படியாவது காட்டைவிட்டு வெளியேபோய் சூடாய் ஒரு மசாலாடீ குடித்தால்தேவலைபோல் இருந்தது. அவருடைய உதவியுடன் வெளியே வந்துவிட்டோ ம்.

சுமதி அன்றிலிருந்து மூலிகைவைத்தியம் கற்க ஆரம்பித்துவிட்டாள்.

'இது மூக்கிரட்டை இலை இதை அரைச்சி அடிபட்டகாயத்துல போட்டால் பிளந்த காயம் ஒண்ணா சேர்ந்துடும்'

'தேமல்போகணுமா துவர்ப்பாக்கு வில்வ இலை நிலவேம்பு கஸ்தூரிமஞ்சள் இவைகளைப் பொடி செய்து நீரில்குழைத்து...' என்பாள்

இலுப்பைப்பூ கஷாயமாம் வல்லாரைக்கீரை துகையலாம்...

டூவீலரில் தனியாக அங்கேபோய் முலிகைசெடிகளைபறித்து அள்ளிக்கட்டிக்கொண்டுவந்துவிடுவாள்
பலநேரம் ஆடுமாடுகள் அவள் வண்டியைத்துரத்தி நெடுந்தொலைவு தொடர்ந்து வந்ததாய் பலர் சொன்னார்கள்.

எல்லாநோய்க்கும் தன்னால் ;மூலிகைசிகிச்சை செய்யமுடியும் என்பாள்...சித்தவைத்திய, மூலிகைசிகிச்சைமூலம் குழந்தைப்பேற்றினை உண்டாக்கும் டாக்டர் ஜமுனாவைப்போல தானும் வருங்காலத்தில் வரவேண்டும் என்பாள் உறுதியான குரலில்.

அனுமன் தூக்கிவந்த சஞ்சீவிமலை மூலிகைகள்தனக்குத் தெரியும் என்று குறிப்புகளைக்காட்டுவாள்.
தம்பணாமந்திரம் சொல்லி போகர் அவர் கையிலும் அகப்படாமல் விலகி ஓடும் அபூர்வ சஞ்சீவிமூலிகையை மந்திரத்தால்
கைப்பற்றிய கதையை விவரிப்பாள்
நாவல்மரப்பட்டையை நிழலில் உலர்த்தி அதைப்பொடிசெய்த சூரணம் பித்தத்தை நீக்கும் என சொல்வாள்.

அவள் கணவர் இதிலிருந்து தப்பிக்கவோ என்னவோ ஒருவருஷத்திற்கு ஆஸ்திரேலியாவில் வேலை மாற்றலாகிப்போய்விட்டார்.

குழந்தைகள் இருவரும் வரும் வருஷம் ஹாஸ்டலில் தங்கிப்படிப்பைத் தொடரலாமா என ஆலோசிப்பதாக குடும்பகிசுகிசு காற்றுவாக்கில் கசிந்துவந்தது!

நானும் மேனகாவீடுபோய்வந்தால் பச்சைஇலைக்கட்டுகளோடுதான் வீட்டிற்குத்திரும்புவதால் வீட்டில் எதிர்ப்புகிளம்பிவிட்டது. ஆனாலும் உற்ற தோழி மேனகா போய்ப்பார்க்காமல் இருக்கலாமா என்று நேற்று அவள்வீடு சென்றேன்.

இரண்டுபெண்கள் கல் உரலில் எதோஇலைகளைப்போட்டு மசிய அரைத்துக்கொண்டிருந்தார்கள். மூலிகை செடிகளின் நெடி தான் எங்கும்.

மேனகாதனக்குக்கிடைத்த பட்டத்தை சொல்லி மகிழ்ந்தாள். மூலிகைமாமணி மேனகாவாம்!
வாழ்த்திவிட்டு நைசாக நகர இருந்தவளை அதிசிய மூலிகைக்குளிகை என எதையோ கையில் தந்து என்னைமுழுங்கச் சொல்கிறாள்.
.
அதை சாப்பிட்டால் நினைத்த இடத்திற்குபோய்விடலாமாம். சோதனைமுயற்சிக்கு என்னைத்தயார்படுத்துகிறாளாம்!

குளிகை இப்போது என் கையில்!
இதோ முதலில்ஆல்ப்ஸ் நோக்கிப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்!!!

பின்குறிப்பு...இம்மாதத்தின் முதல்நாள் இடவேண்டிய பதிவு இது தாமதமாகிவிட்டது!!

15 comments:

  1. இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல :)-

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  2. அரவிந்தன் said...
    இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல :)-

    அன்புடன்
    அரவிந்தன்
    >>>>>>>>>>
    வாங்க அரவிந்தன்!
    ஓவர்தான்!!! அதான் முன் எச்சரிக்கையா முன்+பின் குறிப்புகள் அளித்துவிட்டேன்!!!
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. மேனகா கிருஷ்ணகிரி போற வழில காட்டுக்குள்ள போறாங்க வழி தெரியாம மாட்டிக்கிறாங்க

    அங்க எங்க திடீர்னு ஷைலஜா இண்ட்ரட்யூஸ் ஆகறாங்க???

    ReplyDelete
  4. ஓ. ஓகே ரெண்டாவது தரம் படிக்கிறப்ப புரிஞ்சது.

    ReplyDelete
  5. எல்லாரும் பின்நவினத்துவமா எழுதுவாங்க நான் பின்நவீனத்துவமா படிச்சி குழம்பிட்டேன்.

    ReplyDelete
  6. அடடா என்ன இது எனக்கு வந்த சோதனை? இப்படி முழுசும் படிச்சு ஏமாற வேண்டியதா போச்சே!!!!
    :))

    ReplyDelete
  7. நிஜமா நல்லவன் said...
    அடடா என்ன இது எனக்கு வந்த சோதனை? இப்படி முழுசும் படிச்சு ஏமாற வேண்டியதா போச்சே!!!!
    :))>>>
    வாங்க நிஜமாநல்லவன்!
    ச்சும்மா ஏப்ரல் முதல்தேதிக்கு இடவேண்டிய பதிவை லேட்டாஅளித்தேன்....நிஜமாவா ஏமாந்தீங்க அடடா ஸாரிங்க... வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  8. கோபிநாத் said...
    :))))

    !!!!!!!!!!
    நன்றி கோபி:)

    ReplyDelete
  9. மங்களூர் சிவா said...
    எல்லாரும் பின்நவினத்துவமா எழுதுவாங்க நான் பின்நவீனத்துவமா படிச்சி குழம்பிட்டேன்.

    >>>>>
    சிவா! குழம்பிட்டீங்களா தம்பி! ஏமாந்து சிரிச்சீங்களா இல்லையா?:)பின்னூட்டங்கள் அதிகம் இட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  10. என்னமோ போங்க....ரொம்ப, ரொம்ப ஓவரு...

    ReplyDelete
  11. மதுரையம்பதி said...
    என்னமோ போங்க....ரொம்ப, ரொம்ப ஓவரு...

    >>>>>>

    :):):):):) நன்றி கருத்துக்கு மௌலி!

    ReplyDelete
  12. ஹலோ ஷை லஜ்ஜா அக்கா,

    //முன்குறிப்பு..
    மறக்காமல்பின்குறிப்பு பார்க்க:)//

    அது என்ன பின்குறிப்ப பாக்கவே முன்குறிப்பா?

    ReplyDelete
  13. ஹலோ யக்கா,

    //சுமதியின் கிண்டலுக்கு வேறு இடமாயிருந்தால்..//

    யாருங்கக்கா இந்த "சுமதி"?
    உங்கலையே கிண்டலடிக்கற அளவுக்கு பெரிய்யா ஆளா? சும்மாவா விட்டீங்க?

    ReplyDelete
  14. ஹலோ அக்கா,

    //சுமதி அன்றிலிருந்து மூலிகைவைத்தியம் கற்க ஆரம்பித்துவிட்டாள்..//

    அப்போ இனிமெ அவங்க "மூலிகை சுமதி"யா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.