அலம்பிவிட்டதுபோல
தெரிகிறது வானம்
இதில் பூமிக்காக
மழைகொண்டுதந்த
மேகம் எது?
கால்களின்றி
விண்ணில் உலாவந்த
நிலா,
எப்படிப்பயணித்தது?
எத்தனைக் *கிரணங்களை
சூரியன்
பதித்தது?
இதைப்பற்றிய சிந்தை ஏதுமின்றி
பயணித்த பாதைகளில்
பதித்துக்கொண்டே போகிறோம்
நாம் ,
நமது அடிச்சுவடுகளை.
____________________________
*கிரணம்=கதிர்
Tweet | ||||
அருமை..;)
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteஉன்னதக் கவிதை!
சுவடுகள் விட்டுச் செல்லாத அதே நிலவு அதே மேகம் அதே வானம்...
சுவடுகள் விட்டுச் சென்ற பல தலைமுறைகளைப் பார்த்து நகைக்கின்றன! நிலைக்கின்றன! :-)
கோபிநாத் said...
ReplyDeleteஅருமை..;)
>>நன்றிகோபிநாத்
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteசூப்பர்!
உன்னதக் கவிதை!
சுவடுகள் விட்டுச் செல்லாத அதே நிலவு அதே மேகம் அதே வானம்...
சுவடுகள் விட்டுச் சென்ற பல தலைமுறைகளைப் பார்த்து நகைக்கின்றன! நிலைக்கின்றன! :-)
>>>ஆமாம் மனிதர்கள் சாதனைகளை தடம் பதிக்க விரும்புகிறோம் உன்னதங்கள் அதனைக்கடமையாய் நினைக்கின்றன. அதனால்தான் நீங்க சொல்வது போல நிலைக்கின்றன
நன்றி ரவி கருத்துக்கும் பாராட்டியதற்கும்.